Tuesday, December 24, 2024

சனி பகவான் நின்ற கோலத்தில் தனித்து நின்று அருள்பாலிக்கிறார்

அருள்மிகு புரந்தரேஸ்வரர் ஆலயம், 
பாகசாலை- 609 117,  மயிலாடுதுறை மாவட்டம்.         
* இறைவன் பெயர்: புரந்தரேஸ்வரர். 

*இறைவி: 
கல்யாணி அம்பாள்.                

*தல வரலாறு :   
கவுதம முனிவரின் மனைவி அகலிகையின் அழகில் இந்திரன் மதி மயங்கி அவளை அடையும் நோக்கில், கவுதம முனிவர் வெளியே சென்றிருந்த வேளையில், அவரது உருவத்திலேயே அகலிகையை நெருங்கினான். சிறிது நேரத்தில் கவுதம முனிவர்  திரும்பி வர, அவரைப் பார்த்ததும் அஞ்சிய தேவந்திரன், பூனை வடிவம் எடுத்தான். மனைவி தவறு செய்து விட்டதாக கருதிய முனிவர், அவளை கல்லாக போகும்படி சபித்தார். 
பிறர் மனை நோக்கிய இந்திரனை, அவனது உடல் முழுவதும் ஆயிரம் குறிகள் தோன்றும்படி சாபம் கொடுத்தார். 
சாபம் பெற்ற இந்திரன் பிரம்மன் கூறிய அறிவுரைப்படி சிவபெருமானை வணங்க குறுமாணக்குடிக்குப் புறப்பட்டான். 

குறுமாணக்குடி செல்லும் வழியில் இத்தலம் வந்து தங்கிய இந்திரன், யாகம் வளர்த்து இங்கு அருள்புரியும் புரந்தேரேஸ்வரரையும், கல்யாணி அம்பாளையும் வேண்டி தவம் இருந்தான். 

தேவேந்திரன் தங்கி யாகம் வளர்த்த அந்த ஊர் ‘யாகசாலை’ என அழைக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில் மருவி ‘பாகசாலை’ என்றானதாக கூறப்படுகிறது.   

*கருவறையில் இறைவன் புரந்தரேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.    கருவறை வாயிலின் மேல், இந்திரன் யாகம் நிகழ்த்தும்  காட்சி தீட்டப்பட்டுள்ளது.           

*அன்னை கல்யாணி அம்பாள் தென்திசை நோக்கி தனி சந்நிதியில்    நின்ற கோலத்தில்    அருள்பாலிக்கிறாள்.      

*வடக்குப் பிரகாரத்தில் 
சனி பகவான் நின்ற கோலத்தில் தனித்து நின்று அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது. 

* பாகசாலை புரந்தரேஸ்வரர் ஆலயம்  வைத்தீஸ்வரன் கோவிலுக்கு தென் கிழக்கில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது .  மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சங்கடஹர சதுர்த்தியில் விரதம் விநாயகர் வழிபாடு.

இன்று சங்கடஹர சதுர்த்தி வினை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு மிக முக்கியமான விரதங்களில் ஒன்று சங்கடஹர சதுர்த்தி விரதம்...