சனிமஹா பிரதோஷம் பற்றிய பதிவுகள்
ஜாதகத்தில் எந்த கிரகம் சரியில்லை என்றாலும், எந்த திசை நடந்தாலும் சரி, வாழ்வில் என்ன கஷ்டமாக இருந்தாலும் சரி பிரதோஷத்தன்று சிவன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் அனைத்தும் நீங்கி விடுதலை.
சனிக்கிழமையில் வரும் சனி பிரதோஷத்தன்று விரதம் இருந்து, சிவ தரிசனம் செய்தால் அனைத்து விதமான பாவங்களும் நீங்கி விடும் என்பது ஐதீகம். சிவ நாமங்களை சொல்லி வழிபட்டால் சிவனின் அருள் முழுவதுமாக கிடைக்கும்.
சிவபெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் ஒன்று பிரதோஷ விரதம் ஆகும். ஒவ்வொரு மாதமும் வரும் திரியோதசி திதியை சிவ வழிபாட்டிற்குரியதாக சொல்கிறோம்.
திரியோதசி திதியில் மாலை 04.30 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம்.
சிவ பெருமானின் அருளை முழுமையாக பெற வேண்டும் என்கிறவர்கள் பிரதோஷத்தன்று விரதம் வழிபட்டாலே போதும். பிரதோஷ விரதம் சிறப்பானது என்றாலும் ஒரு குறிப்பிட்ட மாதங்கள், கிழமைகளில் வரும் போது கூடுதல் சிறப்பு பெறுகிறது.
பிரதோஷங்களில் திங்கட்கிழமையில் வரும் சோமவார பிரதோஷமும், சனிக்கிழமையில் வரும் சனிப்பிரதோஷமம் மிகவும் விசேஷமானவை. அதிலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தை சனி மஹாபிரதோஷம் என சிறப்பித்து சொல்கிறோம்.
ஒரு சனி மஹா பிரதோஷத்தன்று விரதம் இருந்து, சிவனை வழிபட்டால் 5 ஆண்டுகள் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்ட பலனை பெற முடியும். சனிப் பிரதோஷத்தன்று சிவ பெருமானையும், சனீஸ்வரனையும் விரதம் இருந்து வழிபட்டால் கிரக தோஷங்கள், சனியால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் நீங்கி விடும்.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சனி மஹா பிரதோஷம்
அதிகாலையில் எழுந்து நீராடி, நெற்றியில் திருநீறு பூசி, சிவ நாமங்களை உச்சரித்தபடி இருக்க வேண்டும். பகல் முழுவதும் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருக்க வேண்டும்.
முழுவதும் உபவாசமாக இருக்க முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று, நந்தி தேவரையும், சிவ பெருமானையும் வழிபட்டு, அதற்கு பிறகு அங்கு தரும் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment