கோவில்களும் கோபுரங்களும் கொண்டாட்டமும் வழிபாடுமாக வாழ்ந்த இனம் இந்த இந்து சமூகம், அதுவும் உலகிலே அதிக கோவில்களும் பெரும் பெரும் சிலைகளும் லிங்கமும் தேர்களும் உயர்ந்த கோபுரங்களும் கொண்ட இடம் இந்திய தமிழகம்
அந்த மக்களை போல் தெய்வத்துக்காய் வாழ்ந்த இனம் எதுவுமில்லை, அழியா பெரும் கோவில்கள் அதனை மெய்பித்துகொண்டே இருக்கின்றன, இருக்கும் பெரும் ஆலயங்கள் போல ஏகபட்ட பண்டைய ஆலயங்கள் சம்பந்த பெருமான் சாம்பலில் இருந்து உயிர்பித்த பெண் போல, முதலைவாயில் சென்ற சிறுவனை சுந்தரர் மீட்டது போல மீள எழும்பி கொண்டும் இருக்கின்றன
அதில் ஒன்று அன்னம் புத்தூர் ஶ்ரீநிதீஸ்வரர் ஆலயம், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் – புதுச்சேரி சாலையில், சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது வரகுப்பட்டு. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் 4 கி.மீ. பயணித்தால் அந்த ஆலயம் வரும்
இது மகா பழமையான ஆலயம் அமைந்த இடம், அதன் தொன்மை ஈசனின் அடிமுடியினை விஷ்ணுவும் பிரம்மனும் சேர்ந்து தேடிய காட்சியில் தொடங்குகின்றது, சிவனின் முடியினை காணமுடியாத பிரம்மன் சாபம் பெற்றான், அவனின் படைப்பு தொழில் அவனை விட்டு நீங்கிற்று அவனால் எதையும் உருவாக்க முடியவில்லை
மனமொடிந்த அவன் ஈசனை நோக்கி தவமிருந்தான், அப்படியே தீர ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து அதனை வழிபட ஒரு பொய்கையும் அமைத்து கொண்டான், அவன் பொய்கையில் அன்னத்துடன் அவன் வழிபட்ட இடம் அன்னம் புத்தூர் என்றாயிற்று
பிரம்மனின் பக்திக்கு இறங்கி வந்து உமையுடன் விடையில் வந்து காட்சிதந்து பிரம்மனுக்கு அவன் படைப்பு தொழிலை மீள கொடுத்தார் சிவன்
ஆம், இந்த சிவன் பிரம்மனால் ஸ்தாபிக்கபட்டவர், அவரை தொழுது தன் சாபம் தீர்த்தான் பிரம்மன்
இவருக்கு ஶ்ரீநிதீஸ்வரர் என பெயர்வர காரணமானவன் குபேரன், அவனே வடதிசையின் அதிபதி, இதனலே "வாழ்பவன் திசை வடக்கு" எனும் வாக்கியம் உருவாயிற்று
அவன் உன்னதமான சிவபக்தன், பதும நிதி, மகாபதும நிதி, மகா நிதி, கச்சப நிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீல நிதி மற்றும் சங்க நிதி ஆகிய எட்டு வகையான நிதிகளுக்கும் அவனேதலைவன் குபேரன்.
அவனே நிதிகளுக்கு எல்லாம் அதிபதி நிதிபதி அவன் அஷ்டதிக்கு பாலகர்களிலும் ஒருவன்
அப்படிபட்ட குபேரன் துர்வாசரிடம் சாபம் பெற்றான், அந்த சாபத்தால் அவனின் எல்லா நிதியும் அகன்றது அவன் நவநிதிகளுக்கு அதிபதியாக இருந்த காலம்போய் மிக தரித்திர் கோலம் அடைந்தான்
அவன் பிரம்மன் வழிபட்ட இந்த தலத்துக்கு வந்து மனமுருக வேண்டி கொண்டான், இந்த சிவனை சிக்கென் பற்றிகொண்டான் அவனின் வைராக்கியமான தவத்துக்கு மனமுருகிய ஈசன் அவனுக்கு எல்லா நிதிகளையும் மீள கொடுத்தார், இதனால் நிதி கொடுக்கும் ஈஸ்வரர், நிதீஸ்வரர் என்றானார்
குபேரனை பிடித்து கொண்ட ராவணனும் இந்த தலத்தில் வணங்கினான் எல்லா வகை நிதிகளும் அவனிடம் குவிந்திருந்தன
இந்த சிவனே எல்லா பெரும் சிவபக்தர்களுக்கும் நிதி கொடுக்கும் பெரும் ஈஸ்வரனார், இந்த ஆலயத்துக்கென தனிபெரும் அடையாளும் தலபுராணமும் உண்டு
இங்கே பிரம்மன், குபேரன், இந்திரன்,ராவணன் என எல்லொரும் வணங்கினார்கள், பெரும் பெரும் சித்தர்கள் வணங்கினார்கள், மன்னாதி மன்னர்களெல்லாம் இங்கு தவமிருந்து பெரும் நிதி பெற்றார்கள்
இந்த ஆலயம் அடியார்களாலும் மன்னர்களாலும் கொண்டாடபட்டது, இந்த தலம் பற்றிய குறிப்பு தேவார பாடல்களில் நுணுக்கமாக உண்டு என்பார்கள், இன்னும் பல பாடல்களில் உண்டு
மூவேந்தர்களாலும் கொண்டாடபட்ட இந்த தலத்தை பெரும் இடத்துக்கு கொண்டு சென்றவன் ராஜராஜ சோழன்
இது சாபம் தீர்க்கும் ஆலயம் இழந்ததை தரும் ஆலயம் என்பதை அவன் அறிந்து இங்கு வந்தான், அவன் வரும்போதே ராஜராஜசோழனாக வரவில்லை மாறாக சிவனடியார்களில் ஒருவராக அருண்மொழி தேவனாக வந்தான்
அவன் அங்குவரும்போது அவனுக்கு பெரும் சிக்கல்கள் இருந்தன, சோழ வம்சத்துக்கு பெரும் சாபங்கள் இருந்தன, அந்த சாபம் தீராமல் சிவனருள் பெறாமல் இனி சோழவம்சம் மீளாது என்பதை உணர்ந்து இந்த சிவனிடம் சரணடைந்தான்
விஜயாலய சோழனால் சோழ வம்சம் மீண்டாலும் அவர்களால் மேல் எழமுடியவில்லை ஒருவித சாபம் இருந்தது அது கண்டாரத்தினை முடக்கியது, சுந்தர சோழனும் நோயில் வீழ்ந்தான், ஆதித்த கரிகாலனும் கொடுமையாக இளமையிலே கொல்லபட்டான்
எந்நேரமும் பல்லவரோ பாண்டியரோ இல்லை ஈழத்தவரோ சிங்களவரோ சோழநாட்டை கைபற்றும் ஆபத்து இருந்தது, உத்தமசோழனின் ஆட்சி தள்ளாடிகொண்டிருந்தது
ராஜராஜசோழன் மிக சிறந்த ஞானி, அவன் தன்னை உணர்ந்தான் தன்னிலை சோழதேசத்து நிலை உணர்ந்தான், தெய்வபலம் ஒன்றே இந்த சோழர்குலத்தின் சாபம் தீர்க்கும் என்பதை அறிந்திருந்தான்
அவன் பெரியம்மா செம்பியன் மாதேவி சிவாலயங்களை எல்லாம் கற்கோவிலாக் மாற்றிகொண்டிருந்தாள் அவளுக்கும் தன் குலம் பெற்ற சாபம் தெரிந்திருந்தது
ஏதோ ஒரு காலத்தில் சோழர்களில் ஒருவர் சிவாலயங்களை சரியாக பராமரிக்காமல் கோவில் சொத்துக்களை குலைத்த கொடுமையில்தான் இப்படி தள்ளபட்டோம் என நம்பினாள், அவளின் திருப்பணிக்கெல்லாம் அதுதான் காரணம் அவள் செய்தது ஒருவகை சாபவிமோசனம்
ராஜராஜன் இதை உணர்ந்திருந்தான், என்ன இல்லை சோழநாட்டுக்கு? அள்ளி அள்ளி கொடுக்க காவேரி, கரிகால் சோழனின் கனவில் உருவான பெரும் பெரும் கால்வாய்கள் வயல்கள் என விளைந்து கொட்டும் பூமி அது
கடல் வளம் நாகபட்டினத்தில் இருந்தது பெரும் பெரும் கலங்கள் செல்வங்களை கொட்டின
நீரினால் எழுந்த அந்த தேசம் பொன்னை குவித்து கொண்டிருந்தது, கடல்நீரும் காவேரி நீரும் கொட்டி கொடுத்தன அள்ள் அள்ள செல்வம் விளைந்தது , ஆனால் வாழ்வு?
பெரும் செல்வமும் விளைச்சலும் எல்லாமும் இருந்து அங்கு நிம்மதியும் வாழ்வும் இல்லை என்றால் சாபம் ஒன்றை தவிர ஏதும் காரணமாயிராது என்பதை அறிந்த அந்த ஞானி அருண்மொழி தேவன் இந்த சிவனை சரணடைந்தான்
நிதிஸ்வரரை அவன் சிக்கென பிடித்து கொண்டான், அவனின் மன்றாட்டில் வாதமும் நியாயமும் இருந்தது
படைப்புக்கெல்லாம் அடிப்படை நீர், அதுதான் பிரம்ம தத்துவம், அதுதான் ஆடிபெருக்கின் அடிநாதம். அந்த நீர் சோழநாட்டில் காவேரியாய் நிரம்ப உண்டு, நீர் மிகுந்தால் நிதி மிகுந்திருக்கும் கடல்நீர் ஆற்றுநீர் மழைநீர் என முந்நீரும் நிதிகொடுக்கின்றது
ஆனால் சோழவம்சம் ஒரு சாபத்தில் சிக்கி கிடக்கின்றது, அந்த சாபம் குபேரனும் இந்திரனும் பிரம்மனும் இன்னும் பலரும் வழிபட்ட இந்த இடத்தில் எனக்கு தீரவேண்டும், சோழர்குலம் இனி வாழவேண்டும், சாபம் தீர்த்து வாழவைத்தால் நாங்கள் சிவனுக்காய் வாழ்வோம் என அவன் மன்றாடினான்
வெறும்மன்றாட்டு அல்ல அவன் தவமிருந்தான், இந்த ஆலய சிவன் முன்னால் பல்லாண்டுகள் தவமிருந்தான்
அவன் வரலாற்றில் ஆதித்த கரிகாலன் கொலைக்கு பின்னால் அவன் உடனே அரியணைக்கு வரவில்லை என்பது தெரியும், அவன் மக்களோடு மக்களாக இருந்தான் என்பதும் தெரியும்
ஆனால் மறைக்கபட்ட வரலாறு அவன் இந்த ஆலயத்தில்தான் தவமிருந்தான், திருப்பணி செய்து ஒரு அடியாராக வாழ்ந்து சாபம் தீர்த்தான் என்பது
ஆம் , சில ஆண்டுகளில் அவன் சாபம் தீர்ந்தது அதன்பின் அரியணை அவனுக்கு வந்தது சோழர்குலத்தை உலகின் முதல் குலமாக அவன் சிவனருளில் மாற்றினான், எல்லா வகையிலும் அவன் உலகின் பெரும் சக்கரவர்த்தியாக இருந்தான்
அந்த நன்றிக்குத்தான் தஞ்சையில் பெரும் சிவாலயம் எழுப்பினான், அந்த ஆலயத்தை மகாமேரு உருவில் அமைத்து பெரும் லிங்கம் ஸ்தாபித்து கொண்டாடினான், அந்த பெரும் கோபுரத்தை தங்கத்தால் மூடினான்
அப்படிபட்டவன் தனக்கு வாழ்வளித்த இந்த ஆலயத்தை தங்கத்திலே முழுக்க மூடினான், அங்கு கோவில் மட்டுமல்ல தேரும் நந்தியும் கூட தங்கம் கொண்டிருந்தது
தஞ்சாவூர் பெரியகோவில் மகா மேரு வடிவம், மற்றபடி அவன் மனமார வழிபட்டது இந்த ஆலயமே
இந்த ஆலயம் தங்ககோவிலாக போற்றபட்டது, அதன் கருவறை கோபுரம் குபேரனின் தலம் போல் நவரத்தினங்களால் ஜொலித்தது, பூலோக குபேரபுரியாக நிதிஸ்தலமாக அதை மாற்றினான் ராஜராஜன்
அவனுக்கும் சிவனுக்குமான பந்தம் அப்படி இருந்தது , சிவன் அவனுக்கோர் வரமும் அளித்தார், ராஜராஜன் வழிபட்டு உருவாக்கிய ஆலயமெல்லாம் உன்னத சிவபக்தர்களாலே காக்கபடும் என்ற வரமும் கொடுத்தார்
அப்படித்தான் தஞ்சை பெரியகோவில் கடைசிவரை சிவபக்தி இல்லாதவரிடம் சிக்கவில்லை, சிக்கினாலும் மீண்டது, ஆப்கானியர் காலத்தில் கூட வீரசிவாஜியின் தந்தை ஷாஹாஜி அதை மீட்டான் இன்றுவரை அவன் வாரிசுகளே அங்கு அறங்காவலர்கள்
