Sunday, July 13, 2025

சங்கடஹர சதுர்த்தியில் விரதம் விநாயகர் வழிபாடு.

இன்று சங்கடஹர சதுர்த்தி
வினை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு மிக முக்கியமான விரதங்களில் ஒன்று சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகும். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவதன் மூலம் அனைத்து விதமான சங்கடங்களும் (துன்பங்கள், தடைகள்) நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை மனதார வழிபட்டு, சந்திரனையும் தரிசித்து வந்தால் எப்படிப்பட்ட துன்பமும் விலகி வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். 

நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சங்கடங்களை தேய்ந்து போக வைக்கக்கூடிய சதுர்த்தி என்பதால் இதற்கு சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். சங்கடஹர சதுர்த்தி நாளில் பலரும் விரதம் இருந்து அனுஷ்டிப்பது வழக்கம்.

சங்கடஹர சதுர்த்தி:

சங்கடம் என்றால் துன்பம் என்றும், ஹர என்றால் ஒழிப்பது என்றும், சங்கடஹர என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை என்பதாகும்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் தேய்பிறையில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி விரதத்தை தான் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்றும், சங்கட ஹரண சதுர்த்தி விரதம் என்றும் கூறுகின்றனர்.

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர் விநாயகர். அன்றைய தினத்தில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடையின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

விரதம் இருப்பது எப்படி?

சதுர்த்தியன்று அதிகாலையில் நீராடி உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணபதியின் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.

முழுநேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழச்சாறு அருந்தி விரதத்தை கடைபிடிக்கலாம்.

விநாயகர் அகவல், விநாயகர் கவசம், சங்கடஹர சதுர்த்தி ஸ்தோத்திரம் போன்றவற்றை படிக்கலாம்.

விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், அப்பம், சுண்டல் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.

சதுர்த்தியன்று மாலை வேளையில் ஆலயத்திற்குச் சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும்.

விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் சிறப்பானது.

அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவதால்..

வாழ்வில் உள்ள அனைத்து துன்பங்கள், கஷ்டங்கள் மற்றும் தடைகள் விலகும்.

எந்த ஒரு புதிய முயற்சியும் தடையின்றி வெற்றிகரமாக முடியும்.

மனக்குழப்பங்கள் நீங்கி அமைதியான மனநிலை ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும்.

எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் மற்றும் பிரச்சனைகள் அகலும்.

நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்கள் நீங்கும்.

சங்கடஹர சதுர்த்தியில் இதை செய்தால்... உங்கள் வாழ்க்கை அமோகமாக இருக்கும்...!!
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சங்கடஹர சதுர்த்தியில் விரதம் விநாயகர் வழிபாடு.

இன்று சங்கடஹர சதுர்த்தி வினை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு மிக முக்கியமான விரதங்களில் ஒன்று சங்கடஹர சதுர்த்தி விரதம்...