Monday, September 2, 2024

மல்லிகார்சுனர் கோயில் தர்மபுரி

அருள்மிகு மல்லிகார்சுனர் கோயில்*
*பெயர்:* மல்லிகார்சுனர் கோயில்
*ஊர்:* தர்மபுரி
*மாவட்டம்:* தர்மபுரி
*மூலவர்:* மல்லிகார்சுனர்
*தல விருட்சம்:* வேளா மரம்
*சிறப்பு திருவிழாக்கள்:* 
வைகுண்ட ஏகாதசி
*கட்டடக்கலை வடிவமைப்பு:* நுளம்பர்
வரலாறு
*தொன்மை:* கி.பி.8- 9 நூற்றாண்டு

*பிற பெயர்கள்:*
இக்கோயில் கோட்டைக்கோயில், கோட்டை ஈஸ்வரன் கோயில், தகடூர் காமாட்சி கோயில், கோட்டை சிவன் கோயில் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

*வரலாறு:*
நுளம்பர் கட்டிய பல கோயில்களில் இக்கோயில் குறிப்பிடத்தக்கது. இவர்கள் கி.பி. எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இக்கோயிலை கட்டியுள்ளனர். இக்கோயில் இறைவனை பழங்கல்வெட்டுகள் சாணாயிரமுடையார் எனக் குறிப்பிடுகன்றன. நுளம்பரது காலத்திற்குப் பிறகு இக்கோயில் பராமரிப்பின்றி பாழ்பட்டுப் போனது. இந்நிலையில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருக்காலத்தியில் இருந்து தகடூருக்கு வந்த வண்ணானைக் கும்பிட்டார் என்னும் சிவனடியார் இந்தக் கோட்டைச் சிவாலயங்கள் பாழ்பட்டு இருப்பதைக் கண்டு வருந்தி அவற்றைப் புதுப்பிக்க எண்ணி, அப்போது சோழர்களின் கீழ் தகடூரை ஆண்டுவந்த அதியமான் மரபினனான இராசராச அதியமானிடம் சென்று இம்மூன்று கோயில்களையும் தகுந்த சிவப்பிராமணர்களைக் கொண்டு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென வேண்டினார். அதியமானோ தகுந்த சிவப்பிராமணர்களை அழைத்து வரும் பொறுப்பை அவரிடமே வழங்கினார். தகுந்த சிவப்பிராமணர்களை மன்னனிடம் அழைத்து வர, கோயில்களில் இரண்டு ஆண்டுகள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வழிபாடுகள் துவங்கின என கல்வெட்டுகள் குறிக்கின்றன. கோயிலின் இறைவன் பெயர் விசயநகரப் பேரரசர் மல்லிகார்ஜுன ராயன் காலத்தில் மல்லிகார்ச்சுனர் என மாற்றப்பட்டிருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.

*இறைவன், இறைவி:*
இக்கோயிலில் உள்ள இறைவன் மல்லிகார்ச்சுனர் ஆவார். இறைவி காமாட்சியம்மை ஆவார்.

*பிற சன்னதிகள்:*
வலம்புரி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர், சித்தலிங்கேசுவரர் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்... 

No comments:

Post a Comment

Followers

மார்பு நோய்களை களையும் மணப்பாறை அகத்தீஸ்வரர்

மார்பு 🥢நோய்களை களையும் மணப்பாறை அகத்தீஸ்வரர் ஆலயம் மணப்பாறை ஸ்ரீவடிவுடைநாயகி உடனாகிய ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம் பெண்களின் மார்பு ச...