தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்டியல் வருமாறு :-*
🌸 *சித்திரை மாதம்*
🔅1,2,3 தேதி-
தலம் - கூடலை ஆற்றூர்
🔅1 முதல் 7 தேதி
தலம் - புறவார் பனங்காட்டூர்
🔅5,6,7 தேதி
தலம் - ஆடுதுறை
🔅7 முதல் 18 முடிய 12 நாட்கள்
தலம்- செம்பொன்பள்ளி.
🔅11,12,13 தேதி
தலம் - குடந்தைக் கீழ்க்கோட்டம் – நாகேஸ்வர ஸ்வாமி
🌸 *புரட்டாசி மாதம்*
🔅7,8,9 தேதி
தலம் - திருபைஞ்ஞீலி
🔅19,20,21 தேதி
தலம்-புள்ளிருக்கு வேளூர் (மாலையில்)
🔅19,20,21
தலம்-திருக்கடவூர் (மாலையில்)
🌸 *ஐப்பசி மாதம்*
🔅14ஆம் தேய்பிறை நாள் முதல் 7 நாட்கள்
தலம்-திருநெல்லிக்கா (மாலையில்)
🌸 *மாசி மாதம்*
🔅13,14,15
தலம்-கண்டியூர் (மாலையில்)
🔅17 முதல் 21 முடிய 5 நாட்கள்
தலம்-குன்றத்தூர் (சேக்கிழார்)
🔅18 முதல் 24 முடிய 7 நாட்கள்
தலம்-நெல்லிக்கா (மாலையில்)
🔅19,20,21
தலம்-புள்ளிருக்கு வேளூர் (மாலையில்)
🔅21 முதல் 25 முடிய 5 நாட்கள்
தலம்-பூந்தமல்லி வைத்தியநாதர்
🔅23,24,25
தலம்-அழுந்தூர்
🌸 *பங்குனி மாதம்*
🔅1 முதல் 7 முடிய 7 நாட்கள்
தலம்-மாயூரம் வள்ளலார் கோவில் (மாலையில்)
🔅7,8,9 தேதி
தலம்-திருபைஞ்ஞீலி
🔅12,13,14 தேதி
சித்தூர் மாவட்டம் நாகலாபுரம்
🔅13 முதல் 22 முடிய 10 நாட்கள்
தலம்-திருத்தெளிச்சேரி (மாலையில்)
🔅13,14,15 தேதி
தலம்-வேதிகுடி,
🔅23 முதல் 27 முடிய 5 நாட்கள்
தலம்-நாவலூர்
🔅25 முதல் 29 முடிய 5 நாட்கள்
மாயூர வட்டம் பொன்னூர்.
🔆நமக்கு தகவல் கிடைத்த ஆலயங்களுடைய பட்டியலை தந்து இருக்கின்றோம் இன்னும் எவ்வளவோ ஏராளமான கோயில்களும் இருக்கின்றன.
🔆மேற்குறித்த தேதிகளுக்கு ஆதாரமாக இருப்பவை சிவத்தல மஞ்சரியும் பஞ்சாங்கங்களும் ஆகும்.
🔆இப்படிப்பட்ட கோவில்களின் சிற்ப அமைப்பை யாராலும் வியக்காமல் இருக்க முடியாது.
🔆சூரியனின் ஒளிக்கிரணங்கள் நேராக மூலவர் மேல் விழும்படி எப்படி சிற்பிகள் கோவிலை நிர்மாணித்தனர், கிழக்கு நோக்கிய கோவில்களில் காலையிலும் மேற்கு நோக்கிய கோவில்களில் மாலையிலும் காலம் காலமாக இன்று வரை சூரிய கிரணங்கள் எப்படி விழுகின்றன என்பதை நினைத்துப் பார்த்தால் பாரதத்தின் சிற்பக் கலையின் மேன்மையையும், நமது பக்தியின் உச்ச நிலையையும் உணர்ந்து மகிழலாம்.
🔆இப்படி சூரிய ஒளி விழும் நாட்கள் சூரிய பூஜை நாட்கள் என்று விசேஷமாகச் சிறப்பிக்கப்பட்டு அந்த நாட்களில் அந்த வேளையில் சிறப்பு பூஜைகள் நிகழ்கின்றன.
🔆இந்த நாட்கள் பெரும்பாலான இடங்களில் சௌரமான கணக்குப்படி அமைந்திருப்பதும் ஒரு அதிசயமே.
🔆சூரிய பூஜை நிகழும் அதிசயக் கோவில்களில் சூரிய பூஜை நாட்களில் சென்று நாமும் வணங்கி வழிபட்டு மேன்மை அடையலாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment