Saturday, November 23, 2024

திருநீரால் அபிஷேகம் செய்தால் தீராத நோய் தீர்க்கும் சிவனும் ஹரியும்!



விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்று புகழ்பெற்ற செஞ்சி கோட்டை, பீரங்கிமேட்டில் அருணாசலேஸ்வரர் என்ற பெயருடன் சிவன் அருள் பாலிக்கிறார். 
*திருநீரால் அபிஷேகம் செய்தால் தீராத நோய் தீர்க்கும் சிவனும் ஹரியும்!*

இவரைப் பவுணர்மி, அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் தீர்க்க முடியாத நோய்கள் தீர்ந்து புத்துணர்ச்சியுடன் திரும்பலாம் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

1000 ஆண்டுகளுக்கு முன் சித்தர்களால் வழிபாடு செய்த அருணாசலேஸ்வரர் லிங்கத்திருமேணி ஆகும். 
அதன்பின்னர் வந்த நாயக்க மன்னர்கள் திருக்கோயில் அமைத்து கும்பாபிஷேகம் செய்தனர். சித்தர்கள் வழி வந்தவர்களால் இக்கோயிலில் சிறப்பாக பூஜை நடைபெற்றது. 

அப்போது அதே ஊரில் வசித்து வந்த ஒரு பெண்ணிற்கு வலிப்பு நோய் தாக்கியது. அப்பெண் பல மருத்துவரிடம் சென்றும் பலன் கிடைக்கவில்லை. அப்போது அப்பெண் கோவிலுக்கு வந்து கண்கலங்கியதை பார்த்த பூஜை செய்யும் சித்தரிடம் தன் நோயை பற்றி கூறி கண்ணீர்விட்டார். 

சித்தர் சிவலிங்க திருமேணியில் விபூதி அபிஷேகம் செய்து நெற்றியில் பட்டை இட்டு, கொஞ்சம் விபூதியை வாயில் போட்டுக்கொள்ளுமாறு கூறினார். அப்பெண்ணின் தீர்க்க முடியாத நோயை முற்றிலும் விபூதியால் குணப்படுத்தினார்.

இப்படி சித்தர்களால் சிறப்பு வாய்ந்த கோயில் இயற்கை சீற்றத்தால் சிதிலமடைந்து பல நூற்றாண்டுகளாக வழிபாடு இல்லாமல் முற்றிலும் புதர் மண்டி கிடந்தது. 
மீண்டும் இத்திருக்கோயிலை புதுப்பிக்க சித்த மருத்துவர் ரவிச்சந்திரன் கமிட்டி செல்வம் என்பவர் தலைமையில் குழு அமைத்து நவீன கால கட்டுமான முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த பழமையான கட்டிடக் கலையை நினைவுபடுத்துவதுபோல் சுண்ணாம்பு, வெள்ளம், கடுக்காய் ஆகியவற்றை அரைத்த கலவைகளை கொண்டு இத்திருக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சி கொடுக்கிறது. 

இப்படி பழமை மாறாமல் கட்டப்பட்ட திருக்கோயில் 01.06.2014 அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 

சித்தர்களால் பூஜை செய்த இத்திருக்கோயில் மீண்டும் அதே காலமுறையில் உருவாக்கியிருப்பது இன்றும் சித்தர்களும், ஞானிகளும், ரிஷிகளும் நம்முடன்தான் வாழ்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம். 

தியான மண்டபத்தில் அருள்பாலிக்கும் 18 சித்தர்கள் அவரவர் நட்சத்திரத்தில் பூஜித்து வழிபட்டால் தீராத பிரச்சனைகளிலிருந்து நிவர்த்தி பெறலாம்.

மிகவும் அழகான கலை நயத்துடன் காட்சிதரும் ஐந்து நிலை ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றதும் தெற்கு நோக்கி கம்பீரமாக காட்சிதரும் ஜேஷ்ட ராஜகணபதி அவருக்கு இடதுபுறம் ஸ்ரீ வெங்கடேஷ பெருமாள் கோயில் கொண்டுள்ளனர். 

ஜேஷ்டராஜ கணபதிக்கு வலதுபுறம் அமைந்துள்ள தியான மண்டபத்தில் தியான லிங்கத்துடன் 18 சித்தர்கள், நால்வர் வரும் அடியார்களுக்கு அருள்பாலித்து கொண்டுள்ளார். மூன்று நிலை கோபுர வாயிலை உள்ளே கடந்து சென்றதும் பிரகார மூர்த்தங்களாய் விநாயகர், வள்ளி தேவசேன சமேத முருகர், வேணுகோபால் சுவாமி, ஆஞ்சநேயர், சண்டிகேஸ்வரர், துர்க்கை நவகிரகம், கால பைரவர், சூரியன், சந்திரன், நந்தியம் பெருமான் அருள்பாலிக்கிறார்கள்.

கோவில் வளாகத்தில் வெங்கடேச பெருமாள் பத்மாவதி தாயாருடன் காட்சி தருகிறார். இவரை வணங்கினால் பிரிந்த தம்பதி என்று சேருவதாக ஐதீகம். இவருக்கு சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டால் வளமான வாழ்வு அமையும்.

ஸ்ரீ அபிதகுஜாம்பாள் அம்பாளை மாதாமாதம் வரும் பிரதி வார வெள்ளிக்கிழமைகளில், ஜென்ம நட்சத்திரத்தில் முளைக்கட்டிய பச்சை பயிரை நைவேத்தியம் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியமும், சந்தான பாக்கியமும் கிட்டும். 

இக்கோவில் சிவா, விஷ்ணு தலமாக உருவாகி சிவன் வேறு விஷ்ணு வேறு இல்லை என்பதை உணர்த்துகிறது.

திருவண்ணாமலையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 150 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. செஞ்சி பேருந்து நிலையம் அருகிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...