ஸ்ரீ சனிஸ்வரபகவான் பகவான் பாதிப்பில் இருந்து தப்பிக்க…பரிகாரமுறைகளும் நமது வாழ்வில் நாம் அனுபவிக்கின்ற துயரம் அல்லல்கள் களைந்து எல்லோருக்கும் நன்மையே செய்து ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுகிரஹமூர்த்தியாக விளங்க வேண்டி சனீஸ்வரபகவானை வணங்குகின்றோம்
ஸ்ரீ சனீஸ்வரபகவான் 108 போற்றி.
ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுகிரக மூர்த்தியே நின் திருவடிகளே சரணம்🌺🌺🌺 🙏🙏
ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுகிரக மூர்த்தியே நின் திருவடிகளே சரணம்🌺🌺🌺 🙏🙏
ஸ்ரீ சனீஸ்வரபகவான் 108 போற்றி
ஓம் அருளுங்கால் இனியனே போற்றி
ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி
ஓம் அலிக்கிரகமே போற்றி
ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி
ஓம் அனுஷத்ததிபதியே போற்றி
ஓம் அன்னதானப் பிரியனே போற்றி
ஓம் அசுப கிரகமே போற்றி
ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி
ஓம் ஆயுட்காரகனே போற்றி
ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி
ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
ஓம் இருவாகனனே போற்றி
ஓம் இளைத்த தேகனே போற்றி
ஓம் இரும்புத் தேரனே போற்றி
ஓம் இரும்பு உலோகனே போற்றி
ஓம் ஈடிலானே போற்றி
ஓம் ஈசுவரனானவனே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உத்திரட்டாதி நாதனே போற்றி
ஓம் உபகிரகமுளானே போற்றி
ஓம் எமன் அதிதேவதையனே போற்றி
ஓம் எள் விரும்பியே போற்றி
ஓம் எவர்க்கும் அஞ்சானே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் ஏழாம் கிரகனே போற்றி
ஓம் கரு மெய்யனே போற்றி
ஓம் கலி புருஷனே போற்றி
ஓம் கழுகு வாகனனே போற்றி
ஓம் கருங்குவளை மலரனே போற்றி
ஓம் கரிய ஆடையனே போற்றி
ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் கருங்கொடியனே போற்றி
ஓம் கருநிறக் குடையனே போற்றி
ஓம் கண்ணொன்றிலானே போற்றி
ஓம் காகமேறியவனே போற்றி
ஓம் காசியில் பூசித்தவனே போற்றி
ஓம் காரியே போற்றி
ஓம் காற்றுக் கிரகமே போற்றி
ஓம் குளிர்க் கோளே போற்றி
ஓம் கும்பராசி அதிபதியே போற்றி
ஓம் குச்சனூர்த் தேவனே போற்றி
ஓம் குளிகன் தந்தையே போற்றி
ஓம் குறுவடிவனே போற்றி
ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் கைப்புச்சுவையனே போற்றி
ஓம் சடையனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி
ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி
ஓம் சனிவார நாயகனே போற்றி
ஓம் சாயை புத்ரனே போற்றி
ஓம் சுடரோன் சேயே போற்றி
ஓம் சூரனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சூர்ய சத்ருவே போற்றி
ஓம் சுக்ர நண்பனே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவபக்தர்க்கடியானே போற்றி
ஓம் சீற்றனே போற்றி
ஓம் செயலறச் செய்பவனே போற்றி
ஓம் தமோகணனே போற்றி
ஓம் தண்டாயுதனே போற்றி
ஓம் தசரதனுக்கருளியவனே போற்றி
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தீபப் பிரியனே போற்றி
ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி
ஓம் துலாராசியிலுச்சனே போற்றி
ஓம் துயரளித்தருள்வோனே போற்றி
ஓம் தைரியனே போற்றி
ஓம் தொலை கிரகமே போற்றி
ஓம் நம்பிக்கிரங்கியவனே போற்றி
ஓம் நளனைச் சோதித்தவனே போற்றி
ஓம் நீலவண்ணப் பிரியனே போற்றி
ஓம் நீண்டகாலச் சுழலோனே போற்றி
ஓம் பத்தொன்பதாண்டாள்பவனே போற்றி
ஓம் பயங்கரனே போற்றி
ஓம் பக்கச் சுழலோனே போற்றி
ஓம் பத்மபீடனே போற்றி
ஓம் பத்திரை சோதரனே போற்றி
ஓம் பிணிமுகனே போற்றி
ஓம் பிரபலனே போற்றி
ஓம் பீடிப்பவனே போற்றி
ஓம் ப்ரஜாபதி ப்ரத்யதி தேவதையனே போற்றி
ஓம் புஷ்பப்பிரியனே போற்றி
ஓம் புதன்மித்ரனே போற்றி
ஓம் பூசத் ததிபதியே போற்றி
ஓம் பேதமிலானே போற்றி
ஓம் பைய நடப்பவனே போற்றி
ஓம் போற்றப்படுபவனே போற்றி
ஓம் மகரத்தாள்பவனே போற்றி
ஓம் மாங்கல்ய காரகனே போற்றி
ஓம் மதிப்பகையே போற்றி
ஓம் மநு சோதரனே போற்றி
ஓம் முடவனே போற்றி
ஓம் முதுமுகனே போற்றி
ஓம் மும்முறை பீடிப்பவனே போற்றி
ஓம் மூபத்தாண்டில் சுற்றுபவனே போற்றி
ஓம் மேல் திசையனே போற்றி
ஓம் மேற்கு நோக்கனே போற்றி
ஓம் யமுனை சோதரனே போற்றி
ஓம் யமனுடன் பிறந்தோனே போற்றி
ஓம் வன்னி சமித்தனே போற்றி
ஓம் வலிப்பு தீர்ப்பவனே போற்றி
ஓம் வக்கரிப்பவனே போற்றி
ஓம் வளை மூன்றுளானே போற்றி
ஓம் வில்லேந்தியவனே போற்றி
ஓம் வில்வப்பிரியனே போற்றி
ஓம் ஸ்ரம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் சனீச்வரனே போற்றி
ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுகிரக மூர்த்தியே நின் திருவடிகளே சரணம்
சனிபகவான் பாதிப்பில் இருந்து தப்பிக்க…
சனிபகவான் பாதிப்பில் இருந்து தப்பிக்க…
பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும். அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.
பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்து கொள்ளூம். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும். அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்னைகளை உருவாக்கி விடும். இதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் வருமாறு….
தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். மன நலம் குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.
பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம்மை மாற்றிக் கொண்டால் சனி பாதிப்பில் இருந்து சற்று தப்பிக்கலாம்.
இன்னும் இதுபோன்ற பரிகாரம் மனமுருகி வழிபட்டு செய்தால் சனிபகவானின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடலாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment