*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)*
*மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).*
பொதுவாக சிவன் கோயிலில் சிவலிங்கத்தின் முன்பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் *லிங்கத்தின் பின்புற தரிசனம் நமக்கு கிடைக்கிறது.*
*ஈசன் தன்னைத்தானே தோற்றுவித்து மேற்கு திசையில் தன்னை அர்ச்சித்துக் கொண்ட பெருமை உடையதாக கருதப்படும்* மத்தியபுரி அம்பாள் எனும் பெயரில் மீனாட்சி அம்மன் சமேத இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில்.
மேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜை செய்ய வேண்டுமென்பது நியதி. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது.
அம்பிகையின் பீடத்தில், கல்லால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது.
மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன், வல்லப சித்தராக வந்து கல் யானையை கரும்பு தின்னச் செய்தார்.
இவர் பத்மாசனத்தில் வலது கையில் ஆகாயம் காட்டி, இடக்கையில் சாம்பிராணி குங்கிலியம் வைத்து காட்சி தருகிறார்.
மதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாகப் பிறந்த மீனாட்சியை, சிவபெருமான் மணந்து கொண்டார். பின்னர் மதுரையில் மன்னராக பொறுப்பேற்றார். எச்செயலையும் செய்யும் முன்பு சிவலிங்க பூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். எனவே ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து, அதற்கு பூஜித்தபின்பு பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த வரலாற்றின் அடிப்படையில் இங்கு சிவன், லிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார்.
*இப்பிறப்பிலேயே செய்த பாவங்களை மன்னித்து நன்மை தருபவராக* அருளுவதால் இவர், இம்மையிலும் நன்மை தருவார் என்று அழைக்கப்படுகிறது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம் .
No comments:
Post a Comment