Tuesday, July 8, 2025

காஞ்சிபுரம் கச்சிஓணகந்தான்தள்ளி ஓணகாந்தேஸ்வரர்.

உலகப் புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றானதும், சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடி புளியங்காய்களை பொன்காய்களாகப் பெற்ற தலமான , கோயில்களின் நகரமான
#காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள #கச்சிஓணகந்தான்தள்ளி என்ற 
#திருஓணகாந்தன்தளி
#ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 

"நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்; 
கையில் ஒன்றும் காணம் இல்லை, கழல் அடீ தொழுது உய்யின் அல்லால்; 
ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு, 
உய்யும் ஆறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளி உளீரே! 

திருவோணகாந்தன்தளி' என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, 'நெய், பால், தயிர் முதலியவற்றால் உம்மை நாள்தோறும் வழிபடுவாரது கையில்காசு ஒன்றும் காணப்படுகின்றதில்லை. அவ்வாறே, உமது கழலணிந்த பாதத்தைக் கும்பிட்டு ஏதேனும் பெற்றாலன்றி, இவ்வுலகத்தில், புலன்களாகிய ஐவர் தண்டலாளர் ஐந்து பக்கம் பற்றி ஈர்த்துச் சுழற்றச் சுழன்று, அச்சுழற்சியாலாகிய துன்பம் என்னும் ஆழ்ந்த குழியில் அகப்பட்டு ஏறமாட்டாது என சுந்தரரால் பாட பெற்றது. சுந்தரர் பொருள் வேண்டி இறைவனை சற்றே வஞ்ச புகழிச்சியோடு பதிகம் பாடியுள்ளார்.

ஊர்: ஓணகாந்தன்தளி,
காஞ்சிபுரம் - பஞ்சுப்பேட்டை

மூலவர்: ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், சலேந்தரேஸ்வரர்

அம்பாள்: காமாட்சி அம்மன்

ஸ்தல விருட்சம்: வன்னி, புளியமரம்

தீர்த்தம்: ஓணகாந்த தீர்த்தம், தான் தோன்றி தீர்த்தம்

வழிபட்டோர்கள் :  ஓணன், காந்தன்,சலந்தரன்

*கோயில் வரலாறு:

அசுர வேந்தனான வாணாசுரன் என்பவனின் சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்பவர்கள் புழல் என்ற பகுதியில் உள்ள கோட்டையின் பாதுகாவலர்களாக இருந்தனர். இவர்களில் ஓணன் என்பவன் அப்பகுதியில் சுயம்புவாய் எழுந்த லிங்கம் ஒன்றிற்கு, தன்ரத்தத்தால் அபிஷேகம் செய்து, கடும் விரதமிருந்து பல வரங்களைப் பெற்றான். இதே போல் காந்தனும் மற்றொரு லிங்கத்தைப் பூஜித்து சிறந்த வரங்களைப்பெற்றான். இப்பகுதியில் வசித்த ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான்.

தல வரலாறு : 

ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற காரணத்தால் இத்தலம் ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது. ஓணன், காந்தன் இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன. முதல் சந்நிதியில் ஓணேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். அடுத்து 2-வது சந்நிதியில் காந்தேஸ்வரர் தரிசனம் தருகிறார். 3-வது கருவறையில் சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே சிறு கோவிலாக உள்ளது.

காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சிக்கு தனிக்கோயில் இருக்கிறது. அவளே சர்வவியாபி என்பதால், இந்நகரிலுள்ள எந்த சிவாலயத்திலும் அம்மன் சன்னதி கிடையாது.

ஆலயத்தினுள் மூன்று கருவறைகளும், மூன்று சிவலிங்கங்களும் உள்ள சிறப்பு மிக்க ஆலயம் இதுவாகும். ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், ஜலந்தரேஸ்வரர் .சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 235 வது தேவாரத்தலம் ஆகும்.

விநாயகரான ஓங்கார கணபதியின் சிலையில் பக்தியுடன் காது வைத்து கேட்டால் "ஓம்' என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாகச் சொல்லப்படுவதுண்டு.

*ஆலய சிறப்புகள்: 

ஆலயத்தினுள் மூன்று கருவறைகளும், மூன்று சிவலிங்கங்களும் உள்ள சிறப்பு மிக்க ஆலயம் இதுவாகும். இது தவிர மற்றொரு விநாகயரான ஓங்கார கணபதியும் காந்தேஸ்வரர் சந்நிதியில் வெளியே காணப்படுகிறார். இவரின் சிலையில் பக்தியுடன் காது வைத்துக் கேட்டால் ஓம் என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாக சொல்லப்படுகிறது. இங்கு சுந்தரர் பதிகம் பாடி இறைவனிடமிருந்து புளியங்காய்களை பொன்காய்களாகப் பெற்றார் என்பது ஐதிகம்.

3 நிலை இராஜ கோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி தருகிறது.கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. ஓணன், காந்தன் இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன. முதல் சந்நிதியில் ஓணேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவரின் பின்புறம் கருவறைச் சுற்றில் சிவன் உமையம்மையின் திருமணக் கோலத்தைக் காணலாம். ஓணேஸ்வரர் சந்நிதி அர்த்த மண்டபத்தில் சுந்தரர் மற்றும் இறைவனின் திருப்பாத தரிசனம் காணலாம். அடுத்து 2-வது சந்நிதியில் காந்தேஸ்வரர் தரிசனம் தருகிறார். 3-வது கருவறையில் சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே சிறு கோவிலாக உள்ளது. இது பிற்காலப் பிரதிஷ்டையாகும். இத்தலத்திலுள்ள வயிறுதாரிப் பிள்ளையார் சந்நிதியை சம்பந்தர் தனது பதிகத்தின் 2-வது பாடலில் குறிப்பிடுகிறார். இது தவிர மற்றொரு விநாகயரான ஓங்கார கணபதியும் காந்தேஸ்வரர் சந்நிதியில் வெளியே காணப்படுகிறார். இத்தலத்தில் தட்சினாமூர்த்தி சனகாதி முனிவர்கள் உடன் இருக்க வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். முருகர் தனது மயில் வாகனத்தில் அமர்ந்தபடி தனது இரு தேவியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். கோவிலுக்கு வெளியே தான்தோன்றி தீர்த்தம் உள்ளது.

சுந்தரர் பாடிய இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இங்கு வந்த சுந்தரர், இறைவனிடம் அடிமைத் திறம் பேசி, நெய்யும் பாலும் தயிரும் கொண்டு என்று தொடங்கும் பதிகம் பாடிப் பொன் பெற்றார் என்பது வரலாறு. இப்பதிகத்தில் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும் போது, இறைவன் பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டதாகவும், அதையறிந்த சுந்தரர் அங்குச் சென்று பதிகத்தை தொடரவே, இறைவன் அப்புளிய மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க, சுந்தரர் அவற்றைப் பெற்றார் என்பதாக ஒரு செய்தி இப்பகுதியில் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகின்றது.

ஓணேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார்

ஆலயத்தினுள் மூன்று கருவறைகளும், மூன்று சிவலிங்கங்களும் உள்ளது.

*அமைப்பு:

வாணாசுரனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் இருவர் வழிபட்ட இத்தலத்தில் இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் அடுத்தடுத்து தனிச் சன்னதிகளாக உள்ளன. சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத்திருமேனி தனியே உள்ளது. [2] இவ்வகையில் ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில் வளாகத்தில் மூன்று சிவலிங்கத் திருமேனிகளை மூலவராகக் கொண்ட மூன்று சன்னதிகள் உள்ளன. அவை ஒரே நுழைவாயிலைக் கொண்டு அமைந்துள்ளன.

*ஓணகாந்தேஸ்வரர்:

ஓணகாந்தேஸ்வரர் (ஓணேஸ்வரர்) சன்னதியின் கோஷ்டத்தில் பாலவிநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். முன்புறத்தில் பலி பீடம் மற்றும் நந்தி உள்ளன. இங்கு வயிறுதாரி விநாயகர், குமார வேலன், பைரவர், சூரியன் நவக்கிரகம், அகோர வீரபத்திரர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.

*காந்தேஸ்வரர்:

காந்தேஸ்வரர் சன்னதியின் வலது புறத்தில் ஓம்கார கணபதி, இடது புறத்தில் சுப்ரமணியர் ஆகியோர் உள்ளனர். முன்புறம் நந்தி மண்டபம் உள்ளது.

*சலந்தரேஸ்வரர்:

சலந்தரேஸ்வரர் சன்னதிக்கு மேற்கண்ட இரு சன்னதிகளின் வலது புறத்தில் உள்ள திருச்சுற்றில் உள்ள வாயில் வழியாகச் செல்ல வேண்டும். வெளியிலிருந்து நேரடியாக உள்ளே வரமுடியாது. சலந்தரேஸ்வரர் சன்னதியின் திருச்சுற்றில் கணபதி சன்னதி, சுப்ரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. முன் புறத்தில் பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன.

* திருவோணகாந்தன் தளிப்படலம் (1462 - 1470)
கலிவிருத்தம்:

பேண வல்லர் பிறவு தீர்த்தருள்
        வாண நாத மரபு சொற்றனம்
        யாணவர் வண்மை பெருமி தன்குணக்
        கோண காந்தன் தளியு ரைத்துமால்

சலந்தேரசப் படலம்: (1471 - 1493)

 ஓணனார்க் காரியவர் ஓணகாந் தந்தளி
        நீநகர் மேன்மையத் தெரிந்தவா நிகழ்த்தினாம்
        மாணமர் காட்சிசால் மற்றதன் வடதிசைப்
        பேணிய சலந்தேர சத்தியல் பேசுவாம்.
        ஓணனார் – திருவோண நட்சத்திரத்துக்கு உரிய திருமால்

*கல்வெட்டுகள்:

பல்லவர் காலத்திற்கு முன்பே அசல் கோயில் இருந்ததாகவும், பல்லவர்களாலும் பின்னர் விஜயநகரர்களாலும் மீண்டும் கட்டப்பட்டதாகவும் நம்பப்படுகிறது  . இந்தக் கோயிலில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. 1 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை விஜயநகர மன்னர்களால் இந்தக் கோயில் மீண்டும் புனரமைக்கப்பட்டது . 

18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவி ஸ்ரீ சிவஞான சுவாமிகள் ஓணான், காந்தன் மற்றும் ஜலந்திரன் ஆகியோரின் ஸ்தல புராணத்தை எழுதி  காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களை வழிபட்டார்.

தரிசன பயன்கள்: 

பொன், பொருள் வேண்டுவோர் இறைவனை வழிபட்டு இக்கோயில் பதிகத்தை பாட கேட்டது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

எப்படி செல்வது : 

ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை  உள்ளது. 

தி

No comments:

Post a Comment

Followers

அப்பரைக் கல்லிலே கட்டி கடலிலே விட அது மிதந்து கரைசேர்ந்த தலம்

தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றானதும், புலிக்கால் முனிவர் தவமிருந்து பேறுபெற்ற #திருப்பாதிரிப்புலியூர் #பாடலேஸ்வரர் ...