Sunday, May 25, 2025

வில்வாரண்யேஸ்வரர் திருக்களம்பூரதிருக்கொள்ளம்புதூர் திருவாரூர்.

தேவாரப் பாடல் பெற்ற காவிரிதென்கரை தலங்களில் ஒன்றான #திருக்கொள்ளம்பூதூர்  #திருக்களம்புதூர் #திருக்களம்பூர்
மூலவர் : #வில்வாரண்யேஸ்வரர்  திருக்கொள்ளம்பூதூருடையார்)
அம்மன்/தாயார் : #சவுந்தர நாயகி (அழகிய நாச்சியார்)
 தல விருட்சம் : வில்வம்
 தீர்த்தம் : பிரம்ம, அக்னி, கங்கா தீர்த்தம்
ஆகமம்/பூஜை : காமிக ஆகமம்
புராண பெயர் : கூவிளம்பூர், செல்லூர், திருக்களம்பூர்
ஊர் : திருக்கொள்ளம்புதூர்
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
 
#பாடியவர்கள்:   சம்பந்தர்

#தேவாரப்பதிகம்
     ஓடம்வந் தணையும் கொள்ளம் பூதூர் ஆடல்பேணிய அடிகளை யுள்கச் செல்ல வுந்துக சிந்தையார் தொழ நல்கு மாறருள் நம்பனே.
                          -திருஞானசம்பந்தர்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 113வது தலம்.
 #திருவிழா: 
    சித்திரை பிரமோற்சவம், கார்த்திகை பிரதோஷ நாளில் சுவாமி புறப்பாடு, சித்ரா பவுர்ணமியில் பஞ்ச மூர்த்திபுறப்பாடு. நவராத்திரியில் அம்மன் புறப்பாடு. ஐப்பசி அமாவாசையில் திருஞான சம்பந்தர் திருவிழா, கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர்பூஜை, தைப்பூசம்.  
     
#தலசிறப்பு: 
      இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 176 வது தேவாரத்தலம் ஆகும்.

#பொதுதகவல்: 
     கோயில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி 75 அடி உயரத்தில் 2 பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. உள்பிரகாரங்களில் பொய்யாத விநாயகர், வலம்புரிவிநாயகர், முருகன், ஆதிவில்வநாதர், கஜமுக்தீஸ்வரர், பஞ்சலிங்கம், கஜலட்சுமி ஆகிய சன்னதிகள் உள்ளன. பிரம்மா, அகத்தியர், அர்ச்சுனன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜசோழன் இவர்கள் காலத்தில் கட்டியிருக்க வேண்டும் என கல்வெட்டுகள் கூறுகிறது.

#தலபெருமை: 
     பிரம்மா தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று. தலவிருட்சம் வில்வம். கூவிளம் என்பதற்கு வில்வம் என்பது பெயர். கூவிளம்புதூர் என்ற பெயர் மருவி காலப்போக்கில் கொள்ளம்புதூர் ஆனது. 
 
#தலவரலாறு: 
    பல சிவத்தலங்களை தரிசித்து பாடி வந்த ஞானசம்பந்தர், இத்தலம் வரும் போது வழியில் உள்ள வெட்டாறில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஓடம் ஓட்டுபவர்களால் ஓடம் செலுத்த முடியாமல் ஆற்றின் கரையிலேயே ஓடத்தை விட்டு சென்றனர். ஆனால் சிவனை தரிசிக்காமல் செல்ல கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார் சம்பந்தர். எனவே ஆற்றின் கரையில் இருந்த ஓடம் ஒன்றை அவிழ்க்க செய்து அதன் மீது தன் அடியவர்களுடன் ஏறினார். தமது நாவையே ஓடக்கோலாக கொண்டு, "கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டமாடிய நம்பனை யுள்கச் செல்வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறரு ணம்பனே' எனும் திருப்பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடம் ஆற்றின் மறுகரையை அடைந்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பதிகங்ளை பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு. இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது.

திருக்கோளம்புத்தூரில் வில்வவனீஸ்வரர்.
புராணத்தின் படி, பண்டைய காலத்தில், இந்த பகுதி வில்வ மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. வில்வம் மரங்கள் "கூவிளம்" என்றும் அழைக்கப்படுவதால், இந்த இடத்திற்கு கூவிளம்புத்தூர் என்று பெயர் வந்தது. பின்னர் கொல்லம்புத்தூர் என மாற்றப்பட்டுள்ளது
இத்தலம் காசியைப் போலவே மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
அதில் ஒன்று திருக்கொளம்புத்தூர். தமிழில் "பஞ்ச" என்றால் ஐந்து மற்றும் "ஆரண்யம் / வனம்" என்றால் காடு
சம்பந்தர் பெருமான் அருளால் படகோட்டியின்றி அதிக வெள்ளத்தில் ஆற்றைக் கடந்தார். தீபாவளி நாளில் அர்த்தஜாம பூஜைக்காக அவர் இங்கு வந்தடைந்தார், இது ஒரு நிகழ்வாக இன்றும் நடைமுறையில் உள்ளது.
ஸ்தல புராணத்தின்படி, இத்தலத்தில் இறக்கும் மக்களுக்கு சிவபெருமான் "பஞ்சாட்சர மந்திரம்" - ந ம சி வா யா - கூறுகிறார். இறந்தவரின் வலது காதில் இறைவன் இந்த மந்திரத்தை சொல்லி அவர்களுக்கு முக்தியை அருளுகிறார். எனவே இந்த இடம் "பஞ்சாட்சர புரம்" என்றும் பெயர் பெற்றது. இங்கே ஓம் நம சிவாய என்பதை நினைவில் கொள்ளுங்கள்

ஆலயம் திறந்திருக்கும் நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரை பின்னர் மாலை 5 மணி முதல் 7.30 வரை

செல்லும் வழி:
 கும்பகோணத்தில் இருந்து  20 கி.மீ.  தொலைவிலுள்ளது. கும்பகோணத்தில் இருந்து கொரடாச்சாரி செல்லும் வழியில் செல்லூர் எனும் ஊரில் இறங்கி சுமார் ஒரு கி.மீ சென்று இத்தலத்தை அடையலாம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஆலந்துறை நாதர்,திருப்புள்ளமங்கை,பசுபதி கோயில் தஞ்சை.

அருள்மிகு ஆலந்துறை நாதர் திருக்கோயில், திருப்புள்ளமங்கை, பசுபதி கோயில் அஞ்சல், தஞ்சை மாவட்டம் PIN - 614 206.  *மூலவர்: ஆலந்துறைந...