Wednesday, February 19, 2025

நீரிழிவு நோயால் நோயாளிகள் கரும்பேஸ்வரரை வணங்கினால் சர்க்கரை நோய் குணமாகும்.

அருள்மிகு வெண்ணிக் கரும்பேஸ்வரர் திருக்கோயில்
கோயில் வெண்ணி
அஞ்சல் - 614403
நீடாமங்கலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்.

*மூலவர்: வெண்ணி கரும்பேஸ்வரர்

*அம்பாள்: அழகிய நாயகி (செளந்தர நாயகி)    

*தலவிருட்சம்: நந்திவட்டம்                     

*இது பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடப்பட்டது. 

*மூலவர்வெண்ணிகரும்பேஸ்வரர் சிவ லிங்கம் கரும்புக்கழிகளை ஒன்றாக சேர்த்து கட்டி வைத்தார் போல் உள்ளது.  

*நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த கோவிலில் கரும்பேஸ்வரரை வணங்கினால் சர்க்கரை  நோய் குணமாகும் என்று நம்பப்படுகிறது. 

*உலகில் மிக அதிகமானோரை பாதித்திருக்கும் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய், உடலில் இன்சுலின்  சுரப்பதில் ஏற்படும் குறைபாடு காரணமாக  வருகிறது. இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது, ஆனால் கட்டுப்படுத்த முடியும் என்றும், தொடர்ந்து மருந்துவர்கள் கொடுக்கும் மருந்து சாப்பிட்டு வர அது கட்டுக்குள் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். 

மருத்துவர்களை தாண்டி உள்ளது தான் கடவுள் மீது உள்ள நம்பிக்கை. அந்த வகையில் திருவெண்ணியூரில் உள்ள வெண்ணிக் கரும்பேஸ்வரரை வழிபட்டால் சர்க்கரை வியாதியிலிருந்து விடுபடலாம் என நம்பப்படுகிறது.        

*அர்ச்சகர் அளிக்கும் திருநீற்றுப் பிரசாதத்தை     சிறிது நீரில் கலந்து தொடர்ந்து 24 நாட்கள் காலை வெறும் வயிற்றில் பருகிவர நீரிழிவு நோய் குணமாகும் என்று கூறப்படுகிறது. 

(முன்பு சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கோயிலில் சர்க்கரை மற்றும் ரவையை சேர்த்து வெண்ணி கரும்பேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து   பிரகாரத்தில் தூவுவார்கள். சர்க்கரையை எறும்புகள் தின்றுவிட்டால், அவர்களுக்கு சர்க்கரை நோய் குறைவதாக ஐதீகம். இப்போது இந்த வழக்கம் நிறுத்தப்பட்டுள்ளது)    

*சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் வெண்ணி கரும்பேஸ்வரர் மீது பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில்  சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது. 

*வளைக்காப்பு முடிந்த உடன் இக் கோயிலில் உள்ள அம்பாள்                      ஸ்ரீ செளந்தர நாயகியை வணங்கி வளையல்களை மண்டபத்தில் கட்டி விட்டால், சுகப்பிரசவம் நிச்சயம் என நம்பப்படுகின்றது .  

*இரு முனிவா்கள்  தலயாத்திரையின்போது  இவ்வழியாக வந்தனா்.   அப்போது கரும்பு புதருக்கிடையில் இறைவன் திருமேனி இருப்பதைக் கண்டனா். அவ்விரு முனிவா்களும் இறைவன் திருமேனியை பூசித்து விட்டு, இவ்விறைவனின் தலவிருட்சம் கரும்பு என்றாா் ஒரு முனிவா். மற்றொரு முனிவா் வெண்ணி என்றழைக்கப்படும் நந்தியாவட்டம் என்றாா்.   இரு முனிவருக்குள்ளும் வாக்குவாதம் பொிதாகிப் போனது. 
அப்போது இறைவன் இவ்விரு முனிவா் முன்பும் அசரீாியாகத் தோன்றி எனது பெயாில் "கரும்பும்", தல விருட்சமாக "வெண்ணியும்" இருக்கட்டும் என்று அருள் குரல் கொடுத்தாா். 
அன்று முதல் இவ்விறைவன் கரும்பேசுவரா் ஆனாா். இத்தலம் கோயில் வெண்ணி என்னும் பெயர் பெற்றது. 

*கி.பி.முதலாம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட மன்னன்  காிகால் பெருவளத்தான். 16 வயது இளைஞனாக இருந்தபோது அாியணை ஏறினான். அவன் சேர, பாண்டிய மன்னா்களையும், 11 வேளிா்குல சிற்றரசா்களையும் வெண்ணிப்போரில் வென்று  பேரரசனாக முடி சூட்டிக்கொண்ட இடம் இது. 
*"வெண்ணிப்பறந்தலை"* என்று இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள இடம் இன்றைய "கோயில் வெண்ணி" என்பதாகும்.  

*சுற்றிலும் கடைகள் இல்லாததால், பக்தர்கள் கோயிலுக்கு செல்லும்போது அனைத்து பூஜை பொருட்களையும் எடுத்துச் செல்வது நல்லது.  

*கோவில்வெண்ணி    திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகே தஞ்சாவூரிலிருந்து 24 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.                     ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

தமிழ்நாட்டில்சிவனுக்குரியஸ்தலங்களின்பெருமைகள்.

தமிழ்நாட்டில்சிவனுக்குரிய ஸ்தலங்களின்பெருமைகள். ராஜ கோபுரத்தை விட மூலவருக்குஉயர்ந்த விமானம் உள்ள இடங்கள் 1,திருப்புனவாசல் -- ஶ்ர...