திருநாவுக்கரசர் ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தாரால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர். இவர் தமிழகத்தில் முதன்முதலாகச் சிவன் கோயில்களில் உழவாரப்பணியை அறிமுகப்படுத்தியவர் ஆவார்.
திருமுனைப் பாடி நாட்டைச் சேர்ந்த திருவாமூரில் பிறந்தவர் திருநாவுக்கரசர். இவரது இயற்பெயர் மருள்நீக்கியார். பெற்றோர் புகழனார், மாதினி. தமக்கையார் திலகவதியார். .சமண சமயத்தில் இருந்து தன் சகோதரி திலகவதியின் மூலம் சைவ சமயத்திற்கு மாறினார் சைவ சமண சமயத்தில் இருக்கும் போது இவருக்கு தர்மசேனர் என்ற பெயர் இருந்தது. மேலும் இவருக்கு அப்பர், வாகீசர் என்ற பெயர்களும் உண்டு.
மருள்நீக்கியார் சமண சமயத்தில் இணைந்ததை கண்டு வருத்தமடைந்த திலகவதியார் இறைவனிடம் முறையிட்டார். இதனால் இறைவன் தருமசேனருக்கு சூலை நோய் எனும் கடுமையான வயிற்று வலியை தந்தார்.
திருவதிகை வீரட்டானேஸ்வரர் மீது, " கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்" எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி, இறையருளால் சூலை நோய் நீங்கப் பெற்றார..அவரது செந்தமிழ்ச் பாமாலையைக் கேட்ட சிவபெருமான் இவருக்கு "திருநாவுக்கரசர்" என்னும் திருநாமத்தை அருளினார்.
அற்புதங்கள்
*********************
மகேந்திர வர்ம பல்லவன்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
சைவ சமயத்தைப் பின்பற்றியமைக்காக சமண சமயத்தைச் சேர்ந்த மன்னன் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி.600–630), இவரை, பெரும் வெப்பம் கொண்ட நீற்றறையில் அடைத்து வைக்க ,அப்போது திருநாவுக்கரசர் சிவபெருமானை துதித்து ,"மாசில் வீணையும் மாலை மதியமும்" எனத் தொடங்கும் திருப்பதிகத்தை பாடி அருளினார் .அந்த நீற்றறை இவருக்கு இளவேனிலும், தென்றல் காற்றும், பொய்கையும் ,வெண் நிலவும் ,வீணை ஓசையும் போல குளிர்ந்திருந்தது என்று கூறுகிறார்.
நீற்றறையில் இட்டும் நாவக்கரசருக்கு ஒன்றுமாகாமல் இருந்ததனால், சமணர்கள் அவருக்கு விஷம் கலந்த அன்னத்தை உண்ணும் படி செய்தார்கள்.
நஞ்சை உண்டும் இவருக்கு ஒன்றும் ஆகாது கண்ட சமணர்கள் யானையை விட்டு மிதிக்க செய்ய அரசனுக்கு அறிவுறுத்தினர். சீறிவரும் யானையைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் சிவபெருமானை தியானித்த வாகீசர்," அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை ",என்று பதிகம் பாடி தொழுதார் .யானையும் நாவரசரை வளமாக வந்து பணிந்து எழுந்து திரும்பிச் சென்றது.
அடுத்து, கல்லோடுக்கட்டி கடலில் தள்ளப்பட்ட நிலையிலும், இறைவனை நினைத்து," "சொற்றுணை வேதியன்" என்னும் திருப்பதிகம் பாடினார்.இதனால் கல்லும் கடலில் மிதந்தது.நாவுக்கரசரும் கரை சேர்ந்தார்.
சமணர்களின் இத்தகைய கொடும் செயல்களால் தமக்கு தீங்கு ஏதும் நேராமல் வெற்றி கொண்ட திருநாவுக்கரசரின் பக்திச் சிறப்பைக் கண்ட பல்லவ மன்னன், அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, மன்னிக்கும்படி வேண்டினார்.பின், சமண சமயத்தைவிட்டு, சைவ சமயத்தை பின்பற்ற ஆரம்பித்தார்.
#சிறுவனை_உயிர்ப்பித்தல்
திங்களூரில் அப்பூதி அடிகள் என்னும் தொண்டரின் இல்லத்தில் வாகீசர் எழுந்தருளியிருந்த போது அவர் அமுது செய்வதற்காக வாழையிலை அரிந்து வர சென்றச் அப்பூதியாரின் புதல்வனை பாம்பு தீண்டி , அவன் இறக்க நேரிட்டது. இது அறிந்த நாவரசர் ,"ஒன்று கொலாம் அவன் சிந்தை உயர் வரை", என்று தொடங்கும் பதிக்கத்தைப் பாடி அச்சிறுவனை மீண்டும் உயிர் பெறச் செய்து அருளினார் .
#மூடியக்_கதவைத்_திறத்தல்
சித்திரை சதயம் திருநாவுக்கரசர் நாயனார் குருபூஜை நாளில், அவரது வரலாற்று சிறப்புகளையும் அற்புதங்களையும் பகிர முடியுமா?
காலமெல்லாம் அடியார்கள் தோன்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்கள், இறைவனின் துணைகொண்டு அவனுக்கே பணிசெய்து அருள் பெறுகிறார்கள். எதிர்வரும் இடர்களைத் தகர்த்து அற்புதம் நிகழ்த்துகிறார்கள். அப்படி, அற்புதங்கள் நிகழ்த்தி, ஆலயங்களைத் திருத்தி, உழவாரப் பணிசெய்து, சிவனாரின் புகழை உலகெங்கும் பரப்பி சிவத்தொண்டாற்றியவர், அப்பர் திருநாவுக்கரசர்!!
'என்னைக் கொல்லக்கூட முடியும்; ஆனால் மாற்ற முடியாது! என்ற தீவிர வைராக்கியம் கொண்டவர்களே உலக வரலாற்றை மாற்றி உள்ளார்கள். அந்த வகையில் சைவ சமயச் சூரியனாகத் தோன்றி, தென்னகம் முழுமையும் சிவ வழிபாட்டைச் செழிப்பாக மலரச் செய்தவர் அப்பர் பெருமான்.
அப்பர் திருநாவுக்கரசு நாயன
ஜோதா அக்பர் பற்றிய வரலாற்று குறிப்புகள் யாவை?
திருமுருகன் பூண்டி திருக்கோயில் வரலாறு என்ன?
மைக்ரேன் தலைவலி பற்றிய தகவல்களை பகிர முடியுமா?
கிருபானந்த வாரியார் திருப்பணி செய்த கோயில்கள் என்னென்ன?
வரலாற்று தொடக்க காலம் என்றால் என்ன?
திருநாவுக்கரசர் ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தாரால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர். இவர் தமிழகத்தில் முதன்முதலாகச் சிவன் கோயில்களில் உழவாரப்பணியை அறிமுகப்படுத்தியவர் ஆவார்.
திருமுனைப் பாடி நாட்டைச் சேர்ந்த திருவாமூரில் பிறந்தவர் திருநாவுக்கரசர். இவரது இயற்பெயர் மருள்நீக்கியார். பெற்றோர் புகழனார், மாதினி. தமக்கையார் திலகவதியார். .சமண சமயத்தில் இருந்து தன் சகோதரி திலகவதியின் மூலம் சைவ சமயத்திற்கு மாறினார் சைவ சமண சமயத்தில் இருக்கும் போது இவருக்கு தர்மசேனர் என்ற பெயர் இருந்தது. மேலும் இவருக்கு அப்பர், வாகீசர் என்ற பெயர்களும் உண்டு.
மருள்நீக்கியார் சமண சமயத்தில் இணைந்ததை கண்டு வருத்தமடைந்த திலகவதியார் இறைவனிடம் முறையிட்டார். இதனால் இறைவன் தருமசேனருக்கு சூலை நோய் எனும் கடுமையான வயிற்று வலியை தந்தார்.
திருவதிகை வீரட்டானேஸ்வரர் மீது, " கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்" எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி, இறையருளால் சூலை நோய் நீங்கப் பெற்றார..அவரது செந்தமிழ்ச் பாமாலையைக் கேட்ட சிவபெருமான் இவருக்கு "திருநாவுக்கரசர்" என்னும் திருநாமத்தை அருளினார்.
அற்புதங்கள்
மகேந்திர வர்ம பல்லவன்
சைவ சமயத்தைப் பின்பற்றியமைக்காக சமண சமயத்தைச் சேர்ந்த மன்னன் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி.600–630), இவரை, பெரும் வெப்பம் கொண்ட நீற்றறையில் அடைத்து வைக்க ,அப்போது திருநாவுக்கரசர் சிவபெருமானை துதித்து ,"மாசில் வீணையும் மாலை மதியமும்" எனத் தொடங்கும் திருப்பதிகத்தை பாடி அருளினார் .அந்த நீற்றறை இவருக்கு இளவேனிலும், தென்றல் காற்றும், பொய்கையும் ,வெண் நிலவும் ,வீணை ஓசையும் போல குளிர்ந்திருந்தது என்று கூறுகிறார்.
நீற்றறையில் இட்டும் நாவக்கரசருக்கு ஒன்றுமாகாமல் இருந்ததனால், சமணர்கள் அவருக்கு விஷம் கலந்த அன்னத்தை உண்ணும் படி செய்தார்கள்.
நஞ்சை உண்டும் இவருக்கு ஒன்றும் ஆகாது கண்ட சமணர்கள் யானையை விட்டு மிதிக்க செய்ய அரசனுக்கு அறிவுறுத்தினர். சீறிவரும் யானையைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் சிவபெருமானை தியானித்த வாகீசர்," அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை ",என்று பதிகம் பாடி தொழுதார் .யானையும் நாவரசரை வளமாக வந்து பணிந்து எழுந்து திரும்பிச் சென்றது.
அடுத்து, கல்லோடுக்கட்டி கடலில் தள்ளப்பட்ட நிலையிலும், இறைவனை நினைத்து," "சொற்றுணை வேதியன்" என்னும் திருப்பதிகம் பாடினார்.இதனால் கல்லும் கடலில் மிதந்தது.நாவுக்கரசரும் கரை சேர்ந்தார்.
சமணர்களின் இத்தகைய கொடும் செயல்களால் தமக்கு தீங்கு ஏதும் நேராமல் வெற்றி கொண்ட திருநாவுக்கரசரின் பக்திச் சிறப்பைக் கண்ட பல்லவ மன்னன், அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, மன்னிக்கும்படி வேண்டினார்.பின், சமண சமயத்தைவிட்டு, சைவ சமயத்தை பின்பற்ற ஆரம்பித்தார்.
சிறுவனை உயிர்ப்பித்தல்
திங்களூரில் அப்பூதி அடிகள் என்னும் தொண்டரின் இல்லத்தில் வாகீசர் எழுந்தருளியிருந்த போது அவர் அமுது செய்வதற்காக வாழையிலை அரிந்து வர சென்றச் அப்பூதியாரின் புதல்வனை பாம்பு தீண்டி , அவன் இறக்க நேரிட்டது. இது அறிந்த நாவரசர் ,"ஒன்று கொலாம் அவன் சிந்தை உயர் வரை", என்று தொடங்கும் பதிக்கத்தைப் பாடி அச்சிறுவனை மீண்டும் உயிர் பெறச் செய்து அருளினார் .
மூடியக் கதவைத் திறத்தல்
திருஞானசம்பந்தருடன் பல திருத்தலங்களை வழிபட்டு திருமறைக்காடு வந்தடைந்தார் வாகீசர் .இருவரும் மறைக்காடருடைய ஆலயத்திற்கு சென்று கோயில் கதவு அடைக்கப்பட்டு இருப்பதை கண்டனர்.சம்பந்தரின் வேண்டுகோளுக்கிணங்கி, நாவுக்கரசர் " பண்ணின் நேர் மொழியாள்" எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி கதவை திறக்கச் செய்தார்.பின் அப்பரின் வேண்டுகோளுக்கிணங்க கதவினை மீண்டும் அடைக்கவும் திருப்பதிகம் பாடி அருளினார் சம்பந்தர்.
#சூல_இடப_முத்திரைகள்_பெறுதல்
திருத்தூங்கானை மாடம் என்னும் திருத்தலத்தில் "பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்" என்று பாடி, "சூலமுத்திரையும் இடப முத்திரையும் அடியேன் மேல் பொறித்து அருள வேண்டும்" என்று சிவபெருமானிடம் விண்ணப்பித்து, சூல,இடப முத்திரைகளை தன் திருத்தோளில் பொறிக்கப் பெற்றார்.
#அப்பர்_எனும்_திருநாமம்
சீர்காழிப் பதிக்கு எழுந்தருளிய நாவுக்கரசர் திருஞானசம்பந்த சுவாமிகளை சந்தித்து அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கினார். சம்பந்தர் அவரை எதிர்வணங்கி ,"அப்பரே!" என்று இரு கைகளையும் பற்றி எடுத்தார் .அந்த நாள் முதல் திருநாவுக்கரசர் அப்பர் என்னும் திருப்பெயராலும் வழங்கப்பெற்றார்.
#தாண்டகவேந்தர்
திருநல்லூரில் வாகீசர் சிவபெருமானை வணங்கி எழும்போது பரமன் தம் பதமலரை அவர் திருமுடி மீது சூட்டி அருளினார். உடனே, ஈசன் அருளை நினைத்து உருகி ,"நினைந்து உருகும் அடியாரை" என தொடங்கும் திருத்தாண்டக மாலையை சாற்றி ,'தாண்டக வேந்தர்' என்னும் திருப்பெயரையும் பெற்றார்.
#இறைவன்_கைங்கர்யம்
திருப்பைஞ்ஞீலி தலத்தில் மிகவும் களைத்துப் போயிருந்த அப்பருக்கு பொதிச்சோறும் குடிநீரும் கொடுத்து அருளினான் பரமன்.
#திருக்கயிலாயக்காட்சி
திருக்கயிலையைக் கண்ணினால் காண வேண்டும் என்று விரும்பிய வாகீசருக்கு திருவையாற்றிலே கயிலை கோலத்தில் காட்சி தந்தான் இறைவன்.அப்போது ,"ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே", என்று திருத்தாண்டகம் பாடி உள்ளம் குழைய உருகி ஆடினார்.
#சிவிகை_தாங்கிய_அப்பர்
திருப்பூந்துருத்தியில் திருநாவுக்கரசர் எழுந்தருளிய போது, அவரை தரிசிப்பதற்காக சம்பந்த பெருமான் அந்த திருத்தலத்தை நோக்கி சென்றார். அவரை எதிர் சென்று வரவேற்க சென்ற அப்பர், யாரும் அறியாதபடி சம்பந்தருடைய முத்துச்சிவிகையைத் தாங்கினார். சம்பந்தர் திருப்பூந்துருத்தியில் அப்பரைக் காணாமல்," அப்பர் எங்கு உற்றார் ?"என்று வினவ, நாவக்கரசர் 'தங்களைச் சுமக்கும் பேறு பெற்ற நான் இங்கு உற்றேன்",என்றார்.அதைக் கேட்டு பதைபதைத்த சம்பந்தர் சிவகங்கையில் இருந்து இறங்கி வந்து அவரை வணங்கி நின்றார்.
#இறைவன்_திருவடி_அடைதல்
மதுரை, திருவிராமேச்சுரம், திருநெல்வேலி முதலிய தலங்களை தரிசித்து விட்டுத் திருப்புகலூரை அடைந்தார் .அங்கு " புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் ",என்று புகலூர்த் தாண்டகத்தை திருவாய் மலர்ந்தருளி, சிவபெருமானுடைய திருவடிகளை அடைந்தார்.
#குரு_பூசை
நூற்றுக்கும் மேற்பட்ட சிவாலயங்களுக்கு நடந்தே சென்று உழவாரப்பணி செய்தும், தேவார திருப்பதிகங்கள் பாடியும் சிவபெருமானை வழிபட்டு வந்த அப்பர் பெருமான் தனது 81 ஆம் வயதில் சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று திருப்புகலூர் என்னும் தலத்தில் உள்ள சிவாலயத்தில் வைத்து சிவபெருமானோடு இரண்டறக் கலந்து ஐக்கியமானார். எனவே சித்திரை சதயம் அன்று திருநாவுக்கரசர் குருபூஜை நடைபெறுகிறது. 63 சன்னதியில் எழுந்தருளி இருக்கும் அப்பர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெறுகின்றன.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment