அபிஷேக பால் நீல நிறமாக மாறும் அதிசயம் பாவங்களை நீக்கும் தயாநிதீஸ்வரர்
*அமைவிடம்:*
🌺 தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடகுரங்காடுதுறை என்னும் ஊரில் அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
*செல்லும் வழி:*
🌺 தஞ்சாவூரில் இருந்து சுமார் 19 கி.மீ தொலைவில் வடகுரங்காடுதுறை என்னும் ஊர் உள்ளது. வடகுரங்காடுதுறையில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
*இக்கோவிலின் சிறப்புகள்:*
🌺 இத்தல இறைவனான தயாநிதீஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவர் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும், குலைவணங்குநாதர் என்றும், வாலி நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
🌺 இக்கோவிலில் சிவபெருமான் கர்ப்பிணிக்கு அருள் செய்ததாக ஐதீகம். இக்கோவிலானது கர்ப்பிணி பெண்கள் வணங்க வேண்டிய மிகவும் சிறப்புமிக்க கோவில் ஆகும்.
🌺 இதனால் இந்த தலத்திற்கு கர்ப்பிணி பெண்கள் வந்தால் சுகப்பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கை.
🌺 சிவகாமி அம்பிகை, அர்த்தநாரீஸ்வரர், இரட்டை பைரவர், சூரியன், நாகர் ஆகியோர் இத்தலத்தில் தனிச்சன்னதியில் காட்சி தருகின்றனர். மேலும், நடராஜரின் கல் சிற்பமும் அமைந்துள்ளது.
🌺 சனீஸ்வரர், லிங்கோத்பவர், பிரம்மா, சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு இத்தலத்தில் தனிச்சன்னதிகள் அமைந்துள்ளன.
🌺 வள்ளி-தெய்வானையுடன் முருகன், கயிலை லிங்கம் மற்றும் கஜலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
🌺 நவராத்திரி காலங்களில் மகாலட்சுமியை வழிபாடு செய்தால் செல்வச்சிறப்பு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
🌺 இத்தல விஷ்ணு துர்க்கை கையில் சங்கு, சக்கரத்துடன் மிக அழகாக அருள்பாலிக்கிறாள். எட்டு புஜங்கள் கொண்ட இந்த துர்க்கைக்கு பாலாபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக காட்சியளிப்பது மிகவும் சிறப்பாகும்.
🌺 நவராத்திரி காலத்தில் இந்த அதிசய துர்க்கையை வழிபடுவதால் மனதில் தைரியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
🌺 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 49வது தேவாரத்தலம் ஆகும்.
*பிரார்த்தனைகள்:*
🌺 பாவங்கள் நீங்க இத்தல அனுமானை பிரார்த்தனை செய்கின்றனர். மேலும் குருபலம் பெருக தட்சிணாமூர்த்தியை பிரார்த்தனை செய்கின்றனர்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment