Tuesday, January 21, 2025

பைரவரை வழிபடுவதற்கு உகந்த தினமாக தேய்பிறை அஷ்டமி.

_தேய்பிறை அஷ்டமி.. அஷ்ட ஐஸ்வர்யங்களையும பெற பைரவரை வழிபடுங்கள்..!!_ 

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

மனிதர்களின் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படுவது இயல்புதான். அப்படி நமக்கு ஓர் கஷ்டம் ஏற்படும்போது நாம் சோர்ந்து போகவேண்டாம், துவண்டுவிடவும் வேண்டாம். சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவரை வழிபட்டு, ஆபத்துகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம்.

 கால பைரவரை வழிபடுவதற்கு உகந்த தினமாக தேய்பிறை அஷ்டமி தினம் சொல்லப்படுகிறது. அந்த வகையில் தை மாத தேய்பிறை அஷ்டமி நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறது. இந்த நாளில் பைரவரை வழிபாடு செய்தால், எதிரிகள் மீதான பயம் விலகுவதோடு, மன தைரியம் உண்டாகும் என்கிறார்கள்.

தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட்டு, கடன்கள் நீங்கி, நீண்டநாள் மகிழ்ச்சியாக வாழலாம்.

தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களைக் கொடுக்கும். செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வரும் நாள் மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.

ஏழரைச் சனி, அஷ்டமச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் பைரவரை வணங்கினால் நன்மையாக முடியும்.


வழிபடும் முறை:

தேய்பிறை அஷ்டமி அன்று அதிகாலையில் நீராடி பைரவரை வணங்கி பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம்.

கோவிலுக்குச் சென்று ஸ்ரீ பைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிட்டும்.

பஞ்சதீபம் என்பது இலுப்பைஎண்ணை, விளக்கெண்ணை, தேங்காய்எண்ணை, நல்லெண்ணை, பசுநெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றி வழிபடுவது ஆகும்.

ஓன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித் தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையிலிருந்து மீண்டு விடுவார்கள் என்பது ஐதீகம்.

ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் அர்சித்து வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.

பலன்கள்:

அஷ்டமி திதியில் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும்.

தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

தொழிலில் லாபம் கிட்டும்.

செல்வ வளம், உடல் நலம், குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

மேலும் வறுமை, பயம் நீங்கி சகல ஐஸ்வர்யங்கள், தன லாபம், வியாபார முன்னேற்றம் அடைந்து, பகைவர்களின் தொல்லைகள் நீங்கி மனதில் மகிழ்ச்சியைப் பெறலாம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈசன்.

*மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈசன்* சுந்தரர் 10 சிவாலயங்களைக் கட்டுவதற்காக மணல் எடுத்த இடம், ‘இடமணல்’ எனப் பெயர் பெற்றதாகவும்,...