சைவ சமயத்தில் பிறந்தும் மருள்நீக்கியார் சமண சமயத்தால் ஈர்க்கப்பட்டார். பாடலிபுரம் சென்று சமண நூல்களை நன்கு பயின்றார். இவரது புலமையைச் சமணர் புகழ்ந்தனர். அவரைத் தம் தலைவராக்கினர். தருமசேனர் எனப் பெயரிட்டு அழைத்தனர். இதையெல்லாம் அவரது தமக்கையார் கொஞ்சமேனும் விரும்பவில்லை. தம்பியார் மீண்டும் சைவநெறிக்கு வரவேண்டும் என விரும்பினார். திருவருளால் மருள் நீக்கியாருக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டது. சூலை நோய் எனப்பட்ட அந்த வயிற்றுவலியால் அவர் துடிதுடித்தார். குடைந்து குடைந்து நோயின் கொடுமை கூடியது. என்ன செய்வார்? தமக்கையாரே தஞ்சமென்று திலவதியாரிடம் சென்றார். நோயின் துன்பத்திலிருந்து தன்னைக் காப்பாற்றும்படி அழுது கேட்டார். 2.3.2 முதல் தேவாரப் பாடல் பிறந்தது திலகவதியார் தம்பியாரை வீரட்டானேசுவரர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். ‘நமசிவாய’ என்னும் திருவைந்தெழுத்தை ஓதித் திருநீற்றை அள்ளிக் கொடுத்தார். "தம்பி! இறைவனிடம் உன் குறையைச் சொல்லு", என்றார். அழுதும் தொழுதும் நின்ற மருள்நீக்கியார் தம்மை அறியாது பாடினார். என்ன பாடினார்?. . "வீரட்டானத்து அம்மானே! யமன் போன்ற இந்த நோயை அகற்றிவிடும். முறுக்கி முடக்கி என்னைத் துன்புறுத்துகிறது. என்னால் தாங்க முடியவில்லையே! அறியாமல் பிழை செய்தேன். இரவும் பகலும் உம்மை வணங்குவேன். இந்த நோயிலிருந்து என்னைக் காப்பாற்றுவீர்!" என்றவாறு கொல்லிப் பண்ணில் தேவாரம் பாடினார். இதோ! இவர் பாடிய முதல் தேவாரப் பாடலைக் கேட்போமா? பண்: கொல்லி
(நான்காம் திருமறை, 4150) (கூற்றாயினவாறு = கூற்றுவனைப் போல (கூற்று = யமன்), தோற்றாது = நோய் முதல் புலப்படாது, அகம்படியே = உள் உறுப்புகளையே, துடக்கி முடக்கியிட = செயல்படாமல் முடக்குதலால்) தேவாரப் பதிகத்தின் பத்துப் பாடல்களைப் பாடி முடித்தார். சூலை நோய் தானாக அகன்றது. இனிமையான தமிழில் பாமாலை பாடியதால் "நாவுக்கரசர்" என்றழைக்கப்பட்டார். நாவுக்கரசரும் சிவநெறி நின்று மகிழ்ந்தார். சமணர்கள் கோபத்தால் வெகுண்டு எழுந்தனர். சமண சமயத்தை விட்டுச் சென்ற நாவுக்கரசரைத் தண்டிக்க முயன்றனர். நாட்டை ஆண்ட பல்லவ மன்னனிடம் நாவுக்கரசர் பற்றிக் கோள் சொன்னார்கள். மன்னன் சமண சமயச் சார்புடையவன். எனவே நாவுக்கரசரைத் தண்டித்தான். எப்படி? நாவுக்கரசரைக் கொடும் சுண்ணாம்பு அறையில் அடைத்தார். சிவபெருமானின் இணையற்ற திருப்பாதங்களை நிழலாக நினைத்த நாவுக்கரசருக்குச் சுண்ணாம்பின் வெப்பம் ஒன்றும் செய்யவில்லை. அவருக்கு அது எப்படி இருந்தது தெரியுமா? இனிமையான வீணை இசையும், மாலை நிலாவும், வீசும் தென்றலும், குளிர்ச்சியான பொய்கையும் போன்று இதமாக இருந்தது. இதை அவர் இப்படி, அழகாகப் பாடி இன்புற்றார்.
(ஐந்தாம் திருமுறை, 6112) (மாசில் = குற்றமில்லாத, மாலை மதியம் = மாலைநேரத்தில் தோன்றும் முழுமதி, தென்றல் = தென்றல் காற்று,(இதமான காற்று) வீங்கு = பெருகிய, வண்டறை = வண்டுகள் மொய்க்கின்ற) கடைசி முயற்சியாக நாவுக்கரசரைக் கல்லோடு கயிற்றால் கட்டினார்கள். ஆழ்கடலில் வீசி எறிந்தார்கள். எமக்குத் துணை ஐந்தெழுத்தாகிய "நமசிவாய" என்று துதித்தார் நாவுக்கரசர். சிவ அன்பில் ஊறிய நம்பிக்கையில் தேவாரம் பாடினார். காந்தார பஞ்சமப் பண்ணில் பாடிய அப் பாடலைக் கேட்போமா? பண் : காந்தார பஞ்சமம்
(நான்காம் திருமுறை, 4262) (சொற்றுணை = சொல்லளவான வேத முதல்வன், கற்றுணைப்பூட்டி = கல்லோடு சேர்த்துக் கட்டி) இவ்வாறு தொடங்கும் நமசிவாயப் பதிகப் பாடல்களைப் பாடி முடித்தார். சமணர்கள் கொடுமைகளிலிருந்து விலகினார் நாவுக்கரசர். பல்லவ மன்னனும் நாவுக்கரசரை வணங்கிச் சிவனடியாரானார். 2.3.4 நாவுக்கரசர் அப்பர் ஆனார் நாவுக்கரசர் பல சிவ தலங்களைத் தரிசித்துச் சிவத்தொண்டுகள் செய்தார். சிவன் பெருமையை வாயாரப் பண்ணோடு பாடினார். இவ்வாறு தம் வாழ்நாட்களைக் கழித்தார். இவ்வாறிருக்கையில் நாவுக்கரசரின் சிவத்தொண்டுகள் பற்றிக் கேள்வியுற்றார் சம்பந்தர். அவரைக் காண வேண்டும் என விழைந்தார். நாவுக்கரசர் ஒருதடவை சீ்ர்காழி வந்தார். சம்பந்தர் அவரை அன்புடன் வரவேற்றார். அப்பொழுது நாவுக்கரசர் சம்பந்தர் கால்களைத் தொட்டு வணங்கினார். தம்மில் வயதில் முதிர்ந்த நாவுக்கரசரை அன்போடு "அப்பரே" என்று அழைத்தார் சம்பந்தர். இருவரும் அன்பினால் பிணைக்கப்பட்டனர். அதுமுதல் நாவுக்கரசரை எல்லோரும் "அப்பர்" என்று அழைத்து மகிழ்ந்தனர்."மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே" ஈசனுடைய அடிகளில் சரணடைந்தால், மர நிழல் தரும் குளுமை போன்று இருக்கும்" என்று கூறிய அப்பர் அடிகள், "அந்த நிழலானது குற்றமற்ற வீணை இசை போன்றது; இளம் மாலையில் தோன்றிய நிலவின் குளுமையை ஒத்தது; வீசுகின்ற தென்றல் போன்றது; இளவேனிற் காலத்தின் உயிர்ப்பைக் கொண்டது; தாமரை மலர்களைச் சுற்றும் வண்டுகளைக் கொண்ட குளம் போன்றது" என்கிறார். அவர் உதாரணமாகக் கூறிய "அனைத்தும் மனதுக்கு இனிமை சேர்ப்பவை. அனைத்து இனிமைகளையும் ஒரு சேர அளிப்பது இறைவனது பாத நிழலே" என்கிறார் அப்பர்! ஓம் நமசிவாய படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம். |
Tuesday, April 22, 2025
அப்பர் எனும் திருநாவுக்கரசர் வரலாறு..
Subscribe to:
Post Comments (Atom)
Followers
மூன்றடுக்குகோவிலில்மூலிகைலிங்கம்.
மூன்றடுக்குகோவிலில்மூலிகைலிங்கம். பல வகை லிங்கங்களைப் பார்த்திருப்போம்.மூலிகையால் ஆன லிங்கத்தைப் பார்க்க,மூன்றடுக்குள்ள, பிரான்ம...
-
பெண்ணையாறு கர்நாடகத்தில் உருவாகி தென் திசையில் பயணித்து பின் தமிழ் நாட்டில் கிழக்கு நோக்கித் திரும்பி, சுமார் 331.2 கி.மீ. தூரம் பயணித்து வ...
-
ஈசன் வீற்றிருக்கும் தலங்களை முழுமையாக கண்டவருமில்லை நம் வசிப்பிடத்தை சுற்றி உள்ள திருக்கோயில்களை காணாமல் போனால் இப்பிறவி எடுத்து...
-
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரை அடுத்த கோவில்பத்து கிராமத்தில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில். தஞ்சை பெரியகோயில் கட்டி முடிக்கப்பட்ட கி.பி...
No comments:
Post a Comment