#மூர்த்தி நாயனார்
அறுபத்து மூன்று நாயன்மார்களும் சிவபெருமானுக்குத் தன்னலம் இன்றி தொண்டுகள் பல செய்து வந்தனர்.அந்த வரிசையில் மூர்த்தி நாயனார் மதுரை சொக்கநாதருக்கு சந்தன காப்பிடுவதற்கு, தினந்தோறும் அபிஷேக, அலங்காரத்திற்கான சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது கடமையாகக் கொண்டிருந்தார். இந்த திருப்பணிக்குப் பகை அரசர் இடையூறு செய்தும் மூர்த்தி நாயனார் மனந்தளர்ந்து விடாமல் சிவனாருக்குச் சந்தனக் காப்பிட தன்னுடைய முழங்கைகளை அரைத்தவர்.
மூர்த்தி நாயனாரை “மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் போற்றுகின்றார்.
மூர்த்தி நாயனார் பாண்டிநாட்டில், தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் வைசியர் (வணிகர்) குலத்தில் அவதரித்தார். இவர் அகப்பற்று புறப்பற்று விடுத்து பற்றற்ற சிவபெருமான் திருவடிகளையே மெய்ப் பற்று என்றெண்ணி அவர்தம் திருவடிகளைச் சரண் அடைந்து, வேறு எதையும் சிந்திக்காதவர். இவர் மதுரையில் வீற்றிருக்கின்ற சொக்கநாதர் மேல் பெரும் பக்தி கொண்டிருந்தார். பெரும் வணிகராக இருந்த போதிலும் தினந்தோறும் சொக்கநாதருக்கு சந்தனகாப்பிடுவதற்கு, சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது கடமையாகக் கொண்டிருந்தார்.
ஒரு சமயம் கன்னட தேசத்தில் இருந்து வடுக மன்னன் ஒருவன் மதுரையை நோக்கிப் படையெடுத்து வந்து பாண்டியனை வீழ்த்தி மதுரையைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினான். அவன் சமண சமயத்தைச் சார்ந்ததால், சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்களைச் சமண சமயத்திற்கு மாற்ற முற்பட்டான். அவ்வாறு மாறாத சைவ சமயத்தவர்க்குப் பல வழிகளில் கொடுமைகள் புரிந்தான். மற்றும் சிவாலயங்களுக்குத் திருப்பணிகள் நடைபெறாமல் இருக்கப் பல வழிகளில் துன்பத்தைக் கொடுத்தான். அவனுடைய கொடுமைகள் மூர்த்தி நாயனாருக்கும் தொடர்ந்தது. எனினும் அவர் சொக்கநாதருக்கு சந்தனம் அரைத்துக் கொடுக்கும் பணியை இடைவிடாது தொடர்ந்து செய்த வண்ணம் இருந்தார்.
அவர் செய்து வந்த இறைத் தொண்டுக்குத் தடங்கல் செய்தால் அவர் மனம் மாறலாம் என்று திட்ட மிட்ட மன்னன் சதி செய்து சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு செய்தான்
மூர்த்தி நாயனார்!!
அறுபத்து மூன்று நாயன்மார்களும் சிவபெருமானுக்குத் தன்னலம் இன்றி தொண்டுகள் பல செய்து வந்தனர்.அந்த வரிசையில் மூர்த்தி நாயனார் மதுரை சொக்கநாதருக்கு சந்தன காப்பிடுவதற்கு, தினந்தோறும் அபிஷேக, அலங்காரத்திற்கான சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது கடமையாகக் கொண்டிருந்தார். இந்த திருப்பணிக்குப் பகை அரசர் இடையூறு செய்தும் மூர்த்தி நாயனார் மனந்தளர்ந்து விடாமல் சிவனாருக்குச் சந்தனக் காப்பிட தன்னுடைய முழங்கைகளை அரைத்தவர்.
மூர்த்தி நாயனாரை “மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் போற்றுகின்றார்.
மதுரை மாநகரில் அவதரித்த மூர்த்தி நாயனார்:
மூர்த்தி நாயனார் பாண்டிநாட்டில், தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் வைசியர் (வணிகர்) குலத்தில் அவதரித்தார். இவர் அகப்பற்று புறப்பற்று விடுத்து பற்றற்ற சிவபெருமான் திருவடிகளையே மெய்ப் பற்று என்றெண்ணி அவர்தம் திருவடிகளைச் சரண் அடைந்து, வேறு எதையும் சிந்திக்காதவர். இவர் மதுரையில் வீற்றிருக்கின்ற சொக்கநாதர் மேல் பெரும் பக்தி கொண்டிருந்தார். பெரும் வணிகராக இருந்த போதிலும் தினந்தோறும் சொக்கநாதருக்கு சந்தனகாப்பிடுவதற்கு, சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது கடமையாகக் கொண்டிருந்தார்.
மூர்த்தி நாயனாருக்குச் சந்தனக் கட்டை கிடைக்க விடாமல் சதி:
ஒரு சமயம் கன்னட தேசத்தில் இருந்து வடுக மன்னன் ஒருவன் மதுரையை நோக்கிப் படையெடுத்து வந்து பாண்டியனை வீழ்த்தி மதுரையைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினான். அவன் சமண சமயத்தைச் சார்ந்ததால், சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்களைச் சமண சமயத்திற்கு மாற்ற முற்பட்டான். அவ்வாறு மாறாத சைவ சமயத்தவர்க்குப் பல வழிகளில் கொடுமைகள் புரிந்தான். மற்றும் சிவாலயங்களுக்குத் திருப்பணிகள் நடைபெறாமல் இருக்கப் பல வழிகளில் துன்பத்தைக் கொடுத்தான். அவனுடைய கொடுமைகள் மூர்த்தி நாயனாருக்கும் தொடர்ந்தது. எனினும் அவர் சொக்கநாதருக்கு சந்தனம் அரைத்துக் கொடுக்கும் பணியை இடைவிடாது தொடர்ந்து செய்த வண்ணம் இருந்தார்.
அவர் செய்து வந்த இறைத் தொண்டுக்குத் தடங்கல் செய்தால் அவர் மனம் மாறலாம் என்று திட்ட மிட்ட மன்னன் சதி செய்து சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு செய்தான்.
சந்தனக் காப்பிட தன்னுடைய முழங்கைகளை அரைத்தார்:
அரசனுடைய சதித்திட்டத்தால் ஒருநாள் மூர்த்தி நாயனார் மதுரை முழுவதும் சந்தனக்கட்டை தேடி அலைந்தும் கிடைக்காமல் போயிற்று, மிகவும் சோர்வுடன் கோயிலுக்குத் திரும்பினார். மனம் மிகவும் கவலையுற்று கோயிலில் சந்தனம் அரைக்கும் கல்லில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ‘சந்தனக் கட்டைதான் கிடைக்கவில்லை, சந்தனம் அரைக்கும் இந்த கட்டையின் முழங்கைகள் இருக்கின்றனவே. இதனைக் கல்லில் அரைத்து இறைவனுக்குக் காப்பிடுவோம்’ என்று எண்ணினார். தன்னுடைய இரண்டு முழங்கைகளையும் சந்தனம் உரைக்கும் கல்லில் வைத்து உரைக்கத் தொடங்கினார். ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி வலியைப் பொருட்படுத்தாது தொடர்ந்து கல்லில் உரைத்துக் கொண்டே இருந்தார். அவருடைய முழங்கைகளில் தோல் கிழிந்து எலும்பு நொறுங்கி உள்ளிருக்கும் சதை வெளியே வந்தது. இதற்குமேல் சொக்கநாதரால் பொறுக்க முடியவில்லை.
“மூர்த்தியாரே, உனக்குத் தீங்கு செய்தவன் கைப்பற்றியிருக்கும் இந்நாடு நாளை உன் வசப்படும். அதனை ஏற்று நல்லாட்சி புரிந்து இறுதியில் எமது திருவடி சேர்வாயாக என்று சிவபெருமான் அசரீரியாகக் கூறினார். மூர்த்தி நாயனார் அதைக் கேட்டுத் தேய்த்தலை நிறுத்தினார். அவருடைய கைகள் முன்போல் மாறின. சந்தனம் வாசனை சொக்கநாதர் கோயில் முழுவதும் மணத்தது. சிவனாரின் ஆணையைக் கேட்டதும் ‘சிவத்தின் விருப்பம் அதுதான் என்றால் அதனை நான் செவ்வனே செய்து முடிப்பேன்.’ என்று மனதிற்குள் எண்ணினார்.
அன்றைய இரவே வடுக மன்னன் திடீர் மரணம் எய்தினான். அரச வாரிசு இல்லாமையால் யானையின் கையில் மாலை கொடுக்கப்பட்டு அந்த யானை யாருக்கு மாலை இடுகிறதோ அவரே அரசன் என்று அக்கால முறைப்படி தீர்மானிக்கப்பட்டது. அவர்களின் வழக்கப்படி பட்டத்து யானையின் துதிக்கையில் மாலையைக் கொடுத்து அதனுடைய கண்களைக் கட்டிவிட்டு மதுரைக்குள் அனுப்பினர். அப்போது மூர்த்தி நாயனார் சொக்கநாதர் கோயிலிலிருந்து வெளியே வரும்போது, பட்டத்து யானை மூர்த்தி நாயனாரின் கழுத்தில் மாலையை அணிவித்து அவரை தன் மீது ஏற்றிக் கொண்டது. மக்கள் யாவரும் மகிழ்ந்து ஆரவாரம் செய்தனர். இதனைக் கண்டதும் அமைச்சர்கள் தங்களுடைய அரசன் தேர்வு செய்யப்பட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்து, மூர்த்தி நாயனாரை அரச பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டினர். அவரோ சமண சமயத்தை விடுத்து மதுரை மக்கள் எல்லோரும் சைவத்தைப் பின்பற்றினால் தாம் அரச பொறுப்பை ஏற்பதாகத் தெரிவித்தார். அமைச்சர்கள் அவரிடம் “அரசரின் விருப்பம் அதுவானால் அவ்வாறே நடக்கும்.” என்று தெரிவித்தனர். இதனால் மகிழ்ந்த மூர்த்தி நாயனார் அரச பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தார். மறுநாள் அமைச்சர்கள் மணிமுடி சூடி சந்தனம்மிட்டு, அணிகலன்களை அணிந்து முறையாக அரச பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டினர். அவர்களிடம் மூர்த்தியார் “எனக்கு ஜடாமுடியே திருமுடி. திருநீறே சந்தனம். ருத்திராக்கமே அணிகலன்கள். இவற்றுடனே நான் அரச பொறுப்பை ஏற்பேன்.” என்று கூறி அவர்கள் கொடுத்ததை ஏற்க மறுத்து விட்டார். அறவழியில் சைவ நெறி ஓங்க நெடுநாட்கள் மதுரையை ஆட்சி புரிந்து இறைவனுக்குத் திருப்பணிகள் செய்வித்து, இறுதியில் சிவபெருமானின் திருவடிகளை அடைந்தார்.
அறவழியில் சைவ நெறி ஓங்க நெடுநாட்கள் மதுரையை ஆட்சி புரிந்து சிவபெருமானுக்குத் திருப்பணிகள் செய்வித்த மூர்த்தி நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில்
கொண்டாடப்படுகிறது. அவர் அவதாரம் செய்த ஸ்தலமும், முக்தியடைந்த ஸ்தலமுமான மதுரை அ/மி. ஸ்ரீமீனாட்சியம்மன் கோயிலில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment