Tuesday, October 21, 2025

மயிலாடுதுறை காவேரி துலா கட்டம்!

 காவேரி துலா கட்டம்! 
ஒவ்வொரு வருஷமும், ஐப்பசி மாதம் பூராவும்  கங்கை முதலான சர்வ புண்ய  தீர்த்தங்களும் காவேரி நதியில் அருணோதயத்தில் இருந்து சூரிய உதயத்திற்கு பின் 6 நாழிகை வரை(மொத்தம் 8 நாழிகை, அதாவது 3 மணி  12 நிமிஷம்)  வாஸம் செய்வதாக நம்பிக்கை. அந்த சமயத்தில் காவேரியில் நீராடினால் சகல பாவங்களும் தீர்ந்து விடும் என்று புராணங்கள் சொல்கின்றன. அதிலும் மாயவரத்தில் உள்ள துலா கட்டம் மிகவும் விசேஷம்.

இந்த துலா கட்ட ஸ்நானத்தைப்பற்றி 'தெய்வத்தின் குரலில்'' ஒரு கதை படித்தேன்.அதை சுருக்கமாக உங்களிடம் பகிர ஆசை.

•  ஸ்ரீ ராமபிரான் ராவணனைக்  கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றதை எல்லோரும் அறிவார்கள். ஆனால் கிருஷ்ணாவதாரத்தில் நரகாசுரனை கொன்றதால் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தோஷம் வந்தது பற்றி பலருக்குத் தெரியாது. அப்போது அவருக்கு 'வீரஹத்தி'என்ற தோஷம் ஏற்பட்டது. மஹா வீரனான ஒருவரைக் கொன்றால்  ஏற்படும் தோஷம்தான் வீரஹத்தி. நரகாசுரன் துஷ்டன் ஆனாலும் உண்மையான வீரன் ஆனதால் பகவான் இந்த தோஷத்துக்கு தம்மை ஆளாக்கிக் கொண்டார்.

இதனால் அவருடைய தேக காந்தி மங்கிப்போயிற்று. கைலாசத்துக்கு போய் ஈஸ்வரனிடம் இந்த தோஷம் விலகுவதற்கு ஒரு ப்ராயச் சித்தம் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

எல்லா ப்ராயச்சித்தங் களுக்கும் மேலான சர்வ ப்ராயச்சித்தம் கிருஷ்ண ஸ்மரணம் தான் என்று தெரிந்திருந்தாலும், சிவன் அவர் மக்களின் படிப்பினைக் காகவே இப்படி லீலை செய்கிறார் என்று புரிந்துகொண்டார்.

கொஞ்ச நேரம் யோசனை செய்துவிட்டு ,'இது துலா மாதம். சர்வ புண்ணிய தீர்த்தங்களும் காவேரியில் அருணோதயம் முதல் சூரிய உதயத்திற்குப் பிறகு 6 நாழிகை வரை வாசம் செய்கின்றன. காவேரியில் அந்த சமயத்தில்.ஸ்நானம் செய்தால் தோஷம் போய்விடும். அதிலும் மாயூரத்தில் (தற்போது மாயவரம்) துலா கட்டத்தில் ஸ்னானம் செய்வது விசேஷம்' என்று கூறினார். கூறியதோடு அல்லாமல் அவரும் கூடவே வந்தார்.

யமுனா தீர விஹாரி தீபாவளி அன்று நமக்கெல்லாம் கங்கா ஸ்நானம் அருளிச்செய்து, தான் இங்கு வந்து காவேரி ஸ்நானம் செய்தார். அதனால் அவரைப் பற்றி இருந்த தோஷம் போய் ஜகஜோதியாக விளங்கினார்.

 இந்த ஆச்சர்யத்தைப் பார்த்த தேவர்கள் ஈஸ்வரன், பெருமாள் இருவரையும் ஒன்றாக தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்று தாங்களும் காவேரி ஸ்நானம் செய்தார்கள்.

பூமாதேவி இந்த சந்தர்ப்பத்தில்தான் நரகாசுரன் ஞாபகமாக கங்கா ஸ்நானம் முதலிய வரங்களை கேட்டதாக காவேரி புராணத்தில் இருக்கிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

வில்வ மரம் பற்றிய தகவல்கள்...

வில்வ மரம் பற்றிய தகவல்கள்... 1)தீட்டுடன் வில்வ மரத்தின் அருகில் செல்லக்கூடாது, தொடக்கூடாது. தீட்டு என்பது, பிறப்பு, இறப்பு, மற்...