Tuesday, November 26, 2024

சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர் அகோர மூர்த்தி திருவெண்காடு..



அகோர மூர்த்தி : திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.
ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது. சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு. அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.
திருவெண்காடு திருத்தலத்தின் அகோர மூர்த்தி ரொம்பவே விசேஷமான மூர்த்தம். இவரை ஆத்மார்த்தமாக வணங்கி வழிபட்டு வந்தால், துஷ்ட குணங்களும் எண்ணங்களும் ஏற்படாது. நல்ல தர்ம சிந்தனைகள் பெருகும். முன் ஜென்ம வினைகள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சோழ தேசத்தில் நவக்கிரகங்களுக்கும் கோயில்கள் இருக்கின்றன. நவக்கிரகங்களில் புதன் பகவானும் ஒருவர். புதன் பகவான் குடிகொண்டிருக்கும் நவக்கிரக பரிகார தலமாக போற்றப்படுகிறது திருவெண்காடு.

சீர்காழிக்கு அருகில் உள்ள திருத்தலம். பூம்புகாருக்கு அருகில் உள்ள திருத்தலம். வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகில் உள்ள திருத்தலம். இந்தத் தலத்தில், சிவபெருமானின் திருநாமம் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர்.
மிகபிரமாண்டமான திருத்தலம். சிவனாரும் இங்கே விசேஷம். இந்தத் தலத்தில், அகோரமூர்த்தியின் சந்நிதி அமைந்துள்ளது. அகோரமூர்த்தியின் சந்நிதி, தமிழகக் கோயில்களில் அரிதாக இருப்பதாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

திருவெண்காட்டில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இந்த மூன்று தீர்த்தங்களிலும் நீராடி, அருகில் உள்ள பிள்ளை இடுக்கியம்மனை வணங்கி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். அதேபோல் சிவனாருக்கும் அம்பாளுக்கும் புதன் பகவானுக்கும் முறையே பூஜைகள் செய்து வேண்டிக்கொண்டாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம்.

திங்கள், புதன், ஞாயிறு முதலான கிழமைகளில் இங்கே வந்து புதன் பகவானை மனதார வேண்டிக்கொண்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். குபேர யோகத்தைப் பெறலாம். திருமண பாக்கியம் கைகூடும். சகல ஐஸ்வர்யங்களும் பெற்றும் செல்வமும் செழிப்புமாக வாழலாம். கலைத்துறைகளில் மேன்மை பெறலாம் என்கிறது ஸ்தல புராணம்.

அகோரமூர்த்தியின் சந்நிதியில் உங்கள் குறைகளை அவரிடம் சொல்லி மனதார வழிபட்டால், பித்ருக்கள் முதலான தோஷங்கள் விலகும். முன்னோர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கப் பெறலாம். எதிரிகள் பலமிழப்பார்கள். எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். மனக்கசப்புகளும் மனக்கிலேசமும் நீங்கும்.

இங்கே உள்ள நடராஜர் சந்நிதியும் வெகு அற்புதமாக அமைந்துள்ளது. சிதம்பரம் தலத்து நடராஜர் சந்நிதி போலவே இங்கேயும் அமைந்திருக்கிறது.

புதன் பரிகாரத் தலம். நவக்கிரக திருத்தலங்களில் இதுவும் ஒன்று. பலரும் நேராக கோயிலுக்குள் நுழைந்து புதன் சந்நிதிக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது தவறு என்கிறார்கள் ஆச்சார்யர்கள். முதல் சிவனாரை வழிபடவேண்டும். பின்னர் அம்பாளை வணங்க வேண்டும். அதன் பின்னரே புதன் பகவானை வணங்கி வழிபட வேண்டும் என்பதே மரபு, ஐதீகம்.
தல வரலாறு:

பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான்.அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான்.ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார்.இந்த அகோர உருவை கண்ட மாத்திரத் திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும்காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  
திருவெண்காடு திருத்தலத்தின் அகோர மூர்த்தி ரொம்பவே விசேஷமான மூர்த்தம். இவரை ஆத்மார்த்தமாக வணங்கி வழிபட்டு வந்தால், துஷ்ட குணங்களும் எண்ணங்களும் ஏற்படாது. நல்ல தர்ம சிந்தனைகள் பெருகும். முன் ஜென்ம வினைகள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
🌠கேட்ட வரம் தரும் அகோரமூர்த்தி🌠
💥சிவபெருமானுக்கு ஈசானம்,சத்யோஜாதம்,தத்புருஷம்,வாமதேவம்,அகோரம் என்ற ஐந்து முகங்கள் உள்ளன.
💥இந்த முகங்களில் ஒன்றான அகோர முகம் தாங்கியிருப்பவர் அகோர மூர்த்தி.இவர் மயிலாடுதுறை மாவட்டடம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச் சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
💥முன்னொரு காலத்தில் மருத்துவாசுரன் என்ற அசுரன்,சிவபெருமானை வேண்டி நடுக்கடலில் கடும் தவம் புரிந்தான்.அவனுடைய தவத்தை மெச்சிய சிவபெருமான்,அவன் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும்? என கேட்டார்.
💥அப்போது அந்த அசுரன்,சிவபெருமானின் சூலாயுதத்தை கேட்டான்.அதைக் கேட்டதும் சிவபெருமான்,கொஞ்சம் கூட தாமதிக்கமல் உடனடியாக அந்த சூலாயுதத்தை அசுரனிடம் தந்து அருளுகிறார்.
💥சூலாயுதத்தை பெற்ற அசுரன் தேவர்களையும்,பொது மக்களையும் துன்புறுத்த ஆரம்பித்தான்.
💥அசுரனுடைய துன்பத்தை பொறுக்க முடியாத தேவர்கள்,சிவபெருமானிடம் முறையிடுகின்றனர்.இதனையடுத்து சிவபெருமான்,நந்திதேவரை அழைத்து இது சம்பந்தமாக விசாரித்து வருமாறு அனுப்பினார்.
💥அசுரனிடம் சென்ற நந்தி தேவர்,தேவர்களையும் பொது மக்களையும் துன்புறுத்துவது குறித்து கேட்டார்.அதற்கு அந்த அசுரன் கோபம் கொண்டு தனது சூலாயுதத்தால் நந்திதேவரின் ஒரு பக்க கொம்பை முறித்ததுடன்,உடலில் பல்வேறு இடங்களிலும் குத்தி காயப்படுத்தினான்.அந்த காயத்தோடு சிவபெருமானிடம் நந்திதேவர் சென்றார்.
💥ரத்தத்தோடு தன் முன் நின்ற நந்திதேவரை பார்த்த சிவபெருமான் சினம் கொண்டு தனது ஐந்தாவது முகத்தில் இருந்து தீப் பிழம்பாக வெடித்து அகோர மூர்த்தியாக தோன்றுகிறார்.
💥சிவபெருமானுடைய கோபத்தைக் கண்ட அசுரன்,ஈசனிடம் சரணாகதி அடைகிறான்.சினம் குறைந்த அகோரமூர்த்தி,அசுரனை மன்னித்து அருளுகிறார்.
💥அப்போது அசுரன் அவரிடம்,தங்களை வந்து வணங்குபவர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்து அருள்பாலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டான்.
💥இதனை ஏற்ற அவர்,அழகிய முகம் கொண்ட அகோரமூர்த்தி சுவாமியாக திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச் சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார்.
💥அவருடைய திருவுருவத்தில் கபாலம்,மண்டை ஓடு மாலை,ஈட்டி,எண்ணிலடங்கா விஷ ஜந்துக்கள் உள்ளன.அதோடு இங்கே அஷ்ட(எட்டு) பைரவர்கள் இருப்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது.இவர்களை வணங்கினால் வாழ்க்கை ஏற்றம் பெறும் என்பது நம்பிக்கை யாகும்.
💥இந்தக் கோவிலில் அசுரனால் குத்துப்பட்ட நந்திதேவர்,சுவேதாரண்யேஸ்வரர் சன்னிதி முன்பு எழுந்தருளியிருக்கிறார்.மிகவும் விசேஷ சக்தி கொண்ட இவரை பிரதோஷ தினங்களில் வழிபடுவது சிறப்பான பலன்களை தரும் என சுவேதாரண்யேஸ்வரர் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
💥அசுரனால் குத்துப்பட்ட நந்திக்கு,சிவபெருமான் அனுக்கிரகம் செய்ததால்,அகோரமூர்த்தி சன்னிதியில் காயம் இல்லாத நந்தி பகவான் அவரது காலடியில் இருப்பதை காணலாம்.
💥அதே போல் அசுரனும் சரணாகதி ஆகி காலடியில் இருப்பதையும் காணலாம்.அகோர மூர்த்தி சுவாமி மாசி மாதம் பூர நட்சத்திரத்தன்று இரவு தோன்றியதால்,ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் ஐந்தாம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
💥வாரம்தோறும் இவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அகோர பூஜை நடைபெறுகிறது.இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை தருவதாக
💥மேலும் சிவனுக்கு உரிய மாதமான கார்த்திகை மாதத்தில் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...