சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன?
சங்கம் என்றால் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே (சங்+கஷ்டம்) சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.
இந்த சங்கஷ்டமே பின்பு ‘சங்கட’மாக மருவி, உருமாற்றம் பெற்று விட்டது. சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாகும்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும்.
இது இருள் சூழும் மாலை நேரத்தில் வரும். நமக்கு வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்ட ங்களை தேய்த்து அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் இது. மனிதருக்கு மட்டும் அல்ல. தெய்வங்களும், தேவர்களும் கூட கஷ் டங்கள் வந்த போது, அவர்கள் பிள்ளையாரை வணங்கி நலம் பெற்றுள்ளனர்.
முன்பு ஒரு காலத்தில் பிரம்மன், சிவபெருமா னை தரிசிக்க திருக்கயிலாயத்திற்கு சென்றா ர். அப்போது நாரதர் அங்கே ஒரு கனியுடன் வந்திருந்தார்.அந்த தெய்வீகக் கனியை முருக னுக்கு கொடுக்கும் படி பிரம்ம தேவன் சிவபெ ருமானிடம் கூறினார். சிவனும் அந்த பழத்தை முருகனிடம் வழங்கினார். இதைப்பார்த்த மூத்த பிள்ளையான விநாயகருக்கு எரிச்சல் வந்தது.
அவர் பிரம்மதேவனை கோபத்துடன் பார்த்தார் விநாயகரின் கோப பார்வை பிரம்மனை அஞ்சி நடுங்கச் செய்தது.
தன் தவறை உணர்ந்த பிரம்மன், விநாயகரை நோக்கி, முழு முதற்பெருமானே, என் பிழை யை பொருத்தருள வேண்டும் என்று சொல்லி இரு கரம் குவித்து, தலை தாழ்த்தி உடம்பை குறுக்கிக் கொண்டு பணிந்து நின்றார்.
இக்காட்சியை அங்கு இருந்த சந்திரன் பார்த் தான். முனிவர்கள், ரிஷிகள் கூடியிருந்த சபையில் அடக்கமின்றி ஏளனமாய் சிரித்தான் சந்திரன்.
பெரியோர் கூடியுள்ள இடத்தில் பிரம்மனை பார்த்து, இகழ்ச்சியுடன் சிரித்த சந்திரனின் மீது விநாயகர் கோபப்பார்வை திரும்பியது. அவர் சந்திரனை பார்த்து, ‘பெரியோர்கள் கூடியுள்ள சபையில், அடக்கமின்றி சிரித்த சந்திரனே! உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகக்கடவது.
உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படா மல் மறைந்து போகட்டும்’ என்று சபித்தார். அப்போதே வானத்தில் சந்திரன் இல்லாமல் போனது. பவுர்ணமி பூஜை, அமாவாசை திதி எதுவும் நடைபெறவில்லை. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த இந்திரனும், தேவர் களும், சந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்கு மாறு விநாயகரை வேண்டினர்.
கருணைக்கடவுள் விநாயகர் மனம் மகிழ்ந்து ‘வருடத்தில் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள்’ என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை குறைத்து விட்டார்.
மேலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன். அவர்கள் புண்ணிய பேறுகளை அடைவர் என்றும் திருவருள் புரிந்தார்.
இதைக்கேட்ட சந்திரன் தன் தவறை உணர்ந்து விநாயகரை குறித்து கடும் தவம் இருந்தான். அவனது தவத்துக்கு மனம் மகிழ்ந்த விநாயகர் அவனுக்கு அருள்புரிந்து வளரும் வரத்தை கொடுத்தார்.
அவ்வாறு சந்திரன் வரம் பெற்ற நாள் தேய் பிறை சதுர்த்தி தினமாகும். ஆகவே சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்ததானது. வளர்பிறை சதுர்த்தி திதியை பார்த்தால் தீங்கு விளையும். பகவான் கிருஷ்ணர், செவ்வாய், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரத ம் இருந்து விநாயகரின் அருளை பெற்றனர்.
முற்பிறவியில் நாம் செய்த வினையின் பயனால், நமக்கு இப்பிறவியில் சங்கடங்கள் வரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால், அவர் எல்லாவிதமான இன்னல்க ளையும் போக்கி அளவில்லாத நன்மைகளை யும் தருவார்.
ஒவ்வொரு மாதமும் சங்கடஹரசதுர்த்தி வந்தாலும், விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் சதுர்த்தி ‘மகாசங்கடஹர சதுர்த்தி’ எனப்படும். அன்று வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
விரதம் இருக்கும் முறை
**************************
சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர் கள் அதிகாலை யில் எழுந்து நீராடி, அலங்கரி க்கப்பட்ட விநாயகப்பெருமான் சிலை அல்லது படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும்.
அவரை வழிபட சாஸ்திரம் படிக்க வேண்டும் என்பதில்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். முடிந்தவர்கள்,
'சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்!
பிரஸன்ன வதனம் தியாயேத்
ஸர்வவிக்ன உபசாந்தயே’ – எனக் கூறலாம்.
விநாயகப்பெருமானே உன்னை நினைத்து இந்த விரதத்தை தொடங்கி இருக்கிறேன். எந்த இடையூறும் இல்லாமல் நடத்தி கொடுத்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அன்று முழுவதும் விரதம் இருந்து விநாயகரை அருகம்புல்லினால் பூஜிக்க வேண்டும். நாவல்பழம், கொய்யா, பேரிக்காய், கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை படைக்கலாம்.
மாலையில் மீண்டும் நீராடி விநாயகரை இரவு சந்திரோதயத்தை பார்த்து வணங்க வேண்டும் விநாயகருக்கு படைத்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாக உட்கொள்வது சிறப்பு.
நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர் கள் பால், பழங்கள் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விரதம் மேற்கொள்பவர்கள் கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடுதல் பலனை அடைகிறோம்.
கிருத்திகை
கிருத்திகை நட்சத்திர நாளில் சொல்லவேண்டிய மந்திரமும்
விரத பலன்களும்.
ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெரு மானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.முருகப் பெருமானை, அவருக்குரிய கிருத்திகை நட்சத்திர தினத்தன்று வழிபட கூற வேண்டிய மந்திரம் இது.
மந்திரம்:
“ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி| தந்நோ க்ருத்திக: ப்ரசோதயாத்|”
இம்மந்திரத்தை கிருத்திகை நட்சத்திரத்தன்று காலையிலோ அல்லது மாலையிலோ, முருகன் கோவிலுக்கு சென்று முருக னுக்கு தீபாரதனை காட்டும் சமயத்தில் இம்மந்திரத்தை 9 அல்லது 27 எண்ணிக்கையில் கூறி வழிபட்டு, அந்த கோவி லில் 9 முறை பிரதிட்சணம் வர வேண்டும். இப்படி ஒவ்வொரு கிருத்திகை நட்சத்திரத்தன்றும் செய்து வந்தால், அந்த முருகப் பெருமானின் அருள் நமக்கு கிடைத்து . யோகங்களையும் பெற்று நமது எதிர்கால வாழ்வு சிறக்கும்.
கிருத்திகையில் மட்டும் நட்சத்தி ரங்கள் தாராளமாக இருப்ப தால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர் களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள். அது போல ஆடி கிருத்திகைக்கும் மிகுந்த சிறப்பு உண்டு. ஆடிகிருத்திகை தினத்தன்று ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியது எல்லாம் கிடைக் கும்.
கிருத்திகை நட்சத்திர
விரத பலன்கள்:
கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெரு மானை வழிபடுபவர்கள் நிறை வான அறிவு, நிலையான செல் வம், நீண்ட ஆயுள், அன்பும் பண் பும் நிறைந்த வாழ்க்கைத் துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறு களைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.
மேலும், இரவில் நித்திரை செய் யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணி நட்சத்திரத் தன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்க ளுடன் கூடி உணவுண்ண வேண்டும்.
வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங் கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண் டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன்.
முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம் என்னும் ஆறு பகைவர்களை முருகன் அழித்தார்.
முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபய கரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்க ளும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரம ளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்ற வையும் இருக்கும்.
கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தை தினந்தோறும் அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.
முருகப்பெருமானை வணங்க சஷ்டி திதி, விசாக நட்சத்திரம், கார்த்திகை மாதம், திங்கள், செவ்வாய், ஆகியவை உகந்தவை.
முருகன் கங்கையால் தாங்கப்பட் டதால் காங்கேயன் என்றும், சரவணப் பொய்கையில் உதித்ததால் சரவண பவன் என்றும், கார்த்திகை பெண்க ளால் வளர்க்கப்பட்டதால் கார்த் திகேயன் என்றும், சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டார்.
அக்னி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவை யே முருகன் ஆவார். மலைகளில் குடிகொண்டுள்ள குமர னுக்குச் சிலம்பன் என்றொரு பெயர் உள்ளது. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.
முருகனின் துதியை போற்றுவோம். துன்பம் இல்லாமல் நன்மையை பெறுவோம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment