உலகப் புகழ்பெற்ற மகாவிஷ்ணுவின்
பஞ்சரங்க தலங்களில் ஒன்றான, நவகிரகங்களில்
சந்திரன் திருமாலை வணங்கி தோஷம் நீங்கிய தலமாக விளங்கும் #மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற
#திருஇந்தளூர் (சுகுந்தவனம்)(மயிலாடுதுறை)
#பரிமள_ரங்கநாதப்பொருமாள்
(சுகுந்தவன நாதர்)
#பரிமள_ரங்கநாயகி தாயார் (சுகுந்தவனவல்லி)
(சந்திரசாப விமோசன வல்லி)
திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻
திருமாலுக்கு காவிரிக்கரையின் மீது அவ்வளவு இஷ்டம் போலும். சோழ நாட்டில் தான் நிறைய இடங்களில் பகவான் தன் லீலா வினோதங்களை காட்டியிருக்கிறார் இந்தியாவிலுள்ள யாத்திரீகர்கள் எல்லோரும் சோழ நாட்டிற்கு வர வேண்டும், தன்னைத் தரிசிக்க வேண்டும் என்பதில் பகவான் மிகுந்த விருப்பப்படிருக்கலாம். அதற்கு அடையாளம்தான் திருஇந்தளூரில் குடிகொண்டிருக்கும் பரிமள ரங்கநாதன் திருக்கோயில்.
திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 26-வது திவ்ய தேசம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் ஆகும். ஏகாதசி விரதம் சிறப்பு பெற காரணமாக இருந்த தலம். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் ஆகும்.
மாயவரம் அல்லது மயிலாடுதுறையின் நகரின் நடு புறத்திலே மையமாகக் கொண்டு விளங்கும் இந்த திரு இந்தளூர் கோயிலின் மூலவர் பரிமள ரங்கநாதன். இவருக்கு இன்னொரு பெயர் மருவினிய மைந்தன். என்ற அழகான திருப்பெயர். உற்சவர் சுகந்தவ நாதன். கிழக்கே பார்த்த தரிசனம். விமானம் வேத சக்ர விமானம். தீர்த்தம் இந்து புஷ்கரிணி. சந்திரனுக்குப் பல முறை நேரடியாக தரிசனம் கொடுத்த ஸதலம்.
இந்த பெருமாளைப் பற்றி 11 பாசுரங்கள் திருமங்கை ஆழ்வார் பாடி இருக்கிறார்.
கங்கைக்கும் காவிரிக்கும் முக்கியத்துவம் கொடுத்த வரலாறு இங்கு தான் நடந்திருக்கிறது. பகவான் தலைமாட்டில் காவிரி தாயாரும் கால் பக்கத்தில் கங்கை அமர்ந்திருக்கின்ற காட்சி, மிகவும் அற்புதமானது, வேறெங்கும் காண முடியாதது. ஐப்பசி மாதம் முழுவதும் இந்தக் கோயிலில் விழாக்கோலம் தான். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் பல பாகங்களில் இருந்து யாத்திரீகர்கள் வந்து குவிவார்கள். காவிரி நதி கடலில் சங்கமமாகும் இடத்தில் 'கடைமுக ஸ்நானம்' நடைபெறும். இது மிகவும் புனிதமான ஸநானம் என்பதால் இந்த ஸதலம் வரலாற்றுச் சிறப்பு உடையது. பகவான் சயனத் திருக்கோலத்தில் சதுர்புஜத்தில் தரிசனம் கொடுக்கிறார்.
ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவத்திருக்கோயில்களில் 26வது திருத்தலம்.
இத்தலம் மயிலாடுதுறை (மாயவரம்) நகரத்திலேயே அமைந்துள்ளது. இந்தளூர் என்றால் பலருக்குத்தெரியாது. மாயவரம் பரிமள ரெங்கன் கோயில் என்றால் எல்லோருக்கும்தெரியும் .
சந்திரன் (இந்து) செய்த குற்றங்களை நீக்கி, அவனுடைய பிராயச்சித்தம் என்னும் கழுவாயை ஏற்று, சாபம் தீர்த்ததால், இந்து+ஊர் = இந்தளூர்!
இத்திருத்தலம் பஞ்சரங்க தலங்களில் ஒன்று. ஏகாதசி விரதம் சிறப்பு பெறக்காரணமாக அமைந்த திருத்தலம்.
எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடி வழிபாடு செய்கின்றனர்.
பஞ்சரங்க தலங்கள் அல்லது பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் (திருமால்) கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும்[1]. ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்றும் பொருள் படும்
பஞ்சரங்க தலங்கள்
1. ஆதிரங்கம் - ரங்கநாத சுவாமி ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)
2. மத்தியரங்கம் - கஸ்தூரி ரங்கன் ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)
3. அப்பாலரங்கம் - அப்பால ரங்கன் = அப்பக் குடத்தான் திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)
4. சதுர்த்தரங்கம் - ஹேம ரங்கன் = ஆராவமுதன் சாரங்கபாணி கோவில், கும்பகோணம் (தமிழ்நாடு)
5. பஞ்சரங்கம் - பரிமள ரங்கன் = மருவினிய மைந்தன் பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர் (தமிழ்நாடு)
நவக்கிரகங்களில் ஒருவனான சந்திரன் தனக்கு ஏற்பட்ட ஒரு தோஷத்தைப் போக்குதற்காக இந்த தலத்தில் எம்பெருமானைக் குறித்து தவமியற்றி தோஷம் நீங்கப் பெற்றதாகத் தல வரலாறு.
(தோஷம் இன்னதென அறியுமாறில்லை) சந்திரனுக்கு இந்து என்ற ஒரு பெயர் உண்டு. தனக்கு தோஷம் நீங்கப்பட்ட இத்தலம் தனது பெயராலேயே வழங்கப்பட வேண்டும் என சந்திரன் வேண்டிக்கொள்ள இந்தளூர்ஆயிற்றென்பர்.
மூலவர் :
பரிமள ரெங்கநாதன், சுகந்தவன நாதன் மருவினிய மைந்தன், 4 புஜங்களுடன் ஆதிசேடன் மீது வீரசயனம். கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
கேட்டதெல்லாம் கொடுக்கும் பெருமாள்!
தாயார் :
பரிமள ரெங்கநாயகி, சந்திர சாப விமோசன வல்லி, புண்டரிக வல்லி
தீர்த்தம் : சந்திர (இந்து) புஷ்கரிணி
விமானம் : வேத சக்ர விமானம்
காட்சி கண்டவர்கள் : சந்திரன்.
சந்திரனுக்கு பலமுறை நேரிடையாகத் தரிசனம் கொடுத்த கோயில்.
ஆலய விசேஷம் - நூறு ஏகாதசி விரதம் இருந்த அம்பரீஷன் மூலமாக ஏகாதசி விரதம் சிறப்பு பெற காரணமாக இருந்த சக்தி மிக்க தலம்! தலம்.
தலவரலாறு
அம்பரீசன் என்ற அரசன் பல ஆண்டுகளாக ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து வந்தான். நினைத்ததை எல்லாம் பெற்றுத் தரும் விரதம் ஏகாதசி விரதம். அம்பரீசன் ஏகாதசியில் விரதம் இருந்து, மறுநாள் துவாதசி சரியான நேரத்தில் பிரசாதம் உண்டு விரதத்தை முடிப்பது வழக்கம். நூறாவது ஏகாதசி விரத நாளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், தேவலோகத்தில் அனைவரும் கலக்கத்துடன் இருந்தனர்.
நூறாவது ஏகாதசி விரதம் முடித்தால் அம்பரீசனுக்கு தேவலோகப் பதவி கூட கிடைக்க வாய்ப்புள்ளது என்பதால், மானிடனுக்கு அப்பதவி கிடைக்கக் கூடாது என்பதில் தேவர்கள் உறுதியாக இருந்தனர். தேவர்களின் மதிப்பு குறைந்து விடும் என்று அஞ்சினர். இதனால் தேவர்கள் துர்வாச முனிவரிடம் முறையிட்டனர்.
துர்வாச முனிவரும் அம்பரீசனின் விரதத்தைத் தடுக்கும் பொருட்டு பூலோகத்துக்கு வந்தார். அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்திருந்தான். துவாதசி நேரம் முடிவதற்குள் அவன் உணவு அருந்தியிருக்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஏகாதசி விரதத்தின் முழுப் பயன் அவனுக்குக் கிடைக்கும்.
அம்பரீசன் உணவு உண்ணத் தயாராக இருந்த சமயத்தில், துர்வாச முனிவர் உள்ளே நுழைந்தார். முனிவர் வந்ததால் அவரையும் உணவருந்த அழைத்தான் அம்பரீசன். முனிவரும் அதற்கு சம்மதித்து, நதியில் நீராடிவிட்டு வருவதாக கூறிச் சென்றார்.
நீண்ட நேரம் முனிவர் வராததை நினைத்து கவலை அடைந்தான் அம்பரீசன். குறித்த நேரத்தில் (துவாதசி நேரம் முடிவடைவதற்குள்) உணவு அருந்த வேண்டுமே என்று வேதியர்களிடமும் அந்தணர்களிடம் கலந்தாலோசிக்கலானான்.
நீராடிவிட்டு காலம் தாழ்த்தி வந்தால், அதற்குள் துவாதசி நேரம் முடிந்துவிடும், அம்பரீசனின் ஏகாதசி விரதம் தடைபட்டு விடும் என்ற எண்ணத்தில் இருந்தார் துர்வாச முனிவர்.
துவாதசி முடிய இன்னும் சில மணித் துளிகளே இருந்த நிலையில், உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்தால் விரதம் முடிந்து ஏகாதசி விரதத்தின் முழுப் பயனும் கிடைத்துவிடும் என்று தலைமைப் பண்டிதரின் ஆலோசனையின் பேரில், அவ்வாறு செய்து, தன் விரதத்தை பூர்த்தி செய்து, முனிவருடன் உணவருந்தக் காத்திருந்தான் அம்பரீசன்.
இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த துர்வாச முனிவர் மிகவும் கோபம் அடைந்தார். ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீசனை கொல்ல ஆணையிட்டார். அம்பரீசன் இச்செயலுக்கு அஞ்சி, பரிமள ரங்கநாதரிடம் சரண் புகுந்தான். பெருமாள் மிகுந்த கோபத்துடன் பூதத்தை விரட்டினார்.
அனைத்து சம்பவங்களையும் அறிந்த துர்வாச முனிவர் பெருமாளிடம் மன்னித்து அருள வேண்ட, பெருமாளும் மன்னித்தருளினார். பின்பு, நூறு ஏகாதசி விரதம் இருந்து முடித்த அம்பரீசனிடம், “வேண்டியதைக் கேள்” என்றார் பெருமாள். அம்பரீசனும், “தாங்கள் இத்தலத்தில் வீற்றிருந்து, பக்தர்களின் குறைகேட்டு அருள்புரிய வேண்டும்” என்று வேண்ட, பெருமாளும் அவ்வண்ணமே இத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் 350 அடி நீளமும் 230 அடி அகலமும் கொண்ட பெரிய கோயிலான இத்தலத்தின் வாசலில் சந்திர புஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. சந்திரன் இத்தீர்த்தத்தில் நீராடி தன் சாபம் நீங்கப் பெற்றதாகக் கூறப்படுகிறது. பெருமாளின் முகத்தை சந்திரன், பாதத்தை சூரியன், நாபிக் கமலத்தை பிரம்மன் பூஜிப்பதாக தல வரலாறு கூறுகிறது. பெருமாளின் தலை அருகே காவிரித் தாயாரும், திருவடி அருகே கங்கைத் தாயாரும் வழிபடுகிறார்கள். எமனும் அம்பரீசனும் பெருமாளின் திருவடியை பூஜை செய்கிறார்கள்.
சிறப்புக்கள்
1. இப்பகுதிக்கும் சுகந்தவனம் என்று பெயர் எனவே பெருமாளுக்கும்சுகந்தவன நாதன் என்ற திருநாமமும் உண்டானது. வடமொழி நூல்கள்சுகந்தவனநாதன் என்றே இப்பெருமானைக் குறிக்கின்றன. இப்பெயர்தான்தூயதமிழில் பரிமள ரெங்கன் என்றாயிற்று.