அப்படிபட்ட ராஜராஜன் உருவாக்கிய இக்கோவிலும் அவனுக்கு பின்னர் ராஜேந்திரசோழன் அவன் வம்சம் என கொண்டாடபட்டது, பின் ஜடவர்ம சுந்தபாண்டியனும் அவன் வம்சமும் கொண்டாடினார்கள்
இந்த ஆலயம் மாலிக்காபூர் காலத்தில் பெரும் அழிவுக்கு உள்ளானது தஞ்சை கோவிலினை மூடிய பொற்கூரை, சிதம்பரம் தங்க சபையின் பொற்கூரையெல்லாம் அள்ளி சென்ற அந்த கொடியவன் இந்த ஆலயத்தை நிர்மூலமாக்கினான்
அவன் காலத்திலே தங்கதேர் தங்க கூரை எல்லாம் பறிக்கபட்டது, இன்னும் ராஜராஜன் வழிபட்ட இடம் என்பதால் தோண்டிபார்த்து அழித்தான்
அவனுக்கு பின் துக்ளக் இதை செய்தான், அந்த ஆலயத்தை நிர்மூலமாக்கினான், பின் நாயக்கர்கள் மீட்டெடுத்தாலும் பின் செஞ்சி கோட்டையினை அப்சல்கான் சில ஆப்ரிக்கர்கள் பிஜப்பூர் சுல்தானுக்காக கைபற்றியபோது நிலமை இன்னும் மோசமானது
உடைத்துபோடபட்ட சிலைகள் கைவிடபட்ட தூண்கள் என கிடந்த ஆலயம் மழைகாலத்தில் வந்த வெள்ள பெருகாலும் ஏரியின் நீர் அடிக்கடி பாய்ந்து கொட்டிய மணலாலும் மூடபட்டு மறைந்து போனது
அப்படி ஒரு ஆலயம் இருந்த அறிகுறியே இல்லாமல் போனது, அதை சொல்லி கொடுக்கவும் யாருமில்லை, வரலாற்றில் அதன் குறிப்புமில்லை
இது பற்றிய முழு குறிப்பும் தஞ்சை சரஸ்வதி மஹாலில் உண்டு, ஆனால் அது இந்த ஆலயம் என்பதை யாரும் அறியவில்லை
நம்புகின்றீர்களோ இல்லையோ மெய்சிலிர்க்கும் அந்த விஷயத்தை எல்லோரும் ஒப்புகொள்ளத்தான் வேண்டும்
ராஜராஜனின் ஆயிரமாண்டு விழா நடத்த தயாரான போது அவனுக்கு பெரும் விழா தஞ்சாவூரில் கொண்டாடபட எல்லோரும் தயாரான போது, அவன் பெயரில் தஞ்சை பெரு உடையார்க்கு பெரும் அபிஷேகம் நடத்த ஏற்பாடனபோது இந்த ஆலய லிங்கம் வெளிபட்டது
அதுவரை வெளிபடா லிங்கம் அப்போதுதான் தன்னைவெளி காட்டிற்று, ஊர்மக்கள் ஏதோ சிலை என தோண்டி எடுக்க அது பிரமாண்ட லிங்கமாக இருந்தது
சுற்றி தோண்ட தோண்ட பல கல்வெட்டும் உடைந்த நந்தியும்கிடைத்தது, முழுவதும் உடையாத இரு தூண்கள் கிடைத்தன , அவைதான் ராஜராஜன் இங்கு அடியாராக நின்று பணிசெய்த வரலாற்றை சொன்னது
இத்னை சொன்னது தொல்பொருள் அதிகாரிகள், அவர்கள்தான் இந்த கல்வெட்டுக்களை படித்து சொன்னார்கள்
பின் 2008ல் அதை ஒரு குடிசையில் ஸ்தாபித்தார்கள், வழிபாடுகள் தொடங்கின
அந்த கல்வெட்டில் 1008ம் ஆண்டு ராஜராஜன் அந்த கோவிலில் பெரும் பணிகளை செய்தான் என சொல்லபட்டிருந்தது, சரியாக 2008ல் அது வெளிபட்டது
நம்பமுடியாத அதிசயம்தான், ஆனால் நடந்தது இந்த மண்ணில் அது நடந்தது
தஞ்சை பெரியகோவிலில் அந்த மாமனன்னின், ராஜராஜசோழனின் ஆயிரமாண்டு விழா கொண்டாடபட்டபோது இங்கு ஓலை குடிசையில் அந்த நிதிஸ்வரர் இருந்தார்
அப்போது இது கவனம் பெற்றது, அந்த ஊரின் மக்கள் ஒரு கோவில் எழுப்ப முனைந்தார்கள், அதுவோ வெறும் 300 வீடு கொண்ட கிராமம் எப்படி முடியும்?
இதனால் அவர்களால் முடிந்த அளவு உலகெல்லாம் இருந்த பக்தர்களை திரட்டினார்கள், "ஶ்ரீநிதீஸ்வரர் அறகட்டளை" என ஒன்றை உருவாக்கினார்கள்
உண்மையில் அந்த மக்களும் அந்த குழுவினரும் பாவபட்டவர்கள், இந்த ஆலயம் ஊர் ஆலயம் என்பதால் அறநிலையதுறை தலையிடவில்லை, தொல்பொருள் ஆய்வாளர்களே வந்து இது ராஜராஜசோழன் வழிபட்ட ஆலயம், அவன் மெய்கீர்த்தி பதிக்கபட்ட ஆலயம் என சொன்னாலும் தமிழக அரசின் ஆதரவு இல்லை
அரசுக்கு அப்போது ஈழ சிக்கல் இருந்தது, தேர்தல் கணக்கு இருந்தது, வட இலங்கை பற்றி எரிந்து கொண்டிருந்தது
அன்றைய திமுக அரசு இதை வழக்கம்போல் புறக்கணித்தது
மக்கள் போராடினார்கள் நிதி திரட்டினார்கள் , சொல்லபோனால் பிச்சை எடுத்தார்கள், முடிந்த அளவு நிதி திரட்டினார்கள், சிவன் அவர்களோடு இருந்தார்
அதனால் ஓரிரு கோடிகள் குவிந்தன, அதை கொண்டு கோவில் கட்டினார்கள்
அங்கும் ஆச்சரியம் அமைந்தது, அங்கு கல்லும் சிமென்டும் சாந்துமில்லை, எப்படி ராஜராஜசோழன் தஞ்சை கோவிலை கல்லுக்குள் கல் பொருத்தி அடுக்கி கட்டினானோ அப்படியே இங்கும் கட்டினார்கள், இதெல்லாம் எப்படி அப்படியே நடந்தது, எப்படி திறமையான கல் தச்சர்கள் வந்தார்கள் என்பதெல்லாம் வியப்பு அல்லது சிவனுக்கு இதெல்லாம் சாதாரணம்
2014ல் கோவில் கும்பாபிஷேகம் நடந்தபோது ஸ்பெக்ட்ரம் வழக்கு உச்சத்தில் இருந்தது அது வேறு
இந்த மக்கள் மீண்டும் மீண்டும் போராடினார்கள் ஒரு ராஜகோபுரம் கட்ட முயன்றார்கள், இவர்கள் சந்திக்காத ஆட்சி பிரபலங்கள் இல்லை , அடுத்துவந்த அதிமுக அரசும் இதை கண்டுகொள்ளவில்லை
ஜெயலலிதா இதனை செய்திருக்கலாம் மனமில்லை பின் அப்பல்லோ அவருக்கு இடமளித்தது
பின் அம்மக்கள் அவர்களாக முனைந்து ராஜகோபுரம் கட்ட தொடங்கினார்கள், எப்படி நிதி சேகரித்து கல்கோவில் அமைத்தார்களோ அப்படி இப்போதும் ராஜகோபுரம் கட்டி மதில்களை அமைக்க ஆரம்பிக்கின்றார்கள்
சில லட்சம் செலவில் வேலைகள் தொடங்கிவிட்டன, முழுக்க கல்லால் அமையும் அந்த ராஜகோபுர பணிகள் பூமிபூஜை முடிந்து தொடங்குகின்றன
ஆனால் இது எளிதில் முடிக்ககூடிய விஷயமா என்றால் இல்லை ஓரிரு ஆண்டுகள் ஆகலாம், செலவும் சில கோடிகளை தாண்டலாம்
ராஜகோபுரம் என்பது இந்துக்களின் ஆலயத்தின் முக்கிய அடையாளம், கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற அந்த இனம் ராஜகோபுரத்தையே தன் அடையாளமாக கொண்டிருந்தது
அது வெறும் அழகுக்கு அல்ல அதில் சூட்சுமங்கள் நிறைய இருந்தன
ரமணமகரிஷியின் சீடரான ஐரோப்பியன் பிராண்டன் அழகாக சொன்னான், இந்துக்களின் ராஜகோபுரத்தில் நான் எகிப்திய பிரமீடுகளின் சாயலை காண்கின்றேன், ஆனால் அவை படிகட்டாக இருக்கும் இங்கு சிலைகளெல்லாம் அமைக்கபட்டிருக்கின்றன
ஆம், இதுதான் ராஜகோபுரத்தின் தத்துவம், இந்த கோபுரத்தின் வழியாகத்தான் கந்தர்க்வர்கள், யட்சர்கள் என வானில் அலையும் மானுட அல்லாத சக்திகள் கோவிலுக்குள் வரும் என்பார்கள் ஞானியர்
அதாவது பிர்பஞ்சத்தின் சக்தியினை ஈர்த்து தருபவை ஆலய கோபுரங்கள் அதனாலே கோபுர கலசமெல்லாம் வைக்கபட்டு கும்பாபிஷேகமெல்லாம் செய்யபட்டு அதனை உயிர்ப்புடன் வைத்திருக்கும்
அவைதான் பிரபஞ்ச சக்தியினை ஈர்த்து தரும், இந்துமதம் சொன்ன இந்த ஞான தாத்பரியத்தை பிராண்டன் தெளிவாக வியந்து சொன்னான், இந்து ஞானியர் செய்த ஏற்பாடு அது
ராஜகோபுரம் கட்டுவது பெரும் அறப்பணி, உன்னதமான திருப்பணி அதற்காக ஒரு கல் கொடுப்பவர்க்கு கூட கயிலாயத்தில் ஆயிரம் ஆண்டு வாழும் வரம் உண்டு என்பது சிவன் வாக்கு
இங்கு இத்தனனை ஆயிரம் கோவிலும் ராஜகோபுரமும் உண்டு, இவை எல்லாம் அரசனின் கூலிகளால் உருவானது என கருதுகின்றீர்கள்?
இல்லை, எல்லா கோவிலும் மக்களால் உருவானது அதுவும் தஞ்சை போன்ற கோவில்களில் சோழநாடே திரண்டு வேலை செய்தது, ராஜராஜசோழனே இரும்படித்தான், அவன் மனைவி வானதிதேவி வேலையாட்களுக்கு நீர் சுமந்தார்
வரகுணபாண்டியன் மனைவி திருவிடை மருதூரில் சித்தாளாக கல்சுமந்தாள்
அதாவது மன்னர்களே மக்களோடு மக்களாக நின்று திருப்பணி செய்தார்கள், அப்படி ஊரே கூடி கட்டிய அலயங்கள்தான் இன்று மதத்தை காத்து கொண்டிருக்கின்றன, இந்த மண்ணை இந்துமண்ணாக நிறுத்தி கொண்டிருக்கின்றன
இந்த ஆலயம் அப்படி திருப்பணி காண்கின்றது, ஆனால் அம்மக்கள் தனியாக போராடுகின்றார்கள் பெரும் ஆதரவு இல்லை
அவர்கள் 20 வருடம் போராடி கோவிலை கட்டிகொண்டார்கள் இப்போது ராஜகோபுரத்துக்கும் மதில் சுவருக்கும் மறுபடியும் சிவனடியார்களாய் உலக ஆதரவை எதிர்பார்க்கின்றார்கள்
இந்த கோவில் துலங்கியபின் நடக்கும் அற்புதங்களும் ஏராளம்
பௌர்ணமி மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அம்பாள் பாதத்தில் வெண்ணெய் வைத்து அர்ச்சனை செய்து, ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து, அந்த வெண்ணையைப் பெற்று தம்பதிகளாக சாப்பிட. குழந்தைப் பேறு கிடைக்கின்றது
ஶ்ரீகனகாம்பிகை என தங்கத்தின் பெயர் கொண்ட அவளை வழிபட வீட்டில் லட்சுமி கடாட்சம் உருவாகும்
கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில், ஸ்ரீநித்தியகல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபட. விரைவில் திருமணம் கைகூடும்.
பெண்கள் பூப்படையாத குறை தீர, ஐந்து வியாழக்கிழமைகளில் சுவாமிக்கு சொர்ணபுஷ்ப அர்ச்சனை செய்து, வெள்ளி நாணயத்தை பிரசாதமாகப் பெற்று செல்கின்றனர் பக்தர்கள். அதோடு இந்த பரிகாரத்தினால் நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான பிரச்னைகளும் தீரும்.
வெள்ளிக் கிழமை, பௌர்ணமி, பூச நட்சத்திரம், அக்ஷய திருதியை, தீபாவளி ஆகிய நாட்களில் சுவாமிக்கு ஸ்வர்ணபுஷ்ப அர்ச்சனை செய்து வழிபட, கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். அதோடு மன அமைதி, வீடு, வாகன யோகம், திருமணவரம், குழந்தைவரம், தொழில் அபிவிருத்தி, உத்தியோகம் ஆகியவற்றையும் பெற்றிடலாம்.
குருவின் இரண்டு தெய்வங்களில் ஒருவரான பிரம்மா, இங்கு வழிபட்டதால், குருப் பெயர்ச்சி பரிகார பூஜைகள் இங்கு வெகு விமர்சையாக அனுசரிக்கப்படுகின்றன. அதில் பங்கு பெற்று பல நன்மைகளை பெறலாம்
இந்த ஆலயம் இழந்ததை மீள தரும் ஆலயம், குலசாபம் தீர்க்கும் ஆலயம், ராஜராஜசோழன் எனும் தமிழக இந்துமன்னனின் முழு பலமாக இருந்த ஆலயம்
இதற்கு திருப்பணி செய்வது சிவனே உங்களிடம் கேட்கும் வாய்ப்பு, சோமநாதபுரி ஆலயம் காசி ஆலயம் போல இது பழமையானது, இதனை மீள கொண்டுவர ஒரு வாய்ப்பு கிடைக்குமென்றால் அது ஒவ்வொருவரும் செய்த புண்ணியம்
இதனை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம், முடிந்தவர்கள் திருப்பணியில் பங்குபெறலாம், நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் உங்கள் குடும்பத்துக்கு பெரும் பெரும் மடங்காய் திரும்பவரும், சிவனருளில் உங்கள் குலமும் குடும்பமும் வாழும், உங்கள் மனம் அந்த நிதிஸ்வரரில் கரைய கரைய பெரும் கீர்த்தி உருவாகும்
ஒரு மனிதன் வாழ அவனுக்கு நல்ல அறிவு வேண்டும் அதுதான் அவனை நல்ல படைப்பினை நல்லபடியாக தன் தொழிலை உருவாக்க அவசியம், பிரம்மன் அதனை இங்கு பெற்றான் என்பது ஒருவர்க்கு தொழில்திறமை கூடும் என்பது
நிதி என்பது தெய்வத்தின் அருள் கர்மவினைபடி அது அமையும், இந்த சிவனை வழிபட்டால் கர்மவினை தீரும், பிரம்மனின் விதி இங்குமாறிற்று, குபேரன், இந்திரன், ராவணன் என எல்லோரின் விதியும் மாறிய இடம் இது
ராஜராஜசோழன் எனும் மாபெரும் சிவனடியாரை இந்த தலமே உருவாக்கிற்று
அப்படியான சிவன் இப்போது உங்களுக்கும் ஒரு வாய்ப்பினை தருகின்றார், பிடித்து கொண்டோர் பேறுபெற்றோர்
இது ஒரே நாளில் முடியும் பணி அல்ல என்பதால் நாமும் அக்குழுவினரோடு இணைந்திருப்போம், மாதம் ஒருமுறை அந்த கோபுரபணியின் நிலமைகளை உங்களுக்கு தருவோம்
அள்ளி கொடுப்பது அல்ல விஷயம், உங்களால் முடிந்ததை செய்யலாம் ஒரு கல் கூட கொடுக்கலாம், ஒரு நாள் கூலி கொடுக்கலாம், ஒருவேளை உணவு அந்த வேலையாட்களுக்கு கொடுக்கலாம், ஒரு அடி சுவற்றுக்கு பொறுப்பு ஏற்கலாம்
இப்படி உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு கொடுத்தால் போதும், ஊர் கூடி தேரை இழுக்கும் போது ராஜகோபுரம் எழுப்ப முடியாதா என்ன?
நிச்சயம் முடியும்
பணம் என்பது மானிடகுல நன்மைக்கு அவர்களுக்கு நல்வழி காட்டும் முயற்சிக்கு பயன்படும் வேலைக்காரன், அது எப்போதுமே திருப்பணிக்கு அடிமை, அவ்வகையில் நல்லகாரியத்துக்கு தேவையான பணம் எங்கிருந்தும் குவியும் என சிவனருளால் நம்புகின்றோம்
அன்னை மகாசக்தி துணையிருந்து இந்த நல்லகாரியத்தை நடத்தி கொடுக்கட்டும், விரைவில் கோபுரம் எழும்பட்டும்
மன்னர்கள் மட்டுமல்ல இது சித்தர்களும் வாழ்ந்த கோவில், மகா அவதார் பாபாஜியின் சீடர் குருமுக நாதர் எனும் சித்தர் இங்குதான் சமாதி அடைந்திருக்கின்றார், பாம்பு வடிவில் அவர் உண்டு
இயமயத்துக்கு பாபா குகையில் தவம் செய்தால் என்ன பலனும் அமைதியும் உண்டோ அது இந்த தலத்திலும் கிடைக்கும்
இந்த ஆலயத்துக்கான அறக்கட்டளையின் முகவரி இதோ
இத்தலம் பற்றிய மேலும் விபரங்கள் பெற கீழ்க்கண்ட முக வரியில் தொடா்பு கொள்ளலாம்.
"ஶ்ரீநிதீஸ்வரா் டெம்பிள் டிரஸ்ட்
20/21, நியூ காலனி மெயின் ரோடு
மேற்கு சைதாப்பேட்டை,
சென்னை −600015"
அவர்களின் வங்கி கணக்கு முகவரியும், தொடர்பு எண்ணும் இதோ
"SriNidheeswarar temple trust
Account no 911020059416659
IFSC code UTIB0001374
AXIS BANK Teynampet Branch
Chennai
9444036534,9840981213 மற்றும் 8754467146
நாம் மன்னர்கள் காலத்தில் பிறக்கவில்லை, சாதுக்கள் விபூதியினை தங்கமாக்கி கோபுரம் கட்டிய காலத்திலும் பிறக்கவில்லை இது நமக்கான சவால் அல்லது வாய்ப்பு
மன்னன் இல்லாவிட்டாலும், சாதுக்கள் மறைந்து கொண்டாலும் சித்தர்கள் அரூபிகளாக நின்றாலும் இந்துமக்கள் கோவில் கட்டிகொண்டே இருப்பார்கள், எந்த சூழல் எப்படி இருந்தாலும் இம்மக்கள் சிவபணி செய்து கொண்டே இருப்பார்கள் என்பதை நிருபிக்கும் வாய்ப்பு
அங்கு சிவனடியார்களாய் ஒன்று கூடுவோம், ராஜராஜசோழனின் மனம்போல் அந்த கோபுரம் உயர எழும்பட்டும், இந்துக்கள் இழந்தது எல்லாம் மீள கிடைக்கட்டும்
ஒவ்வொரு இந்துவின் வீட்டையும் தட்டுவோம், கோபுரத்தை உயர கட்டுவோம்
அந்த வல்ல நிதிஸ்வரர் ஒவ்வொருவருக்கும் எல்லா அருளும் நலமும் பலமும் அறிவும் நல்லசிந்தனையும் பெரும் பக்தியும் ஆரோக்கியமும் செல்வமும் தந்து வழிநடத்தட்டும்
இந்த கோவில் 2014 முதல் கும்பாஷேகம் காணும்போதுதான் மோடி பிரதமராக அமர்ந்தார், அதன்பின் தேசம் பெரும் பலம் பெற்றது
இது மிகநுணுக்கமான போதனையினை அவசியத்தை சொல்வது, இந்த கோவில் அரசர்களின் ஆலயம் ராஜராஜசோழன் போன்ற மாமன்னர்கள் வணங்கிய ஆலயம், இந்த ஆலயத்தை ஆட்சியாளர்கள் வணங்க வணங்க நாடு பலம்பெறும்
மோடி நிர்மலா சீதாராமன் போன்றோருக்கு தெரிவிக்கபட வேண்டிய ஆலயம் இது, பாஜகவினர் அல்லது இந்து அமைப்பினர் இதை செய்யட்டும் , மோடிக்கு தெரிந்தால் நிச்சயம் வந்து வணங்குவார் , கோவிலும் உலக பார்வையினை பெரிதாக பெறும்
அந்த நிதிஸ்வரர் ஆலய ராஜகோபுரம் எழும்ப எழும்ப இந்த தேசமும் நிதியால் மதியால் மேலேழுந்து ராஜராஜனின் காலத்தை போல் பொற்காலத்தை மீட்டெடுக்கும், அந்த வரத்தை சிவன் அருளட்டும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment