செவ்வாய்க்கு உரிய தெய்வம் சுப்பிரமணியர். அதனால் செவ்வாய் அன்று முருகனை வழிபடுதல் சிறப்பு. செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலையிலேயே நீராடி, அருகில் இருக்கும் முருகப் பெருமான் கோவிலுக்கு சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும் வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை தொடங்கவேண்டும்.
வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து முருகனை நினைத்து சஷ்டி கவசம், கந்தகுரு கவசம் போன்ற முருகப் பெருமானுக்கு உரிய தோத்திரங்கள் மந்திரங்கள் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். அதன்பின் மாலை 6 மணிக்கு மீண்டும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.
பலன்கள்: தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் விரதமிருந்து முருகனை உளமாற வழிபடுவதால், உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பின் அதன் தீவிரம் குறைந்து நன்மை உண்டாகும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும். கோழைத்தனம், பய உணர்வுகள் நீங்கி, தைரியம் மற்றும் தன்னம் பிக்கை பிறக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந் து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.விரதத்தின் பயன்களை அறிவியல் ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்ததற்கு ஜப்பானை சேர்ந்த செல் உயிரியலார் Yoshinori Ohsumi க்கு 2016 இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
விரதம் இருக்கும் நேரத்தில் நமது செல்களே நமது உடலை சுத்தம் செய்யும், பலவீனமற்ற, நோய்வாய்பட்ட செல்களை உண்டு அழிக்கும். புற்றுநோய் செல்களை நீக்கும். பல நோய்கள் உருவாக காரணமாக உள்ள செல்களை நீக்கும் ...
தொடர்ச்சியாக 12 மணி நேரத்திற்கு மேல் விரதம் இருந்தால் இந்த நல்ல விஷயங்கள் எல்லாம் நமது உடலில் படிப்படியாக விரத நேரம் கூட கூட நடக்கும் ...
(மிக முக்கிய குறிப்பு : விரதம் என்றால் டிபன் ஐட்டம் சாப்பிடுவது இல்ல, தண்ணீர் மட்டும் தான் குடிக்கலாம் ...
விரதம் இருப்பதை அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment