நீலிவனேஸ்வரர் திருக்கோவில
திருப்பைஞ்ஞீலி, திருச்சி
சுவாமி : நீலிவனேஸ்வரர், நீல கண்டேஸ்வரர், வாழைவனநாதர், சுவேத கிரி.
அம்பாள் : விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி.
மூர்த்தி : எமன்.
தலவிருட்சம் : ஞீலி மரம் (கல் வாழை).
தலச்சிறப்பு : "ஆதிதிருவெள்ளரை அடுத்தது திருப்பைஞ்ஞீலி ஜோதி திருவானைக்காவல் சொல்லிக் கட்டியது திருவரங்கம்" என்னும் பழமையான வழக்காறு இத்தலத்தின் பெருமையை நன்கு உணர்த்துகிறது.
திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் மாண்ட தர்மராசனுக்கு இறைவன் மீண்டும் குழந்தையாக உயிர் கொடுத்த தலம்.
குடைவரைக் கோயிலாக அமைந்துள்ள ஒரு சந்நிதி இங்கு எமனுக்காக உள்ளது. அதனால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது.
எமபயம் நீங்க பிரத்தியேகமாக "எமதீர்த்தத்தை தெளித்து இங்கு எழுந்தருளியுள்ள எமதர்மருக்கு அர்ச்சனை செய்தால் எமபயம் நீங்கும் என்பது நம்பிக்கை".
இத்திருக்கோவிலுக்கு வந்து "ஆயுட்ஹோமம்" செய்து எமனை தரிசித்து சென்றால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை. திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து "வாழைபரிகாரம்" செய்தால் திருமணதடை நீங்குகிறது.
அப்பர் பெருமான் இத்தலமாக செல்லும் போது வழி தவறி நிற்கையில், எம்பெருமானே அந்தணர் வடிவில் அவரது பசியாற்றி இத்தலத்திற்கு வழிகாட்டினார். "சோற்றுடைய ஈஸ்வரன்" என்னும் பெயர் கொண்டு அவருக்கு இத்தலத்தில் ஒரு தனிச்சந்நிதியும் அமைந்துள்ளது.
ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைக்கப்படும் ஒரு வகைக் கல்வாழை. இதுவே இத்தல மரமாக அமைந்ததால், இது ஞீலிவனம் எனப் பெயர் பெற்றது.
ஒவ்வொரு வருடமும், புரட்டாசி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில், சுயம்பு லிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் படர்வதைக் காண்பது சிறப்பாகும்..
தல வரலாறு :
முன்னொருகாலத்தில் வாயுவுக்கும், ஆதிசேசனுக்கும், யார் பெரியவர் என்ற அகந்தைக் கூடியது. அதிசேசன் கைலாய மலையை சுற்றி வளைத்துக் கொண்டார்.
கைலாய தளர்த்த சண்ட மாருதத்தை (கடுமையான சூராவளிக் காற்று) உண்டு பண்ணினார். சண்ட மாருதம் கடுமையாக வீசியதால் கைலாயத்திலிருந்து எட்டு கொடுமுடிகள் (சிகரங்கள்) பெயர்ந்து விழுந்தன.
அவை திருகோணமலை, திருகாளத்தி, திருசிராமலை, திருஈங்கோய்மலை, ரஜிதகிரி, நீர்த்தகிரி, ரத்தினகிரி, சுவேதகிரி என்பனவாகும். இதில் சுவேதகிரி என்பதே இத்தலமான திருப்பைஞ்ஞீலி ஆகும். எனவே இத்தலம் தென்கைலாயம் என வழங்கப்படுகிறது.
இத்தலத்தில் கன்னிமார்களான பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி தவம் இருக்கும் போது, பார்வதி அன்னை அவர்கள் முன் தோன்றி, வரம் அளித்ததுடன், வாழை மர வடிவில் இத்தலத்திலேயே குடி கொண்டு என்றேன்றும் தனது அருளைப் பெறலாம் எனக் கூறினாள்.
பின்னர், அவ்வாழை வனத்தின் மத்தியில் சிவனாரும் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாளிக்கிறார்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் - பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
பூஜைவிவரம் : 4 கால பூஜை.
திருவிழாக்கள் :
சித்திரை சதயநட்சத்திரத்தில் அப்பர் "கட்டமுது" விழா,
புரட்டாசி - நவராத்திரி,
ஐப்பசி - சூரசம்ஹாரம்,
ஆவணி - பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா,
தட்சிணாயணத்தில் புரட்டாசி 6, 7, 8, உத்திராயணத்தில்
பங்குனி 6,7,8, ஆகிய தேதிகளில் சூரியபகவானின் கிரணங்கள் இப்பதாள ஈஸ்வரரை தொழுதேத்தும் இதற்கு சூரிய பூஜை என்பர்.
அருகிலுள்ளநகரம் : திருச்சி.
கோயில் முகவரி : அருள்மிகு நீலிவனேஸ்வரர் திருக்கோவில்,
திருப்பைஞ்ஞீலி - மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment