Thursday, October 31, 2024

வித்தியாச வேடம் தாங்கும் திருமுருகன் திருத்தலங்கள்...

வித்தியாச வேடம் தாங்கும் திருமுருகன் திருத்தலங்கள் :-
🛕 குமரன் ஒரு கையில் வில்லுடனும் மறு கையில் வேலுடனும் காட்சி தரும் இடம் திருவிடைக்கழி. மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலை தடத்தில் இருக்கிறது .

🛕 முருகப் பெருமான் கையில் மாம்பழத்தோடு காட்சி தரும் இடம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்.

🛕 ஸ்ரீ முருகப்பெருமானுக்கு இரண்டு முகங்களும் எட்டு கரங்களுடனும் சென்னிமலையில் காட்சி தருகிறார். இந்த சந்நதிக்கு எதிரில் காகங்கள் பறப்பதில்லை.

🛕 முருகன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க, நஞ்சன் கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறார். இந்த கோவில் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது.

🛕 கும்பகோணத்தில் உள்ள “வியாழ சோமேஸ்வரர்” ஆலயத்தில் ஸ்ரீ முருகப் பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி அளிக்கிறார்.

🛕 திருவையாறு ஐயாரப்பன் சன்னதி பின்புறம் கையில் வில் அம்போடு முருகன் அருள்பாலிக்கிறார் தனுசு சுப்ரம்மண்யர்

🛕 திருப்போரூரில் மூல விக்கிரமாக முத்துக்குமார சுவாமியாய் காட்சி தருகிறார் முருகப் பெருமான். கந்தன் இடது காலை தரையில் ஊன்றி வலது காலை மயில் மீது வைத்து இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியபடி போருக்குப் புறப்படும் நிலையில் காட்சி தருகிறார்.

🛕 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக் குறிச்சி என்னுமிடத்தில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருகிறார். இந்த வேடர் வடிவ முருகன் சிலையில் வியர்வை வருவது வியப்பான ஒன்று.

🛕 மகாபலிபுரம் அருகே வளவன் தாங்கல் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள முருகன் தண்டாயுதபாணியாய் காட்சி தருகிறார். அவர் கண்களிலிருந்து நீர் வருவது வியப்பளிக்கிறது.

🛕 மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள நெய்குப்பை என்ற ஊரில் அம்மன் கையில் கைக்குழந்தையாக அமர்ந்தபடி காட்சி தருகிறார் பாலமுருகன்.

🛕 திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் உள்ள ஆலயங்களில் முருகப் பெருமான் மூன்று கண்களுடனும் எட்டு கரங்களுடனும் காட்சி தந்து அருள்புரிகிறார்.

🛕 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக் குறிச்சி என்னுமிடத்தில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருகிறார். இந்த வேடர் வடிவ முருகன் சிலையில் வியர்வை வருவது வியப்பான ஒன்று.

🛕 மகாபலிபுரம் அருகே வளவன் தாங்கல் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள முருகன் தண்டாயுதபாணியாய் காட்சி தருகிறார். அவர் கண்களிலிருந்து நீர் வருவது வியப்பளிக்கிறது.

🛕 புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது ஒற்றைக் கண்ணனூர். இங்குள்ள மிகவும் பழமை வாய்ந்த முருகன் கோவிலில் முருகன் ஒரு கரத்தில் ஜெப மாலையுடனும் மறு கரத்தில் ‘சின்’ முத்திரையுடனும் காட்சி தருகிறார்.

🛕 கனககிரி எனும் இடத்தில் உள்ள முருகன் சந்நதியில் கந்த பெருமான் கரத்தில் கிளியை ஏந்தியபடி காட்சி தருகிறார்.

🛕 செம்பனார் கோவில் என்ற இடத்தில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் ஜடாமகுடம் தாங்கி இரண்டு கைகளிலும் அக்கமாலை கொண்டு தவக் கோலத்தில் காட்சி தருகிறார்.

🛕 தனது மாமன் திருமாலைப்போல் திருமுருகப் பெருமான் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்த காட்சி தரும் ஆலயம் கும்பகோணம் அருகில் அழகாபுத்தூர் என்ற இடத்தில் உள்ளது.

🛕 முருகப் பெருமான் பாம்பு வடிவில் காட்சியளிக்கும் கோவில் “காட்டி சுப்ரமணியா” எனும் குக்கே சுப்ரமண்யா தலம். இது கர்நாடகா மாநிலத்தில் உள்ளது. இப்பகுதியில் பாம்புகள் யாரையும் கடிப்பதில்லை. அதுபோல் பாம்பைக் காணும் யாரும் அதைத் துன்புறுத்துவதில்லை.

🛕 பூம்புகார் அருகே மேலையூரில் திருச்சாய்க்காடு (இலுப்பை வனம்) சாயாவனேஸ்வர்ர் கோவிலில் முருகன் வில் அம்பு ஏந்திய பஞ்சலோக சிலை வடிவில் உள்ளார்.

🛕 ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் ஜலகாம்பாறை எனுமிடத்தில் உள்ள முருகன் கோவிலில் விக்கிரகம் இல்லை. ஏழு அடி உயர வேல் மட்டும்தான் இருக்கிறது.   

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்கள்..



 அசிதாங்க பைரவர்
அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார்.அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

ருரு பைரவர்
**********************
 ருரு பைரவர்

ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார்.நந்தியை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான மகேஷ்வரி விளங்குகிறாள்.

சண்ட பைரவர்
************************
: சண்ட பைரவர்

சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.

குரோதன பைரவர் 
******************************
முதன்மைக் கட்டுரை: குரோதன பைரவர்

குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார்.

கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள். மயிலாடுதுறை அருள்மிகு பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி்யுடன் எழுந்தருளி உள்ளார்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

தஞ்சபுரீஸ்வரர் கோவில் தீபாவளித் திருநாளில் குபேரபுரீஸ்வரரையும் லக்ஷ்மி குபேரரையும் வணங்குவோம்.

தஞ்சபுரீஸ்வரர் கோவில், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் ஊர் எல்லையில் உள்ளது. இறைவன் திருநாமம் தஞ்சபுரீஸ்வரர். குபேரபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் திருநாமம் ஆனந்தவல்லி. சிவபெருமான், தன்னைத் தஞ்சமடைந்தவர்களைக் காப்பாற்றுகிறவர் என்பதால் தஞ்சபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். குபேரன் தானிழந்த செல்வத்தைப் பெறச் சிவனை வழிபட்டதால் 'குபேர புரீஸ்வரர்' என்ற பெயர் உண்டாயிற்று. ராவணன் தன் தவ வலிமையால் குபேரனது செல்வத்தைப் பறித்துக்கொண்டான். குபேரன் சிவபெருமானைத் தஞ்சமடைந்து செல்வத்தைப் பெற்றான் என்பது தலவரலாறு.

பிரம்மாவிற்குப் புலஸ்தியர் என்ற மகன் உண்டு. அவருடைய மகன் விச்ரவஸ் என்பவன் சுமாலி என்ற அரக்கனின் மகளை மணந்தான். அவர்களுக்கு ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை, விபீஷணன், குபேரன் ஆகியோர் பிறந்தனர். ராவணன், குபேரன் இருவரும் சிவபக்தர்கள். விபீஷணன் பெருமாள் பக்தன். கும்பகர்ணன் பிரம்மாவின் பக்தன். இராவணன் அரக்க குணத்தோடு கூடவே மிகுந்த பெண்பித்துப் பிடித்தவனாக இருந்தான். கும்பகர்ணன் தூக்கத்தோடு சாப்பாட்டுப் பிரியனுமாவான். விபீஷணன், குபேரன் இருவரும் அரக்க குணமின்றிப் பிறந்தவர்களாவர். குபேரன் தன் சிவபக்தியால் வடதிசைக்கு அதிபதி ஆனான்.

திருமாலின் மனைவி மகாலட்சுமி எட்டுவித சக்திகளுடன் அஷ்டலட்சுமி என்ற பெயர் பெற்றாள். சிவபெருமான் உலகத்துச் செல்வங்கள் எல்லாவற்றையும் குபேரனிடம் ஒப்படைத்து உழைக்கும் மக்களுக்கு அவரவர் விதிக்கேற்றபடி செல்வத்தைக் கொடுத்துவரக் கட்டளையிட்டார். முற்பிறவியில் பாவங்கள் ஏதும் செய்யாதவர்களைக் கோடீஸ்வரன் ஆக்குவது குபேரனின் பணி. மகாலட்சுமி தன் சக்திகள் அனைத்தையும் சங்கநிதி, பதுமநிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். குபேரன் சங்கநிதி, பதுமநிதி இருவரையும் தனது கணக்குப் பிள்ளைகளாக நியமித்துக் கொண்டான்.

குபேரனுக்காக அளகாபுரி என்னும் நகரத்தை உருவாக்கினார் விஸ்வகர்மா. அழகான அரண்மனையையும் கட்டினார். அத்தாணி மண்டபத்தில் மீன் ஆசனத்தில், பட்டு மெத்தையில் அமர்ந்து ஆட்சி செய்தான் குபேரன். குபேரனின் வலப்புறத்தில் சங்கநிதியும், இடப்புறத்தில் பத்மநிதியும் அமர்ந்தனர். சங்கநிதி கையில் சங்குடன் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி அளிப்பவன். கையில் வர முத்திரையுடன் இருப்பான். பதுமநிதி தன் கையில் தாமரையுடன் இருப்பான். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும்.

தஞ்சையில் பிரகதீஸ்வரர் கோவில் கட்டுவதற்கு முன்னதாக ஊர் எல்லையில் சிவன் கோயில் இருந்தது. அங்குள்ள இறைவன் தஞ்சபுரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். குபேரன் செல்வத்தை ராவணன் பறித்துக் கொண்டதால் குபேரன் தஞ்சை வந்து மீண்டும் சிவனிடம் தஞ்சமடைந்தார். இக்கோயிலில் குபேரன் வந்ததன் அடையாளமாகச் சுவாமி சன்னிதி முன்புள்ள தூணில் குபேரன் சிற்பம் காணப்படுகிறது. விநாயகர், சரஸ்வதி, அம்பிகை ஆனந்தவல்லி ஆகியோர் சன்னதிகளும் உள்ளன. சரஸ்வதி அறிவுச் செல்வம் கொடுப்பவள். தீபாவளித் திருநாளில் குபேரபுரீஸ்வரரையும், லக்ஷ்மி குபேரரையும் வணங்கி அருள் பெற்று உய்வோமாக.

தீபாவளி புராண வரலாறு ...

தீபாவளி புராண வரலாறு பற்றிய பதிவுகள் 
புராணக் கதைகளின் படி நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். 

அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. நரன் என்றால் மனிதன். 

மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.

இந்த தீபாவளி எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். 

அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.

இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். 

எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.

அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். 

சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.

அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். 

என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.

மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது, 

வடமாநிலங்களில் ராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. 

வால்மீகு ராமாயணத்தில் முதன் முதலாக தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன.

ஸ்கந்தபுராணத்தின் படி, சிவனோடு ஒரு சந்தர்ப்பத்தில் கோபம் கொண்ட சக்தி, சிவனின் அருளை உணர்ந்து 21 நாள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனில் ஒன்றிணைகிறார். 

இவ்வாறான விரதம் முடிவுற்ற அத்தினத்தில் சிவன் தன்னில் ஒரு பாதி சக்தி என்பதை ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவ மெடுக்கின்றார். 

இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன் நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைகின்றது... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 


Wednesday, October 30, 2024

ஐப்பசி மாத அமாவாசை மகிமை மிக்க சிறப்பு..

இன்று தீப ஒளி திருநாள் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஐப்பசி மாத அமாவாசை மகிமை மிக்க சிறப்பு அருள் வாக்கு 

வாராஹி அன்னையின் தங்க பிள்ளையே. உன் மனதின் விருப்பம் நிறைவேறும். எல்லா வகையிலும் அன்னையின் உதவி இருக்கும் 🌺🌺🌺

நீண்டநாள் உங்கள் வாழ்வில் உள்ள துன்பங்கள் எனும் இருள் விலகி  இன்று வெளிச்ச பாதை கிடைக்க வாராஹி அன்னை அனுகிரஹம் . குல தெய்வம் மற்றும் முன்னோர்கள் ஆசி பெற்று வேண்டியதை பெற்று கொள்ளுங்கள்.

வாரம் வாரம் மாதம் மாதம் வரும் அருள் வாக்கு போன்று இன்றைய அருள் வாக்கு இருக்காது இந்த மகிமை நிறைந்த நன்னாளில்  உங்கள் பிரச்சினை அனைத்திற்கும் நிரந்தர தீர்வு தர உங்கள் வீடு தேடி அன்னை வருகிறாள். 

நீண்ட நாள் தீராத கடன் , பணம் கையில் நிலைப்பதில்லை, தொழில் முடங்கி வருமானம் இழப்பீடு, வியாபாரத்தில் தடைகள், மந்தநிலை, கணவன் மனைவி  பிரிவினை, புத்திர பாக்கியம், குழந்தையின்மை தடை நீக்க, காதல் விவகாரம் மற்றும் காதல் பிரிவினை, கண் திருஷ்டி, செய்வினை கோளாறு, பில்லி சூனிய மாந்திரீக மந்திர தொந்தரவுகள் விலக, நேர்முக மறைமுக எதிர்கள் தொல்லை ஒழிய, குடும்பம் சிறக்க வருமானம் பெறுக, நீண்ட நாள் குணம் ஆகாத நோய் நொடிகள் நீங்கி வாழ்வு நன்றாக இருக்க அன்னையின் வாக்கு சொல்கிறேன். 

உங்களுடைய தொந்தரவுகள் எதுவாக இருந்தாலும் தயங்காமல் மெசஞ்சரில் தெரிவிக்கவும். முழு தீர்வு தருகிறேன் 🕉️

இன்று தீப ஒளி திருநாள் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஐப்பசி மாத அமாவாசை மகிமை மிக்க சிறப்பு அருள் வாக்கு 🕉️🔱🕉️ 

வாராஹி அன்னையின் தங்க பிள்ளையே. உன் மனதின் விருப்பம் நிறைவேறும். எல்லா வகையிலும் அன்னையின் உதவி இருக்கும் 🌺🌺🌺

நீண்டநாள் உங்கள் வாழ்வில் உள்ள துன்பங்கள் எனும் இருள் விலகி இன்று வெளிச்ச பாதை கிடைக்க வாராஹி அன்னை அனுகிரஹம் . குல தெய்வம் மற்றும் முன்னோர்கள் ஆசி பெற்று வேண்டியதை பெற்று கொள்ளுங்கள்.

வாரம் வாரம் மாதம் மாதம் வரும் அருள் வாக்கு போன்று இன்றைய அருள் வாக்கு இருக்காது இந்த மகிமை நிறைந்த நன்னாளில் உங்கள் பிரச்சினை அனைத்திற்கும் நிரந்தர தீர்வு தர உங்கள் வீடு தேடி அன்னை வருகிறாள். 

நீண்ட நாள் தீராத கடன் , பணம் கையில் நிலைப்பதில்லை, தொழில் முடங்கி வருமானம் இழப்பீடு, வியாபாரத்தில் தடைகள், மந்தநிலை, கணவன் மனைவி பிரிவினை, புத்திர பாக்கியம், குழந்தையின்மை தடை நீக்க, காதல் விவகாரம் மற்றும் காதல் பிரிவினை, கண் திருஷ்டி, செய்வினை கோளாறு, பில்லி சூனிய மாந்திரீக மந்திர தொந்தரவுகள் விலக, நேர்முக மறைமுக எதிர்கள் தொல்லை ஒழிய, குடும்பம் சிறக்க வருமானம் பெறுக, நீண்ட நாள் குணம் ஆகாத நோய் நொடிகள் நீங்கி வாழ்வு நன்றாக இருக்க அன்னையின் வாக்கு சொல்கிறேன். 

உங்களுடைய தொந்தரவுகள் எதுவாக இருந்தாலும் தயங்காமல் மெசஞ்சரில் தெரிவிக்கவும். முழு தீர்வு தருகிறேன் . 


ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

பூதலூர் கோவில் பத்து ஆபத்சகாயேஸ்வரர் கோவில்...

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரை அடுத்த கோவில்பத்து கிராமத்தில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில். 
 தஞ்சை பெரியகோயில் கட்டி முடிக்கப்பட்ட கி.பி. 1010 ஆம் ஆண்டிலேயே ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில் கட்டப்பட்டது இந்தக் கோயில்.
தஞ்சாவூர் மேற்கே 22 கிமீ தொலைவில் பூதலூர், கோவில் பத்து கிராமத்தில்உள்ள சோழர் காலக் கோயில்  ஆபத்சகாயேஸ்வரர் கோவிலின் 

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூதலூரில் உள்ள சோழர் கால ஆபத்சகாயேஸ்வரர் கோவில் மோசமான நிலையில் உள்ளது. ஒரு பாழடைந்த நுழைவாயில் மற்றும் மொட்டை கோபுரம் (மொட்டை கோபுரம்) மட்டுமே ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இடிந்து விழுந்திருக்கக்கூடிய கோயிலின் வெளிப்புறச் சுவர் இருந்ததற்கான ஆதாரமாக உள்ளது. வெளிப்புறச் சுவரின் எச்சங்கள் ஒரு பக்கத்தில் காணப்படுகின்றன மற்றும் மாட்டு சாணத்தால் மூடப்பட்டிருக்கும். அம்பாள் சந்நிதி முற்றிலும் சேதமடைந்ததால், 40 ஆண்டுகளுக்கு முன்பு சிலை பிரதான கோவிலுக்கு மாற்றப்பட்டது . ஒரு காலத்தில் வி அசந்த மண்டபம் (கோயில் அமைப்பு) இருந்த இடத்தில் இடிபாடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

 கோயிலும் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பு அதன் சுற்றுப்புறமும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்தக் கோயில், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியை அடுத்த வளம்பக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த செம்பிய உத்தமரையன் என்ற குறுநில மன்னருக்காக, ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இந்தக் குறுநில மன்னர் ராஜராஜனுக்குப் பல வகைகளில் உதவியாக இருந்தவர்.

இதைக் கட்டப் பயன்பட்ட கல்கள், தற்போதைய திருச்சி மாவட்டம், துவாக்குடி, உறையூர், திருவானைக்கா, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.



இந்தக் கோயிலில் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர், ஆனந்தவல்லி, விநாயகர், வள்ளி தேவ சேனா உடனுறை முருகன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், சூரியர்- பைரவர், துர்க்கை - விஷ்ணு, நந்தி உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன.



சுமார் 3 ஏக்கரில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் சிறப்பம்சம் சூரிய பூஜை. ஆண்டுதோறும் பங்குனி மாதம் 17,18,19 ஆகிய நாள்களில் காலை 6 மணிக்கு சூரியக் கதிர்கள் ராஜகோபுரம் வழியாக ஸ்ரீ சகாயேஸ்வரர் மீது படுவது சிறப்பு.

ராஜகுரு தெட்சிணாமூர்த்தி யின்
கால் மற்ற கோவிலில் உள்ளது போல் அல்லாமல்  உள்ளது தனி சிறப்பு. 
ஆபத்சகாயேஸ்வரர் கோவிலின் 
நவகிரகம் அனைத்தும் சூரியனைப் பார்த்து உள்ளது சிறப்பு


தற்போது, இந்து சமய அறநிலையத் துறையால் இந்தக் கோயிலில் இரு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் தற்போது கட்டடங்கள் சிதிலமடைந்தும், சிலைகள் உடைந்தும், கல்வெட்டுகள் அழிந்த நிலையிலும் உள்ளன. தனி சன்னதியில் இருக்க வேண்டிய ஆனந்தவல்லி தாயார், கோயிலின் பழுது காரணமாக சகாயேஸ்வரர் சன்னதியின் அருகே வைக்கப்பட்டுள்ளார்.

பிரதோஷம், மஹா சிவராத்திரி, அன்னாபிஷேகம் மற்றும் மாதாந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. 

40 வருடங்கள் முன்னால் திருவிழாவாக உச்சவர் சுவாமி அம்மன் அலங்காரத்துடன் வான வேடிக்கைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் வுடன் அம்மன் கோவில் சென்று மாடவீதிவழியாக கோவில் வந்தடையும். 

எனவே, இந்து சமய அறநிலையத் துறை இந்தக் கோயிலை ஆய்வு செய்து, திருப்பணிகள் நடைபெற உள்ளது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்..

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...