2. 4 புஜங்களுடன் கூடின இப்பெருமாளின் திருவடியருகில் கங்கைத்தாயாரும், சிரசருகில் காவிரித் தாயாரும் அமைந்துள்ளனர். ஐப்பசி மாதம்முழுதும் இங்கே விழாக் கோலமாக இருக்கும். சமுத்திரத்தில் காவிரி சங்கமமாகும் இடத்தில் நீராட இந்தியா முழுவதிலுமிருந்து இங்கு பக்தர்கள்வருவர்.
3. இத்தலம் பலவித வேலைப்பாடுகளுடன் கூடின, அழகு பொருந்திய பெரிய சன்னதியாகும். கட்டிடக் கலை வல்லுனர்கட்கு இந்தக் கோவிலில்உள்ள பல அமைப்புக்கள் ஆராய்ச்சி மனப்பாண்மையைத் தூண்டத்தக்க வகையிலும் அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ மிகவும் ரம்மியமான பகுதியில் அமைந்துள்ள ஸ்தலமாகும் இது.
4. திருமங்கை ஆழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம்செய்யப்பட்டது.
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு, இங்கு இழுக்காய்த்து, அடியோர்க்குத்
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின் றோமுக்கு,
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்
வாசி வல்லீர்! இந்த ளூரீர்! வாழ்ந்தே போம் நீரே!
--பெரியதிருமொழி 4-9-4 (1331)
திரிதந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்”
என்னும்மாப்போலே திருமங்கை.
திவ்ய தேசங்களினூடே திரிந்து கொண்டிருக்கிறான் என்பது உலகமறிந்த விஷயமாகும். அப்பேர்ப்பட்ட இந்த அடியவனுக்கு பொன்னின் ஒளியைக்காட்டிலும் விஞ்சி நிற்பதான உமது வடிவழகைக் காட்டாமல் உள்ளீரே
“தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர்” - என்றார்
நும்மடியோம், நுமக்கே என்பன போன்ற அழகு தமிழ்ச் சொற்களை திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் எடுத்தாண்டுள்ளனர். நம்மாழ்வார்,
“நுமக்கடிமை யென்றென்றே நொந்துரைத்தேன்”- என்று
சொல்லியிருப்பதும் இங்கு பொருளமைதியில் மிகவும் வியந்து போற்றத்தக்கதாகும்.
எம்பெருமான் திருவடிவம் கொள்ளை அழகு! திருவரங்கத்தைக் காட்டிலும் பெரிது! 12 அடி X 6 அடியாய், முழுதும் பச்சைக் கல்லில் ஆனது!
பட்டுப் பீதாம்பரத்தின் மடிப்புகளும், கை விரல் நகங்களும் தெரியும் அளவுக்கு நுணுக்கமாகச் செய்யப்பட்டிருப்பதை, ஆரத்தியின் போது காணலாம்!
திருமங்கையும் பரிமள ரெங்கனும் :
திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு வந்தபோது பூஜைகள் முடிந்து கோவில் பூட்டப்பட்டுவிட்டது. தான் வருவதற்குள் இவன் கதவடைத்துக்கொண்டானே என்று கோபப்பட்ட திருமங்கை யாழ்வார் பெருமானை“வாழ்ந்தே போம் நீரே-என்று வசை வாழ்த்துக் கூறினார்.
அதாவது நமக்கு வேண்டிய ஒருவன் நமக்குத் தேவையான ஒரு பொருளை வைத்துக் கொண்டு நாம் அதைக் கேட்கும் போது வேண்டு மென்றே தரமுடியாது என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். அவன் நமக்கு மிகவும் வேண்டியவனாதலால். பரவாயில்லை அதை வைத்துக்கொண்டு “நீரே வாழ்ந்துபோம்” என்று கூறுவதில்லையா
அதேபோல் பெருமாள் திருமங்கைக்கு வேண்டியவர். அர்ச்சாவதாரம்வேண்டிய பொருள். அதை தரிசிக்க வரும்போது கதவடைத்துக் கொண்டால்உம்மழகை நீரே ரசித்து வாழ்ந்துபோம் என்று ஆழ்வார் சொல்ல மாட்டாரா என்ன?
இத்தலத்திற்கு அமைந்த 10 பாடல்களும் திருமங்கை ஆழ்வாருக்கும்பெருமாளுக்கும் நடந்த விவாதமாகவே கூறுவர். மிகவும் இனிமையான உள்ளுறை பொருந்திய பாடல்களாகும் அவை,கங்கைக்கும் காவிரிக்கும் முக்கியத்துவம் கொடுத்ததாக இங்குதான் சொல்லப்படுகின்றது. பகவான் தலை மாட்டில் காவிரித் தாயாரும் கால் பக்கத்தில் கங்கையும் அமர்ந்திருக்கின்ற காட்சி மிகவும் அற்புதமானது. வேறெங்கும் காணமுடியாதது.
ஐப்பசி மாதம் முழுவதும் இந்த கோயிலில் விழாக் கோலம்தான். காவிரி நதி கடலில் சங்கமம் ஆகும் இடத்தில் கடைமுக ஸ்நானம் நடைபெறும். இது மிகவும் புனிதமான ஸ்நானம் என்பதால் இந்த ஸ்தலம் வரலாற்றுச் சிறப்பு உடையது.
பகவான் சயனத் திருக்கோலத்தில் சதுர்புஜத்தில் தரிசனம் கொடுக்கிறார்.
சந்திரனுக்கு மற்ற தலங்களில் பாவ விமோசனம் கிடைத்தாலும் சந்திரன் திருப்தி அடையவில்லை. இம்மியளவு கூட தன் மீது எந்த சாபமும் ஒட்டியிருக்கக் கூடாது என்பதில் உறுதியாகக் கொண்டு பெருமாளிடம் தன் குறையைச் சொல்வதைவிட தாயாரிடம் சொன்னால் நல்ல பலன் கிடைக்கும் என்றெண்ணி தாயாரான புண்டரீக வல்லியிடம் தன் வேண்டுகோளைச் சொல்ல பெருமாளும் தாயாரும் சேர்ந்து சந்திரன் மனக்குறையை அவர் மீதிலிருந்த பாவத்தை அப்படியே போக்கியதாகச் சொல்கிறார்கள்.
இதனால் தான் இங்குள்ள தாயாருக்கு சந்திரபாப விமோசந வல்லி என்று பெயர் உண்டு.
திருஇந்தளூர் பரிமளரங்கநாதன் திருக்கோயில் மாட வீதியில் மிகப் புராதனமான ஹயக்ரீவர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு ஸ்வாமி தேசிகனும் லட்சுமி ஹயக்ரீவரும் காட்சி தருகிறார்கள்.
பரிகாரம் : மற்ற தலத்திற்குச் சென்றும் - பாவம் தீரவில்லையென்று கவலைப்படுகிறவர்கள் இங்கு வந்து தங்களது பாவம், தங்கள் குடும்பத்தின் பாவம், முன்னோர்கள் செய்த பாவம் அனைத்தையும் விலக்கிக் கொள்ள முடியும்.
தெரிந்தோ தெரியாமலோ பஞ்சமா பாதகங்கள் செய்திருந்தால் அதையும் இங்கு வந்து போக்கிக் கொள்ளலாம்.
பெண் பித்தால் தவறு செய்தவர்கள், பெண்களின் சாபத்திற்கு ஆளானவர்கள், பெண் வாரிசு பிறக்கவில்லையே என்று கவலைப்படுகிறவர்கள் இங்கு வந்து சாந்தி செய்தால் அவர்களது அனைத்துத் குறைகளும் விலகிவிடும்.
சந்திரன் - சந்திர தோஷம் போக்கும் தலம். தோல் நோய்கள் நீங்கும் தலம்.
மூலவர் பரிமள ரங்கநாத பெருமாள், வீர சயனத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் ‘வேத சக்ர விமானம்’ என்று அழைக்கப்படுகிறது. ஏகாதசி அன்று விரதம் இருக்க நினைப்பவர்கள் இத்தலப் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு விரதத்தைத் தொடங்கினால் கேட்டது அனைத்தையும் பெருமாள் கொடுப்பார் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறிய பின், துளசியால் அர்ச்சனை செய்து பெருமாளை வழிபடுவது வழக்கம். தனிசந்நிதியில் பரிமள ரங்கநாயகி தாயார் அருள்பாலிக்கிறாள்.
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதன் கோயில் மாட வீதியில் மிகப் புராதனமான ஹயக்ரீவர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு ஸ்வாமி தேசிகனும் லட்சுமி ஹயக்ரீவரும் காட்சி தருகிறார்கள்.
சந்திரன் (இந்து) செய்த குற்றங்களை நீக்கி அவனுடைய பிராயச்சித்தத்தை ஏற்று சாபம் தீர்ந்ததால் இந்து + ஊர் – இந்தளூர் ஆயிற்று. தனது பெயராலேயே இவ்வூர் வழங்கப்பட வேண்டும் என்று சந்திரன் பெருமாளிடம் வேண்டிக்கொண்டதால் இந்தளூர் என்று ஆனதாகக் கூறுவர். இத்தலம் பஞ்சரங்க தலங்களில் ஒன்றாகும். காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதனின் கோயில்கள் அமைந்துள்ள நதித்தீவுகள் பஞ்சரங்க தலம் என்று அழைக்கப்படுகின்றன. ரங்கம் என்றால் அரங்கம். (மண்டபம் / சபை).
ஆதிரங்கம் (ரங்கநாத சுவாமி – ஸ்ரீரங்கபட்டணம் – கர்நாடக மாநிலம்), மத்தியரங்கம் (கஸ்தூரி ரங்கன் - ஸ்ரீரங்கம் - தமிழ்நாடு), அப்பால ரங்கம் - அப்பால ரங்கன் - அப்பக் குடத்தான் திருப்பேர்நகர் என்ற கோவிலடி - தமிழ்நாடு), சதுர்த்தரங்கம் - ஹேம ரங்கன் (ஆராவமுதன் சாரங்கபாணி கோயில், கும்பகோணம் தமிழ்நாடு) பஞ்சரங்கம் - பரிமள ரங்கன் (மருவினிய மைந்தன் பரிமள ரங்கநாதர் கோயில், திருஇந்தளூர், தமிழ்நாடு) ஆகியன பஞ்சரங்க தலங்கள் எனப்படும்.
திருஇந்தளூர் கோவில் சிறப்பு
கங்கையை விட காவேரி நதி இத்தலத்தில் புனிதத்தன்மை அதிகம் பெறுவதாக கருதப்படுகிறது. இத்தலம் ஏகாதசி விரதத்திற்குரிய தலமாக இருப்பதால் மாத ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி தினங்களில் இக்கோவிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டு சென்று ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்களின் வாழ்வில் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்பது அனுபவசாலியான பக்தர்களின் நம்பிக்கை. சந்திர பகவானின் தோஷம் நீங்கிய கோவில் என்பதால் இங்கு வந்து பரிமள ரங்கநாதரையும், ரங்கநாயகி தாயாரையும் வழிபடுபவர்களுக்கு சந்திரனின் தோஷங்கள் நீங்குகிறது. தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் துளசி இலைகளை கொண்டு அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.
நம் மனதையும், கண்ணையும் கவரும் அற்புதமான சிற்பங்கள்
இக்கோவில் சிற்பங்களும் பேரழகு நிறைந்ததாய் விளங்குகின்றன. கோவில் கோபுரத்தை தாண்டி கொடிமரம் தாண்டிய உடனேயே பெருமாளின் தசாவதாரச் சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன.
மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராமர் அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என அவதாரங்களின் அணிவகுப்பு. பெருமாளின் 10 அவதாரங்கள் நமக்கு உணர்த்துவது ஒரு உன்னத தாத்பர்யம். மீன் போன்ற சிறிய மச்ச வடிவத்தில் ஆரம்பித்து, அடுத்து சற்று பெரிய ஆமையாக கூர்ம வடிவத்தில், பின் அதனைவிட சற்று பெரிய பன்றி வடிவம் வராகமாய், பின்னர் மனிதனும் விலங்கும் சேர்ந்த அமைப்பு நரசிம்மராய், பிறகு சிறிய வடிவிலான வாமணனாக மனித வடிவம், பின்னர் காட்டுவாசி போல வாழ்ந்த பரசுராமன், அதன்பின் மனிதன் இத்தகைய பண்புகளுடன்தான் வாழவேண்டும் என்று உணர்த்திய ராம அவதாரம், பலம் பொருந்திய வடிவில் பாலராமராக, மனிதன் தனக்குள்ளேயே இறைவனைக் காணலாம் என்னும் தத்துவத்தை உணர்த்த எளிய மனிதப் பிறவி எடுத்து நம்மிடையே வாழ்ந்து அனைவருக்கும் நண்பராக விளங்கிய கண்ணன், அநியாயங்களை அழிக்க பிறவி எடுக்கப் போகும் கல்கி அவதாரம் என மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியை தசாவதாரத்தின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.
வாலியை மறைந்து நின்று ராமர் கொன்றது எத்தனை கேள்விகளை நம் மனத்துள் உண்டாக்கினாலும், தர்மத்தை நிலைநாட்ட சில விஷயங்களை செய்துதான் ஆகவேண்டும் என்பதை உணர்த்தும், ராமர் சுக்ரீவனுக்கு முடிசூட்டி வைக்கும் சிற்பம் அழகு.
தன்னை சீண்டுவதற்காக தனது வாலில் நெருப்பு வைத்தவர்களுக்கு பாடம் கற்பிக்க இலங்கைக்கு நெருப்பு வைத்த அனுமனது பிரமிக்க வைக்கும் சிற்பம். ஒவ்வொரு வினைக்கும் செயலுக்கும், எதிர் வினை கட்டாயம் உண்டு. அவை நல்லவையோ, தீயவையோ, என்பதை உணர்த்தும் சிற்பம்.
பிரிதிவிராஜன், சம்யுக்தையை சிறைபிடிப்பது போன்றதொரு சிற்பவடிவம்.
காண்போரது கண்ணையும், கருத்தையும் கவரும் கிருஷ்ணரின் காளிங்க நர்த்தனம்.
மூவுலகத்தையும் அளந்த பெருமான் மூன்றாவது அடியை எங்கு வைக்க எனக் கேட்க, மகாபலிச் சர்க்கரவர்த்தி தனது தலையின் மேல் மூன்றாவது அடியை வைத்துக் கொள்ளச் சொன்ன காட்சி கண்முன்னே.
ஸ்ரீதேவி, பூமாதேவி சமேதராய் காட்சி தரும் மகாவிஷ்ணு. ஐந்து தலை நாகத்தின் மேல் அமர்ந்த நிலை.
இது போன்ற கோவில் தரிசனத்தில், சிற்பங்களை காணும்போது கற்பனை வளமும், ஸ்லோகங்களை சொல்லி பாடும் போது மொழி வளமும், கடவுளைக் காணும்போது மன வளமும், என திருக்கோவில் செல்வதற்கு ஆன்மிகம் என்ற ஒரு விஷயத்தை தாண்டி பல்வேறு சங்கதிகளை உள்ளடக்கியது திருக்கோவில் தரிசனம்.
திருமங்கையாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார்.
பிரபந்தம்:
நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே –4-9-1-
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே–4-9-2-
பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்ற்றது இதுவே காணும் இந்தளூரீரே-4-9-3-
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து அடியோர்க்குத்
தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே -4-9-4-
தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே -4-9-5-
சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே –4-9-6-
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள வெம்மைப் பணி யறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே -4-9-7-
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே –4-9-8-
எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே -4-9-9
ஏரார் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
சீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து
ஆராரவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே -4-9-10-
அன்ன வுருவி னரியை திரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை இந்தளூ ரந்தணனை –பெரிய திருமடல் – 126
*திருவிழாக்கள்:
சித்திரை மாதப்பிறப்பில் பெருமாள் வீதி புறப்பாடு, ஆவணியில் ஐந்து நாள் கண்ணன் புறப்பாடு, புரட்டாசி மாதத்தில் தாயாருக்கு நவராத்திரி உற்சவம், மார்கழியில் 20 நாள் வைகுண்ட ஏகாதசி உற்சவம், பங்குனி பத்து நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும்.
பெண் பித்தால் தவறு செய்தவர்கள், பெண்களின் சாபத்துக்கு ஆளானவர்கள், பெண் வாரிசு பிறக்கவில்லையே என்று கவலைப்படுபவர்கள் இங்கு வந்து சாந்தி செய்தால் அவர்களது அனைத்துத் குறைகளும் விலகிவிடும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment