Friday, January 31, 2025

108 திவ்ய தேசங்களில் 41வது திவ்ய தேசமாக உள்ள கடலூர் திருவந்திபுரம் தேவநாத சாமி

.



108 திவ்ய தேசங்களில் 41வது திவ்ய தேசமாக உள்ள கடலூர் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் கும்பாபிஷேகம் பிப்ரவரி மாதம்2 தேதி நடக்கிறது.

இந்தியாவிலேயே ஹை கிரிவருக்கு மலை மேல் தனிக்கோயில் இங்கு மட்டுமே சாத்தியம் இத்தலத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர், லட்சுமியை தனது வலது தொடையின் மீது அமர வைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில்சிறப்புமிக்கவை வைணவத் திருத்தலங்கள். இவைகளில்வரிசையில் 41-வது திவ்ய தேசமாக இருப்பது திருவந்திபுரம்108 திவ்ய தேசங்கள்' என்று வரிசைப்படுத்தப்படுகிறது.

கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் அமைந்துள்ள அந்ததேவநாத சாமி கோவில், கெடிலம் நதிக்கரை ஓரமாக கோவில் அமைந்துள்ளது. மூலவராக தேவநாதரும்உச்சவராக அச்சுதன் உள்ளனர். தாயார் செங்கமலம், ஹேமாம்புஜவல்லி அமையப் பெற்றுள்ளது.
இங்கு மூலவராக தேவநாதரும், உற்சவஆவார்கள்.தலவிருட்சமாக வில்வமும், தீர்த்தமாக கருட தீர்த்தமும் உள்ளது.தேவநாதசாமி கோவிலின் எதிரில் அவுசதகிரி மலைஉள்ளது.இதில் செல்வத்துக்கும், கல்விக்கும் அதிபதியான பரிமுகத்துடன் கூடிய லட்சுமி ஹயக்ரீவர் சன்னிதி அமைந்துள்ளது.

தல வரலாறு

ஒரு சமயம் அசுரர்களால் தேவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.அப்போது அந்த தேவர்கள் இப்பகுதிக்கு வந்தனர். அவர்கள்கோவில் எதிரே உள்ள அவுசதகிரி மலையில் இருந்து திருமாலைவழிபட்டனர்.திருமாலும் அவர்களுக்கு உதவுவதாக உறுதி அளித்தார்.

இதை அறிந்த அசுரர்கள் நான்முகனிடம் இதுபற்றி முறையிட்டனர். ஈசனின் துணை கொண்டு யுத்தம் செய்யுமாறு நான்தனது வல குறிப்பிடத்தக்கதாகும்.

முகன் பணித்தார் ஈசனும் அசுரர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார்.

தேவர்கள் ஈசனால் தாக்கப்பட்டனர். ஏற்கனவே தேவர்களுக்குஉதவுவதாக வாக்கு அளித்த திருமாலால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால் அவர் சக்ராயுதத்தை ஏவினார். அது அசுரர்கள் அனைவரையும் தோல்வியடையச் செய்தது.

அசுரர்கள் அனைவரும் திருமாலிடம் சரணடைந்தனர்.

அனைவரையும் அரவணைத்த திருமால், தானே மும்மூர்த்தியாக அருள்பாலிப்பதாகக் கூறி தனது திருமேனியில் நான்முகனையும், ஈசனையும் காண்பித்தார். இதில் தேவர்களுக்கு தலைவனாக

இருந்ததால் 'தேவநாதன்' என்ற பெயர் உருவானது.

அதேவேளை தனது தந்தையார் நான்முகன் அருளியபடி பிரம்மதீர்த்தத்தில் தாமரை மலரின் நடுவே திருமகள், குழந்தையாகபிருகு முனிவர் முன் தோன்றினார்.அவருக்கு ஹேமாம்புஜவல்லி

என்று பிருகு முனிவர் பெயரிட்டு அழைத்து வந்தார்.

ஹேமாம்புஜ வல்லியும் நாராயணனையே தன் கணவராக அடைய கோவிலில் உள்ள சேஷ தீர்த்தக் கரையில் தவம் செய்தார். அவரது தவத்தால் மகிழ்ச்சி அடைந்த தேவநாதன், அவர்முன்னர் தோன்றி, பிருகு முனிவரின் சம்மதத்துடன் அவரைக் கரம் பிடித்தார்.

ஈசன், இந்திரன், பூதேவி, பிருகு முனிவர், மார்க்கண்டேயர்.

தேவநாதர்முதலானோர் தவம் செய்த தலமாக இது விளங்குகிறது. இந்தஇடத்தில் திருமால் மும்மூர்த்தியாக வாசம் செய்வதை அறிந்தஆதிசேஷன், இந்த இடத்திலேயே ஒரு நகரத்தை உருவாக்கினார்,அதுவே திரு அஹீந்திரபுரம் என்ற பெயரோடு விளங்கி, தற்போது'திருவந்திபுரம்' என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இங்கு வந்த திருமாலுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டது. அதன்படியே கருடாழ்வாரும் உடனே தீர்த்தம் அடுத்து, கருடாழ்வாரை அழைத்து தனக்கு தீர்த்தம் கொண்டுஎடுத்துவரச் சென்றார். அப்போது, ஒரு ரிஷியின் கமண்டலத்தில்விரஜா தீர்த்தம் இருப்பதை அறிந்த கருடாழ்வார், தன் அலகால்அந்த கமண்டலத்தை தட்டி விட்டார். இதனால் கோபத்தின் உச்சம்சென்ற் அந்த ரிஷி, 'இந்த நீர் கலங்கட்டும்' என்று சபித்தார்.

உடனே கருடாழ்வார், திருமாலின் தாகம் தீர்க்கவே தான் அவ்வாறு செய்ததாகக் கூறினார். அதைக் கேட்டு வருந்திய ரிஷி -'கலங்கிய நீர் தெளியட்டும்' என்றார். இப்படி, கருடனால் கொண்டு வரப்பட்ட தீர்த்தம் தான், கெடிலம் ஆறாக கோவிலையொட்டி பாய்ந்தோடுகிறது.

ரிஷியின் சாபத்தால்இன்றும் கருட நதியின் (கெடிலம்) தீர்த்தம், மழைக் காலத்தில் கலங்கிய நிலையில் ஓடுகிறது.கருடாழ்வார் திருமாலுக்கு ஏற்பட்டதாகத்தை போக்க தீர்த்தம் எடுத்து வரதாமதம் ஏற்பட்டது.

இதனால், அருகில் இருந்த ஆதிசேஷன் தன்வாலால் பூமியைப் பிளந்து, அங்கிருந்து ஊற்று பெருகச் செய்தார்.

அதன் மூலம் திருமாலின் தாகத்தை தீர்த்து வைத்தார்.இப்போதும்சேஷ தீர்த்தம் என்ற கிணறு கோவிலின் உள்ளே தெற்கு பகுதியில்அமைந்து இருப்பதை பக்தர்கள் காணலாம். இந்த சேஷ தீர்த்தத்தை பக்தர்கள் வழிபட்டு செல்கிறார்கள். இதனுள் உப்பு, மிளகுவெல்லம் போட்டு வழிபட்டால்பல நோய்கள் குணமாகும் என்பதுபக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இத்தல தேவநாதப் பெருமாளை வணங்குவதால் உயர் பதவி,குழந்தை வரம், நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு, நிலைத்த செல்வம்கிடைக்கும். தங்களது பிரார்த்தனை நிறைவேறியவுடன் பக்தர்கள்பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்விப்பது வழக்கமாக இருந்துவருகிறது.

இந்த கோவிலில் திருமணத்தை நடத்தினால், மணமக்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி சகல பாக்கியமும் பெற்று நீடூழிவாழ்வார்கள். ஆகையால் முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் இங்கே நடைபெறுவதைக் காண முடியும்.

இந்தக் கோவிலில் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரமோற்சவமும், வைகாசி விசாகம் நம்மாழ்வார் சாற்றுமுறை 10 நாள் உற்சவம்,பெருமாள் வசந்த உற்சவம் 10 நாள் (பவுர்ணமி சாற்றுமுறை), நரசிம்ம ஜெயந்தி, ஆடி அமாவாசை, ஆவணி பவித்ர உற்சவம்,கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், புரட்டாசி தேசிகன் பிரம்மோற்சவம்,ஐப்பசி தீபாவளிப் பண்டிகை, முதலாழ்வார்கள் உற்சவம் போன்றவிழாக்கள் என்று ஆண்டு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருப்பதைக் காணலாம்.

இத்தல மூலவர் சன்னிதியின் மேல் உள்ள விமானம், 'சுத்தசத்வம்’என்று அழைக்கப்படுகிறது. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாக விளங்கும் திருவந்திபுரம் தேவநாத சாமியை வந்து தரிசித்து நேர்த்திக் கடன் செலுத்தலாம்.

ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவர்'கல்விக் கடவுள்' சரஸ்வதி. அந்த சரஸ்வதிக்கேகல்வியறிவைக் கொடுத்தவர், ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவர். இவருக்குதமிழகத்தில் முதன் முதலில்கோவில் அமையப்பெற்றதலம் இது என்பது தனிச்சிறப்பு.

தேவநாதசாமி கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள அவுசதகிரி மலை மீது ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இந்த மலையானது,இமயமலையில் இருந்து சஞ்சீவி மலையை அனுமன் இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில் விழுந்த சிறு துண்டு என்கிறார்கள்.

இங்கு வசித்து வந்த வேதாந்த தேசிகர் என்பவர், ஹயக்ரீவரை பெரிதும் விரும்பி வழிபட்டார். அவருக்கு ஹயக்ரீவமந்திரத்தை கருட பகவான் உபதேசித்தார். எப்போதும்ஹயக்ரீவ மந்திரத்தை உச்சரித்தபடியே இருந்த தேசிகருக்குஹயக்ரீவர் அருள்பாலித்ததோடு மட்டுமல்லாது, அனைத்துவேத சாஸ்திரங்களையும் இந்த அவுசதகிரி மலையிலேயேகற்பித்தார்.

தேசிகரால் வழிபடப்பட்ட ஹயக்ரீவரை இன்றும்தேவநாத சாமி கோவிலில் மலை மீது உள்ள தனி சன்னிதியில் காணலாம். இத்தலத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர், லட்சுமியை தனது வலது தொடையின் மீது அமர வைத்திருப்பதுகுறிப்பிடத்தக்கதாகும்

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, January 30, 2025

எட்டுக்குடி முருகன் கோவில் திருவாரூர்

தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற டாப் 10 முருகன் கோவில்கள்
10. எட்டுக்குடி முருகன் கோவில் திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். அறுபடை வீடு முருகன் கோவில்கள் தவிர புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஓன்று. இது மிக பழமையான கோவில்களில் ஓன்று. இங்கு முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார். முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே. இந்த கோவிலில் முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள். இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலபிஷேகம் செய்கிறார்கள். பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்கு துணையாக சென்ற 9 வீரர்களுக்கு சிலைகள் உள்ளது. சூரா சம்ஹாரம் செய்ய முருகன் இங்கிருந்து புறப்பட்டதாக ஐதீகம். சத்ரு சம்ஹாரம் செய்ய இங்கு வேண்டுவார்கள் ஆசைக்கு குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்கு ஓசைக்கு மணி கட்டுவதாக வேண்டுகிறார்கள். எல்லா முருகன் கோவில்களிலும் இருப்பது போல் இங்கும் காவடி எடுப்பது மிகவும் சிறப்பு.
9. அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் குன்றத்தூர்

குன்றத்தூர் முருகன் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் அமைந்துள்ளது. சிறு குன்றின்மீது அமைக்கப்பட்ட இக்கோவிலை தரிசிக்க 80 படிகளுக்கும் மேலாக ஏறிச்செல்ல வேண்டும்.இந்த திருத்தலத்தில் மூலவராக வீற்றிருப்பவருக்கு சுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிகிறார்.கருவறை சன்னிதி முன்புள்ள துவாரபாலகர்களுக்கு வஜ்ரம், சூலாயுதம் என்று முருகனுக்கு உரிய ஆயுதங்கள் இருக்கின்றன. கருவறையில் முருகன், தெய்வானை, வள்ளி ஆகிய திருமூர்த்தங்கள் உள்ளன. கருவறைக்கு வெளியில் நின்றபடி மூவரையும் ஒரே சமயத்தில் தரிசனம் செய்வது சிரமம். காரணம் கருவறை மற்றும் சிலைகளின் வடிவமைப்பு அவ்வாறு அமைந்துள்ளது. இத்தலத்து முருகனுக்கு திருமணத்தடைகளை விலக்கக்கூடியவராக விளங்குகிறார் என்பதாகும். அதன் காரணமாக திருமணத்தடை உள்ளவர்கள் அதிக அளவில் இங்கு நேர்ந்து கொள்கிறார்கள்

8. மருதமலை சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில், மருதமலை

மருதமலை முருகன் கோவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.

7. வடபழனி ஆண்டவர் திருக்கோவில், வடபழனி

அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் சென்னையில் உள்ள வடபழனியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது மற்றும் சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு சுவாமி வலது பாதத்தை முன் வைத்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.திருமணத் தடை விலகவும் மற்றும் மக்கட்பேறு பெறவும் சிறந்த கல்வி அறிவு பெறவும், உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கவும் மூலவரையும், அங்காரகனையும் (செவ்வாய்) வழிபாடு செய்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்பவர்களுக்கு குறைகள் நீங்கி நிவர்த்தி ஏற்படும் என்பது இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பு. தென்பழநிக்கு செல்ல முடியாதவர்கள் வடபழநிக்கு வந்து தங்கள் குறைகளை சொல்லியும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றியும் செல்கின்றனர். அவர்களுக்கு கலியுக வரதனான வடபழநி ஆண்டவர் அருள்பாலிப்பது திண்ணம்.

6. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் சோலைமலை

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மதுரை மாவட்டத்தில் சோலைமலையில் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது ஆறாவது படைவீடாகும். சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.

5. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருத்தணி

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ளது. இது ஐந்தாம் படைவீடு. பொதுவாக அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், இங்கே மார்பில் காயம்பட்ட தடத்துடன் இருக்கிறார். சூரனுடன் போரிட்டபோது ஏற்பட்ட காயமாம். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் ‘தணிகை’ என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. இதனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

4. அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் சுவாமிமலை
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுவாமிமலையில் உள்ளது. இது நான்காம் படைவீடு. சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் ‘சிவ குருநாதன்’ என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார்.

3 . அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் பழனி

பழனி முருகன் கோவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ளது. முருகனது அறுபடை வீடுகளில் மூன்றாவதாகும். இக்கோவில் மிகவும் புராதனமான கோவிலாகும். இது கடல்மட்டத்தை விட 1500 அடி உயர குன்றின் மீது அமைந்துள்ளது. இங்கு முருகன் தண்டாயுதபாணி சுவாமி என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார்.பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, அக்னி நட்சத்திரம் ஆகிய விழாக்கள் முக்கியமானவையாகும். வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் பிற பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படுகின்றன. பக்தர்கள் காவடி கட்டி நடைப்பயணம் மேற்கொண்டடு வந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பான வழக்கமாகும். லட்சக்கணக்கானோர் தைப்பூசத் திருநாளன்று காவடிகட்டி நடைப்பயணம் மேற்கொண்டு இங்கு வந்து முருகனை தரிசிக்கின்றனர்.

2. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருச்செந்தூர்

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இது இரண்டாம் படைவீடு. இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் ‘அலைவாய்’ என்றும் பெயர் கொண்டது. முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும், பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால்தான் இந்த முருகனின் திருவடிகளை வணங்கினால் பிறவிப் பெருங்கடலை கடக்கலாம் என்ற நம்பிக்கையுள்ளது.

1. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம்
மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இது முதல் வீடாகும். இங்கு மட்டுமே முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடக்கிறது. இங்கு சுப்பிரமணிய சுவாமி மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் ‘திருப்பரங்குன்றம்’ எனப்படுகிறது.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பூஜை அறையில் ஏன் தண்ணீர் வைக்கிறார்கள்.

பூஜை அறையில் ஏன் தண்ணீர் வைக்கிறார்கள் என்று 
தெரிந்து கொள்வோம்...
ஒவ்வொரு நாளும் பூஜைக்கு சுவாமிக்கு நெய்வேத்தியம் படைப்பதுண்டு.

எச்சில் படாத உணவுகள், பழங்கள் ஆகியவற்றை நாம் கடவுளுக்கு வைக்கலாம். நம்முடைய பூஜை அறை மண் பானையிலேயோ அல்லது செம்பு பாத்திரத்திலேயோ தண்ணீரை நிரப்பி வைப்பது மிகவும் நல்ல பலனை கொடுக்கும்.

வழிப்பாட்டின் போது தினமும் தியானத்தில் அமர்ந்து நமக்கு பிடித்த தெய்வத்தின் மூல மந்திரத்தை சொல்ல வேண்டும். அவ்வாறு செய்வதால் நாம் சொல்லும் மந்திரத்தின் (நேர்மறை ஆற்றல்) அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும். இவ்வாறு செய்து அந்த தண்ணீரை அருந்துவதால் நன்மைகள் உண்டாகும்.

பூஜையின் போது தீபாராதனை காட்டி, தெரிந்த தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடலாம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இரும்புப் பொருள்களை பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது. இரும்பு எமனுக்கு உரியது. இரும்பினால் நேர்மறை சக்திகளை கிரகிக்க முடியாது. வெள்ளி, தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, மண்ணால் ஆன பூஜைப் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு நாள் பூஜையின்போதும் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜை செய்ய வேண்டும். அடுத்த நாள் அதைக் கூரையில் ஊற்றிவிட வேண்டும். இப்படிச் செய்வதால் துர்சக்திகள் நம் வீட்டை அண்டாது. 

பூஜையின்போது மணியோசை எழுப்புவதும் கூட துர்சக்திகள் நெருங்காமல் இருப்பதற்குத்தான். மணியின் இனிய ஓசையானது தீய சக்திகளை விரட்டி, தெய்வீக சக்தியை வீட்டில் நிலவச் செய்யும் வல்லமை கொண்டது.

பூஜையின் போது ஐம்பூதங்கள் அங்கே ஐக்கியமானால் அவர்களின் சக்தி நமக்கு கிடைக்கும். இதில்...

ஆகாயம் என்பது வெட்ட வெளி. அது பூஜை அறையில் வியாபித்து இருக்கும். 

அடுத்து நிலம். அது நம்மை தாங்கி நிற்கும் தரை. 

மூன்றவதாக நெருப்பு, காற்று அது நாம் பூஜை அறையில் ஏற்றும் தீபத்தில் உள்ளது. 

ஆனால் தண்ணீர் அங்கு இல்லை. அதற்காக நாம் தண்ணீரையும் அங்கு வைக்கிறோம். பூஜை அறையில் தண்ணீர் வைப்பதன் மூலம் ஐம்பூங்களின் சக்தி நமக்கு கிடைக்கும் என்பதும் ஐதீகம்...!!

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

செல்வ வளம் தரும் சிவலிங்க விரத வழிபாடு

_செல்வ வளம் தரும் சிவலிங்க விரத வழிபாடு:_

சிவலிங்க விரத வழிபாட்டை, சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் தவறாமல் செய்வது மிகவும் நல்லது. தொடர்ந்து வழிபடுவது நற்பலனைத் தரும்.

சிவபெருமான் அபிஷேகப் பிரியர் ஆவார். சிவபெருமானை நாம் ஆலயங்களில் சென்று வழிபடும் பொழுது லிங்க வடிவமாகத் தான் வழிபடுகின்றோம். பொதுவாக சிவலிங்க விரத வழிபாட்டை, சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் தவறாமல் செய்வது மிகவும் நல்லது. திருவாதிரை நட்சத்திரம் அன்றும் தொடர்ந்து வழிபடுவது நற்பலனைத் தரும். அவ்வாறு வழிபட சிவன் ஆலயத்திற்குச் செல்லும் பொழுது, முதலில் கணபதியை வழிபட வேண்டும். பிறகு அறுபத்து மூவரை வழிபட்டு, அடுத்ததாக நந்தியை தரிசித்த பிறகே, சிவலிங்க வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த முறைப்படி வழிபட்டால் தான் உரிய விதத்தில் பலன் உடனடியாகக் கிடைக்கும்.

சிவலிங்கத்தை பீடம், லிங்கம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தரையில் இருந்து மேலே எழும்பி லிங்கத்தை தாங்கி நிற்கும் பகுதி ‘பீடம்’ ஆகும். இது எல்லா வடிவங்களிலும் இருக்கும். பாணம் அல்லது லிங்கம் என்பது உருளை வடிவத்தில் இருக்கும். பீடத்தில் இருந்து நீர் விழும் பகுதி ‘நாளம்’ எனப்படும். பொதுவாக லிங்கத்தின் தன்மையைப் பொறுத்து, அசையும் லிங்கம், அசையா லிங்கம் என்று இரு வகையாகப் பிரிக்கலாம்.

 
மொத்தத்தில் சிவலிங்க விரத வழிபாடு என்பது சிறப்பான வழிபாடு. ஒரே சிவலிங்கத்தில், 1008 லிங்கங்கள் அமையப் பெற்றதை ‘சகஸ்ர லிங்கம்’ என்று அழைப்பார்கள். இது சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ளது. 108 சிவலிங்கங்கள் வரிசையாக அமைந்தது தஞ்சை அருகில் உள்ள பாபநாசத்தில் உள்ளது. தினமும் சிவாயநம, ஓம் நமசிவாய, சிவசிவ என்று எத்தனை முறை சொல்லி வழிபடுகின்றோமோ, இந்த அளவிற்கு செல்வாக்கு விருத்தியும், செல்வ விருத்தியும் உண்டாகும். திங்கட்கிழமை வழிபட்டால் மங்கலங்கள் உருவாகும்; சந்ததி தழைக்கும்; சந்தோஷம் பிறக்கும்; எண்ணியது நடக்கும்.

சிவனை வழிபடும் பொழுது இரு கரங்களையும் மேல்நோக்கி தலைக்குமேல் உயர்த்தி “சிவாயநம” அல்லது “ஓம் நமசிவாய” என்று சொல்லி சிவலிங்கத்தை வழிபட்டால் மன அமைதியோடு வாழ இயலும். சிவ தரிசனத்தையும், இறை ஆராதனைகளையும் முடித்த பிறகுதான் ஆலயத்தை வலம் வர வேண்டும். ஆலயத்தை 1, 3, 5 என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் வலம் வரவேண்டும். பிரகாரத்தைச் சுற்றி வந்து முடிக்கும் பொழுது, கொடிமரத்தின் முன்பாக அனைத்து தெய்வங்களையும் மனதில் நினைத்துக் கொண்டு நமது வேண்டுதலைச் சொல்லி வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.

சிவலிங்கத்திற்கு வில்வ அர்ச்சனை மிகவும் உகந்தது. வில்வத்தால் அர்ச்சித்தால் பாவங்கள் தீரும். பணவரவு கூடும். வீட்டில் சிவலிங்கம் வைத்து சிவபூஜை செய்பவர்கள் புறத் தூய்மையோடு, அகத்தூய்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்.

அசையும் லிங்கம் என்பவை மண், உலோகம், ரத்தினம், மரம், கல், மாவு, மஞ்சள் போன்றவற்றால் செய்யப்படும். சுயம்புலிங்கம் என்பது தானே தோன்றியது. இவை நிலையாக இருக்கக் கூடியவை. இவை தவிர அரிசி, சாதம், களிமண், பசுஞ்சாணி, வெண்ணெய், ருத்ராட்சம், சந்தனம், தர்ப்பம், பூ போன்றவற்றால் ஆன லிங்கங்கள். இவை வழிபாடு முடிந்ததும் அந்தந்த பொருட்களுடன் சேர்க்கப்படும். அசையா லிங்கங்கள் என்பவை கோவில்களில் நிலையாக இருக்கும் கற்சிற்பங்கள்.

எந்தெந்தப் பொருட்களால் ஆன லிங்கங்கள் என்னென்ன பலன் கொடுக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம். மன உறுதி, உடல் உறுதி பெற மாவால் செய்த லிங்கத்தையும், நல்ல உணவு கிடைத்து பசிப்பிணி அகல சாதத்தால் செய்த லிங்கத்தையும், ஞானம் பெருக ருத்ராட்ச லிங்கத்தையும், நீண்ட ஆயுள் கிடைக்க பூவால் ஆன லிங்கத்தையும் வழிபாடு செய்யலாம். இன்னும் எத்தனை, எத்தனையோ லி ங்கங்கள் இருக்கின்றன. மரகத லிங்கத்தை மனதார வழிபட்டால் வசதி வாய்ப்புகள் பெருகும்.

இத்தனை வகை லிங்கங்களில் நமக்கு ஏற்ற லிங்கத்தைத் தேர்ந் தெடுத்து, பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் ஆயுள் நீடிக்கும். நோய் நீங்க கரும்புச் சாறு அபிஷேகமும், பயம் நீங்க பழச்சாறு அபிஷேகமும், இனிய குரல் வளம் கிடைக்க தேன் அபிஷேகமும், லட்சுமி கடாட்சம் ஏற்பட சந்தன அபிஷேகமும், நினைத்தது நிறைவேற சுத்தமான தண்ணீர் அபிஷேகமும், வசீகரம் பெற மஞ்சள் தூள் அபிஷேகமும், ராஜ யோக வாழ்வு அமைய அன்னாபிஷேகமும் செய்து வழிபட்டால் நல்லது.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, January 28, 2025

நாகர்கோவில் நாகராஜா கொடிமரத்தின் உச்சியில் ஆமை உள்ள கோவில்.

#ஆதிசேஷன்_தவமிருந்த_அதிசயங்கள்_நிறைந்த_நாகராஜாகோயில்_நாகர்கோவில்          மனிதர்களுக்கு   நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை, குழந்தை பிறப்பதில் தடை ஏற்படுகிறது. எனவேதான் ஜோதிடர்கள் நாகதோஷம் நீங்கப் பரிகாரம் கூறுவார்கள். நாகதோஷம் சருமவியாதியைத் தருகிறது. நாகரை நினைத்து வழிபட்டால் சருமவியாதி தீரும் என்பது நம்பிக்கை.
         நம் நாட்டில்   நாகர் வழிபாட்டிற்கு    என்று தனியாக அமைந்தக் கோவில்  நாகர்கோவில் நாகராஜா ஆலயமேயாகும்.  திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திரு நாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழ்ப்பெரும்பள்ளம், திருநெல்வேலி (கோடகநல்லூர்) போன்ற ஆலயங்களில் எல்லாம் மூலவரான சிவபெருமானை வழிபட்டு நாகங்கள், தங்களது கொடிய தோஷங்களைப் போக்கிக் கொண்டதால் பெருமை மிக்கதாகும்.
         நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது  "நாகராஜாவான ஆதிசேஷன் " மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் நாகர்கோவில் நாகராஜா ஆலயம் ஆகும். இங்கே கருவறையில் நாகராஜாவே மூலவராக  இருக்கிறார்.
#நாகர்கோவில்_நாகராஜா 
      கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில்    என்ற ஊருக்கு பெயர்க் காரணமாய்   திகழ்வது அருள்மிகு நாகராஜா திருக்கோயில். நாகராஜா திருக்கோயில், நாகர்கோவில் நகரத்தின்    மத்தியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கிழக்கு பார்த்து இருந்தாலும் தெற்கு திசையில் உள்ள கோபுரவாசல் வழியே பக்தர்கள் தரிசனத்துக்கு செல்வது வழக்கமாக இருக்கிறது.

#தலபுராணம்  
          மகாவிஷ்ணுவிற்குப் படுக்கையாகப்   போகவேண்டுமென ஆதிசேஷன்   தவமிருந்து , மகாவிஷ்ணுவின்   அருளைப் பெற்ற இடமாதலால்   இத்தலத்தில்   மகாவிஷ்ணுவின்   அருளும்  நிரம்பியிருக்கிறது.   திருமாலின்  படுக்கையாகச்   செல்லும்  பாக்கியத்தைப் பெற்ற  ஆதிசேஷனே  இங்கு   நாகராஜாவாக   அருள் புரிகிறார்.   உலகையே   தாங்கும்  ஆதிசேஷனின் திருநட்சத்திரம்  "ஆயில்யம்" .  எனவே    திருமணத் தடையுள்ள   ஆயில்ய   
நட்சத்திரக்காரர்கள்    இக்கோயிலில் சிறப்பு வழிபாடு  செய்து ,  பெரும்   நற்பலனைப்  பெறுகின்றனர்.
           ஆதி சமயமான   வைஷ்ணவத்தில்,     மகாவிஷ்ணு பாம்பின்   மேல் படுத்திருப்பதால் வைஷ்ணவர்களும்    நாகங்களை  வழிபடுவர்.   ஆதி சமயமான   சைவத்திலும்    நாக வழிபாடு உண்டு.   ஏனெனில்  சிவபெருமானின்    உடலில்   ஆபரணங்களாக   இருக்கும் பாக்கியத்தைப்  பெற்றது   நாகங்களே.     எனவே   பிற்காலத்தில்   தோன்றிய    சமணம்,   பௌத்தம்    போன்றவற்றிற்கும் முன்பே   #இந்துக்கள்_நாகவழிபாடு செய்துள்ளனர்.
              #மகேந்திரமலையில்_நாகங்களை   வழிபடும்  #நாகர்கள் என்ற  இனத்தவர்கள்     அதிகமாக  வாழ்ந்ததாக  #வால்மீகிமகரிஷி_இராமாயணத்தில்   கூறியிருக்கிறார்.  அவர்   தென்திசைக்கு    வந்ததில்லை என்றாலும்,   தனது  ஞானத் திருஷ்டியினால்    ஒவ்வொன்றையும்  நேரில் கண்டதைப்  போல  தெளிவாக  எழுதியுள்ளார்.  எமது  #குமரிமாவட்டத்தில்   பலரும்   இன்னும்    தங்கள்   பெயருக்கு   முன்னர்   "நாக"   என்ற பெயரைச்    சேர்த்துக் கொள்கின்றனர்.   மகேந்திர  மலையில்  வசித்த   நாகர்கள்,   தாங்கள்   வழிபட    இவ்விடத்தில் முற்காலத்தில்     நாகரைப்  பிரதிஷ்டைச்  செய்து   வழிபட்டதாகப்   புராணங்கள்   கூறுகின்றன.   சமண மத்திலும்   நாக வழிபாடு   பிரபலம்    என்பதால்,   சமண மன்னர்கள்     இக்கோயிலை   பெரிதும்   போற்றினர்.
          16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு குணவீரபண்டிதன், கமலவாகபண்டிதன்     இருவரும் நாகராஜா பூஜையை மேற்பார்வையிட்ட சமணர்கள் எனத் தெரிவிக்கிறது. இவர்கள் ஆச்சாரியார்களாவர்.   ஐந்நூறு ஆண்டுகளுக்கு   முன் சமண தெய்வமாகவும் ,  வைஷ்ணவர்களின்    போற்றுதற்குரிய  ஆதிசேஷனாகவும்     இக்கோயிலில்   விளங்கியிருக்கிறது.      

#மகிமைமிகு___நாகராஜா__ஆலய_________தெப்பக்குளம் 
    நாகராஜா ஆலயத்தில் இரண்டு தெப்பக்குளங்கள் உண்டு.  கோயிலுக்குள் நாம் சென்றதும்  திறந்த வெளிப்பகுதியில் இருக்கும் ஆலமரத்தை சுற்றி  நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்.  பெண்கள் நாகங்களுக்கு அங்கே பாலூற்றி, சுற்றி வந்து  வழிபடுவர். அதற்கு  எதிரே ஒரு தெப்பக்குளம் உண்டு. அதைத் தவிர இன்னொரு தெப்பகுளம் கோயில் பகுதிக்கு உள்ளேயே உண்டு. அந்தத் தெப்பக்குளம் மிகவும் மகிமை உடையது. 
        அதாவது அந்த தெப்பக்குளத்தைப் பார்க்கும் பொழுது சிலரது கண்களுக்கு மட்டும் அந்த தெப்பக்குளத்தின் மீது நாகங்களாகக்   காட்சியளிக்குமாம். நாகங்கள் சுருண்டு தலையைத்  தூக்கி நிற்பது போல் தெப்பக்குளம் முழுவதும் நாகங்களாகச்  சிலரது கண்களுக்கு மட்டுமே காட்சியளிக்குமாம்.  அவ்வாறு யாருடைய கண்களுக்கு நாகங்கள் அந்தத் தெப்பக்குளத்தில் தெரிகிறதோ அவர்கள் மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்றவர்களாகவும் இருப்பர்.  இன்னொன்று அவர்களுக்கு ஏதேனும் கிரக தோஷங்களினால்  கடுமையான நோய்களால் இனி பாதிக்கப்பட போகின்றனர்! என்பதன் முன்னறிவிப்பாகவும் இவ்வாறு தெரிகிறது!  என்கின்றனர்  நாகராஜா ஆலய பக்தர்கள்;  இதுவும்  நிதர்சனமான உண்மையே.    .
         
       இவ்வாறு எண்ணற்ற அதிசயங்கள் நிறைந்தது நாகர்கோயில் நாகராஜா ஆலயம்.   குறிப்பாக ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு திருமணமாகத் தாமதமானால்,  இங்கே வந்து வழிபட்டு செல்லும் பொழுது நிச்சயமாக மிக நல்ல திருமணவாழ்க்கை வெகு சீக்கிரமே அமைகிறது! என்பதும் நிதர்சனமான உண்மை.
            *நாகர்வழிபாடு. என்பது
வைஷ்ணவ, சைவ சமயங்களில்    முற்காலத்திலேயே   இருந்தது தான்.    ஏனெனில்   ஜோதிட ரீதியாக   #நாகத்தோஷம் உள்ளவர்கள்    பரிகாரம்  செய்ய   நாகங்களை     வழிபடுவது  வழக்கமாக  இருந்துள்ளது.   
 *ஆதிசேஷன் கடும் தவம் செய்து,   தவத்தில்  வெற்றி   பெற்று மகாவிஷ்ணுவுக்குப் படுக்கையாகப் போன தலமாதலால்,   இக்கோயில்   மிகவும்   சக்தி வாய்ந்தது.   அனைத்து   மதத்தவர்களும்    இங்கே  வழிபட்டு, பயனடைவதுண்டு

#ஆதிஷேசன் :
     #அனந்தன்   என்பது    ஆயிரம் தலைகளையுடைய  நாகராஜனின்  பெயர். இவர்   திருமாலைத்   தாங்குபவர்.   இவர்  தவம்  செய்த   இடமாதலால்,   இக்கோயில்  சக்தி   மிக்க    வைணவக் கோயிலாகும்.     திருக்கோயிலின் வாயிலில்   இரண்டு பெரிய 5 தலைகளுள்ள  நாகங்களின் சிலை நம்மை வரவேற்கின்றன. இத்திருத்தலத்தின் கருவறையில் 5 தலைகளுள்ள  நாகத்தின் உருவச் சிலையே (*ஆதிசேஷன்)  மூலவரான நாகராஜ   தெய்வமாக வழிப்படப்படுகிறது. நாகராஜாவிற்கு வழிபாடுகள் நடத்தியப் பிறகு புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. காட்டில்   புல்லறுக்கப்  போன  ஒரு பெண்மணியே  இங்கு நாகர் சிலை  இருப்பதைக்   கண்டுபிடித்து சொன்தாகக்  கூறுகின்றனர்.  

#அதிசய_நிகழ்வு :-
      இத்தல மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது. கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. மேலும் வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இது இன்றும் காணக் கூடிய ஒரு அதிசய நிகழ்வாகும். இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த மண் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை (உத்ராயண புண்ணிய காலம்) வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும். இந்தப் #புற்றுமண் எல்லாவித நோய்களையும் தீர்க்கும் சர்வ சக்தி உள்ள பிரசாதமாகும்.

#வரலாறு :-
       இத்திருக்கோயில் கட்டுமானம் தொடர்பாக   ஒரு கதை வழங்கி வருகிறது. கி.பி.1516 முதல் 1535 வரை நெல்லை மாவட்டம் களக்காட்டை தலைநகராக கொண்டு வேணாட்டை ஆட்சி செய்த மன்னர் பூதலவீர உதயமார்த்தாண்டன். இவர் தீராத சரும வியாதியால் அவதிப்பட்டு வந்தார். ஜோதிடர்கள் அவரது ஜாதகத்தை ஆராய்ந்து இந்த நோய் நாகதோஷத்தால் உண்டானது என்றும் நாஞ்சில் நாட்டு நாகராஜா கோயிலில் வழிபடால் இந்த வியாதி தீரும் என கூறினர். அப்போது நாகர்கோவில் நாகராஜா கோவிலின் சிறப்பு பற்றி அறிந்து ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து கோவிலுக்கு நேர்ச்சை செய்து வழிபட்டதால் அந்த மன்னரின் சருமநோய் தீர்ந்தது. 
       இதற்குப்   பதில்   உதவியாக கோவிலின் சில பகுதிகளை அவர் கட்டிக்கொடுத்துள்ளார்.   ஆனால்   இறைவனின்   விருப்பப்படி   #மூலஸ்தானம்   மட்டும்  *ஓலைவேயப்பட்டே  இன்றளவும்        காணப்படுகிறது. ஒலைவேயப்பட்டே மூலஸ்தானம் இருக்கு வேண்டுமென்பது இறைவனின் கட்டளையாகும்.

#ஆவணிஞாயிறு_வழிபாடு :-
      ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை வழிபாடு, மேலும் சிறப்பு பெற்றது. அன்றுமுதல் இன்றுவரை ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பல இடங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து, இங்கே நாகராஜாவை  வழிபட்டு செல்கிறார்கள். இத்திருக்கோயிலில் புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஜாதகத்தில் இருக்கும் நாகதோஷம் இங்கு வழிபடுவதன் மூலமாக தோஷம் நீங்குகிறது என்பது ஐதீகம்.
        இறைவன் - *அனந்தகிருஷ்ணன், நகராஜா, தீர்த்தம் - நாகதீர்த்தம், தலவிருட்சம் - ஓடவள்ளி, 
ஆகமம் - தாந்திரீகம்
சைவம், வைணவம், சமணம், பௌத்தம் என அனைவரும் நாகராஜாவை வழிபட்டப் பின்னர், அவருடைய வலப் பக்கத்திலுள்ள சந்நிதானத்தில் வாயு ரூபியாக எழுந்தருளியுள்ள   சிவபெருமானைத் தரிசிக்கின்றனர்.
        #அனந்தக்கிருஷ்ணன்   எனும் திருநாமத்துடன் திருமால் இங்கே எழுந்தருளியுள்ளார்.   இக்கோயிலின் தூண்களில் சமண சமயத்தின் தீர்த்தங்கர்களான பார்சுவ நாதரும், மகா வீரரும் தவக்கோலத்திலுள்ள காட்சி செதுக்கப்பட்டுள்ளன.  கோயிலின் நுழைவாயில் நேபாள பெளத்த விகாரை நினைவூட்டும் வண்ணம் உள்ளதென கூறுகின்றனர். எனவே இத்திருக்கோயில் சைவ, சமண, வைணவ, பெளத்த மார்க்கங்களின் சங்கமமாக கருதப்படுகிறது.

*கொடிமரமும்_ *தலவிருட்சமும் :-
      *ஓடவள்ளி என்று கொடியே இத்தல விருட்சமாகும்.   ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட #நாகலிங்கமரம் உள்ளது. இந்தக் கோவிலின் பிரதான #மூலவர்_நாகராஜர் என்றாலும்,  #அனந்தகிருஷ்ணர் சந்நிதிக்கு எதிரேயே கொடி மரம் இருக்கிறது.  இதிலிருந்து 
#முற்காலத்தில்_இது_வைஷ்ணவ_ஆலயம் என்பதும்; இங்கே மகாவிஷ்ணுவுக்கே முக்கியத்துவம் என்பதும்; அதனாலேயே ஆதிசேஷன் இங்கே தவம் இருந்து மகாவிஷ்ணுவுக்கு படுக்கையாகச் சென்ற மகிமைப் பெற்ற திருத்தலம் இதுவென்பதும் தெளிவாகிறது.
         தை மாதத்தில் #அனந்தகிருஷ்ணருக்கே_பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது. அப்பொழுது அனந்தகிருஷ்ணர் திருத்தேரில் எழுந்தருள்வார். தைமாத ஆயில்ய தினத்தன்று ஆராட்டு வைபவமும் நடைபெறும்.  இதிலிருந்து இவ்வாலயம் முற்காலத்தில்  கிருஷ்ணருக்கு மகிமை உடைய புகழ்பெற்ற வைஷ்ணவ ஆலயம் என்பது தெளிவாகிறது.

#ஆமைக்கொடி :-
      பெருமாள் கோவில்களில் #கொடிமரத்தின் உச்சியில் #கருடன் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ஆமை உள்ளது. பாம்பும், கருடனும் பகைவர்கள் என்பதால், இத்தல பெருமாள் சந்நிதியில் மகாவிஷ்ணுவின் கூர்ம அவதாரமான ஆமை இருக்கிறது. 

*நாகவழிபாட்டின்_நன்மைகள :-
     நல்லவை அனைத்தையும் தந்தருளும் மகாசக்தி கொண்டது  #நாகவழிபாடு. இதை வழிபடும் முறையை அறிந்துகொண்டு, அதன்படியே வழிபட்டு வணங்கினால், எல்லா வளமும் நலமும் பெறலாம். நாகப்புற்றை மூன்று முறை வலம் வந்து அம்மனை வழிபடுவது போல் வேண்டினால் எண்ணியவை நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

*நாகதோஷம்_நீங்கும் :-
    குடும்பம் நலமாக இருக்க வேண்டி வழிபடுதல். மகப்பேறு வேண்டியும், பிரசவம் இடையூறு இன்றி நடைபெற வேண்டியும் வழிபடுகின்றனர்.
       கேது திசை நடப்பவர்கள் புற்று வழிபாடு செய்து நோய் வராமல் தடுக்க வேண்டுவார்கள்.நாக தோஷம் உள்ளவர்கள் அத்தோஷம் நீங்கப் புற்று வழிபாடு செய்வார்கள். தொழு நோய் நீங்கவும் புற்று வழிபாடு செய்யப்படுகிறது.
      குழந்தைகள் தோஷங்கள் காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் நலமுடன் வாழவும் புற்று வழிபாடு நடைபெறுகிறது.

*சருமவியாதிகள்_தீரும் :-
     பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது. மகாவிஷ்ணுவுக்கு சிறப்பான ஞாயிற்றுக்கிழமையில் இங்கே  வழிபாடு செய்வது என்பது  மிகவும் சிறப்புடையது. ஆவணி மாத ஞாயிறு நாக வழிபாட்டுக்கு மிகவும் சிறப்பானது. ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து நாகப்புற்றுக்கு பால் ஊற்றி வழிபட்டால் நாகதோஷம் நீங்கும், சருமவியாதிகள் தீரும்! என்பது பக்தர்களின் நம்பிக்கை.  பல அற்புதங்கள்  நிறைந்தக்   கோயிலிது.
        இந்த நாகராஜா ஆலயத்தை வைத்தே இந்த ஊர் #நாகர்கோயில் என்று பெயர் பெற்ற சிறப்பை உடையது . அதனால் நாகர்கோயில் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆண்களும்,  பெண்களும் *நாக என்ற பெயரை தனது பெயரோடு இணைத்துக் கொள்வது வழக்கம். ஆண்கள்  நாகராஜா என்றும் பெண்களானால் *நாக என்ற பெயரில் தனது பெயருக்கு முன்பும் சேர்த்துக் கொள்வது  இங்கே வழக்கமான ஒன்று.  ஆதிசேஷனே இங்கே தவமிருந்த மகிமைமிக்க ஆலயம் இந்த நாகராஜா ஆலயம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

அன்னதானத்தின் மகத்துவம் வள்ளலார் சொன்னது..

♥அன்னதானத்தின் மகத்துவம் பற்றி 
              வள்ளலார் சொன்னது.....*
 ♥*மிக கடும் தோஷங்களையும் குறைக்கும் மகத்தான சக்தி அன்னதானத்திற்கு உண்டு. அன்னதானம் ஒருவரின் பசியைப் போக்குவது எவ்வளவு புண்ணியம் வாய்ந்த செயல் என்று வள்ளலார் பெருமான் பகன்றதை இங்கே படித்துப் பாருங்கள் , கண்ணீர் பெருகும்........*
 
♥*(1) அன்னதானம் செய்யுமிடத்தில் அருளும், அன்பும் தழைத்தோங்கும், தர்மதேவதை அவ்விடத்தில் நித்தியவாசம் செய்யும். கல்வி, செல்வம், ஞானம், மகிழ்ச்சி என அனைத்து நன்மைகளும் கிடைக்கும். என்றும் நம்மைப் பாதுகாத்து துணை நிற்கும்.*

♥*(2) அன்னமிட்டு புண்ணியம் செய்பவர்கள் அரசாங்கத்தால் மதிக்கப்படுவர். அவர்களின் வயலில் விளைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் தடையின்றி நடந்து பெரும் லாபம் கிடைக்கும். அவர்கள் வீட்டில் திருட்டு நடக்காது. விரோதிகளினால் சிறிதும் பயம் ஏற்படாது.*

♥*(3) பசித்தவர்களுக்கு உணவிட்டவனை கோடைகால சூரியன் கூட வருத்தமாட்டான். வெம்மை மிக்க மணலும் வருத்தாது. மழை, நெருப்பு, காற்று என்று பஞ்சபூதங்ளாலும் சிறுதீங்கும் உண்டாகாது.*

♥*(4) பசி நீங்கினால் உள்ளம் குளிரும். சித்தம் தெளியும். அகமும் முகமும் மலரும். உள்ளும் புறமும் களை உண்டாகும். கடவுள் நம்பிக்கை துளிர் விடும். தத்துவம் தழைக்கத் துவங்கும்.*

♥*(5) பசி என்பது ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு. அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று. பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி. உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.*

♥*(6) பசித்த உயிர்களுக்கு உணவளித்தும், உயிர்க்கருணை செய்தும் ஜீவகாருண்ய நெறியைப் பின்பற்றினால், தனிப்பெருங்கருணையோடு விளங்கும் அருட்பெருஞ்ஜோதியாகிய ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.*

♥*(7) உண்மையான அன்புடன் ஒளிவடிவில் அவரை வழிபாடு செய்ய வேண்டும். தெய்வ வழிபாட்டில் ஜீவ இம்சைக்கோ, உயிர்ப்பலிக்கோ சிறிதும் இடம் இல்லை. அன்பு நெறியில் அமையும் வழிபாடே உயர்ந்த வழிபாடாகும்.*

♥*(8) மனிதன் வேற்று நாட்டினரிடத்தும், வேற்று மதத்தினரிடத்தும் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பு கொள்ள வேண்டும். இதுவே ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்.*

♥*(9) எந்த நேர உணவிலும், எந்த வகையிலும் மாமிசம் சேர்த்துக் கொள்ளக்கூடாது, எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் குறைத்தே சாப்பிட வேண்டும். பசி எடுக்கவில்லையென்றால் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.*

♥*(10) ஆனால், இந்தக் கால கட்டத்தில் வீதியோரங்களில், ஆலய முன்றல்களில்  பெரிய கோவில்களில் முன்னால் பசியால் வாடும் உயிர்களுக்கு, சாதுக்களுக்கு, பிச்சைக்காரர்களுக்கு  திருவண்ணாமலையில் நாம் அளிக்கும் உணவு கோடி கோடி மடங்கு நம் குலத்துக்கு புண்ணியமாக வருகிறது...*

♥*(11)  அதனால் அன்னதானம் செய்ய நினைப்பவர்கள் இது போன்ற நாடே முடக்கப்பட்ட நிலையில் பசியால் வாடுபவர்களுக்கு  அன்னதான திட்டத்திற்கு உதவி செய்தால் கூட போதுமானது. அல்லது அனாதை / முதியோர் காப்பகங்களுக்கு நன்கொடை அளிக்கலாம். அல்லது பசுவிற்கு வாழைப்பழம் அல்லது அகத்தி கீரை வாங்கி கொடுக்கலாம். இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்னதானம் செய்து வர, அவரவர் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் படிப்படியாக குறைந்து, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமும் கிடைக்கும். மனசும் வயிறும் குளிர கிடைக்கும் அந்த ஜீவன்களின் வாழ்த்து , நம் புண்ணிய பலன்களின் தட்டை கனப்படுத்தி, பாவ பலன்களின் தட்டை லேசாக்குகிறது.*

♥*(12) நிஜமாகவே பசிக்கு துடித்துக் கொண்டு இருக்கும் ஜீவன், உங்கள் முன் கையேந்தும்போது - இறைவன் உங்களை சோதிக்கிறான் என்பதை மனதில் வையுங்கள். அந்த நேரத்தில் , உங்களால் உதவ முடிந்த சூழல் இருந்தும், முகத்தை திருப்பிக் கொண்டு சென்றால் - அது நமக்கு புண்ணியம் கிடைக்கவிருக்கும் ஒரு வாய்ப்பை தவிர்ப்பதற்கு சமம்.*

♥*(13) நம் வீட்டில் ஏதாவது விசேஷம் , விருந்து என்றால் - கூடி இருக்கும் விருந்தினர்களை மட்டும் கவனித்து, பசிக்கு துடிக்கும் எளியவர்களை துரத்தி அடிப்பது கொடிய பாவம். அது போன்று வருபவர்களுக்கு சபையில் வைத்து உணவு அளிக்க வில்லை எனினும், தனியாக அவர்களுக்கு கொடுத்து அனுப்ப முயற்சிக்கலாமே........


ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

விஸ்வாமித்திரருக்கு சிவன் நடனக்காட்சி அளித்த தலம் திருவுசாத்தானம் நாகை..

மனத்தெளிவு தரும்  இனிய சிவன்*
இராமருக்கு ஆலோசனை அளித்த சூதவனப் பெருமான், கோவிலூரில் அருள்பாலிக்கிறார். இவரைத் தரிசித்தால் குழப்பம் நீங்கி மனத்தெளிவு உண்டாகும். ஆதி சிதம்பரம் என்று இதனை அழைப்பர்.

தல வரலாறு: 

காசிப முனிவர்- வினதை தம்பதியின் மகன் கருடன். இவர் ஒருமுறை தாய்க்கு நேர்ந்த பழியைப் போக்க அமிர்தம் கொண்டு வந்தார். இதைக் கண்ட இந்திரன் பின்தொடர, கருடன் வேகமாகப் பறந்தார். அப்போது அமிர்தம் கீழே சிந்தியது. அது கீழேயிருந்த சுயம்புலிங்கம் (தானாக உருவான லிங்கம்) மீது பட்டு வெண்ணிறம் அடைந்தது. பதஞ்சலி முனிவர் இந்த சிவனுக்கு கோயில் அமைத்து வழிபட்டார். "சூதவனப் பெருமான்' என்று பெயர் சூட்டப்பட்டது.
மந்திரபுரீஸ்வரர்:

இலங்கை செல்ல பாலம் அமைப்பதற்காக வேதாரண்யம், கன்னியாகுமரி, இராமேஸ்வரம் ஆகிய மூன்று இடங்களை இராமர் பார்வையிட்டார். 

பாலப்பணி சிறப்பாக அமைய சூதவனப்பெருமானிடம் ஆலோசனை கேட்டார். இராமேஸ்வரத்தில் பாலம் அமைப்பது சிறந்தது என அவர் சொல்லவே, அங்கே பாலப்பணி சுபமாக நிறைவேறியது. 

ஆலோசனை உசாவிய (கேட்ட) தலம் என்பதால் "திருவுசாத்தானம்' என்றும் இவ்வூருக்குப் பெயருண்டு.
கோயில் அமைப்பு: 

ஐந்து நிலை ராஜகோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் கோயில் விளங்குகிறது. அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறாள். நவகன்னியர், துர்க்கைக்கு தனி சந்நிதிகள் உள்ளன. 

கருவறைச்சுவரில் ஜ்வரஹரேஸ்வரர் மூன்று முகம், மூன்று பாதங்களுடன் உள்ளார்.‌ இவரை வணங்கினால் நோய்கள் நீங்கும். 

சூதவன விநாயகர், ராமர், வருணன், மார்க்கண்டேயர், விஸ்வாமித்திரர் பூஜித்த சிவலிங்கங்கள் உள்ளன. 

காலனால் வீசப்பட்ட பாசக் கயிற்றினால், மேனி கருகி ஏற்பட்ட வடுக்கள் நீங்க "திருவுசாத்தானம்' என்னும் தலத்துக்குச் சென்று, அங்கு புனித தீர்த்தம் உண்டாக்கி நீராடி இறைவனை வழிபட்டு, வடுக்கள் நீங்கி மேனி எழில் பெற்று மீண்டான்.. 

தலவிருட்சம் மாமரம்.

விஸ்வாமித்திரருக்கு சிவன் நடனக்காட்சி அளித்த தலம் என்பதால் ஆதி சிதம்பரம் என்று பெயருண்டு.

இருப்பிடம்

திருவுசாத்தானம், நாகை மாவட்டம், திருத்துறைப் பூண்டி வட்டம், முத்துப்பேட்டை புகைவண்டி நிலையத்திலிருந்து வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலம் கோயிலூர் என்று அழைக்கப்படுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, January 27, 2025

ரத்த சம்பந்தமான வெண்புள்ளி இரத்தம் உறையாதல் போன்ற குறைபாடுகள் நீங்க

உலகிலேயே #சூலத்தேவர் என்ற #அஸ்திரதேவர் 
உருவ வடிவில் காட்சி தரும் ஒரே தலமான, சூலத்தேவர் ஈசனை வழிபட்டு சுய உருவம் பெற்ற தலமான, 
சோழ நாட்டு தேவார வைப்புத் தலமான,
சப்த மங்கை தலங்களில் ஒன்றான, சப்த மாதர்களில் கெளமாரி வழிபட்ட தலமான,
சக்கராப்பள்ளி சபஸ்தான தலங்களில் ஒன்றான 
 #தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 
#சூலமங்கை - (#சூலமங்கலம்)
#கிருத்திவாகேஸ்வரர்
#அலங்காரவல்லிஅம்மன் திருக்கோயில் வரலாறு:
சூலமங்கலம் கிருத்திவாகேசுவரர் கோயில் என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும். 
இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.
இக்கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டை அருகே ரயில் நிலைய சாலை அருகே 1 கிமீ தொலைவில் சூலமங்கை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. சூலத்தேவர் வழிபட்டு சுய உருவம் பெற்றதால் சூலமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. 

இங்கு கோயில் கோயில் கொண்டுள்ள இறைவன் ஸ்ரீகிருத்திவாகேஸ்வரர், கரிஉரித்த நாயனார். இறைவி அலங்காரவல்லி. தாருகாவன முனிவர்களின் செருக்கை அடக்குவதற்காக வேள்வி மூலமாக அனுப்பப்பட்ட யானையின் உடலில் புகுந்து அதனைக் கிழித்து வெளியே வந்ததால் வேழம் உரித்த வித்தகராக இருப்பதால் கிருத்திவாகேசுவரர் என்றழைக்கப்படுகிறார்.
சூலத்தேவர் வழிபட்டு சுய உருவம் பெற்றதால் சூலமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. 

இதன் காரணமாக உள்மண்டபத்தில் சூலதேவர் கை கட்டி இறைவனை வணங்கும் நிலையில் உள்ளார். சூலதேவர் இங்குள்ள கிருத்திவாஸேஸ்வரிடம் எப்போதும் காவல் காக்கும் வரம் பெற்றதாக கூறுவர்.

இறைவர் திருப்பெயர்:    கிருத்திவாகேஸ்வரர்  இறைவியார் திருப்பெயர்: அலங்காரவல்லி.   தல மரம்:     தீர்த்தம் : சூலதீர்த்தம்  வழிபட்டோர்:அஸ்திரதேவர், 

#சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலம்:

சப்தமாதர்கள் வழிபட்ட ஏழு கோயில்களில், சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலமாகக் கோயில்களில், இதுவும் ஒன்றாகும். சப்தமங்கைத் தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்ற இவை கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன. 

*சக்கராப்பள்ளியில் உள்ள சக்கரவாகேசுவரர் கோயில்
*அரியமங்கையில் உள்ள ஹரிமுக்தீஸ்வரர் கோயில்
*சூலமங்கையில் (சூலமங்கலம்) உள்ள கிருத்திவாகேசுவரர் கோயில்
*நந்திமங்கையில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயில்
*பசுமங்கையில் (பசுபதிகோயில்) உள்ள பசுபதீசுவரர் கோயில்
*தாழமங்கையில் (தாழமங்கலம்) உள்ள சந்திரமௌலீசுவரர் கோயில்
*புள்ளமங்கை என்றழைக்கப்படுகிற ஆலந்துறைநாதர் கோயில்

#தல வரலாறு:

தாருகானவனத்து முனிவர்களின் கர்வத்தை அழிப்பதற்காக, சிவனார் திருவுளம் கொண்டார். அவர்கள் நடத்திய வேள்வியில் இருந்து யானையை ஏவினார்கள். அந்த யானைக்குள் புகுந்தார் சிவபெருமான். அந்த யானையின் உடலைக் கிழித்துக் கொண்டு, உக்கிரத்துடன் வெளியே வந்தார். வேழம் உரித்த வித்தகன் என்று ஈசனைப் புகழ்கிறது புராணம். வேழம் என்றால் யானை என்று அர்த்தம். இதனால்தான் இந்தத் தலத்து இறைவனுக்கு கிருத்திவாகேஸ்வரர் எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். சப்தமாதர்களில் வாராஹியும் ஒருத்தி. அதேபோல், சப்தமாதர்களில் கெளமாரியும் ஒருத்தி. சோழ தேசத்தில், சப்த மாதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில், ஒவ்வொரு தலத்தில் பூஜித்ததாகச் சொல்கிறது புராணம், அப்படி சப்தமாதர்களில் ஒருத்தியான கெளமாரி இங்கு வந்து வழிபட்டு, சிவ பூஜை செய்து, வரம் பெற்றாள் என்று விவரிக்கிறது இந்தக் கோயிலின் ஸ்தல புராணம். சூலத்தேவர் இங்கு வந்து வழிபட்டு சுய உருவத்தை மீண்டும் பெற்றார் என்றும் இதனால்தான் இந்த ஊருக்கு சூலமங்கலம் என்று பெயர் அமைந்ததாகவும் சொல்கிறது ஸ்தல புராணம்.

இங்குள்ள மற்றொரு ஸ்தல புராணத்தின் படி, வராஹ அவதாரத்தில் விஷ்ணுவால் கொல்லப்பட்ட அரக்கன் ஹிரண்யாக்ஷனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்: அந்தக மற்றும் காலநேமி. அந்தகாசுரன் திருக்கோவிலூரில் சிவனால் கொல்லப்பட்டார், விஷ்ணு காலநேமியை வென்றார். காலநேமியைக் கொல்வதற்கு முன், விஷ்ணு இந்தக் கோயிலில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.கோயிலின் தீர்த்தம் – சூல தீர்த்தம் – சிவன் தனது திரிசூலத்தின் முனையை இங்கு வைத்தபோது அவர் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இக்கதையால் அந்த இடத்திற்கும் பெயர் வந்தது.

திரிசூலம் என்பது சிவன் ஏந்திய ஆயுதம், அதனால் சிவனுக்கு சூலபாணி என்று பெயர். அஸ்திர தேவர், வான தெய்வம், தேவர்களின் ஆயுதமாக கருதப்படுகிறது. எனவே, இக்கோயிலில் சிவனை வழிபட்ட அஸ்திர தேவர் சன்னதி பொருத்தமாக இந்த கோவிலில் உள்ளது. அஸ்திர தேவரை வழிபடுவது பக்தர்களுக்கு மற்றவர்கள் மீதுள்ள பகையை போக்க உதவுவதோடு, சச்சரவுகளையும் தீர்க்க உதவும் என்று கூறப்படுகிறது. மகா மண்டபத்தின் நுழைவாயிலில் இடதுபுறத்தில் அஸ்திர தேவர் சன்னதி அமைந்துள்ளது.

சப்த மாதர்களில் கௌமாரி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம்.

பராசக்தியினின்று உதித்த கௌமாரி அழகு, அறிவு, வீரம் ஆகியவற்றின் உறைவிடமான குமரக்கடவுளின் அம்சம். பக்தர்களின் விருப்பங்களை தட்டாமல் நிறைவேற்றுபவள்.

இந்த அம்பிகை ஆறுமுகங்கள் கொண்டவள். பன்னிரு கண்களும், கரங்களும் கொண்டவள். மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பவள். வில், அம்பு, பாசம், அங்குசம், பரசு, தண்டம், தாமரை, வேல், கத்தி, கேடயம் போன்ற ஆயுதங்களோடு அபயமும், வரதமும் தரித்தவள். அடியார்க்கு வரங்களை வாரி வழங்குவதால் சிவந்த கரம் கொண்டவள். விஷ்ணு தர்மோத்திரம் என்ற நூல் இந்த அன்னையைப் பற்றி விரிவாக விளக்குகிறது.

ரத்தத்திற்குத் தலைவியான இவளை வணங்கினால் ரத்த சம்பந்தமான வெண்புள்ளி, இரத்தம் உறையாதல் போன்ற குறைபாடுகள் நீங்க பெறலாம். இவள் கோபமடைந்தால் பசுக்களுக்கு கோமாரி எனும் நோய் தோன்றும். எலுமிச்சம் பழ சாதம் நிவேதனம் செய்து நலம் பெறலாம். இந்த அம்பிகை காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர்களுக்கு வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் மூன்றாவதான மங்கை பருவத்தினளாக காட்சி.

 மக்கள் வழக்கில் "சூலமங்கலம்" என்று வழங்குகிறது.
 
 கஜாசுரனை சிவபெருமான் வென்று,அவனது (யானைத்) தோலைப் போர்த்ததால் அவருக்குக் கிருத்திவாசர் என்ற பெயர் ஏற்பட்டது.  இவரிடம் சூலதேவர் வரம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
 
 
 அஸ்திரதேவர் வழிபட்டு, திருவிழாக் காலங்களிலும், தீர்த்த வாரியிலும் தான் முதன்மையாக விளங்கத்தக்க வரத்தை இறைவனிடம் பெற்ற தலம்.
 
 சப்தமாதர்களில் கௌமாரி வழிபட்ட தலம் இது.

அன்னை பராசக்தியும் இங்கு வந்து இறைவனை நோக்கித் தவம் செய்தபோது, தனது கரத்தில் சூலம் ஏந்தியவராக சுவாமி அவளுக்குக் காட்சி அளித்தார்.
 வட நாட்டிலிருந்து வந்த நாதசன்மா – அனவித்தை தம்பதிகளுக்கு அம்பிகை மங்கைப்பருவத்தினளாகத் தரிசனம் தந்தாள்.

சப்தமங்கையரில் சூலமங்கை வழிபட்டதனால் சூலமங்கை என்றாயிற்று என்றும் சொல்லப்படுகின்றது.
 
 தேவர்களுக்கு கஜ சம்ஹாரமூர்த்தியாக காட்சியளித்த தலம்
 
வைப்புத்தலப் பாடல்கள் : 
அப்பர் - நறையூரிற் சித்தீச் (6-70-10). 
 
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

பெரிய சிவாலயம்; கல் திருப்பணி.
 
 ஊரின் பெயருக்கேற்றவாறு, வெளி வாயிலின் புறத்தில் - சூலம் தலைமீது ஏந்திய மங்கையொருத்தியின் உருவம் கைகளைக் கட்டிக் கொண்டு உள்ளது. ஊர்ப் பெயரும் சூலம் ஏந்திய மங்கை - சூலமங்கை என்றாயிருக்க வேண்டும்.
 
 
 திருவிழாக்களில் முக்கிய அங்கம் வகிக்கும் அஸ்திர தேவர் இங்கு சிலாரூபத்தில் சுமார் 4 ½ அடி உயரத்தோடு நுழைவாயில் அருகில் காட்சி அளிக்கிறார். பின்னால் சூலம் பொலியக் கைகூப்பியவராகக் காட்சியளிக்கிறார் அஸ்திர தேவர். 
 
 
இங்கு கோஷ்டத்திலுள்ள தக்ஷிணாமூர்த்தி ஆலமரம் இல்லாமல் ஜடாமுடியுடன் தரிசனம் தருகிறார். 
 
 
 தை அமாவாசையன்று வரும் சூலவிரதம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்து, மகாவிஷ்ணுவானவர் , காலநேமி என்ற அசுரனை வென்றார். பிரமன் தனது கடுமையான வயிற்றுவலி நீங்கப்பெற்றான்.சூல விரதம் மேற்கொள்வதால், எதிரிகளின் தொல்லைகளும், நோய்களும், வறுமையும், தோஷங்களும் நீங்கப்பெறலாம்.
 
 
 தேவாரத் திருப்பதிகம் இத்தலத்திற்குக் கிடைக்காவிடினும், அப்பர் பெருமான் வாக்கில் இத்தலப்பெயர் எடுத்தாளப்பட்டுள்ளதால், இதனைத் தேவார வைப்புத்தலம் என்பர்.
 

நறையூரில் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல

துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமேச்சரம்

உறையூர் கடல் ஒற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும்

கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாய நாதனையே காணலாமே.

                                           -- திருநாவுக்கரசர் தேவாரம்.

 
சூலவிரதமும் சூலமங்கையும்:

     சகல விதமான சௌபாக்கியங்களையும் அளிக்கக் கூடியது அஷ்ட மகா விரதங்களில் ஒன்றான சூல விரதம். இச்சூல விரதத்தை, சூரியன் மகர ராசியில் இருக்கும்போது, அதாவது தை அமாவாசைத் தினத்தன்று அனுஷ்டிக்க வேண்டும்.

 

     அன்றைய தினம் அதிகாலையில் விழித்தெழுந்து சூலபாணியாகிய சிவபெருமானை உள்ளத்தில் தியானித்து-வழிபட்டு, வெளியே சென்று, சிவாலயத்திற்குள் இருக்கும் மங்கள தீர்த்தத்தில் நீராடி சந்தியாவந்தனம் முதலிய கர்மாக்களை நியமத்தோடு செய்து, பிறகு உமாதேவியோடு கூடிய சிவபெருமானின் விக்ரகத்திற்கு அபிஷேகித்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.  பிறகு மத்தியான வேளையில் திருநீறு, உருத்திராக்‌க மாலைகளைத் தரித்த சிவபக்தர்களுக்குத் தன் பொருளாதார சக்திக்கு ஏற்றவாறு தான-தர்மங்களை செய்ய வேண்டும். அதன்பின் சிவாலயத்திற்குச் சென்று பிரதட்சிண வழிபாடுகள் செய்து, திருக்கோயிலுக்கு தம்மால் முடிந்த காணிக்கைகளையும் கொடுத்து, இறைவனை வழிபட வேண்டும். பிறகு சிவபக்தர்களுடன் அமர்ந்து ஒரே ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். 

 

     இப்படியாக இச்சூல விரதத்தை யார் அனுஷ்டிக்கிறார்களோ, அவர்கள் தங்களுடைய விரோதிகளை வென்று, தீராத கொடிய நோய்களிலிருந்தும் விடுபட்டு, தீர்க்காயுள், புத்திரச் செல்வங்கள், தாங்கள் விரும்பிய பொருட்களையெல்லாம் அடைந்து, சகல போக சௌபாக்கியங்களையும் அனுபவித்து மகிழ்வார்கள்; முடிவில் சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். சகல பாவங்களையும் வேரோடு அழிக்கவல்ல இந்த சூல விரதத்தின் சிறப்பைப் பற்றி விளக்கும் இந்த அத்தியாயத்தை எவர்கள் படிக்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ அவர்களுக்கு மிருத்யுவின் (மரணத்தின்) பயமே இராது” என்று கந்தபுராணம் விளம்புகிறது.

இங்குள்ள கட்டமைப்புக் கோயில் ஆரம்பகால சோழர் காலத்தைச் சேர்ந்தது, ஆனால் இந்தக் காலக்கெடுவிற்கு மிகக் குறைந்த சான்றுகளே உள்ளன. மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் பாண்டியர்கள் மற்றும் ஹொய்சாலர்கள் உட்பட பிற்கால வம்சங்களின் காலத்துடன் தொடர்புடைய ஏராளமான கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.

நுழைவாயிலில் இருந்து, பலி பீடம் மற்றும் நந்தி கொண்ட ஒரு நீண்ட நடைபாதை, முக மண்டபத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இங்கு துவஜஸ்தம்பம் இல்லை. இடதுபுறம் தாழ்வாரத்தின் முடிவில், அஸ்திர தேவர் விக்ரஹம் உள்ளது.

கர்ப்பகிரஹத்தின் முன் உள்ள நந்தி மற்றும் துவாரபாலகர்களின் புடைப்புச் சிற்பங்கள் கோயில் மிகவும் பழமையானது என்பதை தெளிவாகக் குறிப்பிடுகின்றன. 
முக மண்டபம் – இது மிகவும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது – வவ்வால்-நெத்தி மண்டபம் உள்ளது. கர்ப்பகிரஹத்தில் உள்ள லிங்கம் எப்பொழுதும் கவசத்தால்
மூடப்பட்டிருக்கும்.

கோயிலைச் சுற்றி வரும்போது, சோழர்கால கட்டிடக்கலையின் பிரகாசம் உடனடியாகத் தெரியும். பெரும்பாலான சித்தரிப்புகள் மற்றும் கட்டிடக்கலை வேலைகள் பிற்கால சோழர்களாக இருந்தாலும், நேர்த்தியானது உடனடியாக அடையாளம் காணக்கூடியது. கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி (தனியாக, சமீபத்தில் கட்டப்பட்ட மண்டபத்துடன்), லிங்கோத்பவர் மற்றும் துர்க்கை உள்ளனர். கோஷ்டத்தில் பிரம்மா காணப்படவில்லை, மேலும் அனைத்து கோஷ்டங்களும் முதலில் காலியாக இருந்ததற்கான சாத்தியத்தை இது குறிக்கிறது.

தனித்துவமாக, கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி வழக்கமான ஆலமரம் இல்லாமல் காட்சி அளிக்கிறார்.

பிரகாரத்தில் விநாயகர், முருகன் துணைவியார் வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், சனி சன்னதிகள் உள்ளன. தனி நவக்கிரகம் சன்னதி உள்ளது. கர்பக்ரிஹம் மற்றும் அர்த்த மண்டபத்தின் வெளிப்புறச் சுவர்களில் பல அழகிய சிற்பங்கள் மற்றும் பாசிப் படிமங்கள், கல்வெட்டுகள் உள்ளன.

வழிபாட்டு முறையைப் பொறுத்தவரை, இந்த கோவிலின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், அஸ்திர தேவர் சிவனின் திரிசூலத்திலும் வெளிப்படுவதால், சிவனாலேயே நியமிக்கப்பட்ட அஸ்திர தேவர் இங்கு முதல் வழிபாட்டைப் பெறுகிறார்.

 #சூலமங்கைத் திருக்கோயில்:

     தஞ்சாவூர் - கும்பகோணம் பேருந்துப் பாதையில் ஐயம்பேட்டை மாற்றுப்பாதையில் வந்து இரயில்வே நிலையச் சாலையில் திரும்பிச் சென்றால் வெகு சமீபத்தில் உள்ளது சூலமங்கலம் (சூலமங்கை) என்னும் இவ்வூர். ஸ்ரீஅலங்காரவல்லி சமேத ஸ்ரீகிருத்திவாசேஸ்வரர் திருக்கோயிலே சூலமங்கை என்பதாகும். சூலமங்கை என்னும் இக்கோயிலின் பெயரே இவ்வூரின் பெயராக வழங்கலாயிற்று; இஃது மருவி தற்போது சூலமங்கலம் என்று இவ்வூர் விளங்குகின்றது.

 

     அஸ்திரதேவர் (சூலதேவர்) வழிபட்டு, திருவிழாக் காலங்களிலும், தீர்த்தவாரியிலும் தான் முதன்மையாக விளங்கத்தக்க வரத்தைப் பெற்ற தலமாகும். ஊரின் பெயருக்கேற்ப, கோயில் உள்வாயிலின் புறத்தில் சூலத்தை தலைமீது ஏந்தியவாறு சூலதேவர் உள்ளார். சப்த மங்கையரில் சூலமங்கை வழிபட்டதால் இத்தலம் சூலமங்கை என்றாயிற்று என்போரும் உளர். அப்பர் தம் திருவாக்கில் இடம்பெற்ற வைப்புத் தலமுமாகும் (6.70.10).

சோழர் கால கற்றளியில் மூன்றாம் குலோத்துங்கன், சுந்தரபாண்டியன், போசள வீரராமனாதன் கல்வெட்டுகள் நிவந்தங்கள் பற்றிய செய்திகளையும், சமூக பொருளாதார வாழ்க்கையையும் குறிப்பிடுகின்றன.

கெளமாரி வழிபட்ட சூலமங்கலம் கிருத்திவாகேஸ்வரரை மனதால் நினைத்து வேண்டிக்கொண்டால், பேரும்புகழும் கிடைக்க வாழலாம். நோய் நொடியின்றி வாழலாம். அம்பிகையின் அருளைப் பெற்ற ஐஸ்வரியத்துடன் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சப்தமாதர்களில், கெளமாரி தனம் வழங்கும் தேவதை. பொன்னும் பொருளும் தரக்கூடிய தேவதை. தனம் தானியம் பெருக்கித் தரும் தேவதையாகவே சொல்கிறார்கள் பக்தர்கள்.

இவ்வளவு தூரம் சிறப்பினை தெரிந்துகொண்ட நாம் சூலமங்கலத்தின் இன்னொரு சிறப்பான சூலமங்கலம் சகோதரிகள்பற்றி பார்ப்போம். இசைத்துறையில் சூலமங்கலம் சகோதரிகள் என அழைக்கப்படும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரும் இவ்வூரில் பிறந்தவர்கள். பக்திப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற இச்சகோதரிகள். கர்நாடக இசையிலும் பக்திப்பாடல்களிலும் புகழ்பெற்று விளங்கியவர்கள்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

தை அமாவாசை அன்று திருக்கடையூரில் அபிராமி பட்டரின் அதிசயம்....

தை அமாவாசை அற்புதம்!? 
திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் அபிராமி பட்டர்.  இவர் அன்னை அபிராமி மீது மிகுந்தபக்தி கொண்டு  எந்நேரமும் அன்னையைத் தியானித்துவந்தார்.

ஆனால், ஊராரில் பலர் இவர் ஒரு பித்தர் என்று நினைத்து ஏளனம் செய்வர்.  ஆனால் அதைப்பற்றி எவ்வித கோபமும் கொள்ளாமல் தம்முடைய கடமை அபிராமியை போற்றி வணக்குவதுதான் என்று கொள்கையை கொண்டிருந்தார்.  அவர் அன்னை அபிராமி மீதும் அமிர்தகடேஸ்வரர் மீதும் பாடல்களை இயற்றி சன்னதியில் பாடி வரலானார்.  

ஒரு தை அமாவாசை தினத்தன்று தஞ்சையை ஆண்ட சரபோஜி மகராஜா  பூம்புகார் சங்கமுகத்தில் நீராடிவிட்டு, திருக் கடையூர் ஆலயம் வந்தார். கோயிலில் இருந்த அனைவரும் சரபோஜி மன்னனுக்கு மரியாதை செலுத்தினர்.  அபிராமி சன்னிதியில் அமர்ந்து அன்னையின் வடிவழகில் ஆழ்ந்திருந்தார், அபிராமி பட்டர். 

மன்னர் அவரின் நிலையை அறிய அவரிடம், ‘இன்று என்ன திதி?’ என கேட்டார்...

உலக சிந்தனை சிறிதும் இல்லாத அபிராமி பட்டர், தன் மனதில் அபிராமியின் முழுமதி திருமுகம் தெரிய ‘பவுர்ணமி’ என்று பதிலளித்தார்... 

ஆனால், அன்றோ அமாவாசை! கோபமுற்ற மன்னன், இன்று பவுர்ணமி நிலவை காட்ட முடியுமா என்று கேட்க... 

அதற்கு பட்டர் முடியும் என்றார்...!?

இதனால் மேலும் கோபம் கொண்ட மன்னன், ‘இன்று இரவு நிலவு வானில் உதிக்காவிட்டால் உமக்கு சிரச்சேதம்தான்’ என்று கூறி சென்றுவிட்டார்.

சூரியன் மறைந்தது…

அமாவாசை ஆதலால் வானில் நிலவும் இல்லை!

உடனே அபிராமி பட்டர் கோவிலுக்குள் ஒரு குழி வெட்டி, அதில் தீ மூட்டினார். அதன்மேல் ஒரு விட்டத்தில் இருந்து 100 ஆரம் கொண்ட ஓர் உறியை கட்டி தொங்கவிட்டு அதன்மேல் ஏறி நின்று அபிராமி அன்னையை வேண்டி துதித்தார். 

‘இன்று நிலவு வானில் வராவிடில் உயிர் துறப்பேன்’ என்று சபதம் செய்தார்.

பின்பு,

‘‘உதிக்கின்ற செங்கதிர்’’ எனத்தொடங்கும் ‘‘அபிராமி அந்தாதி’’ பாடத்தொடங்கினார்...

ஒவ்வொரு பாடல் முடியும் போதும் உறியின் ஒவ்வொரு கயிற்றை அறுத்து கொண்டே வந்தார். அப்போது 79–வது பாடலாக ‘‘விழிக்கே அருளுண்டு’’ எனத்தொடங்கும் பாடலை பாடி முடித்தார்.

உடனே அபிராமி பட்டருக்கு காட்சி கொடுத்த அன்னை அபிராமி, தனது தாடங்கம் (தோடு) ஒன்றை கழற்றி வானில் வீச...

அது பல கோடி நிலவின் ஒளியை வெளிச்சமிட்டது. அமாவாசை அன்று வானில் நிலவு வந்தது 🌝 ! 

‘‘தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடுக’’ என அபிராமி அன்னை பட்டரிடம் கூற,

பட்டரும் ‘‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை’’ என தொடர்ந்து 100 பாடல்கள் வரை பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார். 

மன்னரும், மக்களும் பட்டரை பணிந்தனர். பட்டருக்கு மன்னன் நிலபுலன்கள் பல அளித்தான். அதற்கான உரிமை செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது!

ஒவ்வொரு தை அமாவாசை அன்று திருக்கடையூரில் அபிராமி பட்டர் விழா நடக்கும்...

அன்றைய தினம் அபிராமி, தன் தோட்டினை ஆகாயத்தில் வீசி பவுர்ணமி உண்டாக்கிய நிகழ்ச்சியை பெருவிழாவாக நடத்துகிறார்கள்…

அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:- 

1. ஞானமும் நல் வித்தையும் பெறுவார்கள்.
2. பிரிந்தவர் ஒன்று சேருவார்கள்.
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபடுவார்கள்.
4. உயர்பதவிகளை அடையலாம். 
5. மனக்கவலை தீரும்.
6. மந்திர சித்தி பெறலாம்.
7. மலை யென வருந்துன்பம் பனியென நீங்கும்.
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகும்.
9. அனைத்தும் கிடைக்கும்.
10. மோட்ச சாதனம் பெறலாம்.
11.இல்வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள்.
12. தியானத்தில் நிலை பெறுவார்கள்.                  
13. வைராக்கிய நிலை அடைவார்கள்.
14. தலைமை பெறுவார்கள்.
15.பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறுவார்கள்.
16. முக்காலமும் உணரும் திறன் உண்டாகும்.
17. கன்னிகைக்கு நல்ல வரன் அமையலாம்.
18. மரணபயம் நீங்கும்.
19. பேரின்ப நிலையை அடையலாம்.
20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும்.
21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்கும்.
22. இனிப்பிறவா நெறி அடையலாம்.                  
23. எப்போதும் மகிழ்சியாய் இருக்கும்.
24. நோய்கள் விலகும்.
25. நினைத்த காரியம் நிறைவேறும்.                                     26. செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும்.
27. மனநோய் அகலும்.
28. இம்மை மறுமை இன்பங்கள் அடையலாம்.
29. எல்லா சித்திகளும் அடையலாம்.
30. விபத்து ஏற்படாமல் இருக்கும்.
31. மறுமையில் இன்பம் உண்டாகும்.
32. துர் மரணம் வராமலிருக்கும்.                                     33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்கும்.
34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும்.                     
35. திருமணம் நிறைவேறும்.
36. பழைய வினைகள் வலிமை அழியும்.
37. நவமணிகளைப் பெறுவார்கள்.                    
38. வேண்டியதை வேண்டியவாறு அடைவார்கள்.                          
39. கருவிகளைக் கையாளும் வலிமை பெறலாம்.                                40. பூர்வ புண்ணியம் பலன்தரும்.
41. நல்லடியார் நட்புப்பெறும்.
42. உலகினை வசப்படுத்தும்.
43. தீமைகள் ஒழியும்.
44. பிரிவுணர்ச்சி அகலும்.
45. உலகோர் பழியிலிருந்து விடுபடுவார்கள்.
46.நல்நடத்தையோடு வாழ்வார்கள்.
47. யோகநிலை அடைவார்கள்.                                       48. உடல்பற்று நீங்கும்.
49. மரணத்துன்பம் இல்லா திருக்கும்.
50. அம்பிகையை நேரில் காண முடியும்.                        
51. மோகம் நீங்கும்.
52. பெருஞ் செல்வம் அடைவார்கள்.
53. பொய்யுணர்வு நீங்கும்.
54. கடன்தீரும். 
55. மோன நிலை கிடைக்கும்.
56. அனைவரையும் வசப்படுத்தலாம்.
57. வறுமை ஒழியும்.
58. மன அமைதி பெறலாம்.                              59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள்.                                          60. மெய்யுணர்வு பெறலாம்.
61. மாயையை வெல்லலாம்.
62. எத்தகைய அச்சமும் வெல்லலாம்.
63. அறிவுத் தெளிவோடு இருக்கலாம்.
64. பக்தி பெருகும்.                                         65. ஆண்மகப்பேறு அடையலாம்.
66. கவிஞராகலாம்.                         67. பகை வர்கள் அழிவார்கள்.
68. நில வீடு போன்ற செல்வங்கள் பெருகும்.
69. சகல சவுபாக் கியங்களும் அடைவார்கள்.
70. நுண்கலைகளில் வல்லமை பெறலாம்.
71. மனக்குறைகள் தீரும்.
72. பிறவிப்பிணி தீரும்.                             73. குழந்தைப்பேறு உண்டாகும்.
74. தொழிலில் மேன்மை அடையலாம்.
75. விதியை வெல்வார்கள்.
76. தனக்கு உரிமையானதைப் பெறுவார்கள்.
77. பகை அச்சம் நீங்கும்.
78. சகல செல்வங்களையும் அடைவார்கள்.
79. அபிராமி அருள்பெறுவார்கள். 
80. பெற்ற மகிழ்ச்சி நிலைக்கும்.                    81. நன்னடத்தை உண்டாகும்.
82. மன ஒருமைப்பாடு அடையலாம்.
83. ஏவலர் பலர் உண்டாகும்.                                         84. சங்கடங்கள் தீரும்.
85. துன்பங்கள் நீங்கும்.
86. ஆயுத பயம் நீங்கும்.
87. செயற்கரிய செய்து புகழ்பெறுவார்கள்.
88. எப்போதும் அம்பிகை அருள்பெறலாம்.
89. யோக சித்தி பெறலாம்.
90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும்.
91. அரசாங்கச் செயலில் வெற்றி பெறுவார்கள்.
92. மனப்பக்குவம் உண்டாகும்.
93. உள்ளத்தில் ஒளியுண்டாகும்.
94. மனநிலை தூய்மையாக இருக்கும்.
95. மன உறுதி பெறும்.
96. எங்கு பெருமை பெறலாம்.                      97. புகழும் அறமும் வளரும்.
98. வஞ்சகர் செயல்களி லிருந்து பாதுகாப்பு பெறலாம்.
99. அருள் உணர்வு வளரும்.
100. அம்பிகையை மனத்தில் காண முடியும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

அபிராமி அந்தாதியும் தை அமாவாசையும் அந்தாதி காட்டும் பதினாறு பேறுகள்...

 தை அமாவாசை ; அபிராமிப் பட்டருக்கு அன்னை அருளிய நாள்; அமாவாசையில் பௌர்ணமி வந்த நாள்!.

''அபிராமிப்பட்டார் காட்டும் பதினாறு பேறுகள்.''

'' பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க '' என்று சொல்கிறார்களே,, அந்தப் பதினாறு என்னென்ன?

பதினாறு பேறுகள்:

புகழ்
கல்வி
ஆற்றல்
வெற்றி
நன்மக்கள்
பொன்
நெல்
அறிவு
பெருமை
ஆயுள்
நல்லூழ்
இளமை
துணிவு
நோயின்மை
நுகர்ச்சி
பொருள்.

ஆனால் அபிராமிப்பட்டார் அன்னை அபிராமியிடம் வேண்டும் பதினாறு பேறுகள் எவை தெரியுமா?

அபிராமி அந்தாதி காட்டும் பதினாறு பேறுகள்:

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி 
அருள்வாமி! அபிராமியே!

_அபிராமி பட்டர்

அதன் விளக்கம் பின்வருமாறு:-

௧ .கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)

௨ .குறையாத வயது (நீண்ட ஆயுள்)

௩ .கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)

௪ .குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)

௫ .குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)

௬ .கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)

௭ .சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)

௮ .அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)

௯ .தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)

௧௦ .தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)

௧௧ .மாறாத வார்த்தை (வாய்மை)

௧௨ .தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)

௧௩ .தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)

௧௪ . கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)

௧௫ .உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)

௧௬ .துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

அன்னையை ,மனமுருகி வேண்டினால் அனைத்தையும் தருவாள்.இந்த பதினாறு பேறுகளையும் தரும்படி அன்னை அபிராமியை வேண்டுவோம்.

அற்புதமான இந்த பாடலைத் தேன் போன்ற தமது இனிமையான குரலில் டாக்டர்.சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடியுள்ளார்கள் .அதனை இங்கு இணைத்துள்ளேன்;கேட்டு மகிழ்க.

https://youtu.be/5AMB2DSec70?si=re8vbpvNkr1M94qx

அபிராமி அந்தாதி - தேன் போன்ற தமது இனிமையான குரலில் டாக்டர்.சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடியுள்ளார்கள் .அதனை இங்கு இணைத்துள்ளேன்

 தை அமாவாசை.

அம்பாள் ஆலயங்களில் அபிராமிப் பட்டர் விழா சிறப்பாக நடைபெறும்.

தன்னுடைய பக்தனின் அன்புக்கு அடி பணிந்து , முழு இருட்டான  அமாவாசை நாளைத் தன்னுடைய காதணியை வானத்தில் எறிந்து, பௌர்ணமியாக மாற்றிய நாள்.

 அம்பாள் ஆலயங்களில் நூறு இழைகளால் உறி வடிவத்தில் கூம்பு அமைத்து, அதனுள் அபிராமிப் பட்டரை நிற்க வைத்து, அபிராமி அந்தாதி ஒவ்வொரு பாடலும் பாடி முடிய , ஒவ்வொரு இழையாக வெட்டி, எழுபத்தொன்பதாம்  பாடல் பாடி முடிய , திரைச்சீலை விலக, அம்பாளும், பௌர்ணமி நிலவும் காடசி தருவார்கள். அம்பாளுக்கு விசேட பூசை நிறைவு பெற்றதன் பின் , அம்பாளும், அபிராமிப் பட்டரும் வீதி வலம் வருவார்கள்.( புகைப்படம் சோதரி கேசினி கோணேஸ்வரன் அவர்கள்)

அபிராமி அந்தாதி வரலாறு:

பொன்னி நன்னதி பொய்யாது பாயும் சோழர் பெருநாடு
எவ்வகை வளமும் பெற்று விளங்குவதோடு பல்வகைக்
கலைகளும் இயல்பாக வளர்ந்து புகழ்பெற்ற நாடு. சைவம் தழைக்க தழைத்தோங்கிய ஞானசம்பந்தப் பெருமையை எடுத்துரைக்க மொழி போதுமோ? கல்வி நீர்ப் பாய்ச்சி அறிவு எருவிட்டுப் பத்திப் பயிர் வளர்க்கும் பொன்னான இந்நாட்டின்கண் ஏறத்தாழ 300 ஆண்டுகட்குமுன் தோன்றினார் அபிராமி பட்டர்.

   மாயூரத்தினின்றும் காவிரிப்பூம்பட்டினம் செல்லும் வழியில் காலனைக் காலால் கடிந்த எம்பெருமான் நெஞ்சுகந்து கோயில் கொண்டிருக்கும் திருத்தலமாகிய திருக்கடவூர் இயற்கை எழிலும் தெய்வத் திருவருட் பெருக்கமும் பெற்று விளங்குகின்றது.

அவ்வூரின்கண் ஆன்ற ஒழுக்கமும் நிறைந்த கல்வியும் பரந்த அறிவும் சிறந்த ஆற்றலும் கனிந்த பத்தியும் பொருந்திய அந்தணர் மரபில் ஞானக்கொழுந்தேபோல் தோன்றினார் அபிராமி பட்டர்.இவருக்குக் குழந்தைப் பருவத்தில் பெற்றோர் இட்ட பெயர் இன்னதெனத் தெரியவில்லை. ஆயினும், கருவிலே திருவுடையராய்த்
தலைமுறைத் தலைமுறையாக வந்த இசைக் கலையிலே வல்லவராய் அம்பிகையின் அருளானந்தக் கடலில் மூழ்கிச் சக்தி வணக்கத்தில் கருத்தொன்றி நின்ற இவரை அத்திருத்தலத்தில்வாழ் அம்பிகையின்
திருநாமத்தைச் சேர்த்து அபிராமிபட்டர் என வழங்கியது சாலப் பொருந்துவதாகும். ஸ்ரீ அபிராமி அம்மையின்மீது இவர் கீர்த்தனம் ஒன்றும் பதிகம் ஒன்றும் பாடியிருப்பதாகத் தெரியவருகிறது.

     இப்பெரியார் சக்தி பூஜையும் யோக நெறியும் செவ்வனே பயின்று வந்தார். அதனால் யோகசித்தி எய்தி என்றும் சிதா காசத்தே அம்பிகையை ஒளிவடிவமாகக் கண்டு பேரின்பத்து ஆழ்ந்திருந்தார். இவ்வாறு பத்தி நிறைந்து முத்தி நெறியில் பித்தர்போலவும் பேதையர்போலவும் உலகப் பற்றற்று அனுபூதிச் செல்வராய் விளங்கிய பட்டரை ற்றவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஏதோ ஒரு துர்த்தேவதையை ஆராதித்து வாமாசாரத்தைக் கைக்கொண்டு மனம் பேதலித்து அலைபவர் என்றே
அவர்கள் எண்ணினார்கள்; தூற்றவும் செய்தார்கள்.

     சத்தியமான நித்தியத்தில் நிலைத்த மனமுடையார் மற்றவர் ஏச்சையும் பேச்சையும் ஒரு பொருளாகக் கருதுவரோ? ஆகையால் பட்டரும் உண்மை என்னதென்று உணராத மக்களை மாக்கள் என்றே உன்னி வாழ்ந்திருந்தார்.

     அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். அவர் மஹாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்தவர்; தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர்.அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்திலே நீராட எண்ணித் தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் உள்ளகிடக்கையை நிறைவு செய்துகொண்டார்;
திரும்புங்கால் ஸ்ரீ அமுத கடேசரையும் ஸ்ரீ அபிராமி
அம்பிகையையும் தரிசனம் செய்துகொள்ளவேண்டும் என்ற அவா மிகுதியால் திருக்கடவூரை அடைந்தார். பின்னர், அரசர் தமது நித்தி யானுஷ்டானங்களை முடித்துக்கொண்டு திருக்கோயிலுக்குச்
சென்றார்.

     அப்போது அபிராமி பட்டர் அம்பிகையின் ஆலயத்துச்
சந்நிதியில் இவ்வுலக நினைவு ஏதுமின்றி தியான நிலையில் அமர்ந்திருந்தார். அவரது பரையற்ற தோற்றமும் புத்தொளி வீசும் முக நலமும் தியான நிலையில் சிறிதே முகிழ்ந்திருந்த இரு விழிகளும் அரசர் பெருமானின் அகத்தைக் கவர்ந்தன. சரபோஜி
மன்னர் பத்தியிற் சிறந்தவராதலின் பட்டரின் தன்மையை ஒருவாறு உணர்ந்து அருகில் இருந்தோரை நோக்கி, “இவர் யார்?” என்று வினவினார்.

     அப்போது அருகில் இருந்தவர்கள், “இவர் ஒரு பித்தர்;
வேத விருத்தமான வாமாசாரங்களில் ஈடுபடுபவர்; ஏதோ ஒரு துர்த்தேவதையை வழிபடுகின்றவர்” என்று கூறினார்கள். அதைக் கேட்ட அரசர் ஒன்றும் கூறாது உட்சென்று அம்பிகையைத் தரிசனம் செய்தார். ஆனால், அரசருடைய மனத்தில் பட்டருடைய தோற்றம்
மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆகையால் திரும்பி வரும்போது அரசர் பட்டரோடு ஏதேனும் ஒரு முகாந்திரத்தை ஏற்படுத்திக்கொண்டு பேச வேண்டும் என்ற எண்ணம் உடையவராய் அவரை நோக்கி, “பட்டரே, இன்று என்ன திதி?” என்று கேட்டார்.

     காலத்தொடு கற்பனை கடந்து துவாதசாந்தப் பெருவெளியில் துரியாதீதமாய்ப் மூலத்தலத்திலே  முளைத்தெழுந்த முழுமதியாக அம்பிகையைக் கண்டு அக்காட்சிக் களியிலே மதர்ந்து நின்ற அபிராமி பட்டருடைய செவியில் அரசர் சொன்ன சொற்கள்
அரைகுரையாக விழுந்தன; முழுமதியின் ஒளி வட்டத்திடையே அம்பிகையின் அருள்தோற்றத்தை ஆனந்தமாய்க் கண்டு பரவசமுற்றிருந்த நிலையில் வாய் குழறி, “இன்று பௌர்ணமி” என்று விடையிறுத்தார்.

     அருகிலிருந்த பெரியார்கள் இது கேட்டு ஒன்றும் தோன்றாது நின்றனர். பட்டரைப்பற்றி இல்லனவும் பொல்லனவும் சொல்லி வந்தவர்கள் அரசரே பட்டரின் உன்மத்த நிலையை உணர்ந்து கொண்டார் என எண்ணி இறுமாந்தனர். அரசரும் ‘அவர்கள்
கூறியது உண்மையே போலும்’ என எண்ணித் தம் இருப்பிடத்திற்கு ஏகினார்.

     அரசரும் அவருடைய பரிவாரமும் அகன்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். தம்மை இதுகாறும் ஏசியும் பேசியும் பல்லாற்றானும் இடையூறு புரிந்தும் வந்த மாந்தரை விலங்கென்று எண்ணி மாதவம் செய்து வந்த அம்பிகை அடியார், பொய்யரின் மொழிகள் மெய்யெனத் தோன்றுமாறு நிகழ்ந்த நிகழ்ச்சியை
எண்ணி மறுகினார். உடனே பட்டர், தமக்கென்று ஒன்றேனும் இன்றி யாவற்றையும் அம்பிகைக்கே அர்ப்பணம் செய்துவிட்ட வைராக்யம் உடையவர் ஆதலின், அம்மையே அப்பழியினின்றும் தம்மை மீட்க வேண்டும் என்று உறுதி பூண்டார். அம்பிகையின்
சந்நிதியில் ஆழ்ந்தவொரு குழி வெட்டி அதில்  பெருநெருப்பு மூட்டி அதன் மேலே ஒரு விட்டத்தினின்றும் நூறு ஆரம் கொண்ட ஓர் உறியைக் கட்டித் தொங்கவிட்டார். பிறகு அதன் மீதேறி அமர்ந்து
அம்பிகையை மனத்தால் நினைத்துத் தலையால் வணங்கி,“சோர்வினால் வந்த மாபெரும் பழியைத் துடைத்துத் தாரணி போற்றும் தலைமையைத் தாராளெனின் என் உடலை இவ்வெரிக்கு
இட்டு உயிர் துறப்பேன்” எனக்கடுஞ்சூள் உரைத்து,
“உதிக்கின்ற” எனத் தொடங்கும் இந்த அந்தாதியைப்
பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாடலும் முடிந்த உடனே உறியின் ஒவ்வொரு கயிற்றை அரிந்து கொண்டே வந்தார். இவ்வாறாகக் கதிரவனும் மேலைக் கடலை நண்ணினான். அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய,

“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
 வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
 பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
 குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே”
என்ற பாடல் முடிந்தது, உடனே ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள்! தன் தாடங்கம் ஒன்றைத் தனியே எடுத்துவான வீதியில் தவழ விட்டாள்.அத்தாடங்கம் வட்ட மதியின் உருவாய்ப் பலகோடி நிலவின்
ஒளிபொழிந்து நீலவானக் கடலிலே மின்வண்ண அன்னம் போல ஊர்ந்து வந்தது. ஆனந்த சொரூபிணியாய் ஞானப் பிழம்பாய்க் காட்சியளித்த அப்பிராட்டி பட்டரை நோக்கி,“வாய் சோர்ந்து மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிறுவினோம்; தொடங்கிய அவ்வந்தாதியைத்
தொடர்ந்து முடிப்பாயாக” என ஆணையிட்டு மறைந்தாள்.

     'சொல்லும் பொருளும்' என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியாகிய அம்பிகையின்
தரிசனத்தாலும் அமுத மாரியென அவள் கூறிய
மொழியாலும் பரவசமுற்று,

”கூட்டிய வாஎன்னைத் தன்னடி யாரில் கொடியவினை
 ஓட்டிய வாஎன்கண் ஓடிய வாதன்னை உள்ளவண்ணம்
 காட்டிய வாகண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
 ஆட்டிய வாநடம் ஆடகத் தாமரை ஆரணங்கே”

எனத் தம் அனுபவ நிலையைத் தெளிவுறப் பாடினார், மேலும் இருபது செந்தமிழ்ச் செய்யுட்களை இயற்றி அந்தாதியை முடித்தருளினார்.

     திருத்தாடங்கத் திகழொளி புவனமெங்கும் விளங்கி நிற்க அந்த அதிசயத்தைக் கண்ட யாவரும் “அற்புதம்! அற்புதம்!” என ஆரவாரம் செய்தார்கள். சரபோஜி மன்னரும் அது கண்டு வியந்து அம்பிகையின் அடியாரைப் பிழைத்த செயலுக்கு வருந்தி அவரடி
பணிந்து தாம் செய்த பிழையைப் பொறுக்குமாறு வேண்டினர்.

நீர்கிழிய எய்த வடுப்போலச் சான்றோர் கொண்ட
சினம் மாறுமன்றோ? அதனால் பட்டரும் உவந்திருந்தார்.

அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத்
தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக்
கொள்ளும்படி வேண்டினார்.

     அடியார் அறியாதிழைத்தது தவறாயினும் தாமே வருந்தித் தன் சரனே அரணென்று புகுவாராயின் அடியார்க்குப் பழிவராது அருள் புரியும் பெருந்தகைமை எம்பிராட்டி அபிராமிக்கே உளதாகும். இவ்வந்தாதியை முழுவதும் இடை விடாது ஓதி வருபவர் இம்மையில் எல்லா நலன்களும் பெற்று மறுமையில் முக்திப் பேறும்
அடைவர் என்பது திண்ணம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பிள்ளைப்பேறு இல்லாத அந்தண மாதர்கள் தியானித்து திருமாளிகைத்தேவர் அருளால் மகப்பேறு அடைந்தனர்.

திருவாவடுதுறை – நவகோடி சித்தர்புரம் என்ற பெயரை யுடைய திருத்தலம். இத்தலத்தில் போகநாதர் என்னும் சித்தர் ஞான யோக சாதனை செய்து மகிழ்ந்திருந்தார். இவருடைய சீடர்களில் ஒருவர் திருமாளிகைத்தேவர். இவரோடு உடன் உறைந்த 
போகருடைய சீடர்களில் கருவூர்ச்சித்தரும் ஒருவர்.

 திருமாளிகைத் தேவர் சைவவேளாண் குலத்தினர். சோழ மன்னர்களுக்குத் தீட்சா குருவாக விளங்கியவர். திருவிடைமருதூரில் வாழ்ந்து வந்த பரி ஏறும் பெரியோர், தெய்வப் படிமப்பாதம் வைத்தோர், மாணிக்கக்கூத்தர், குருராயர், சைவராயர் எனப்படும் ஐந்து கொத்தாருள் ஒருவரான சைவராயர் வழியில் தோன்றியவர். 

இவர் தம் முன்னோர்கள் வாழ்ந்த மடம் மாளிகைமடம் (பெரிய மடம்) எனப்படும். அம்மடத்தின் சார்பால் இவர் திருமாளிகைத் தேவர் எனப்பட்டார்.

போகர் திருமாளிகைத் தேவருக்கு நடராஜப் பெருமானைப் பூஜை செய்யும் செயல் முறைகளையும், கருவூர்த்தேவருக்கு பராசக்தியைப் பூஜை செய்யும் விதிமுறைகளையும் உபதேசித்தார். திருமாளிகைத்தேவர் தாம் பூஜித்த நிர்மாலியத்தைக் கருவூர்த் தேவருக்குக் கொடுக்க அதனை அவர் வாங்கி உண்டார். அவ்வாறே கருவூர்த்தேவர் தாம் அம்பிகையைப் பூஜித்த நிர்மாலியத்தைத் திருமாளிகைத்

தேவருக்குத் தர அவர் அதனை வாங்க மறுத்தார். கருவூர்ச் சித்தர் இதனை அறிந்து மனம் சலித்து போகரிடத்தில் நிகழ்ந்ததைக் கூறினார். போகர்,` திருமாளிகைத் தேவர் செய்ததே சரி` என்று கூறி `இறைவனைப் பூஜிக்கின்ற பூஜையே மிகச் சிறந்தது; அவர், நீர் தந்த பூஜைப்

பொருள்களை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தது குற்றமில்லை`, என்று கருவூர்த்தேவரைத் தேற்றினார். கருவூர்ச்சித்தர் தம் குருநாத ருடைய உரையைக் கேட்டுத் தெளிந்து போகரையும், திருமாளிகைத் தேவரையும் வணங்கி அவர்களோடு உடன் உறைவார் ஆயினார்.

ஒருநாள் போகர் தம்முடைய பாதுகையைத் திருமாளிகைத் தேவரிடம் கொடுத்து இதனைப் பூஜித்துக்கொண்டு இத்திருவாவடு துறைத் தலத்திலேயே இருந்து அன்பர்களுக்கு அருள் வழங்குக என ஆணை தந்து, தான் அத்தலத்தை விட்டுத் திருப்புகலூருக்குச் சென்றார். திருமாளிகைத்தேவர் குரு ஆணைப்படி

அத்தலத்திலேயே அடியார்கள் பலரோடு மாசிலாமணியீசர் கோயிலுக்குத் தென்புறம் திருமடம் ஒன்று அமைத்துக்கொண்டு தங்கியிருந்தார்.

ஒருநாள் சேந்தனாரோடு சிதம்பரம் சென்று திருவிசைப்பாப் பதிகங்களால் ஞானமா நடேசனைத் தோத்திரித்து மீண்டும் திருவாவடு துறைக்கு எழுந்தருளி மாசிலாமணி ஈசரையும் அம்பிகையையும் திருவிசைப்பாப் பதிகம் பாடிப் போற்றி அத்தலத்திலேயே தங்கியிருந்தார்.

திருமாளிகைத்தேவர் ஒரு நாள் காவிரியில் நீராடி, பூஜைக்குரிய நறுமலர்களை எடுத்துக்கொண்டு திருமஞ்சனக் குடத்துடன் தம் திருமடத்திற்கு வந்து

கொண்டிருந்தார். எதிரே பிணப்பறை முழங்க இறந்தவர் ஒருவரின் உடலைச் சுடலைக்கு எடுத்துக்கொண்டு பலர் வருவதைப் பார்த்தார். வழி குறுகியதாக இருந்தது. விலகிச் செல்வதற்கும் இடமில்லை. பூஜை செய்யும் ஆசாரத்தோடு செல்லும் தமது தூய்மைக்கு இழுக்காகுமெனக்

கருதி, திருமஞ்சனக்குடம் முதலியவற்றை ஆகாயத்தில் வீசி அங்கேயே அவைகளை நிற்கச் செய்து, வழியின் மேற்புறத்தில் எழுந்தருளியிருந்த பிள்ளையாரைத் தோத்திரித்தார். பிள்ளையார் அருளால் பிணம் உயிர்பெற்று எழுந்து நடந்து சென்றது. எல்லாரும் வியப்புற்றனர். இவ்வாறு இறந்தவரை எழுப்பித் தந்த அவ்விநாயகருக்குக் கொட்டுத் தவிர்த்த கணபதி என்ற பெயர் இன்றும் வழங்கி வருகிறது.

திருமாளிகைத்

தேவரை, பிள்ளைப்பேறு இல்லாத அந்தண மாதர்கள் தங்கள் மனத்தால் தியானித்து அவர் அருளால் மகப்பேறு அடைந்தனர். அவர்கள் பெற்ற குழந்தைகள் எல்லாம் திருமாளிகைத் தேவரைப்போலவே இருந்தன. அதனைக்கண்ட அந்தணர்கள் ஐயுற்று அக்காலத்தில் ஆட்சிபுரிந்த காடவர்கோன் கழற்சிங்கன் கி.பி. 825-850 என்னும் பல்லவ மன்னனின் சிற்றரசனான நரசிங்கன் என்ற தங்கள் மன்னனிடத்தில் சென்று முறையிட்டனர்.

அதைக்கேட்ட நரசிங்கன் சினந்து, திருமாளிகைத் தேவரைக் கட்டி இழுத்து வருமாறு ஏவலர் சிலரை அனுப்பினான். அரசன் ஆணைப்படி அவரைப் பிணித்துவரச் சென்ற ஏவலர்கள் மதிமயங்கித் தங்களில் ஒருவரை ஒருவர் கயிற்றால் கட்டிக்கொண்டு அரசனை அடைந்தனர். அதனைக் கண்டு மேலும் சினமுற்ற மன்னன், படைத்தலைவர்கள் பலரை அழைத்து, தேவரைக்கொண்டு வருமாறு அனுப்பினான். வந்த படை வீரர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாய்ந்தொழிந் தார்கள். இதை அறிந்த மன்னன், நால்வகைச் சேனைகளோடும் தானே திருமாளிகைத்தேவர் மேல் படைதொடுத்து வந்தான். குழந்தை தாயிடம் சலுகை கேட்பதுபோலத் தேவர் ஒப்பிலா முலையம்மையிடம் சென்று விண்ணப்பித்தார். அம்பிகை மதில் நந்திகளையெல்லாம் அழைத்து ஒரு நந்தியாக்கி, நரசிங்க மன்னனை இழுத்து வருமாறு பணித்தாள். நந்தி தேவரும் அவ்வாறே சென்று அரசனது படைகளை யெல்லாம் அழித்து அரசனையும் அமைச்சர்களையும் இழுத்து வந்து நிறுத்தினார். அரசன் திருமாளிகைத்தேவரின் பெருமையை அறிந்து அவரை வணங்கிக் குற்றம் பொறுக்குமாறு குறை இரந்தான். திருக்கோயிலுக்குச் சென்று இறைவனைப் பணிந்து நின்றான். திருமாளிகைத்

தேவரும் தம்மை வணங்கிய மன்னனுக்கு அருள் புரிந்து இறைவன் திருவருளை எண்ணி வியந்து குருநாதர் திருவடிகளை வணங்கினார். அரசன் அருள் பெற்றுச் சென்றான்.

திருவாவடுதுறைப் புராணத்தில் திருமாளிகைத்தேவர் திறமுரைத்த அத்தியாயம் என்ற பகுதியில் இவ்வரலாறு கூறப்பெற்றுள்ளது.

இவ்வரசன் வந்து தங்கிய இடம் நரசிங்கன் பேட்டை என வழங்குகிறது. இவ்வரலாற்றுக் கேற்ப இன்றும் திருவாவடுதுறைத் திருக்கோயில் திருமதிலில் நந்திகள் இல்லை. பெருமான் திருமுன்புள்ள நந்தியின் உருவம் மிகப் பெரிய உருவத்தோடு விளங்கு கின்றது.

அற்புதங்கள்

திருமாளிகைத்தேவர் ஒரு சமயம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த சவத்தின் புகையை நறுமணம் கமழும்படிச் செய்தார். கொங்கணவர் என்ற சித்தருடைய கமண்டலத்தில் என்றும் வற்றாத தண்ணீரை வற்றச்செய்தார். சிவபெருமானுக்கு நிவேதனமாகித் தமக்கு வந்த பயிற்றஞ் சுண்டலை தம் திருமடத்தில் பாத்திகட்டி விதைத்து பலன்பெறச் செய்தார். இவர் திருவீழிமிழலையில் இருந்த காலத்தில் அங்கு நடந்த தேர்த் திருவிழாவின்போது மக்களால் இழுக்கமுடியாது ஓடாதிருந்த தேரை வடத்தைக் கழற்றிவிட்டுத் தானே அத்தேரினை ஓடுமாறு செய்தார்.

திருவாவடுதுறை ஆதீனத்திருமடத்துள் திருமாளிகைத் தேவருக்குத் தனிக்கோயில் உள்ளது. அவருடைய திரு உருவம் நான்கு திருக்கைகளோடு கூடியதாய் அமைந்துள்ளது. இவர் குரு பணி விடை செய்யவும் சிவபூஜை செய்தற்பொருட்டும் தமது தவ வலிமை யால் வேறு இரண்டு திருக்கைகளை உண்டாக்கிக் கொண்டார் என்பது செவிவழிச் செய்தியாகும்.  கோமுத்தீஸ்வரருக்கு உச்சிக் கால பூசை முடிந்தவுடன் திருமாளிகைத்தேவருக்கும் அச் சிவாசாரியராலேயே அபிஷேக ஆராதனைகள் செய்விக்கப்பெறுகின்றன. அதன் பின்னரே மடாலயத்தில் மாகேஸ்வர பூஜை நடைபெறுவது வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. 

திருமாளிகைத்தேவர் தில்லைச் சிற்றம்பலத்துப் பெரு மானைப் பாடியனவாகக் காணப்படும் திருவிசைப்பாத் திருப் பதிகங்கள் நான்கு ஆகும்.

தஞ்சையில் இராசராசேச்சுரம் என்னும் பெரிய கோவிலை எழுப்பிய இராஜராஜசோழன் (கி.பி. 985 – 1014) அக்கோயிலின் கைங்கரியங்களுக்குத் தளிச்சேரிப் பெண்கள் (தேவர் அடியார்கள்) சிலரை நியமித்தான். அவர்களில் ஒருத்தி பெயர் நீறணி பவளக் குன்றம் என்பதாகும். இத்தொடர் திருமாளிகைத் தேவரின் திரு விசைப்பா முதற்பதிகத்து ஆறாம் பாட்டின் முதல் அடித் தொடக்க மாகும். எனவே திருமாளிகைத்தேவரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்கு முற்பட்டது என்பது தெளிவு. இவரது காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, January 26, 2025

தை மாதத்தில் வந்திருக்கும் அபூர்வ பிரதோஷம்.

 தை மாதத்தில் வந்திருக்கும் அபூர்வ பிரதோஷம். மொத்த கடனும் அடைய நீங்கள் மொத்தமாக செய்ய வேண்டிய 4 விஷயங்கள் என்னென்ன? தெரிஞ்சு வச்சுக்கோ  தை மாதத்தில் தேய்பிறை திதியில், சோமவார தினமான திங்கட்கிழமையோடு சேர்ந்து பிரதோஷம் வந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அன்றைய தினம் மாத சிவராத்திரியும் இருக்கிறது. இப்படி ஒரு அற்புதமான நாள் எந்த வருடம் நமக்கு திரும்பவும் கிடைக்கும் என்று சொல்லவே முடியாது. அப்போது இந்த பிரதோஷம் அதி அற்புதம் வாய்ந்த அபூர்வ பிரதோஷம் தானே. நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் கரைந்து போக சிவபெருமானை, நாளைய தினம் எப்படி எல்லாம் வழிபாடு செய்யலாம்.
திருச்சிற்றம்பலம் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

*தை மாத பிரதோஷம்*

 பிரதோஷ நாளில் 
*ஓம் நமசிவாய*
 மந்திரத்தை சொன்னாலே உங்களுடைய கஷ்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று தான் அர்த்தம். ஆக நாளைய தினம் கண் விழித்ததும் “ஓம் நமசிவாய” மந்திரத்தை கண்களை மூடி, சொல்லுங்கள். பிரதோஷ நாளில் ஈசனை வழிபட்ட புண்ணியம் உங்கள் குடும்பத்தையே சேரும்

பிறகு பிரதோஷ நேரத்தில், மாலை நேரத்தில் சிவபெருமான் கோவிலுக்கு சென்று அபிஷேக ஆராதனைகளை பார்த்து உங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை வாங்கி கொடுத்து, வில்வ இலைகளை வாங்கி அர்ச்சனை செய்து கொள்ளலாம். முதலில் நந்தி தேவர் வழிபாடு, அடுத்தபடியாக சிவன் வழிபாடு, இதுதான் காலம் காலமாக நாம் பின்பற்றி வரும் பிரதோஷ வழிபாடு. இது பொதுப்படையானது. எல்லோரும் நாளைய தினம் மறக்காமல் இதை செய்து விடுங்கள். உங்களுக்கு இதை நினைவு கூறியதில் எங்களுக்கு பாக்கியம் வந்து சேரட்டும்.

அடுத்தபடியாக  தினம், வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சங்கு வாங்கி தானம் கொடுப்பது ரொம்ப ரொம்ப நல்லது. நாளைய தினம் சங்கு தானம் செய்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். அடுத்தபடியாக சிவலிங்கத்திற்கு உங்கள் கையால் சங்கில் அபிஷேகம் செய்தால் மிகவும் நல்லது. உங்கள் வீட்டில் சின்னதாக சிவலிங்கம் இருக்கிறது என்றால், அதற்கு ஒரு சங்கில் தண்ணீரை எடுத்து அந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யுங்கள்.

குடும்பத்தில் சந்தோஷம் பல மடங்கு உயரும். மூன்றாவதாக செய்ய வேண்டிய விஷயம், தானம். அன்னதானம், பசியோடு இருக்கும் நாலு பேருக்கு உங்கள் கைகளால் நாளைய தினம் அன்னதானம் செய்யுங்கள். இந்த மூன்றில் ஏதாவது ஒரு விஷயத்தை செய்தாலே உங்களுடைய கஷ்டங்களில் பாதி தீர்ந்து விடும். மீதம் இருக்கும் கஷ்டத்தையும் போக்குவதற்கு அந்த ஈசன் நிச்சயமாக நல்ல வழியை காண்பித்து கொடுப்பான்.

அடுத்தபடியாக பிரதோஷ நாளன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு உங்களுடைய கையில் மூன்று மிளகு எடுத்துக் கொள்ளுங்கள். மிளகு தாந்திரீக பரிகாரத்திற்கு, கடன் தீர்ப்பதற்கு சிறந்த பொருளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. நாளை இரவு, கிழக்கு பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள். 3 மிளகை கையில் வைத்துக்கொண்டு, “சிவாய சிவாய சிவாய நம ஓம்” என்ற மந்திரத்தை சொல்லி உங்கள் தலையை மூன்று முறை சுற்றி, அந்த மிளகை எரிகின்ற நெருப்பில் போட்டு விடுங்கள். சின்ன அகல் விளக்கு ஒரு கற்பூரத்தை கொளுத்தி, அதில் இந்த மிளகை போட்டாலும் போதும்.

அந்த மிளகு நெருப்பில் வெடித்து சிதறுவது போல, உங்கள் கடன் சுமையும் வெடித்து சிதறிவிடும். அந்த கற்பூரம் எரிந்து முடியும் வரை *சிவாய சிவாய* *சிவாய* *நம ஓம்* என்ற மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். கடன் சுமை குறைய வேண்டும் என்று ஈசனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

கற்பூரம் எரிந்து அந்த சாம்பலை எடுத்து வீட்டிற்கு வெளியே கொட்டி விட்டு, கை கால் முகம் கழுவிக்கொண்டு தூங்கச் செல்லுங்கள். நிம்மதியான தூக்கமும் வரும். கஷ்டங்களை சமாளித்துக் கொள்ளலாம் என்ற மன தைரியமும் உங்களுக்கு வந்து விடும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பரிகாரம் நன்மையை செய்யும்

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

மன இறுக்கம் உள்ளோர் தெய்வநாயகேஸ்வரரையும் யோகதட்சிணாமூர்த்தியையும் வழிபடலாம்.

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ! என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

ஊர்: இலம்பையங்கோட்டூர், காஞ்சிபுரம் மாவட்டம்

மூலவர்: அரம்பேஸ்வரர், தெய்வநாயகேஸ்வரர், சந்திரசேகரர்

அம்பாள்: கனக குஜாம்பிகை, தாயினும் நல்லாள், கோடேந்து முலையம்மை

ஸ்தல விருட்சம்:மரமல்லிகை

தீர்த்தம்: சந்திர தீர்த்தம், மல்லிகை தீர்த்தம், ரம்பை தீர்த்தம், நாகதீர்த்தம், தாமரை தீர்த்தம், பூதகண தீர்த்தம்

வழிபட்டோர்கள் : ரம்பை

ஸ்தல வரலாறு : திரிபுர சம்ஹாரத்தின் போது இறைவன் தேரேறி புறப்பட்டுச் சென்றார். அவருடன் சென்ற தேவர்கள் விநாயகரை வழிபடாமல் சென்றதால் அவர் தேரின் அச்சை முறித்தார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே விழாமல் மகாவிஷ்ணு அதைத் தாங்கிப் பிடித்தார். அப்போது சிவபெருமான் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை கீழே விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.அந்த இடம் தான் இத்தலம் என்று தல புராணம் கூறுகிறது. தேவர்கள் படைக்கு தலைமை ஏற்று திரிபுர சம்ஹாரம் செய்ததாலும், அவர்களால் வழிபடப் பெற்றதாலும் இத்தல இறைவன் தெய்வநாதேஸ்வரர் என்று கெயர் பெற்றார்.
மேலும் தேவலோக மங்கையான அரம்பை இத்தல இறைவனை பூஜித்து தனக்கு என்றும் மாறாத இளமை வேண்டுமென்று பிரார்த்தித்தாள். அரம்பை வழிபட்டதால் இறைவனுக்கு அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று. இரம்பை வழிபட்ட இத்தலம் இரம்பைக்கோட்டூர் ஆயிற்று. பிறகு நாளடைவில் மருவி இலம்பயங்கோட்டூர் என்று மாறி தற்போது எலுமியன்கோட்டூர் என்று வழங்குகிறது.

ஆலய சிறப்புகள்: ஞானசம்பந்தர் மற்ற தொண்டை நாட்டுத் தலங்களை தரிசித்துக் கொண்டு இத்தலம் வழியே வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறு பிள்ளையாகவும், பின் ஒரு முதியவர் போன்றும் தோன்றி வழிமறித்து இக்கோவில் இருப்பதை உணர்த்த கூட வந்த அடியார்கள் அதை தெரிந்து கொள்ளவில்லை. பினபு இறைவன் ஒரு வெள்ளைப் பசு உருவில் வந்து சம்பந்தர் எறி வந்த சிவிகையை முட்டியது. சீர்காழிப் பிள்ளையான சம்பந்தர் வியந்து அப்பசு காட்டிய குறிப்பின் படி அதைத் தொடர்ந்து செல்ல இத்தலத்தின் அருகே வந்தவுடன் பசு மறைந்து விட்டது.

தரிசன பயன்கள்: மன இறுக்கம் உள்ளோர் திங்களன்றும் வியாழனன்றும் தெய்வநாயகேஸ்வரரையும் யோகதட்சிணாமூர்த்தியையும் 11 முறை வலம் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட இழந்த வலிமையைப் பெறுவர் என்பது தொன்நம்பிக்கை. சர்ம சம்பந்த நோய்களுக்கும் பரிகார தலமாக உள்ளது.

குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்.

எப்படி செல்வது : திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம். சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் மார்க்கத்திலுள்ள கடம்பத்தூரில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் சென்று பின் ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம்.

எங்கே தங்குவது: சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் 

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரை

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

நல்ல வேலை கிடைக்க முருகனை வழிபடுங்கள்.

_நல்ல வேலை கிடைக்க முருகர் வழிபாடு_ நிரந்தரமான நல்ல வேலை கிடைத்து, ஒரு இடத்தில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான் நம்மில் பல...