முப்பத்து முக்கோடி தேவதைகள் யார் தெரியுமா?
பக்கத்து கோவிலில் பசுமாட்டுக்கு பூஜை செய்தபோது தீபாராதனை காட்டி பசுவை வணங்குங்கள்.
பசுவை வணங்கினால் பிரம்மா விஷ்ணு சிவன் அஷ்டலட்சுமி மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வணங்கிய பலன் கிட்டும் என்றார்
அப்படியானால் நம் இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனரா?
நமது ஹிந்துமத்த்தில் நம்முடைய தெய்வங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் போது முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று கூறுவது உண்மைதான்
முப்பத்து முக்கோடி என்பது 33 கோடி ஆகும்.
அப்படியானால் நமது ஹிந்து தர்மத்தில் 33 கோடி தெய்வங்கள் இருக்கின்றனவா?....
இங்கே “கோடி” என்பதை எண்ணிக்கையைக் குறிக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்
ஆனால் “கோடி” என்ற சொல் சமஸ்க்ருதத்தில் “ பிரிவு அல்லது வகை” என்பதைக் குறிக்கும்.
ஆக மொத்தம் 33 வகையான தெய்வங்கள் ஹிந்து சனாதன தர்மத்தில் உள்ளன என்பதை சொல்லவே முப்பத்து முக்கோடி என்கின்றனர்
கோடி என்றால் பிரிவு என்கிறீர்கள் அது (Number) நம்பராகாதா?
கிராமங்களில் ஒருவர் அந்த தெரு கோடியிலுருந்து வரேன் என்றால் கோடி தெரு என்பதல்ல அர்த்தம் அதாவது அந்த தெருவின் பிரிவிலிருந்து வருகிறேன் என்பர்
அது போல் கோடி வேஷ்டி என்றால் ஒரு கோடி வேஷ்டி எனபதல்ல அர்த்தம் அது வெண்மையும் அல்லாத மஞ்சளும் அல்லாத ஒரு வேஷ்டி ( வெள்ளாவியில் வண்ணார் வைத்தால் வெள்ளையாகி விடும் எனவே அதை கோடி வெளுப்பாக கொடு என்பர் ஊர்களில்)
கோடி என்பது எண்ணிக்கை அல்ல அதன் உண்மையான அர்தம் "பிரிவு" என்பதே
இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால்
வசு
ருத்ர
ஆதித்ய ரூபம் என்று மூன்றாகப் பிரிப்பர்
நாங்களோ அல்லது உங்களை போன்றவர்களோ பொதுவாக அமாவாசை தர்பணத்தில் பித்ரு வசு ரூபமாகவும் பிதாமஹர் ருத்ர ரூபமாகவும் பிதுர்பிதாமஹர் ஆதிதய ரூபமாகவும் உள்ளதாக கூறி தர்பணம் செய்வோம்
அதில் வசு கீழ் நிலை ருத்ரர் இரண்டாம் நிலை ஆதித்யர் மூன்றாம் நிலை இந்த மூன்று நிலையில் 31பிரிவுகள் அடங்கும்
அந்த 31 பிரிவுகள் எவை பார்ப்போம்.
31 அதில்....
ஆதித்ய நிலையில் 12 பிரிவுகள்
1) விஷ்ணு
2) தாதா
3) மித
4) ஆர்யமா
5) ஷக்ரா
6) வருண
7) அம்ஷ
8) பாக
9) விவாஸ்வான்
10) பூஷ
11) ஸவிதா
12) தவாஸ்தா
வசு நிலையில் 8 வகையாவன:
13. தர
14. த்ருவ
15. சோம
16. அனில
17. அனல
18. ப்ரத்யுஷ
19. ப்ரபாஷ
ருத்ரன் நிலையில் 11 பிரிவுகள்
21. ஹர
22. பஹூரூப
23. த்ரயம்பக
24. அபராஜிதா
25. ப்ருஷாகாபி
26. ஷம்பூ
27. கபார்தி
28. ரேவாத்
29. ம்ருகவ்யாத
30. ஷர்வா
31. கபாலி
மற்றும் 2 பிரிவு அஷ்வினி குமாரர்கள்
ஆக மொத்தம் = 33 வகையான
(பிரிவுகளான) தெய்வங்கள்
முப்பத்து முக்கோடி என்பது இதை தான். புரிந்ததா?. நீ நினைப்பது போல் 33 கோடியும் இல்ல, முப்பத்து முக்கோடியும் இல்ல.
இனிமேல் கோவில்களில் இந்து தெய்வங்களை வழிபடும் போது இதை மனதில் வைத்து கொண்டு வழிபடுங்கள்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment