புதுச்சேரியிலிருந்துசுமார் 16 கி.மீ தொலைவில் தமிழக எல்லைப் பகுதியில் இருக்கின்றது தென்னம்பாக்கம். இங்கேதான் ஶ்ரீஅழகர் சித்தர் கோயில் அமைந்திருக்கிறது. அடர்த்தியாக ஆலமரங்கள் வளர்ந்திருக்கும் பசுமைச் சூழலில், பல்லாயிரக்கணக்கான மனித உருவச் சிலைகளின் மத்தியில் அமைந்திருக்கிறது அழகு முத்து ஐயனார் கோயில். பின்பகுதியில் கிணற்றின் மீது கட்டப்பட்ட ஸ்ரீஅழகர் சித்தர் கோயில் இருக்கிறது. சுமார் 360 ஆண்டுகளுக்கு இந்த கிராமத்துக்கு வந்த அழகர் சித்தர், இந்தப் பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு நோய்களை குணமாக்கியிருக்கிறார். பின்னர், அந்தக் கிணற்றிலேயே சமாதி அடைந்துவிட்டார். அந்தக் கிணற்றின் மேலேயே சித்தருக்கு ஓர் எளிய கோயில் கட்டப்பட்டிருக்கிறது
நாம் சென்றது திங்கள்கிழமை என்பதால், ஏராளமான பக்தர்கள் ஆலயத்தில் குவிந்திருந்தனர். அத்தனைபேர் முகங்களிலும், 'சிலை வைத்தால் நம் பிரச்னை தீர்ந்துவிடும்' என்ற நம்பிக்கை பளிச்சிட்டது தெரிந்தது.
இங்குள்ள பெரும்பாலான சிலைகள் படிப்பில் தேர்ச்சி பெற வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், வெளிநாட்டுப் பயணம் வாய்க்க வேண்டும், புத்திரபாக்கியம் கிட்ட வேண்டும், திருமணம் கைகூட வேண்டும், வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வர வேண்டும், சொத்துப் பிரச்னை தீர வேண்டும்... போன்ற பல கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக வைக்கப்பட்டவை. பதவி கிடைப்பதற்கும்கூட இங்கே சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
பக்தர்கள், தாங்கள் என்னவாக ஆக வேண்டும், தங்களுக்கு என்ன வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அந்த வடிவத்தில் சிலை வடித்து வைக்கிறார்கள். அப்படிச் சிலை வைத்ததுமே அவர்கள் வேண்டுதல் நிறைவேறும் என்கிற நம்பிக்கையுடன் செல்கிறார்கள்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்
No comments:
Post a Comment