Monday, September 2, 2024

விநாயகர். இவருடைய பிறந்தநாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி வழிபாடு பற்றிய பதிவுகள் :*
சிவபெருமான் மற்றும் பார்வதியின் மகனாக அவதரித்தவர் தான் விநாயகர். இவருடைய பிறந்தநாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. 

விநாயகர் அறிவு, ஞானம், அதிர்ஷ்டம், செல்வ வளம் மற்றும் செழுமை ஆகியவற்றுக்கு அதிபதி ஆவார். 

விநாயகரை வணங்கி வருபவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தடைகளை நீக்கி நல்ல வளமான எதிர்காலத்தை அருள்வார் என்பதும் ஐதீகம். 

வீடுகளை விதவிதமாக அலங்கரிப்பதில் இருந்து பல விதமான உணவுகளையும் பிரசாதங்களையும் சமைத்து, விநாயகரை ஊர்வலமாக கொண்டு வந்து, பூஜை செய்து மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது தான் விநாயகர் சதுர்த்தி. 

எனவே இது மக்கள் தங்களுடைய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள் என்பதன் அடையாளமாகவும் திகழ்கிறது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

திருமுறைகள் கிடைக்க காரணமான ராஜ ராஜ சோழன்...

சைவ திருமுறைகளை தொகுத்து வழங்கிய ராஜ ராஜசோழன்..  ராஜ ராஜ சோழன் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவர் செய்த எண்ணற்ற பராக்கிரம காரிய...