Monday, November 25, 2024

விநாயகரை, பூசம் நட்சத்திரம் அன்று வழிபாடு செய்ய வேண்டும்.

_சகல சௌபாக்கியமும் பெற்று குடும்பம் சந்தோஷமாக இருக்க விநாயகரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்......._


விநாயகர் வழிபாட்டை பற்றி இதுவரை கேள்விப்படாத சில குறிப்புகள்......

எந்த வழிபாடு செய்வதாக இருந்தாலும், எந்த பூஜை புனஸ்காரங்கள் செய்வதாக இருந்தாலும் அது அத்தனையும் நமக்கு வெற்றியை கொடுக்க வேண்டும் என்றால் முதன் முதலில் நாம் வழிபாடு செய்ய வேண்டிய கடவுள் விக்ணங்களை தீர்க்கும் விநாயகர் தான். எளிமையாக நாம் எந்த முறையில் விநாயகரை வழிபாடு செய்தாலும் அவர் நமக்கு உடனடியாக வரங்களை வாரி கொடுத்து விடுவார். இப்படிப்பட்ட விநாயகர்

வழிபாட்டில்இருக்கக்கூடிய சிறப்பான வழிபாட்டு முறைகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்களுடைய குடும்பம் சகல சௌபாக்கியங்களுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் பின் சொல்ல கூடிய பரிகாரங்களை பின்பற்றி பாருங்கள். கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கும் சில குறிப்புகள் இதில் சொல்லப்பட்டுள்ளது.முதலில் கடன் பிரச்சனையில் இருந்து விடுபட ஒரு விநாயகர் வழிபாட்டை தெரிந்து கொள்வோம். இதற்கு கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருக்கும். அதாவது மேற்குப் பக்கமாக அமர்ந்திருக்கக் கூடிய விநாயகரை தேடி கண்டுபிடிக்க வேண்டும். குறிப்பாக அரச மரத்தடியில் மேற்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் விநாயகரை, பூசம் நட்சத்திரம் அன்று வழிபாடு செய்ய வேண்டும். வெறும் கையோடு செல்லாதீர்கள். சிறிது அருகம்புல் எடுத்து மாலையாக கட்டிக் கொண்டு போய் மேற்குப் பக்கமாக அமர்ந்திருக்கும் அரச மரத்தடி விநாயகருக்கு போட்டுவிட்டு அரச மரத்தை மூன்று முறை வலம் வந்து, 3தோப்புக்கரணம் போட்டு கடன் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். எவ்வளவு பெரிய கடன் தீருவதற்கும் சுலபமான ஒரு வழியை இந்த பிள்ளையார் காட்டிக் கொடுப்பார்.பின் சொல்லக் கூடிய பரிகார முறைகளை உங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளையார் சிலை அல்லது பிள்ளையார் படத்திற்கும் செய்யலாம் கைமேல் பலன் கிடைக்கும். முடிந்தவர்கள் பிள்ளையார் சன்னதி இருக்கும் கோவிலுக்கும் சென்று இந்த பரிகாரங்களை செய்து பலன் பெறலாம். திங்கட்கிழமை அன்று அகத்திக் கீரையை பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து வழிபாட கடன் சுமை குறையும் என்பதும் நம்பிக்கை.வில்வ இலைகளைக் கொண்டு விநாயகருக்கு திங்கள்கிழமை என்று அர்ச்சனை செய்தால் நீங்கள் விரும்பியதை அடையலாம். விரும்பியதை என்றால். விரும்பிய வேலை, விரும்பிய வாழ்க்கை, விரும்பிய படிப்பு, விரும்பிய வாழ்க்கை துணை இப்படி நல்ல வழியில் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைய இந்த பரிகாரம் பலன் தரும். வெற்றி உங்கள் பக்கம் நிற்கும்.தாழம் பூவை வைத்து விநாயகருக்கு வழிபாடு செய்தால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும். குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று விநாயகருக்கு தாழம்பு சூட்டுவது மிகவும் நல்லது. மாதுளை பழ இலைகளைக் கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் பெயர் புகழ் பதவி இவை நம்மை தேடி வரும்.இவ்வாறு உங்கள் வாழ்க்கைக்கு மேல் சொன்ன விஷயங்களில் என்னென்ன தேவையோ அதற்கான பொருளை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று விநாயகர் வழிபாட்டினை மேற்கொள்ளலாம். உங்களால் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் வீட்டில் இருக்கக்கூடிய விநாயகரின் படத்திற்கு குறிப்பிட்ட அந்த இலையால் ‘ஓம் விக்ணங்களை தீர்க்கும் விநாயகா போற்றி’ எந்த மந்திரத்தை உச்சரித்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வந்தாலும் குறிப்பிட்ட உங்கள் வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.
எல்லா இலைகளையும் போட்டு எல்லா வேண்டுதலையும் ஒன்றாக வைத்து குழப்பிக் கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் எது தேவையோ அந்த குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள ஏதாவது ஒரு இலையை பயன்படுத்தி ஒரு வேண்டுதலாக வைத்து வெற்றி காண்பது நல்லது. மனதில் ஏதாவது ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதை அடைவதற்கான வழியை மேற்கொள்ளும் போது வெற்றி சீக்கிரம் நம்மை தேடி வரும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...