பிரயாக்ராஜ் கும்பமேளா சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் பற்றிய பதிவுகள் :*
கும்பமேளா நிகழ்வானது இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 ல் தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை தொடர்ந்து 45 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெற்றாலும் இந்தாண்டு மிகவும் சிறப்புப் பெற்றது.
உலகில் வாழக்கூடிய அனைத்து ஆன்மீக வாதிகளும் மிகவும் ஆவலோடு எதிர்ப்பார்த்த கும்பமேளா நிகழ்வானது ஜனவரி 13 ல் தொடங்கி தொடர்ந்து 45 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறவுள்ளது.
தை மாதம் வந்தாலே பண்டிகைகளுக்குப் பஞ்சம் இருக்காது, தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப இந்த மாதம் முழுவதும் கோலகத்திற்குப் பஞ்சம் இருக்காது.
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா விமர்சியாக தொடங்கியுள்ளது. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு கும்பமேளா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கும்பமேளாவின் வரலாறு, சிறப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்த விரிவான தகவல்களை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக கொள்ளலாம்.
கும்பமேளாவின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்:
தேவர்களும், அசுரர்களுக்கும் இடையே அமிர்ததுக்காக யுத்தம் நடந்தது போது அமிர்தத்தின் 4 துளிகள் பூலோகத்தில் 4 இடங்களில் விழுந்தாக கூறப்படுகிறது
உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ், நாசி, உஜ்ஜைனி மற்றும் ஹிரித்வார் போன்ற 4 இடங்கள் என்பதால் இவையெல்லாம் இன்றளவிற்கும் புனிதத்துவம் வாய்ந்தாக உள்ளது.
தேவர்களுக்கு ஒரு நாள் என்பது பூலோகத்தில் ஓராண்டு என்பதால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா கொண்டாடப்படுகிறது. மேலும் மேலே குறிப்பிட்ட 4 இடங்களில் பாயும் நதிகளில் நீராடும் போது அனைத்துப் பலன்களும் கிடைக்கும் எனவும், நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிக்கரமாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.
*பிரயாக்ராஜ் கும்பமேளா :*
கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று நதிகளும் ஒன்று சேரக்கூடிய திரிவோணி சங்கமத்தில் நீராட பக்தர்கள் தயாராகி விட்டனர். புராணங்களின் படி, பாற்கடலில் அமிர்தம் எடுக்கும் போது நடைபெற்ற சண்டையில் சிந்திய ஒரு துளி அமிர்தம், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிப்பிட்ட இடங்களில் பாயும் என்ற ஐதீகம் உள்ளது.
அதன் படி இந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நதிக்கரையில் 45 நாட்கள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் புனித நதிகளின் சங்கமமான திரிவேணி சங்கமத்தில் நீராடும் போது செய்த பாவங்கள் தொலைந்து, புண்ணிம் சேரும் என நம்பப்படுகிறது. இதற்காக உலக நாடுகளில் உள்ள அனைத்து துறவிகள் முதல் பொதுமக்கள் வரை ஆன்மீக தேடல்களை நாடி வருகின்றனர்.
*கும்பமேளா தீர்மானிப்பது எப்படி?*
சூரிய நாள்காட்டியை அடிப்படையாகக் கொண்டு தான் ஜோதிடம் முதல் அனைத்து செயல்பாடுகளையும் நாம் மேற்கொண்டுவருகிறோம். இதை வைத்து தான் கும்பமேளாவும் கணிக்கிடப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யராஜில் ரிஷப ராசியில் குருபகவானும், சூரிய பகவான் மகர ராசியிலும் இருக்கும் போது கும்பமேளா கொண்டாடப்படுகிறது.
இதே போன்று குரு பகவான் சிம்ம ராசியிலும், சூரிய பகவான் மேஷத்திலும் வரும் போது உஜ்ஜைனியிலும் கும்பமேளா கொண்டாடப்படுகிறது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment