Sunday, October 27, 2024

திருவண்ணாமலை லிங்க தரிசனத்தின் பயன்கள்....

திருவண்ணாமலை லிங்க தரிசனத்தின் பயன்கள் பற்றிய பதிவுகள் .

1. இந்திரலிங்கம் :

இந்தலிங்கம் கிழக்கே பார்த்து
அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு நீண்ட
ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

2. அக்னிலிங்கம் :

இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது.

3. எமலிங்கம் :

இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது. எமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம். இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதை வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்.

4. நிருதி லிங்கம் :

இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். இதை வேண்டும் பக்தர்கள்
நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.

5. வருண லிங்கம் :

இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருண தேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

6. வாயு லிங்கம் :

இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை வழிபட்டு வந்தால் இருதயம், வயிறு, நுரையிரல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்துகொள்ளலாம்.

7. குபேர லிங்கம் :

வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

8. எசானிய லிங்கம் :

வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை வழிபட்டால் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர் அகோர மூர்த்தி திருவெண்காடு..

அகோர மூர்த்தி : திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி....