விஜயதசமி நாளான இன்று
சக்தி பீடங்கள் வரிசையில்
51 சக்தி பீடங்களில் சம்பப்பிரத பீடமான,
18 மகா சக்தி பீடங்களில்
ஒன்றான சக்தியின் தலைமுடி விழுந்த இடமான,
உலகப் புகழ்பெற்ற தசரா விழா நடைபெறும்
கர்நாடகா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற
#மைசூர் நகரின் காவல் தெய்வமான
#சாமுண்டி_மலையில் வீற்றிருக்கும்
#சாமுண்டீஸ்வரி_அம்மன்
திருக்கோயில் வரலாற்றைக் காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻
மைசூரில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ளது சாமுண்டி மலை . ஏறத்தாழ 3500 அடி உயரத்தில் உள்ள இந்த மலை மேல் தான் சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது . துர்கை அம்மனின் ரௌத்திர கோலம்தான் சாமுண்டீஸ்வரி அம்மன். 51 சக்தி பீடங்களில், இத்தலம் சம்பப்பிரத பீடம் ஆகும். சாமுண்டீஸ்வரி அம்மன் இங்கே ஆதி சக்தியாக வணங்கப்படுகிறார். மேலும் இவள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றான மகா பிரம்மம் என்றும், மகா சக்தி என்றும் பக்தர்களால் வழிபடப்படுகிறார்.
இந்தக் கோவில் கிபி 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னரால் கட்டப்பட்டது. ஆனால் கோவில் கோபுரங்கள் விஜயநகர மன்னர்களால் கிபி 17ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டது.
மன்னர் ஆட்சிக் காலம் தொடங்கி இன்று மக்கள் ஆட்சிக் காலம் வரை கர்நாடகத்தை ஆளும் எவராயினும் சாமுண்டீஸ்வரியின் அருளாசியைப் பெறாமல் ஆட்சிக்கட்டிலில் அமர்வதில்லை. சாமுண்டீஸ்வரி தேவியை தங்கள் குல தெய்வமாகப் போற்றி வணங்கி வரும் உடையார் அரசர்கள், 1823 ஆம் ஆண்டு திராவிட கட்டடக் கலை பாணியில் இக்கோயிலைச் செப்பனிட்டனர்.
சாமுண்டீஸ்வரியைத் தரிசித்தால் சாதிக்க எதையும் சாதிக்க அருள் செய்வார் என்கின்றனர் பக்தர்கள்.ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இங்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மூன்றாவது ஆடிவெள்ளியில் தேவி அவதரித்தார் என்பதால், மைசூரு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம் உள்படப் பல நிகழ்ச்சிகள் இங்கே நடைபெறுகின்றன.
சாமுண்டி கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. முதலில் சிறிய கோயிலாக இருந்து 1399 மைசூர் உடையார் ஆட்சியில் பெரிதாக்கப்பட்ட கோயில் இது. மைசூர் மன்னர்களின் குலதெய்வம் சாமுண்டீஸ்வரி. அம்பிகையை நோக்கிய விநாயகப்பெருமானின் சன்னதி உள்ளது.
அரண்மனையும் அழகும் நிறைந்த கர்நாடகாவின் மைசூர் நகரத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் சாமுண்டி மலையில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி கோவில். இந்த கோவிலில் இருக்கும் அம்பிகை துர்கையின் அம்சம். மிகவும் சக்திவாய்ந்த அம்பிகை சாமுண்டீஸ்வரி என அழைக்கப்படுகிறார். பல நூற்றாண்டுகளாக இந்த நகரத்தை ஆண்டு வந்த மைசூர் அரசர்களுக்கு முக்கிய தெய்வமாக இருந்த குறிப்புகள் வரலாற்றில் உண்டு.
இந்த கோவில் சக்தி வழிபாட்டில் இருப்பவர்களுக்கு அதி முக்கிய ஸ்தலமாக விளங்குகிறது. 18 மஹா சக்தி பீடங்களுள் ஒன்றாக இந்த ஸ்தலம் இருக்கின்றது. இந்த கோவிலை க்ரவுஞ்ச பீடம் என்றும் குறிக்கின்றனர். அதாவது புராண காலத்தில் இந்த பகுதி க்ரவுஞ்ச புரி என்ற பெயரில் அழைக்கப்பட்டதை இந்த பெயர். மேலும் சக்தியின் தலை முடி இந்த இடத்தில் விழுந்தது என புராணம் சொல்கிறது.
சாமுண்டி இங்கே ஆதி சக்தியாக வணங்கப்படுகிறார். மேலும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தேவர்களும் ஒன்றான மகா பிரம்மம் என்றும் மகா சக்தி என்றும் பக்தர்கள் வழிபடப்படுகிறார்கள்.
முன்னொரு காலத்தில் மைசூர் நகரமானது மகிஷாசூரன் என்ற அரக்க மன்னனால் ஆளப்பட்டது. இவனது பெயரிலுள்ள மகிஷா என்ற வார்த்தை காலப்போக்கில் மருவி மைசூர் என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது. பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசுரனை வதம் செய்து அந்த ஊர் மக்களை அரக்கனிடம் இருந்து காப்பாற்றியதால், காவல் தெய்வமாக மைசூர் நகரத்திலேயே தங்கிவிட்டாள் என்கிறது வரலாறு.
ஆக்ரோஷத்துடன் மகிஷாசுரனை வதம் செய்த சாமுண்டீஸ்வரியை தேவர்கள் சாந்தப்படுத்தினார் சாமுண்டீஸ்வரியின் உருவத்தை மார்க்கண்டேய மகரிஷி எட்டு கரங்களுடன் வடிவமைத்து அன்னையின் திருவுருவத்தை மலைப்பகுதியில் அமைத்தார். இந்த கோலத்தில் தான் இன்றும்கூட சாமுண்டீஸ்வரி அனைவருக்கும் காட்சி தருகிறாள்.
#புராண வரலாறு:
மகிஷாசூரன் சிவனிடமிருந்து பெற்ற வரம்
சிவன் அளித்த வரங்கள் எல்லாம், தீமையை எண்ணி வரம் வாங்குபவர்களுக்கு அழிவு நிச்சயம் என்பதைக் நமக்கு கூறுகின்றது. அந்த வகையில் மகிஷாசூரன் என்ற அரக்கன் சிவபெருமானை நோக்கி ஒரு தவத்தை மேற்கொண்டான். அந்த தவத்தில் மயங்கிய சிவன், என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அதற்கு மகிஷாசுரன் ‘சாகாவரம் வேண்டும்’ என்று தன் வேண்டுதலை வைத்தான். ஆனால் சிவனோ ஆண்கள், விலங்குகள், ஜலம் இதன் மூலம் மரணம் ஏற்படாது என்று வரமளித்தார். இதற்கு என்ன அர்த்தம். இது மூன்றும் இல்லாத ஒன்றால் அவன் வதம் செய்யப் போவது நிச்சயம் என்பது நமக்கு புரிகிறது.
வரத்தைப் பெற்றுக் கொண்ட மகிஷாசூரனின் அட்டகாசம் தாங்கவில்லை. மரணமில்லை என்ற காரணத்தால் அவன் செய்த அட்டூழியங்களை யாராலும் அடக்க முடியவில்லை. தேவர்களை எல்லாம் வதைத்துக் கொண்டிருந்தான். தேவர்கள் சிவனிடம் தங்களை காப்பாற்ற வேண்டும் என்று முறையிட்டனர். ஆனால் வரம் வழங்கிய சிவனால் மகிஷாசூரனை எப்படி அழிக்க முடியும்?
மகிஷாசூரனுக்கு அளித்த வரம் என்ன என்பதை தேவர்களுக்கு சிவபெருமான் விளக்கினார். மகிஷாசுரனை ஆண்கள், விலங்குகள், நீர் இவைகளால் மட்டும் தான் மரணம் ஏற்படாது. ஆனால் ஒரு பெண்ணின் மூலம் அவனை அழிக்க முடியும் என்று ஒரு வழியை கூறுகின்றார். அடுத்தபடியாக தேவர்கள் பார்வதி தேவியை நாடினர். பார்வதிதேவியும் அவர்களது வேண்டுதலை ஏற்று சாமுண்டீஸ்வரி அவதாரத்தை எடுத்து, ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக் கிழமை அன்று மைசூரில் அவதரித்தாள்.
முப்பெரும் தேவிகளின் ஆசியைப் பெற்று சாமுண்டீஸ்வரி மகிஷாசுரனுடன் போர் செய்து அவனை வதம் செய்தாள்.
18 கைகளுடன் பிரமாண்டமாக காட்சி:
இத்தல சாமுண்டீஸ்வரி தேவி முப்பெரும் தேவர்களின் ஆசியுடன் 18 கைகளுடன் பிரமாண்டமாக காட்சியளித்தாள். ஒவ்வொரு கையிலும் கத்தி,
சக்கரம், திரிசூலம் உள்பட பல ஆயுதங்கள் தாங்கி நின்றாள். அசுரனை அழித்த சாமுண்டீஸ்வரியை மக்கள் போற்றி வணங்கியதுடன், தங்களுக்கு
துணையாக இதே இடத்தில் தங்கி அருள்பாலித்து ஆதரிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று
சாமுண்டிமலையில் குடிகொண்டதாக வரலாறு.
#தல வரலாறு :
1573ம் ஆண்டு நான்காம் சாமராஜ உடையார் மைசூரை ஆண்டு வந்தார். இவரின் குல தெய்வமான சாமுண்டீஸ்வரியின் ஆலயத்தை தரிசித்து விட்டு
திரும்பும்போது மழையும் இடியும் சூழ்ந்து கொண்டது. அப்போது மன்னரையும் அவரது ஆட்களையும் காப்பாற்றிய அன்னை சாமுண்டீஸ்வரிக்கு
நன்றி தெரிவிக்க மைசூரின் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் தெரியும் விதமாக சாமுண்டீஸ்வரி ஆலயத்தை விரிவாக எழுப்பியுள்ளார். 3500 அடி
உயரத்தில் வீற்றிருக்கும் இந்த சாமுண்டீஸ்வரி கோவிலை 1872-ம் ஆண்டு கிருஷ்ணராஜா உடையார் புனரமைத்து விரிவாக்கினார்.
இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டில் ஹொய்சாலா அரசர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் கோபுரம் 17 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் கட்டப்படிருக்கலாம். 1659 இல் 3000 அடி கொண்ட இந்த மலைக்கு ஆயிரம் படிகட்டுகள் வரை உருவாக்கப்பட்டன. இந்த கோவிலின் முக்கிய அடையாளமாக இருப்பது இந்த கோவிலுக்கு முன் வீற்றிருக்கும் நந்தி. இந்த மலையின் ஏற்றத்தின் போது 700 ஆவது படிகட்டில், சிறிய சிவன் கோவிலுடன் கூடிய பிரமான்ட நந்தி சிலை அமைந்துள்ளது. இந்த நந்தி 15 அடி உயரமும், 24 அடி நீளமும், இதன் கழுத்தை சுற்றிய பெரிய மணிகளும் கொண்டு மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
#மன்னன் உயிர் காத்த அம்மன் :
அது கி.பி.1573-ம் ஆண்டு.
இன்றைய மைசூரை நான்காம் சாமராஜ உடையார் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒருநாள் இவர் சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் தனது குல தெய்வமான சாமுண்டி தேவியை தரிசிப்பதற்காக வந்திருந்தார்.
சாமுண்டிதேவியை தரிசித்து முடித்ததும் மீண்டும் பல்லக்கில் ஏறி மைசூருக்கு புறப்பட்டார். சிறிது தூரம்தான் சென்றிருப்பார். திடீரென திரண்டு வந்த கருமேகங்கள் பலத்த மழையை கொட்ட ஆரம்பித்தன. மேகக்கூட்டங்கள் மோதிக்கொண்டு இடியையும் மின்னலையும் ஏற்படுத்தின.
ஒரு பிரம்மாண்ட மரத்தின் அடியில் பல்லக்கை இறக்கினர் வீரர்கள். `உன்னை தரிசிக்க வந்த இடத்தில் இப்படியொரு சோதனையா? நான் பாதுகாப்பாக ஊர் செல்ல அருள் புரியம்மா’ என்று அந்த மரத்தின் அடியில் இருந்தே வேண்டிய சாமராஜ உடையார், மலை உச்சியில் இருந்த கோவிலைப் பார்த்தார். ஆனால், ஏனோ கோவில் தெரியவில்லை.
வழக்கமாக அந்த இடத்தில் இருந்து பார்த்தால் கோவில் தெரிய வேண்டும். திடீரென்று கோவில் தெரியாததால் லேசாக பதற்றம் அடைந்த அவர், சில அடி தூரம் நகர்ந்து சென்று அன்னையின் கோவிலை தேடினார். அவரது வீரர்களும் மன்னரை பின்தொடர்ந்து சென்றனர்.
மரத்தின் அடியில் இருந்து பார்த்தால் தெரியாத அன்னையின் கோவில் இப்போது தெரிந்தது. அன்னை சாமுண்டிதேவியை அவர் வணங்கி முடித்த அடுத்த நொடியே மிக அருகில் பளிச்சென்று மின்னல் வெட்டியது. இடியும் விழுந்தது.
எந்த மரத்தின் அடியில் சிறிதுநேரத்திற்கு முன்பு நின்றிருந்தாரோ, அந்த மரம் இடி விழுந்ததில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
தன்னைக் காப்பாற்றவே தனது கோவிலை தெரியாமல் மறைத்து தன்னை காப்பாற்றி இருக்கிறாள் அன்னை சாமுண்டிதேவி என்பதை அறிந்த சாமராஜ உடையார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அதன்பிறகு, தனது உயிர் காத்த அன்னையின் கோவிலை மைசூரின் எந்தப் பகுதியில் இருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் பெரிய அளவில் எழுப்ப தீர்மானித்தார் சாமராஜ உடையார். அதன் தொடர்ச்சியாக எழுந்ததுதான் மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயம்.
#உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா:
சாமுண்டீஸ்வரி அம்மன் விஜயதசமி அன்று மகிஷாசுரனை வதம் செய்தாள். அதனால் தான் மைசூரில் தசரா பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கிபி 1610-ம் ஆண்டில் இருந்து மைசூரை ஆண்ட உடையார் மன்னர்கள், போரில் வென்றதை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின்போது 10 நாட்கள் தசரா விழாவை கொண்டாட தொடங்கினர். தசரா பண்டிகையின் முதல் நாள் மைசூர் உடையார் வம்ச மன்னர் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து விழாவினை தொடங்கி வைப்பார். பின்னர் புகழ்பெற்ற அரச தர்பார் வைபோகம் நடைபெறும் அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அரச வம்சத்தினரின் தர்பார் கோலத்தினை காண்பார்கள். நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பான பூஜைகளும், கொண்டாட்டங்களும் மைசூரில் நடக்கும். விஜயதசமி தினத்தன்று ஜம்பூ சவாரி எனும் யானைகள் அணிவகுப்பு சிறப்பானது. அலங்கரிக்கப்பட்ட தலைமை யானையின் மீது சாமுண்டீஸ்வரி அம்மன் 750 கிலோ எடை கொண்ட தங்க மண்டபத்தில் பவனி வருவது தசரா திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாகும்.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளியன்று இத்தலத்தில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்த அன்னையை வணங்கினால், எதிரிகளை எளிதில் வெற்றிகொண்டு, வாழ்வில் நல்லருள் பெறலாம் என்பது ஐதீகம்.
#கோவில் அமைப்பு :
இக்கோவிலின் கட்டமைப்பு சூற்றுவட்டார பசுமையுடனும், கோவில் திருத்தலம் கலை நயத்துடனும் காணபோரை மெய் மறக்கச் செய்திடும். ஏழு
நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தில் ஏழு தங்கக் கலசங்கள் உள்ளன. கருவறையில் எட்டுக் கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அமர்ந்த கோலத்தில்
காட்சியளிக்கிறார். பழமையான இச்சிலை மார்க்கண்டேய மகரிஷியால் பிரதிஸ்ட்டை செய்ப்பட்டது. கோபுர நுழைவு வாசலில் விநாயகர்
வீற்றுள்ளார்.
#பிரம்மாண்ட நந்தி :
15 அடி உயர நந்தி சிலை மைசூர் சாமுண்டிமலையில் உள்ள கோவிலில் அமைந்துள்ளது. மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு
செல்ல மலை அடிவாரத்தில் இருந்து ஆயிரம் படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். இதில் மலை மேல் இருந்து 200வது படிக்கட்டுக்கும், மலை
அடிவாரத்தில் இருந்து 800வது படிக்கட்டும் மத்தியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்ட நந்தி சிலை உள்ளது. இந்த சிலை 15 அடி உயரமும், 30
அடி அகலமும் கொண்டது. இது 200 ஆண்டு பழமைவாய்ந்தது.
#மைசூர்கே முன்னோடி:
மைசூரு என்ற பெயர் வருவதற்கு ஆதிதேவதையான சாமுண்டீஸ்வரி தான் காரணம் என்பது கடந்த வரலாற்றின் மூலம் தெரிய வருகிறது.
மாநிலத்தில் அரண்மனை நகரம் என்ற பெருமையுடன் அழைக்கப்படும் மைசூரு மாநகரை காண கர்நாடகம் மட்டுமில்லாமல், நாட்டின் பல
மாநிலங்களில் இருந்தும், பலவெளி நாடுகளில் இருந்தும் தினமும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவ்வாறு வருவோர் தவறவிடக்கூடாத தலம்
இக்கோவிலாகும்.
#பிரமுகர்களின் விருப்பக் கோவில் :
குறிப்பாக, இத்தலத்திற்கும் தென்னிந்திய அரசியல் பிரமுகர்களுக்கும் ஓர் நெருங்கியத் தொடர்பு உள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர்
ஜெயலலிதாவின் தனக்கு விருப்பமான இத்தலத்திற்கு அவ்வப்போது பயணித்துள்ளார். தற்போதைய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியும் கூட
தனது பதவியை ஏற்கும் முன் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை என்பது இந்த கோவிலின் விஷேச நாளாகும். இங்கு நிகழும் நவராத்திரி தசரா விழா உலக பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்வின் போது இந்த கோவிலிலும், நகரத்திலும் இலட்சக்கணக்கான மக்கள் குவிவது வழக்கம். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பம்சம், இங்கு கொண்டாடப்படும் சாமுண்டி ஜெயந்தி விழா.
நவராத்திரி விழாவின் போது, அம்பிகை ஒன்பது விதமான ரூபங்களில் இங்கே அலங்கரிக்கப்படுவார். எழாம் நாளில் இங்கே கால ஆரத்தி நிகழும். அப்போது மைசூர் மஹாராஜாவல் கொடையளிக்கப்பட்ட நகைகள் மாவட்ட பொக்கிஷ கிடங்கிலிருந்து இந்த கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு அலங்காரம் நிகழும்.
இந்த மலையின் அடிவாரத்தில் ஜுவாலமுகி திரிபுரசுந்தரி கோவில் உண்டு. இந்த அம்மன் சாமுண்டியின் சகோதரி என்றும், ரக்தபீஜ என்ற அரக்கனை வதம் செய்யும் போரில் சாமுண்டி தேவிக்கு துணை நின்றவர் ஆவார்.
சன்னதியின் வலப்புறம் பைரவர் விற்றிருக்கிறார். கருவறையில் எட்டு கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். பழமையான இந்த விக்கிரகம் மார்க்கண்டேய மகரிஷியால் ஸ்தாபிக்கப்பட்டதாம்.
சாமுண்டி இங்கே ஆதி சக்தியாக வணங்கப்படுகிறார். மேலும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தேவர்களும் ஒன்றான மகா பிரம்மம் என்றும் மகா சக்தி என்றும் பக்தர்கள் வழிபடப்படுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளியன்று இங்கே கூட்டம் அதிகம் இருக்கும். இந்த அன்னையை வணங்கினால், எதிரிகளை எளிதில் வெற்றிகொண்டு, வாழ்வில் நல்லறுள் பெறலாம் என்பது ஐதீகம்.
மைசூரின் எல்லா பகுதிகளில் இருந்தும் இங்கு செல்ல போக்குவரத்து வசதி உள்ளது. சாமுண்டிமலை உச்சியில் கோவில் அமைந்துள்ளது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
மகிஷாசுரனை வதம் செய்து மண்ணுலக மாந்தரை காத்த அன்னை சாமுண்டீஸ்வரி, இங்கு சக்தி சொரூபமாக காட்சித் தருகிறாள்.
#பலன்கள்:
சாமுண்டீஸ்வரி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அம்பிகையை நினைத்து, தனது வேண்டுதல்களை உண்மையான பக்தியோடு, அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் வேண்டும் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் நிறைவேற்றப்படும்.
கர்நாடகத்தில் மன்னர்கள் ஆண்ட காலத்திலும், தற்போது மக்களாட்சி காலத்திலும், ஆட்சி செய்பவர்கள் சாமுண்டீஸ்வரி ஆசியை பெறாமல் ஆட்சியை நடத்த மாட்டார்கள்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்...
No comments:
Post a Comment