Saturday, November 30, 2024

கூனஞ்சேரி கைலாசநாதர் திருக்கோயில்"...மாற்றுத் திறனாளிகளுக்கான திருத்தலம்.

"கூனஞ்சேரி பார்வதி அம்மன் உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்"...மாற்றுத் திறனாளிகளுக்கான திருத்தலம்.

.....அங்க குறைபாடுகளை அகற்றும் ஈசன் அருளும் திருத்தலம்.“பாலாரிஷ்ட நோயால் எனது குழந்தை அவதிப்படுகிறதே!’ என்று கண்ணீர் விடும் தாய்க்குலங்களுக்கு ஆறுதலாக விளங்கும் தலம் கூனஞ்சேரி .

இத்தலம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில் அருகில் அமைந்து உள்ளது.சுவாமிமலையிலிருந்து 5 கி.மீ.....அருகிலேயே சிவராத்திரி வேடன் அருள் பெற்ற தலமான திருவைக்காவூர் உள்ளது
."#கூனஞ்சேரி பார்வதி அம்மன் உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்"கூன் நிமிர்ந்தபுரம் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கூனஞ்சேரி என்று ஆகிவிட்டது.குலோத்துங்க மன்னனால் கட்டப்பட்டது

.ஒரு காலத்தில் சைவ சமயக் கோட்பாடுகளையும் தர்மங்களையும் கடைப்பிடித்து வந்த தானவ மகரிஷி என்பவர் சோழ நாட்டின் தண்ட காரண்யம் என்ற வனத்தில் தன் மனைவியுடன் இல்லற தர்மத்தில் ஈடுபட்டிருந்தார்.

 நீண்ட காலமாக அவருக்கு புத்திரப்பேறு இல்லை. அதுகுறித்து சிவபெருமானை வேண்டினார்.தானவர் கனவில் தோன்றிய சிவபெருமான், “ஏழைச் சிறுவர்களுக்கு வேத ஆகமங்களைப் போதித்து வந்தால், விரைவில் புத்திரன் பிறப்பான்’ என்று அருள்வாக்கு கூறிட, அதன் படியே வேதம் போதித்து வரலானார்.
ஒருநாள் காலையில் தானவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது வகுப்பில் ஒரு மாணவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். இதைக் கண்டவர் சிறுவனை எழுப்பித் திட்டிவிட்டார்.அப்போது அருகில் நின்ற அவரது மனைவியின் வயிற்றில் இருந்த கரு விழித்துக் கொண்டது. “ஏ! தகப்பனாரே! இரவு பகலும் ஓய்வின்றி பிள்ளைகளுக்குப் பாடம் போதித்து வந்தால் பிள்ளைகள் தூங்கத்தானே செய்வார்கள்? 

வேதம் போதிக்கும் குருவான உங்களுக்கு இதுகூடவா தெரியவில்லை?’ என்றது..மழலைக் குரலில் தன்னை எதிர்த்துப் பேசுவது தன் வாரிசு என்றும் பார்க்காமல் கோபத்தில், “நீ பிறப்பதற்கு முன்பே அதிகப் பிரசங்கித்தனமாக கேள்வியா கேட்கிறாய்? 

வளைந்த கேள்விக்குறி போலவே நீ அஷ்டகோணலாகப் பிறக்கக் கடவாய்’ என்று சாபம் கொடுத்தார்.பத்து மாதங்கள் கழித்துக் கருவறையிலிருந்து வெளிவந்த அந்த ஆண் குழந்தை அஷ்ட கோணலாக பிறந்தது. மிதிலாபுரியில் ஜனக மன்னன் வாதத்திறமை போட்டி வைத்தான். 

இதில் கலந்து கொண்ட தானவ மகரிஷி, தனக்குப் பிறந்த அஷ்ட கோணல் பிள்ளையின் நினைவால் போட்டியில் சரியாக வாதாடாமல் தோல்வி கண்டு அரச தண்டனையும் பெற்றார்.

 வறுமை வாட்டியது.இதன் காரணமாக கடற்கரைக்குச் சென்று சிவநாம ஜபத்தில் சில காலங்கள் ஈடுபட்டார். அப்போது தோன்றிய சிவபெருமான்,

 “இத்தலத்தில் எட்டுவகை லிங்கங்களை பிரதிஷ்டை செய்து முறையாக வழிபட்டால், உன் பிள்ளையின் அஷ்ட கோணல் நீங்கி, அழகான உருவத்தை அடைவான்!’

 என்றார்.இதற்கிடையில் அவரது மகன் அஷ்ட கோணன், ஜனக மகாமன்னன் அவையில் அமர்ந்து திறமை பொருந்தியவனாகி அனைத்து மகிரிஷிகளையும் வெற்றி கண்டு தலைமைப் பண்டிதனானான். அனைவரையும் வாதத்தில் வென்று தன் தந்தைக்கும் நற்பெயர் வாங்கித் தந்தான்.

தானவ மகரிஷி அஷ்டலிங்கங்களை பிரதிஷ்டை செய்து அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டார். 

சிவனருளால் அஷ்ட கோணன் சில மாதங்களில் கூன் நிமிர்ந்து அழகான உருவைப் பெற்றான்.இதனால் இத்தலம் கூன் நிமிர்ந்த புரம் என்றாகி கூனஞ்சேரி என்றானது .

உடல் ஊனம், மன ஊனங்களை அகற்றும் சாந்நித்யம் பெற்றவராக விளங்கும் கைலாச நாதசுவாமி இங்கு அன்னை பார்வதி தேவியுடன் அருள்கிறார்

.....விதர்ப்பகால சித்தர் என்பவர் இங்கு உள்ள அஷ்ட லிங்கத் திருமேனிகளையும் வணங்கி "திருவண்ணாமலை" சென்று கிரிவலம் செய்து வழிபாடு நடத்தினார். 

இந்த ஆலயத்தில் பகல் வேளையில் எட்டு லிங்கத் திருமேனியையும் வழிபட்டு அன்று இரவே "திருவண்ணாமலை" சென்று கிரிவலம் செய்தால் வாழ்வில் பேறுகள் பதினாறையும் பெற முடியும் என்று 

......அகத்திய நாடி சொல்கிறது..கூன் நிமிர்ந்தபுரம் எனும் கூனஞ்சேரி தலத்தை தரிசிக்க நம் வாழ்வில் ஊனம் அகலும்..

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

தமிழ்நாட்டில்சிவனுக்குரியஸ்தலங்களின்பெருமைகள்.

தமிழ்நாட்டில்சிவனுக்குரிய ஸ்தலங்களின்பெருமைகள். ராஜ கோபுரத்தை விட மூலவருக்குஉயர்ந்த விமானம் உள்ள இடங்கள் 1,திருப்புனவாசல் -- ஶ்ர...