'பிறவிக் கடன் போக்கியருளும்
பரமேஸ்வரர்' -
அருள்மிகு ரிணவிமோசனர்
திருக்கண்டீஸ்வரம்.
இவ்வுலகத்திலுள்ள மனிதப் பிறவிகள் எவ்வளவு பாக்கியங்களை அடைந்திருந்தாலும் இறைவனிடம் வேண்டுவது ஒரேயொரு விஷயம்தான்..!
அது 'கடன்' இல்லாத நிலை..!
வாழ்நாளில் பிறப்பது முதல் இறப்பது வரை எத்துணையோ கடன்கள் ஏற்பட்டு விடுகின்றன.
பெற்றவர் முதல் உற்றவர் வரை நமக்கு உண்டாகின்ற தீராக்கடன்கள் ஏராளம். ஆயினும்,
இம்மையில் வருத்திடும் கடன்களிலேயே மிகப்பெரியது பொருளாதாரக் கடன்.
இவ்விதமாக கடன், வ்யாதி மற்றும் வறுமையால் உண்டாகும் துக்கத்திலேயே ஜீவர்களின் பெரும்பாலான வாழ்க்கை கழிந்து விடுகின்றது.
இத்தகுப் பெருங்கடன்களைப் போக்கி பிறவிகளைக் குறைத்து நற்கதி அருளச் செய்கிறவர் சிவபெருமான் ஒருவரே என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆகச் சிறந்த மகரிஷிகளும்; தவயோகிகளும் கூட, இத்தீராக் கடன்களைப் போக்கியருளும்படி பெருமானை
வேண்டியிருக்கின்றார்கள்.
அவ்விதத்தில் தாரித்ரிய துக்கத்தினைப் போக்கிடும் படியாக,
*ஸ்ரீ வஸிஷ்ட மகரிஷியும்,*
*'தாரித்ரிய தஹன சிவ ஸ்தோத்திரம்'* என்கிற ஸ்தோத்திரத்தினை அருளிச் செய்துள்ளார்.
இதனைச் சோமவாரங்களில் பாராயணம் செய்வதன் மூலம்
எத்தகு கொடிய வறுமையும்; வ்யாதியும் நீங்கிடும் என்பது பலன்.
கடன் நிவர்த்திக்காக சிவாலயங்களில் உள்ள *ரிணவிமோசன லிங்கேஸ்வரரை* விளக்கேற்றி வழிபடுதல் சிறப்பான பலனைத் தந்திடுவதாக அமைகின்றது.
இத்தகு ரிணவிமோசன லிங்கத் திருமேனியினர் தனித்த சந்நிதியில் விசேஷமாக அமையப் பெற்றிருப்பதை *கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகர* வழித்தடத்தில் உள்ள *திருக்கண்டீஸ்வரம்* எனும் ஸ்தலத்தில் காண இயல்கிறது. மூலவர் *அருள்மிகு மார்கபந்து* பெருமான்.
மூலவருக்கு இணையாக மிக்கு வரப்ரசாதியாக விளங்கிடும் *ஸ்ரீ ரிணவிமோசகரை*
11 சோமவாரங்கள் தொடர்ந்து அர்ச்சித்து வணங்கி வந்திட தீராத கடன்களும் தீர்ந்து வளங்கள் நிறைவது இன்றளவும் கண்கூடு.
*வஸிஷ்ட மகரிஷியால்* வழிபடப்பெற்றுள்ள இந்த *ரிணவிமோசகருக்கு* சோமவாரங்களில் நிகழ்த்தப் பெறும் மஹா அபிஷேகத்துடன் கூடிய ரிண விமோசன சங்கல்ப பிரார்த்தனை இத்தலத்திற்கு மட்டுமே உண்டான சிறப்பு.
இச் சோமவார வழிபாட்டின் மூலம் இம்மையில் *ரிண விமோசனம்,* சத்புத்திரர்கள், தீர்க்க ஆயுள் உடன் சகல நலன்களையும் பெற்று,
ஸ்வர்க்கானுபவத்தினையும் அடைவர் என்பது *ஸ்ரீ வசிஷ்டமுனிவரின் வாக்கு*.
சோமவார தினங்களில் *ஸ்ரீ ரிணவிமோசகரை* தரிசித்து சங்கடங்கள் இல்லாத வளமான வாழ்வினை அடைய முயற்சிக்கலாமே...!
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment