கீழக்கடம்பூர், மேலக்கடம்பூர், சிதம்பரம் நடராஜர் கோயில்கள்
அருகில் உள்ளது.
யோக நிலையில் சிவன். அரிதிலும் அரிதான சிற்பம்.எந்த கோயிலிலும் இதுபோன்ற காட்சியைக் காண்பது அரிது.!!
கடம்பனேஸ்வரர் கோயில். பராந்தக சோழன் காலம்.
எழும்பூர்.
ஊரின் தென்பகுதியில் கிழக்கு நோக்கிய வாயிலுடன் கடம்பவனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.கல்வெட்டுகளில் எறும்பூர் என்பது உறுமூர் என்றே வழங்கப்படுவதால் உறுமூரே காலப்போக்கில் எறும்பூராகி இருக்கலாம். இக்கோயில் சிறிய சதுர வடிவக் கருவறையைக் கொண்டுள்ளது. ஒற்றைத் தளத்துடன் வேசரபாணி விமானத்தை அதாவது வட்டவடிவ சிகரத்தைக் கொண்டுள்ளது. கருவறை விமானம் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் கற்றளியாக அமைக்கப்பட்ட இக்கோயில் காலவெள்ளத்தால் தளப்பகுதியை இழந்துள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள தேவக்கோட்டங்களில் தெற்கில் தென்முகக் கடவுளும், மேற்கில் திருமாலும், வடக்கில் நான்முகனும் யோகநிலையில் அமர்ந்துள்ளனர். இச்சிற்பங்கள் கோயிலின் தனிச்சிறப்பாகும். முதலாம் பராந்தகச் சோழனின் 28-வது ஆட்சியாண்டில் கி.பி.935-இல் இக்கோயில் அட்டபரிவாரங்களுடன் அதாவது பரிவார தேவதைகளுக்கான உபகோயில்கள் எட்டுடன் கட்டப்பட்டுள்ளது. அதற்கு முன் இக்கோயில் மண்தளியாக இருந்திருக்க வேண்டும். சிறுத்திருக்கோயில் என்ற பெயருக்கேற்ப இக்கோயில் சிறிய கற்றளியாகவே இருக்கிறது. பரிவார ஆலயங்கள் காலவெள்ளத்தில் அழிந்துபட்டுள்ளன. பாண்டியர்களின் பங்களிப்பும் இக்கோயிலுக்கு இருந்து வந்துள்ளது. அம்மன் கோயிலை பாண்டியர்கள் கட்டியுள்ளனர். யார் காலத்தில் எப்போது கோயில் கட்டப்பட்டது என்ற விவரத்துடன் உள்ள கோயில் இதுவாகும்.
No comments:
Post a Comment