Friday, October 25, 2024

திருக்கேதீச்சரம் இலங்கை கேதீஸ்வரா்...



திருக்கேதீச்சரம் 
(இலங்கையில் உள்ள திருத்தலம்)
சுவாமி: அருள்மிகு  
கேதீஸ்வரா்.

அம்பாள்: அருள்மிகு
கௌரியம்மை.

தல விருட்சம்: வன்னி 

தீர்த்தம்: பாலாவி

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய தல தேவாரப்பாடல்.
----------------------------------------

இரண்டாம் திருமுறை.
-----------------------------

பண்; நட்டராகம்.
----------------------

விருது குன்றமா மேருவில் நாணர வாவனல் எரிஅம்பாப் பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி யெந்நாளும் கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டம் கருத நின்றகே தீச்சரங் கைதொழக் கடுவினை யடையாவே.
                       
சுந்தரமூா்த்தி சுவாமிகள்
அருளிய தலத் தேவாரப்பாடல்.

பண் : நட்டபாடை.
----------------------

மூவரென இருவரென முக்கண்ணுடை மூா்த்தி
மாவின்கனி தூங்கும்பொழின்மா தோட்ட நன்னகாில்
பாவம்வினை யறுப்பாா்பயில் பாலாவியின் கரைமேல்
தேவன்னெனை யாள்வான் திருக்கேதீச்சரத் தானே.

  திருச்சிற்றம்பலம்.
தலச்சிறப்புகள்
----------------------

பாலாவி என்னும் ஆற்றின் வடகரையில் உள்ள இத்தலத்திற்கு இராமேஸ்வரம் தலைமன்னாாிலிருந்து இத்தலத்தை அடையலாம்.

கேது வழிபட்ட தலமாதலால் திருக்கேதீச்சரம். 

இக்கோயில் மாதோட்டம் நகரில் அமைந்துள்ளது. 
பிருகு முனிவா், மாலியவான் என்னும் மன்னனும் வழிபாடாற்றிய தலம்.
சூரபதுமனின் மனையாளின் பேரனார் துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார். பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார். துவட்டாவில் உருவாகியமையால் துவட்டாவெனவும் காலப் போக்கில் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டாவெனவும் வழங்கிவந்தது.

இத்தலத்தில் பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்கு புண்ணியம் கிட்டுமெனவும், இத்தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீருமென்பதும் ஐதீகம்.
இந்நாட்டுப் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலம் இதுவாகும்.

திருஞானசம்பந்த நாயானாராலும், சுந்தரமூர்த்தி நாயனாராலும் தேவாரப் பாடல்பெற்ற தலம்.

        ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...