Saturday, August 2, 2025

சபரிமலையில் 18 படிகள் சிறப்பு ஆடிமாதம் 18 ம் நாள் சிறப்பு.

: ஆடிப்பெருக்கு திருநாள்
***************************************************
ஆடி மாதத்தின் சிறப்பு நாளாகிய ஆடி 18 திருநாளினுடைய பெருமைகள் என்ன? அன்றைய தினம் எப்படியெல்லாம் நாம் வழிபாடு செய்ய வேண்டும்? தாலி சரடு மாற்றுவதற்கான நேரம் என்ன? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பார்க்கலாம்.
---------------------------------------------------------------------------------
ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்புக்குரியது. ஆடி மாதம் வரக் கூடிய 18ஆம் பெருக்கு என்பது மிக மிக விசேஷமான திருநாள் ஆகும். ஆடி மாதம் முழுவதும் சாமி கும்பிடாவிட்டாலும் இந்த 18ஆம் பெருக்கு அன்று கண்டிப்பாக வழிபாடு செய்வார்கள்.

எல்லோராலும் செய்யப்படக் கூடிய வழிபாடுன்றதும் இந்த ஆடி 18 திருநாளுக்கு உண்டு. 18 என்ற எண் மிகவும் விசேஷமான எண் ஆகும். பதினென்கீழ் கணக்கு, பதினென்மேல் கணக்கு நூல்கள், பாரத யுத்தம் நடந்த நாட்கள் 18, பாரதத்தின் அத்தியாயங்கள் 18, கீதையின் அத்தியாயங்களும் 18 ஆகும்.

ஆடிப்பெருக்கு
---------------------------------------------------------------------------------
இந்த எண்ணிக்கை மிகவும் சிறப்புக்குரியதாகும். சபரிமலையில் 18 படிகளை தாண்டியே ஐயப்பன் எழுந்தருளியுள்ளார். அது போல் புராணங்களும் 18 வகையாக உள்ளன. இந்த 18 ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், இந்த காவேரி மாதா நன்றாக சேர்ந்து உற்சாகத்தை தரக் கூடிய நாளாக இந்த நாள் விளங்குகிறது.

காவிரி தாய்க்கு நன்றி
---------------------------------------------------------------------------------
எனவே ஆடி 18 இல் காவிரிக்கு நன்றி தெரிவிக்கக் கூடிய நாள். காவிரி மட்டும் இல்லை, யார் யார் ஊர்களில் என்னென்ன நதிகள் ஓடுகின்றனவோ அந்தந்த நதிகள் மக்கள் வழிபட வேண்டும். தண்ணீரை பயன்படுத்தும் அனைவருமே இந்த நாளில் தண்ணீருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

வள்ளுவர்
---------------------------------------------------------------------------------
பஞ்ச பூதங்களின் துணை இல்லாமல் இந்த உலகில் நம்மால் வாழவே முடியாது. அதில் ஆதாரமாக இருக்கக் கூடியதும் ஐந்தும் ஒன்றாக விளங்குவதும் தண்ணீர்தான். நீரின்றி அமையாது உலகு என வள்ளுவர் பெருந்தகை அழகாக சொல்லியிருக்கிறார்.

வாய்க்காலில் காவிரி
---------------------------------------------------------------------------------
இந்த தண்ணீரை நாம் பாதுகாத்து தெய்வமாக கொண்டாட வேண்டும். ஆடி மாதத்தில் காவிரி வறண்டு இருக்கும். ஆடி 18 வரும் நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டதும் வாய்க்காலில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வரும்.

2025 ஆடிப்பெருக்கு எப்போது
---------------------------------------------------------------------------------
ஆடி பெருக்கானது வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் காலை 6 மணி முதல் 9 மணி வரை வழிபடும் நேரம் ஆகும். இந்த நேரத்தில் வழிபாடு செய்ய முடியாவிட்டால் காலை 11 மணி முதல் 12 மணி வரையுள்ள இந்த நேரத்தில் தாலி சரடையும் மாற்றிக் கொள்ளலாம்.

தாலி கயிறு மாற்ற உகந்த நேரம்
---------------------------------------------------------------------------------
அன்றைய தினம் காலை 9.45 மணி வரை நவமி திதி இருக்கிறது. அதன் பிறகு தசமி ஆரம்பிக்கிறது. எனவே 11 மணி முதல் 12 மணி என்ற நேரம் நல்ல நேரமாகும். காலையில் பொதுவாக வழிபடக் கூடிய வழிபாடு இந்த ஆடி 18 வழிபாடு.

புதிய தொழில்
---------------------------------------------------------------------------------
இந்த நாளில் என்னவெல்லாம் நாம் செய்கிறோமோ, அதெல்லாம் பெருக்காக அமையும். அன்றைய தினம் எதை தொடங்கினாலும் அது வெற்றி பெறும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக பல பேருக்கு கை கொடுக்கக் கூடிய அற்புதமான நாள். புதிதாக எதையாவது வாங்க வேண்டும் என்றாலும் இந்த நாளில் வாங்கலாம்.

உப்பு, மஞ்சள் தூள்
---------------------------------------------------------------------------------
அன்றைய தினம் உப்பும் , மஞ்சளும் வாங்கினால் போதும். கிணறு, மோட்டார், பைப் எதுவாக இருந்தாலும் அதற்கு கொஞ்சம் மஞ்சள், குங்குமம், பூ வைக்க வேண்டும். ஆறுகள் இல்லாத இடத்தில் இருந்தால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் தேக்கி வைத்துக் கொண்டு அதில் மஞ்சள் தூள், மலர் சேர்த்து வழிபடும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

என்ன படையல் செய்யலாம்
---------------------------------------------------------------------------------
வாழைப்பழம், கொய்யா, மாம்பழம், நாவல் பழம் , பச்சரிசியுடன் வெல்லம் கலந்து வைக்கும் காப்பரிசியையும் வைக்க வேண்டும். பிறகு வடை, பாயாசம் செய்யும் வழக்கம் இருந்தால் அதையும் செய்து சுவாமி முன்பு வைக்கலாம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

பூரட்டாதி நட்சத்திரம் சிவன் ரங்கநாதபுரம் திருவானேஷ்வர்

கால பைரவர் பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்து, அதை ஏழு யானைகள் மீது வைத்து, காலச்கரத்தை படைத்து அருளிய தலம் அருள்மிகு திருவான...