🔴 *ஏனாதி நாயனார் முக்தித் திருநாள்*, *உத்திராடம்*
*புரட்டாசி 15*
*அக்டோபர் 1*
பகைவன் என்று தெரிந்தும் உயிரை வாங்க வந்தவனின் *மேனியில் இருந்த சிவச் சின்னங்களை மதித்துப் பகைவனின் விருப்பத்தை நிறைவேற்றியவர்கள்* ஏனாதி நாயனார் மெய்ப்பொருள் நாயனார்.
சிவச் சின்னங்களை சிவமாகவே கண்டு போற்றித் தொண்டு செய்தவர்கள் ஏனாதி நாயனார், மெய்ப் பொருள் நாயனார், புகழ்ச் சோழர் , சேரமான் பெருமாள், நரசிங்க முனை யரையர், கலிக் கம்பர் மற்றும் பலர்.
🕉️ *வேடம் கை தொழ வீடு எளிதாமே* (சம்பந்தர்)
☸️ *மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே* (சிவஞான போதம்)
⚜️ *சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்* (திருவாசகம்)
என விபூதி ருத்திராட்சம் சடை முடி ஆகியவற்றைக் கண்டு *சிவ சிவ* என்று போற்றி அவற்றின் புனிதம் காத்து உயிரையும் விட்டவர்கள் நாயன்மார்.
⚜️ *ஒன்று அவன் தானே*
🕉️ *சைவப் பெருமைத் தனி நாயகன்*
⚜️ *அம்மையாய் நின்ற பேர் நந்தி தானே* (திருமூலர்)
⚜️ *யாவர்க்கும் தந்தை தாய் தம்பிரான்* (திருவாசகம்)
என எல்லாம் கடந்த மெய்க் கடவுளை வழிபடும் *சைவத் திரு நெறியில் சுவாமி அம்மன் என்றெல்லாம் தனித் தனியே இரண்டு தெய்வம் இல்லை.*
சிவம் *ஒன்றே* *அப்பனாய்* *அம்மையாய்* உள்ளது.
தாயுமான *சிவமே* *இறைவி* , சிவமே *இறைவன்* .
ஆதலால் அத்தெய்வம் இத் தெய்வம் என்று *இரண்டு பேச்சு பேசாமல் சிவச் சின்னம் கண்டு சிவனடியாரான பெருமைக்கு ஆனந்தம் அடைந்து தந்தை தாயாய் உள்ள சிவ பரம்பொருளின் மகிமை மட்டுமே பேசி வஞ்சனை இல்லாமல் தொழுது வழிபடும் மெய்யடியார்களின் இயல்பினைத்* திருக் கன்றாப்பூர் பதிகம் முழுவதும் திருநாவுக்கரசர் விளக்குகிறார்.
🔯 எவரேனும் தாமாக விலாடத்து இட்ட *திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி* உவராதே
அவர் அவரைக் கண்ட போது *உகந்து அடிமைத் திறம் நினைந்து* அங்கு *உவந்து* நோக்கி
*இவர் தேவர் அவர் தேவர் என்று இரண்டாட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணிக்* .
*கவராதே தொழும் அடியார்* நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடு தறியைக் காணலாமே. (அப்பர் )
⚜️ ஆன *நீற்றுக் கவசம்* அடையப் புகுமின்கள் (திருவாசகம்)
கங்காளன் பூசும் *கவசத் திருநீறு* (திருமந்திரம்)
✡️ *மந்திரம் நமச்சிவாய ஆக நீறு அணியப் பெற்றால்*
*வெந்து அறும் நோயும் வினையும்* வெவ்வழல் விறகு இட்டு அன்றே (அப்பர்)
என உடல் நோய், உயிர் நோய் ஆகிய கர்மம் பிறவி நீக்கி *உடலுக்கும் உயிருக்கும் கவசமாக இருக்கும் மதுரை ஆலவாய் அழகனின் விபூதி* மகிமையை ஒரு திருப் பதிகம் முழுவதும் தெய்வ பாலகர் போற்றுகிறார்.
*நீறு இல்லா நெற்றி பாழ்* என்றார் ஒளவையார்.
*கொன்றை வேந்தனுக்குப் பூ தரும் கொன்றை மரம் போல் உருத்திராட்ச நாயகனுக்கு கொட்டை மணி தரும் மரம்* என்று அறியாமல்,
*சிவபெருமான் நெருப்புக் கண்ணன் சூரியச் சந்திரச் சுடர் விழியன் மாசு இல்லா அருள் விழியன்* என்று தெரியாமல்,
*எல்லை யில்லாத ஆனந்தம் ஈசன் குணம்*
*இவ்வளவு சிறப்பு மிக்க ஏனாதி நாயனார் முக்திக்கு திருநாள் நமது நெல்லிக்குப்பம் எய்தனூர் ஆதிபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும்*🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment