Tuesday, December 24, 2024

மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்...

 நினைத்ததை நிறைவேற்றும் மார்கழி மாத வழிபாடு பற்றிய பதிவுகள் 
மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் விரதம் இருந்து இறைவழிபாடு செய்வதால் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற முடியும். தெய்வங்களை நம்முடைய வீட்டிற்கே அழைத்து வரும் மாதமாக மார்கழி மாதம் திகழ்கிறது.
மார்கழி மாதம் என்பது தெய்வ வழிபாட்டிற்குரிய சிறப்பான மாதங்களில் ஒன்று. காக்கும் கடவுளான பெருமாளே, பகவத் கீதையில் மார்கழியை தனக்கு விருப்பமான மாதமாக கூறி உள்ளார். 

இந்த மாதத்தில் விஷ்ணு வழிபாடு மட்டுமின்றி சிவ வழிபாடு செய்வதும் மிக மிக சிறப்பானதாகும். 

மார்கழி மாதத்தில் அனைத்து வைணவ தலங்களிலும் அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு, வழக்கமாக பாடும் சுப்ரபாதத்திற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களை பாடி திருப்பள்ளியெழுச்சி நடைபெறும். அதே போல் சிவாலயங்களில் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடப்படும்.

மார்கழி மாதம் தேவர்களின் விடியற்காலை பொழுது என்பதால் இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகளுக்கு சிறப்புகளும், பலன்களும் அதிகம். அதனால் தான் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள்.


தெய்வீக ஆற்றல் அதிகம் நிறைந்த மார்கழி மாதத்தில் குறிப்பிட்ட 3 விஷயங்களை செய்வதால் வாழ்க்கையில் நாம் நினைத்தது நடக்கும். கடவுளிடம் முன் வைத்த கோரிக்கைகள் அப்படியே நடைபெறும். அந்த முக்கிய விஷயங்கள் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் அடுத்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
இந்த மாதத்தில் இஷ்ட தெய்வ வழிபாடு செய்வதும் சிறப்பானது என்பதால் இஷ்ட தெய்வத்திடம் நம்முடைய கோரிக்கைகளை சொல்லி வேண்டிக் கொண்டால் அது அப்படியே கிடைக்கும். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்...

 நினைத்ததை நிறைவேற்றும் மார்கழி மாத வழிபாடு பற்றிய பதிவுகள்  மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதத...