கீழ்பழுவூர் ஆவினம் காத்த ஆலந்துறை மகாதேவர்.
தஞ்சாவூரிலிருந்து அரியலூர் செல்லும் நெடுஞ்சாலையும் திருச்சிராப்பள்ளியிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையும் இணையும் கடைவீதியில் கூட்டுச்சாலையின் ஒரு புறம்இருசிவாலயங்களும் எதிர்ப்புறம் ஒரு தீர்த்தக் குளமும் அமைய விளங்குவது கீழ்பழுவூர் என்னும் திருவூராகும்.
இவ்வூர் தற்போது அரியலூர் மாவட்டத்தில் இடம்பெற்றுதிகழ்கின்றது சோழ அரசர்களின் சிற்றரசர்களாகவும், மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு தங்கள் மகளானபஞ்சவன்மா
தேவியை அரிசியாக மணம் முடித்த அரச மரபைச்சார்ந்தவர்களு
மானபழுவேட்டையர்களின் தலைநகரத்தின் ஒரு பகுதியே இந்த கீழ்பழுவூராகும்.
மன்னு பெரும் பழுவூர் என கல்வெட்டுகளும், செப்பேடுகளும் குறிப்பிடும் தலைநகரம் கீழப்பழுவூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் மூன்று கல் தொலைவில்மேலப்
பழுவூர் என்ற பெயரில் விளங்குகின்றது. அங்கு மூன்று சிவாலயங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு உலகப் புகழ்பெற்ற கீழையூர் ஆலயங்கள்ஆகும்.
கீழையூர் ஆலயங்களும் கீழப்பழுவூர்ஆலயங்களும் பழுவேட்டரையர்கள் சோழர்கால கோயில் கலைக்குதந்தஅருட்
கொடைகளாக விளங்குகின்றன.
அங்கு திகழும் கல்வெட்டுகள் முறையே திருவாலந்துறை மகாதேவர் திருக்கோயில் என்றும், மறவனேஸ்வரர் என்றும்குறிப்பிடப்படுகின்றன. இவற்றுள் ஆலந்துறை மகாதேவர் கோயில் பெரிய சிவாலயமாகவிளங்குவதோடுதிருஞானசம்பந்தரால் ஒரு பதிகம் பாடப்பெற்ற காவிரியின் வடகரை தேவாரத் தலமாகும்.
பேரேரிக்கரையில் ஆலமரக் காட்டுப் பகுதியில் இவ்வாலயம் தோற்றம் பெற்றதால், ஆலந்துறை என பெயர் பெற்றது. தற்போது இவ்வாலயத்தின் தலமரம் ஆலமரமே ஆகும். வட ஆரண்யம் எனப் பெரும் ஆலங்காட்டில் ஒரு மரத்தடியில்சிவபெருமான் புற்றுவடிவில் லிங்பமாகத் தோன்றி காட்சி அளித்ததாகவும், பரசுராமர் தம்பாவ தோஷத்தைப் போக்கிக் கொள்ள இக்காட்டு பகுதியை அழித்து சுயம்பு மூர்த்தியை வழிபட்டு விமோசனம்பெற்றதாகவும் தலபுராணம் விவரிக்கின்றது. மேலும் உமாதேவி கடுந்தவம் புரிந்து ஈசனைக் கண்டு வழிபட்டதும் இந்த ஆரண்யமே என்பதால் இதற்கு யோக வனம் என்றபெயர்ஏற்பட்டதாகவும் அப்புராணமே எடுத்து உரைக்கிறது.
திருவாலந்துறை மகாதேவர் திருக்கோயில் பல நிலைகளையுடைய ராஜகோபுரம் திருமதில், திருச்சுற்றுக்கள், சுற்றுமண்டபங்கள், பரிவாராலயங்கள், அழகிய ஸ்ரீ விமானம், அர்த்தமண்டபம், முக மண்டபம், அம்மன் ஆலயம் ஆகியவற்றுடன் அழகு பெட்டகமாக காட்சி நவில்கின்றது. மூலஸ்தானத்தில் திகழும் லிங்க மூர்த்தியை ஆலந்துறை மகாதேவர், ஆலந்துரையார், வட மூலநாதர்,யோகவனேஸ்வரர்எனபலதிருநாமங்களில் காலங்காலமாக குறிப்பிட்டு வந்துள்ளனர்.
உமா தேவியை அருந்தவ நாயகி, யோக தபஸ்வினி, மகாத பஸ்வினி எனவும் குறிப்பிட்டு வந்துள்ளனர் கோயிலின் முன்னர் திகழும்தீர்த்தகுளத்தினை பிரம்ம தீர்த்தம் என்றும், பரசுராம தீர்த்தம் என்றும் குறிப்பிடுவர்.
அழகிய படிக்கட்டுகள் காப்புசுவர்ஆகியவற்றுடன்திகழும்இக்குளக்கரையில் திகழும் ரிஷபச் சிற்பங்கள் (அமர்ந்த காளை உருவங்கள்) மிகவும்குறிப்பிடத்தக்கவை ஆகும்.
கருவறையின் புறத்தே அமைந்த கோஷ்டங்களில் திகழும் ஆலமர் செல்வர் (தக்ஷிணாமூர்த்தி) லிங்கோத்பவர், பிரம்மா, கணபதி, துர்க்கை ஆகிய திரு மூர்த்தங்களும் மண்டபக்கோஷ்டங்களில் திகழும் காலசம்ஹாரர், அர்த்தநாரீஸ்வரர், கல்யாணசுந்தரர், கங்காளர், பைரவர், அடியார் ஒருவர் உருவம் ஆகிய அழகுறு படைப்புக்களும் முற்கால சோழர்களையும் உன்னத முத்திரைகளாக காட்சியளிக்கின்றன.
திருவாலந்துறையார் திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்திற்கு அருகில் தென்புறமுள்ள தற்கால கட்டடப் பகுதிகளுக்கு இடையே அழிவின் விளிம்பில் நிற்கும் கற்றலியான பழைய சிவாலயம் ஒன்று பராமரிப்பார் யாரும் இன்றி காட்சி நல்குவது வேதனைக்குரிய ஒன்றாகும்.
பசுபதீஸ்வரர் என தற்காலத்தில்அழைக்கப்
படும் இவ்வாலயத்தின் பெரும் பகுதி மக்களாலும் அரசு நிறுவனங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. எஞ்சிய கருவறையும் முகப்பு பகுதியும் மட்டுமே இன்று பசுபதீஸ்வரர்ஆலயம்.
இவ்வாலயத்தில் உள்ள பரகேசரி வர்மனின் கல்வெட்டுக்கள் மறவனீஸ்வரர் என்ற அச்சோழர் கால பழுவேட்டரையர் எடுத்த கோயிலின் வரலாற்றுச் சிறப்புகளை நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.
இங்கு குறிப்பிட பெரும் பரகேசரி என்பான் முதல் பாராந்தகச் சோழன் என்றுசிலஆராய்ச்சியாளர்களும், உத்தம சோழன் என்றுசிலஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர். எப்படி இருப்பினும் முற்காலச் சோழர்கால கோயில் என்பதில் ஐயமில்லை.
இத்தனை அழிவுகளுக்கி டையேயும் அந்த ஆலயத்தில் காணப்படும் முதல்பராந்தகச்சோழனின் 36 ஆம் ஆண்டு கி.பி 943 கல்வெட்டுச் சாசனம் ஒன்று ஒரு தனி சிறப்புடன்விளங்குகின்றது. இச்சாசனம் இங்கு நாம் முன்பு கண்ட திருவாலந் துறையுடைய மகாதேவர் கோயில் என்ற அந்தபெரியஆலயத்திற்கு இரண்டு கிணறுகள் பற்றிய செய்திகளை உரைப்பனவாகும்.
இந்தளூர் என்ற ஊரினை சார்ந்த சாத்தன் திருவாரூர் அடிகள் என்பவர்திருவாலந்துரையார் கோயிலுக்காக முதலீடாக அளித்த பொற்காசுகளை பெற்றுக்கொண்ட மூன்று ஆலய ஊழியர்கள், அம் முதலீட்டின் ஆண்டு வட்டித் தொகையினை ஊதியமாகப் பெற்றுக் கொண்டு ஆலந்துறை யாராகிய ஈசனுக்கு நாள்தோறும் அபிடேக நீர் எடுக்க பெறும் திருமஞ்சன கிணற்றில் ஒரு ஏற்றத்தை அமைத்து அதை இயக்கி அதனால் எடுக்க பெற்ற நீரினை கால்நடைகளின் தாகத்தை தணிக்க அளிப்பதற்காகவும், திருவேங்கைபுன்னங்
காடு என்ற இடத்தில் உள்ள இக்கோயிலின் திருநந்தவனத்துக்கு கிணற்றில் மற்றொரு ஏற்றத்தை அமைத்து ஈசனின் பூசனைக்காக மலர் தரும் செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதற்காகவும் ஒப்புக்கொண்டதை இக்கழ்வெட்டு சாசனம் விவரிக்கின்றது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment