அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில்,
சோளிங்கர் - 631102,
ராணிப்பேட்டை மாவட்டம்
✡️கார்த்திகை மாதம் கண் திறக்கும் யோக நரசிம்மர்
✡️ராணிப்பேட்டை மாவட்டத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. பராங்குச சோழன் கட்டிய 3-ம் நூற்றாண்டு கோயில் இது. இங்கு ஒரு கடிகை நேரம், அதாவது ஒரு நாழிகை மட்டும் இருந்தாலே மோட்சம் கிட்டிவிடும் என்பது நம்பிக்கை. அத்தனை பெருமை உடையது கடிகாசலம் என்று அழைக்கப்படும் சோளிங்கர்.
✡️தல வரலாறு
✡️தலவரலாறு சோளிங்கர் என்று தற்போது வழங்கப்பெறும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் வழங்கப்பெற்றுள்ளது என்பது பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தின் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம். புராண நூலின் படி இதன் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பது கால அளவின் ஒரு கூறு .
✡️அசலம் என்றால் மலை. இங்குள்ள மூலவரான யோக நரசிம்மரைப் பற்றிப் பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மூவரும் இத்திருத்தலத்தில் பதிகம் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.
✡️திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் ( பெரிய திருமொழி) மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத் தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசை இருந்த அக்காரத் கனியே அடைந்துய்ந்து போனேனே.
✡️ நம்மாழ்வார் மங்களாசாசனம் ( திருவாய்மொழி ) எக்காலத் தெந்தையாய் என்னுள் மண்ணில் மற்றெக் காலத்திலும் யாதொன்றும்...மேலும்..
🔯தல பெருமை
✡️புராணங்களின் படி, நரசிம்மர் சப்த ரிஷியின் முன் தோன்றி அவர்களுக்கு முக்தியை அருளினார். இறைவன் 24 நிமிடங்களுக்குள் அவதரித்ததால், இந்த மலையில் 24 நிமிடம் பிரார்த்தனை செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். எனவே, இந்த மலைக்கு கடிகாசலம் என்று பெயர் வந்தது, ஒரு கடிகை என்பது 24 நிமிடங்கள்.
✡️நரசிம்மர் பிரஹலாதன் முன் யோக தோரணையில் தோன்றி முக்தி அளித்தார் என்றும் நம்பப்படுகிறது. இக்கோயில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டதாக ஸ்தல வரலாறு மூலம் அறிய முடிகிறது. புராணங்களின் படி, அரக்கன் நிகும்பன் என்ற அசுரர்களைக் கொன்று போரின் போது இந்திரதிம்ன மன்னனுடன் ஆஞ்சநேயன் நின்று அவனுடைய அரசைக் காப்பாற்றினான். ஆஞ்சநேயர் இங்கு சங்கு சக்கரர்த்துடன் யோக தோரணையில் காட்சியளித்து வருகிறார். பக்தர்கள்...மேலும்..
✡️புராண பின்புலம்
✡️புராணங்களின் படி, நரசிம்மர் சப்த ரிஷியின் முன் தோன்றி அவர்களுக்கு முக்தியை அருளினார். இறைவன் 24 நிமிடங்களுக்குள் அவதரித்ததால், இந்த மலையில் 24 நிமிடம் பிரார்த்தனை செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். எனவே, இந்த மலைக்குக் கடிகாசலம் என்று பெயர் வந்தது, ஒரு கடிகை என்பது 24 நிமிடங்கள். நரசிம்மர் பிரஹலாதன் முன் யோக தோரணையில் தோன்றி முக்தி அளித்தார் என்றும் நம்பப்படுகிறது. இக்கோயில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டதாக ஸ்தல வரலாறு மூலம் அறிய முடிகிறது. புராணங்களின் படி, அரக்கன் நிகும்பன் என்ற அசுரர்களைக் கொன்று போரின் போது இந்திரதிம்ன மன்னனுடன் ஆஞ்சநேயன் நின்று அவனுடைய அரசைக் காப்பாற்றினான். ஆஞ்சநேயர் இங்கு சங்கு சக்கரர்த்துடன் யோக தோரணையில் காட்சியளித்து வருகிறார். பக்தர்கள் சிறிய மலையேறுவதற்கு முன் சக்கர தீர்த்தத்தில் நீராடுகின்றனர்.
✡️ யோக நரசிம்மரை வழிபட 1305 படிகளைக் கடந்து மலையின் உச்சிக்குச் சென்று வழிபட நரசிம்மர் பக்தர்களுக்கு வழிதுணையாக வந்து பக்தர்களின் துயர் துடைத்து அவர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றுவார்.
✡️மேலும் இத்தலத்தில் நரசிம்மர் 11 மாதங்கள் யோக நிலையிலும் கார்த்திகை மாதமான ஒரு மாதத்தில் மட்டும் கண் திறந்து அருள்பாலிப்பதும் மற்றும் ஆஞ்சநேயர் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிப்பதும் இத்தலத்தின் பெருமை ஆகும். மேலும் இத்தலத்தில் பெருமாள் மலையில் யோக நரசிம்மராக மூலவராகவும், ஊர்த்திருக்கோயிலில் பக்தோசித பெருமாளாக உற்சவராக இருந்து அருள்பாலிப்பது மிகவும் விஷேசமாகும்
1. 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திகழ்கிறது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம். க்ஷ
No comments:
Post a Comment