Sunday, December 8, 2024

கார்த்திகை சோமவார சங்காபிஷேக தரிசனத்திற்கு இத்தனை சிறப்புகளா.

_சோமவார_சங்காபிஷேகம்  #கார்த்திகை_சோமவார_சங்காபிஷேக_தரிசனத்திற்கு_இத்தனை_சிறப்புகளா.?*
☘️🐚☘️🐚☘️🐚☘️🐚☘️
இறைவனிடம் அருளை வேண்டினாலும், பொருளை வேண்டினாலும் சங்காபிஷேகம் செய்து வழிபட்டால் அது நிச்சயமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. வலம்புரி சங்குகளை தேர்வு செய்து, அவற்றில் புனித நீர்கள் நிரப்பப்பட்டு, அதை கங்கை நீராக கருதி சிவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். சங்காபிஷேகம் செய்து வழிபட்டால் பிறப்பு- இறப்பு சக்கரத்தில் இருந்து விடுபட்டு முக்தி என்னும் பேரின்பத்தை அடைய முடியும்.
☘️🐚
*சிவனை வழிபடுவதற்கு மிகவும் ஏற்ற கிழமை, திங்கள். இதனாலேயே சோமவார தரிசனம், சோமவார விரதம், சோமவார பிரதோஷம் ஆகியவை மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது. அதிலும் சிவ பெருமான் ஜோதி வடிவமாக காட்சி தந்த தீபங்களின் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தில் சிவனை வழிபடுவது அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி விடும்.*
☘️🐚
*#கார்த்திகை_சங்காபிஷேகம் :
☘️🐚
சிவ பெருமானை அபிஷேக பிரியர் என்பார்கள். சிவ பெருமான், அக்னி பிளம்பமாக காட்சி தருபவர். vஅதனால் அவரை மனதையும், உடலையும் குளிர்விப்பதற்காக பக்தர்கள் பலவிதமான பொருட்களால் சிவனுக்கு அபிஷேகம் செய்வதுண்டு. பொதுவாக சிவனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் என குளிர்ச்சி தரும் 16 விதமான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.
☘️🐚
மற்ற மாதங்களில் எத்தனை விதமான பொருட்களைக் கொண்டு சிவனுக்கு sஅபிஷேகம் செய்தாலும், *கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் நடத்தப்படும் சங்காபிஷேகமே மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது. சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் மிகவும் உயர்வான அபிஷேகமாக கருதப்படுவது சங்காபிஷேகம். சங்கினால் நாம் அபிஷேகம் செய்வது மட்டுமல்ல, அந்த சங்காபிஷேகத்தை வேறு யாராவது செய்வதை நாம் தரிசித்தாலும் கூட அளவில்லாத பல பலன்களை பெற முடியும்.*
☘️🐚
*#சந்திர_பலம் :
☘️🐚
சிவனுக்கு சோமநாதர் என்றொரு திருநாமம் உண்டு. சோமன் என்பது சந்திரனை குறிக்கும் சொல்லாகும். நவகிரகங்களில் mஒன்றான சந்திரனை ஜோதிட சாஸ்திரத்தில் மனோகாரகன் என்பார்கள். ஒருவருடைய மனம் தெளிவாக இருக்க வேண்டும், அவர் நல்ல மனநிலையுடன் இருக்க வேண்டும் என்றாலும் சந்திரனின் அருளும், ஜாதகத்தில் சந்திர பலமும் மிகவும் அவசியம். மனத்தெளிவு இருந்தால் மட்டுமே நம்மால் சரியாக சிந்தித்து, செயல்பட முடியும். மனத்தெளிவு இருந்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும். அந்த சந்திரனையே தலையில் சூடி காட்சி தருபவர் சிவ பெருமான்.
☘️🐚
*​#சந்திரனின்_சாபம்_தீர்த்த_சிவன் :
☘️🐚
தனக்கு ஏற்பட்ட சாபத்தால் 64 கலைகளில் ஒவ்வொன்றாக இழந்து, அழகு, பொலிவு தேய்ந்து கடும் துன்பப்பட்ட சந்திரன், தன்னுடைய சாபம் நீங்குவதற்காக சிவ பெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். கார்த்திகை சோமவாரத்தில் விரதம் இருந்து சிவ பூஜை செய்தான். சந்திரனின் தவம் மற்றும் பூஜையால் மனம் மகிழ்ந்த ஈசன், சந்திரனுக்கு சாப விமோசனம் அளித்ததுடன், பிறை சந்திரனை தனது தலையில் சூடி, சந்திரசேகரனாகவும், சந்திரகமெளலீஸ்வரராகவும் காட்சி அளித்தார்.
☘️🐚
#சங்காபிஷேக_சிறப்புகள் :
☘️🐚
இதனால் கார்த்திகை சோமவாரத்தில் சிவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டால் மனோபலம், மனத்தெளிவு கிடைக்கும். சந்திர பலம் கிடைக்கும். சந்திரன் வழிபட்டு பயன்பெற்றதை போற்றும் விதமாக கார்த்திகை சோமவாரத்தில் சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும். 54, 60, 64,108,1008 என்ற எண்ணிக்கையில் சங்குகளை வரிசையாக அடுக்கி, அவற்றிற்கு சந்தனம், குங்குமம் வைத்து, பூக்கள் போட்டு அலங்கரித்து, அதற்குள் தண்ணீர், வாசனை திரவியங்கள் நிரப்பி, மந்திர ஜபம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தி, அந்த புனித நீரைக் கொண்டு சோமவாரத்தில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படும். சங்கு வைத்து வீட்டிலும் சங்காபிஷேகம் செய்யலாம்.
☘️🐚
*​#சோமவார_சங்காபிஷேக_தரிசன_பலன்கள் :
☘️🐚
*கார்த்திகை சோமவாரத்தில் நாம் சங்காபிஷேகம் செய்தாலும் சரி, சங்காபிஷேகம் நடைபெறுவதை தரிசித்தாலும் சரி அவர்களுக்கு ஆயும் விருத்தி உண்டாகும். தீராத நோய்கள் தீரும். தீயசக்திகள், கண்திருஷ்டிகள் எதுவும் அவர்களை அண்டாது விலகி விடு. மனம் தூய்மை ஆகும். பாவங்கள் தீரும். சங்கு, மகாலட்சுமியின் அம்சம் என்பதால் செல்வ வளம் பெருகும். வற்றாத செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். அனைத்து விதமான துன்பங்களும் நீங்கி, நன்மைகள் பெருகும். நம்முடைய மனதில் நினைக்கும் நியாயமான வேண்டுதல்கள் அனைத்தும் உடனடியாக நிறைவேறும், மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் எப்போதும் குடிகொள்ளும்.*

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

திருவாதிரை தரிசனத்தை ஆருத்ரா தரிசனம் என்று கூறுவார்கள்..

திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும் . கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா நட்சத்திரங்களை நான் திருவாத...