ஆவராணி ஸ்ரீ அனந்த நாராயண பெருமாளின் சிறப்புகள்!
காக்கும் தெய்வம் ஸ்ரீ மகாவிஷ்ணு. அவருக்கு இருக்கும் நாராயணன் என்கிற பெயரால் பஞ்ச நாராயண ஸ்தலங்கள் உள்ளன. பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்றாகவும் பஞ்ச நாராயண க்ஷேத்திரங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது திருக்கண்ணங்குடி.
நாகபட்டினம் மாவட்டத்தில் ஆபரண தாரி எனும் ஊரில் உள்ள ஸ்ரீ அனந்த நாராயணன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு சர்வ ஆபரணங்களையும் அணிந்து இருக்கும் பெருமாள் இருக்கின்ற ஊர் இது என்பதால், இதற்கு ஆபரண தாரி என்கிற பெயர் வந்தது ஆவராணி என்று மருவியுள்ளது
தலை வாயிலைக் கடந்து கோயிலுக்குள் சென்றால் மகாமண்டபத்திற்குச் செல்லும் முன்புறம் கருடனைக் காண முடியும். சன்னதியில் எழுந்தருளி இருக்கும் எந்த கருடன் வரப்பிரசாதி ஆவார்.
அர்த்த மண்டபத்தின் வலது பக்கம் ஆஞ்சநேயர் உள்ளார். மகாமண்டபத்தையும், அர்த்த மண்டபத்தையும் தாண்டி உள்ள கர்ப்ப கிரகத்தில் மூலவரான ஸ்ரீ அனந்த நாராயண பெருமாள் அரவணையில் துயில்கொள்ளும் மூர்த்தியாக அருளுகிறார்.
தென் திசை முடியை வைத்து, வட திசை பாதம் நீட்டியுள்ளார். 21 அடி நீளத்தில் 7ஏழு தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ளார் பெருமாள். இங்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த காட்சியை வேறெங்கும் காண முடியாது.
இந்த பெருமாள் அனைத்து ஆபரணங்களையும் அணிந்து கொண்டு இருக்கிறார். அதனால் இவருக்கு ஆபரண தாரி என்கிற பெயரும் வந்தது. அதுவே இந்த ஊரின் பெயராகி பின்னர் ஆவராணி என்று மருவியது.
சயன கோலத்தில் இருக்கும் ஸ்ரீ அனந்த நாராயண பெருமாள் தன்னுடைய ஒரு கையால் தன்னுடைய தலையைத் தாங்குகிறார். பெருமானுடைய இன்னொரு கை முழங்கால் வரை நீண்டுள்ளது. கன்னங்கரிய வடிவத்திலே தைலக்காப்புக்குள்ளே இருக்கிறார்.
சிரத்தின் மேல் மணிமகுடம், காதுகளில் குண்டலம், மார்பில் நலம் கிளர் ஆரம், உத்தரியம் தந்தை அணிந்து புஜங்களிலும் தகுந்த அணிந்துள்ளார்.
ஸ்ரீ நாராயண பெருமானின் நாபிக் கமலத்திலிருந்து பிரம்மா எழுந்துள்ள கோலத்தையும் காணலாம். கோயிலின் தென் பிரகாரத்தில் தனிச்சன்னிதியில் ஸ்ரீ அலங்கார வள்ளி தாயார் எழுந்தருளியுள்ளார்.
இக்கோயிலின் அருகிலேயே சற்று வடகிழக்கில் கோயிலுக்கான பெரிய திருக்குளம் உள்ளது. அனந்த புஷ்கரணி என்பது இக்குலத்தின் பெயர். இத்திருக்குளத்தில் நீராடி நியமங்களை எல்லாம் முடித்துக்கொண்டு, “அச்சுதா, அனந்தா, கோவிந்தா” என்று மூன்று முறை ஜபித்தால் சகல நன்மைகளையும் பெற்று இன்பமாக வாழலாம் என்பது ஐதீகமாகும்.
இக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் சிக்கலுக்குத் தென்மேற்கில் 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
No comments:
Post a Comment