Saturday, September 21, 2024

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில்,
சிறுகுடி, 
சரபோஜிராஜபுரம் அஞ்சல்,
வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 
609 503.  
*இறைவர் திருப்பெயர் : சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர்

*இறைவியார் திருப்பெயர் : மங்களநாயகி

*தல மரம் : வில்வம்

*தீர்த்தம் : மங்களதீர்த்தம்

*வழிபட்டோர் : அம்பிகை, சூரியன், விசுவாமித்திரர், கந்தர்வர்கள், அங்காரகன்

*தேவாரப்பாடல்கள் :திருஞானசம்பந்தர். 

தல வரலாறு:
ஒருமுறை, கயிலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில் பார்வதி வெற்றிபெற்றாள். அதனால்  சிவபெருமான் அங்கிருந்து மறைந்துவிட்டார். கலக்கமடைந்த பார்வதி, சிறுகுடி தலத்துக்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதை சிவலிங்கமாகப் பிடித்துவைத்து வழிபட்டாள். அம்பாளுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து அவளை மீண்டும் ஏற்றுக்கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. 

*பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேர, இத்தலத்தில் பிரார்த்தனை செய்யலாம்.

*சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று. 

*மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. நெற்றியில் பள்ளமும், இருபுறமும் அம்மன் பிடித்த கை அடையாளமும் உள்ளது. லிங்கத் திருமேனி எப்போதும் கவசம் சாத்தியே வைக்கப்பட்டுள்ளது. 

*சூட்சுமபுரீஸ்வரரை தரிசித்தால், எப்படிப்பட்ட கிரக தோஷமும் விலகும் என்பது நம்பிக்கை.

*சிவன், அம்பாளிடம் வேண்டிக்கொண்டபடி, இங்கு வந்து வழிபடுவோரின் குடும்பத்தில் மங்களம் என்றும் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை.

*திருக்கயிலையில் இருக்கும் இறைவன் சூட்சுமமாக மறைந்து இங்கு மீண்டும் தோன்றியதால் இத்தலத்துக்கு சூட்சுமபுரி என்றும், இறைவனுக்கு சூட்சுமபுரீஸ்வரர் என்றும் பெயர்கள்  உண்டானது. 

*பதவி யோகம் தரும் தலமாகவும் இது திகழ்கிறது.  

*அம்பாள் மங்களநாயகி சந்நிதி தெற்கு நோக்கி  உள்ளது. அபயவரதத்துடன் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் காட்சி அளிக்கிறாள். 
இத்தலத்தில் அம்பாளுக்குத் தான் அபிஷேகம் நடைபெறுகிறது.

*ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், இதனால் ஏற்படும் திருமணத்தடையால் வருந்துபவர்கள் வழிபட வேண்டிய தலம் திருச்சிறுகுடி. 

*செவ்வாய் பகவான் அனுகிரக மூர்த்தியாக அருளும் தலங்களில் இதுவும் ஒன்று. 

*இங்கிருக்கும் தீர்த்தத்துக்கு மங்களத் தீர்த்தம் என்று பெயர்.
இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதிகம். 

*நவகிரகங்களில் ஒருவரான செவ்வாய்  இந்தத் தலத்துக்கு வந்து இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, அம்பாள் பூஜித்த சூட்சுமநாதரை வணங்கி வழிபட்டுள்ளார். எனவே இங்கே வந்து திருக்குளத்தில் நீராடி ஈசனை வணங்கினால் செவ்வாய் தோஷம் முற்றிலும் நீங்கும்.   

*இத்தலத்தில் அங்காரகனுக்கு தனி சந்நிதி உள்ளது. 

*அங்காரகனை (செவ்வாய்) தரிசனம் செய்ய  மாசி மாதம் செவ்வாய் கிழமைகள் ஏற்றது. இந்நாட்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடக்கும். 
வில்வ இலை, மங்கள நீர் (குளத்து நீர்) ஆகியவை கொண்டு செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. 

*செவ்வாய்தோஷ ஜாதகதாரர்கள் இங்கு ஏராளமாக வரு கின்றனர்... 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...