Thursday, July 10, 2025

சோழீஸ்வரர் நாக தேவன் இறைதம்பதியரை வழிபட்ட தலம்.


11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படும் 
இந்த பழமைமிகு 
சிவ ஆலயத்தின் கருவறையில் 
நம் இனிய ஈசன்,
கீழ்த்திசை நோக்கி 
அருட்காட்சியளிக்கிறார்.
தனி சன்னதியில்,
நம் அம்பிகை 
நின்ற கோலத்தில் அழகுத்திருக்காட்சியளிக்கிறாள்.

உள்ளூர் மக்களைத் தவிர, வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத பல தொன்மையான சிவனாலயங்களுள், (திருச்சி to தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள)
துவாக்குடியில் அமையப்பெற்ற சிறப்புமிக்க 
இத்திருத்தலமும் ஒன்று.

ஒரு வரலாற்று நிகழ்வின்படி;
விக்கிரம சோழரின் புதல்வரான 
"இரண்டாம் குலோத்துங்க சோழர்"
என்றழைக்கப்பட்ட 
கோப்பரகேசரி வர்மன்,
(நாக தோஷத்தால் பாதிக்கப்பட்ட)
தன் அன்புத்தங்கை 
கோமளவள்ளியின் 
திருமணத்தடை நீங்கிட,
இறைவன் உணர்த்தியபடி இச்சிவத்தலத்தினை கட்டியதாக தலவரலாறு கூறுகிறது.
(சிவ லிங்கம் பிரதிஷ்டைசெய்து சோழீஸ்வரர் எனும்திருப்பெயர் வைத்த பின், 
அம்பாளின்  விக்ரகம் பிரதிஷ்டை செய்ததிடுபோது,
அந்த அழகு விக்ரகத்திற்கு
தனது தங்கை கோமலவள்ளியின் பெயரை சூட்டியதாக
தலவரலாற்றுக்குறிப்பு மேலும் கூறுகிறது)

நாக தேவன் இத்தல இறைதம்பதியரை வழிபட்டதாக ஐதீகம்.

அதனால்தானோ என்னவோ, நாகராஜக்கள் சர்வசாதாரணமாக கருவறைக்குச்செல்வதும், இறைவனின் திருமேனியில் ஊர்ந்து விளையாடுவதும் பக்தர்கள் இங்கு அடிக்கடி காணும் காட்சியாம். இந்த நாகங்கள் இதுவரை யாருக்கும் எந்தவித தீங்கும் செய்ததில்லை என்கிறார்கள்)

அக்காலம் முதல் இக்காலம் வரை, 
பிரதோஷ வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில்,
அன்றைய நாளில் சுமார் 200-பேருக்கு இலை போட்டு விருந்து படைப்பது
தல விசேஷங்களில் ஒன்றாகும்.

(இத்திருக்கோயிலின் தல விருட்சம் 
மாவு லிங்க மரம்.
இம்மரத்திலடியில்தான்புலிப்பாணி சித்தர் 
தியானம் செய்யதாரம்)

நம் ஈசன் தம்பதியருக்கு உகந்த அத்தனை விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்திருத்தலம்,
நாக தோஷம்,  காலசர்ப்ப தோஷம், புத்திர தோஷம் போக்கும் பரிகார ஸ்தலமாகவும், நல்வாழ்க்கை துணை மற்றும் நலமான மகப்பேறு கிடைக்கப்பெற வேண்டிடும் தலமாகவும் விளங்குகிறது).

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சிவனே வந்து சாட்சி சொன்னதால் அவர் சாட்சிநாதர்.

 அவளிவண‌நல்லூர் சாட்சிநாதர் ஆலயம் தேவாரம் பாடபட்ட 163ம் தலமான இந்த ஆலயம் தஞ்சாவூர் பாபநாசம் அருகே முதல் ஆரண்ய தலமான திருகாவூரை அ...