Monday, September 29, 2025

ஆயுத பூஜை என்பது நவமி திதி



ஆயுத பூஜை..
மற்றும்செய்யும்முறைகள்....

எப்போதும் ஆயுத பூஜை என்பது நவமி திதி நாளில் தான் வரும்....

 நண்பகல் வரையில் தான் உள்ளது,,,அதை கணக்கீடு செய்தே கீழே நேரம் தரப்பட்டுள்ளது.......
பஞ்சாங்கம்அடிப்படையில்..

மற்றபடி ஞாயிறு மாலை தான் எங்களால் செய்ய முடியும் என்பவர்கள் உங்கள் விருப்ப படி செய்யலாம்......

ஆயுத பூஜை தினங்களில் வீடு, கடை, அலுவலகங்களில் பூஜை செய்து பின்னர் திருஷ்டி சுற்றி பூசணி காயை சாலையில் உடைக்காமல், ஓரமாக உடைத்து போட வேண்டும்.

பூஜிப்பது எப்படி ?

சரஸ்வதி பூஜைக்கு முதல்நாளே (அதாவது இன்று) பூஜை அறையைக் கழுவி சுத்தம் செய்து அலங்கரித்துக்கொள்ள வேண்டும். பூஜை அறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும்.

அதை பசுஞ்சாணத்தால் மொழுகி, கோலமிட்டு செம்மண் இட வேண்டும்.

 அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு. பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீளஅகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும்.

சரஸ்வதி பூஜை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜைக்குத் தயாராக வேண்டும். பூஜை மேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன் மீது அம்பாளின் திருவடிவம் அல்லது திருவுருவப் படத்தை வைத்து, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். 

அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைப் போட்டு மாவிலைகளை மேலே வைத்து, பூஜையைத் துவங்க வேண்டும்.

நவமி திருநாளில் நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப் படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங் களையும் பூஜையில் வைத்து வழிபடுவது விசேஷம் என்று பார்த்தோம் அல்லவா. 

அதன்படி குழந்தைகளின் பாடப்புத்தகங்களையே மேடையாக அடுக்கி8, அதன் மீது அன்னையை எழுந்தருளச் செய்யும் வழக்கமும் உண்டு. சிலர், சரஸ்வதிதேவியின் திருமுன் புத்தகங்களை அடுக்கிவைப்பார்கள்.

இப்படி எல்லாம் தயார் செய்தபிறகு, பூஜை நல்லபடியாக நிறைவேறவும், பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்தருளும் படியும் மனதார மனதார வேண்டிக்கொண்டு, 

உரிய துதிப்பாடல்களைப் பாடி, வணங்கவேண்டும். பின்னர் முறைப்படி தூப, தீப ஆராதனைகளைச் செய்யவேண்டும். நைவேத்தியமாக பழரசம், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், சித்ரான்னங்கள் ஆகியவற்றைப் படைத்து வழிபடவேண்டும்.

நன்றி,,,,

முடியாது என்பது வார்த்தையாக இருக்க வேண்டும்..!
முயற்ச்சியாக இருக்க கூடாது..!
முடியும் என்பது தன்னம்பிக்கையாக இருக்க வேண்டும்..!
தலைக்கனமாக இருக்க கூடாது..!

அனைவருக்கும் எங்கள் உள்ளங்கனிந்த ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகள்...!  

மக்களுக்கு நல்லக் கல்வி கிடைத்து வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று முன்னேற சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்கட்டும்.    

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசன் தரிசனம்.

சனி பிரதோஷம்  விரதம் இருந்தால் பாவங்கள் விலகி  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ புண்ணியம் சேரும். ~~~~~~~~~~~~~ சனிப்பிரதோஷ நாளில் விரத...