உலகப் புகழ்பெற்ற 108 வைணவத் திவ்ய தேசங்களில் சோழநாட்டுத் திருப்பதியானதும்,
கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த இடமான
#தேரழுந்தூர் என்ற #திருவழுந்தூர்
#ஆமருவியப்பன்
(#தேவாதிராஜன்,
கோசகன்)
#செங்கமலவல்லிதாயார்
திவ்ய தேச திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻
திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில்தேரழுந்தூரில் அமைந்துள்ள 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்று.
வட மொழியில்கோசகன் என்று இப்பெருமாளைக் குறிக்கின்றனர். கோசகன் என்பதின் தமிழாக்கமே ஆமருவியப்பன் என்பதாகும். இப்பெயரும் மூலவருக்குண்டு.
மூலவர் : தேவாதிராஜன்
உற்சவர்: ஆமருவியப்பன்
தாயார் : செங்கமல வல்லி
தீர்த்தம் : காவிரி, தர்ஷன புஷ்கரணி
விமானம் : கருட விமானம்
புராண பெயர் : திருவழுந்தூர்
ஊர் : தேரழுந்தூர்
மாவட்டம்: மயிலாடுதுறை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
"செம்பொன்மதிள் சூழ்தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐயிரண்டும் உம்பர் வாளிக்கு இலக்காக உதிர்த்தவுரவோன் ஊர்போலும் கொம்பிலார்ந்த மாதவிமேல் கோதி மேய்ந்த வண்டினங்கள் அம்பராவும் கண்மடவார் ஐம்பலாணையும் அழுந்தூரே.
-திருமங்கையாழ்வார்.
சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம். இக்கோவில் திருமங்கை ஆழ்வாரால் 45 பாசுரங்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 10-வது திவ்ய தேசமாகும்.
மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட திருத்தலம். மூலஸ்தானத்தில் பெருமாளுடன் பிரகலாதனும் கருடணும் உள்ளனர்.
#தேரழுந்தூர் என்று ஊர் பெயர் வந்ததன் பின்னணி:
இத்தலத்தில் இறைவன் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த போது உபரிசரவசு என்ற தேவலோக அரசன் ஆகாய மார்க்கமாக தேரில் சென்றான். தன் தேரின் நிழல் , எதன் மீது விழுந்தாலும் அவை கருகிவிடும் வரம் பெற்றவன் அவன். இத்தலத்தில் பெருமாள் மாடு மேய்த்துக் கொண்டு இருந்த போது, அந்தத் தேரின் நிழல்பட்டு, பூமியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் இறைவன் பசுக்களைக் காப்பாற்ற அந்தத் தேரை தடுத்து நிறுத்தி, பூமியில் அழுத்தினார் . இவ்வாறு தேர் பூமியில் அழுந்திய ஊரே தேரழுந்தூர் என்று அழைக்கப்படுகிறது.
கவிச் சக்கரவர்த்தி கம்பர் இத்தலத்தில் பிறந்தவர்.
புராண வரலாறு:
பிரம்மா கிருஷ்ணரை வழிபட விரும்பினார் , எனவே கிருஷ்ணர் இல்லாதபோது, கோகுலத்திலிருந்து அனைத்து பசுக்களையும் கன்றுகளையும் எடுத்து தேரழுந்தூருக்குக் கொண்டு வந்தார். கிருஷ்ணர் கோகுலத்திற்குத் திரும்பியபோது, என்ன நடந்தது என்பதை உணர்ந்தார், ஆனால் தேரழுந்தூருக்குச் செல்வதற்குப் பதிலாக, அவர் மேலும் பசுக்களையும் கன்றுகளையும் உருவாக்கி, கோகுலத்திலேயே இருந்தார். பிரம்மா தனது தவறை உணர்ந்து, தேரழுந்தூரில் தனக்கு பிரத்யக்ஷம் கொடுக்கும்படி கிருஷ்ணரிடம் கேட்டார், அதை அவர் ஆமருவியப்பனாகச் செய்தார், அதனுடன் ஒரு பசுவும் கன்றும் இருந்தது. இந்தக் கோயிலில் உள்ள கர்ப்பக்கிரகத்தில் பெருமாள் ஒரு பசு மற்றும் ஒரு கன்றுடன் சித்தரிக்கப்படுகிறார்.
இங்கு விஷ்ணுவின் அருகில் காணப்படும் கன்று, சொக்கத்தோட்ட விளையாட்டின் போது சிவபெருமானின் சாபத்தின் விளைவாக பூமிக்கு வந்த அவரது சகோதரி பார்வதியைக் குறிக்கிறது. எனவே இந்த இடம் சிவன் மற்றும் பார்வதியின் திருமணத்துடன் தொடர்புடைய கோயில்களின் பட்டியலில் முதன்மையானது ( பார்வதி திருவாவடுதுறையில் பூமிக்கு வந்தார் , மேலும் விஷ்ணு ஒரு மாடு மேய்ப்பராக தெரெழுந்தூரில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்).
இந்திரன் ஒரு காலத்தில் திவ்ய தேசங்களில் ஏதேனும் ஒன்றில் கிரீடம் மற்றும் விமானத்தை வழங்கும்படி கருடனை நம்பினான். கருடன் (மைசூருக்கு அருகில் உள்ள) திருநாராயணபுரத்திலும், இங்குள்ள விமானத்திலும் (கோயிலின் விமானம் கருட விமானம் என்று அழைக்கப்படுகிறது) கிரீடத்தை வழங்கினான். எனவே கருடன் - பெரிய திருவடியாக - இங்கு சிறப்பு அந்தஸ்தைப் பெறுகிறார், மேலும் வெளியே ஒரு தனி சன்னிதிக்கு பதிலாக, இறைவனுக்கு அடுத்த கர்ப்பக்கிரகத்தில் இடம்பெறுகிறார்.
பொது தகவல்:
மூலவர் தேவராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் ஆனவர். மூலஸ்தானத்தில் பார்வதி பசு ரூபத்தில் உள்ளார். மார்க்கண்டேய முனிவர் பிறவா வரம் பெற, ஆமருவியப்பனை வணங்கினார். இதனால் இவரை ஆமருவியப்பன் தன் அருகிலேயே வைத்துக்கொண்டார். பக்த பிரகலாதனும் மூலஸ்தானத்தில் உள்ளார். மூலஸ்தானத்தில் உற்சவர், தாயார் மூவரும் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். மூலவரின் மேல் உள்ள விமானம் கருட விமானம். தர்மதேவதை, உபரிசரவசு, காவிரி, கருடன், அகத்தியர் ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.
#தலபெருமை:
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இங்கு மட்டுமே திருமங்கையாழ்வார் தாயாரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார். கிழக்கு பார்த்து அமைந்த இந்த கோயிலுக்கு நேர் எதிரில் மேற்கு பார்த்த சிவன் கோயில் உள்ளது. அங்கு தான் இவர்கள் சொக்கட்டான் ஆடிய மண்டபம் உள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பன் இத்தலத்தில் தான் பிறந்தார்.
#தலப்பெயர் விளக்கம்:
உபரிசரவசு என்ற மன்னன் வானில் தேர் வரும் போது, அதன் நிழல் எதன் மீது பட்டாலும் அது கருகிவிடும்படி வரம் பெற்றிருந்தான். இவன் மேலே சென்றபோது அதன் நிழல் கண்ணனின் மீதும் அவர் மேய்த்துக்கொண்டிருந்த பசுக்களின் மீதும் பட்டது. பசுக்கள் துன்பம் அடைந்தன. இவனது செருக்கை அடக்க நினைத்தார் கண்ணன். அவனது தேர் நிழல் மீது தன் திருவடியை வைத்து அழுத்தினார். மன்னனின் தேர் கீழே அழுந்தியது. அத்துடன் அவனது ஆணவமும் அழுந்தியது. இதனால் தான் இத்தலம் “தேரெழுந்தூர்’ ஆனது.
#கருட விமானம்:
ஒரு முறை தேவேந்திரன் கருடாழ்வாரிடம் ஒரு விமானத்தையும் வைரமுடியையும் கொடுத்து, “”108 திருப்பதிகளுள் எந்த பெருமாளுக்கு எது உகந்ததோ, அதை கொடுத்து விடு” என்றான். அதன் படி மைசூர் அருகே திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு வைர முடியை கொடுத்துவிட்டு, தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்க விமானத்தை கொடுத்தார் கருடன். இதனால் இங்குள்ள விமானம் கருட விமானம் ஆனது. அத்துடன் கருடன் பெருமாளின் அருகில் இருக்கும் பாக்கியமும் கிடைத்தது. பெரும்பாலான கோயில்களில் கருடன் சன்னதி பெருமாளுக்கு எதிரில் இருக்கும்.
#தலவரலாறு :
பெருமாளும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடிய போது பார்வதிதேவியை நடுவராக நியமித்ததில், காய் உருட்டும் போது சகோதரனான பெருமாளுக்கு சாதகமாகக் கூற, சிவபெருமான் பார்வதி தேவியைப் பசுவாக மாற சாபமிட, அவருக்கு துணையாக சரஸ்வதி தேவியும் லட்சுமி தேவியும் பசுவாகி பூமிக்கு வந்த போது மேய்ப்பவராக பெருமாள் ’ஆ’மருவியப்பன் எனும் பெயரில் வந்த திருத்தலம்.
இக்கோவிலில் மூலவர் ஸ்ரீதேவாதிராஜன் என்ற பெயரிலும், உற்சவர் ஆமருவியப்பன் என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். ஆமருவியப்பன் என்றால் பசுவை மேய்ப்பவன் என்று பொருள். இத்தலத் தில் இறைவன் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த போது உபரிசரவசு என்ற தேவலோக அரசன் ஆகாய மார்க்கமாக தேரில் சென்றான். அந்த தேரின் நிழல்பட்டு, பூமியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் இறைவன் பசுக்களை காப்பாற்ற அந்த தேரை தடுத்து நிறுத்தி, பூமியில் அழுத்தினார் . இவ்வாறு தேர் பூமியில் அழுந்திய ஊரே தேரழுந்தூர் என்று அழைக்கப்படுகிறது.
பசுக்களுக்கு ஆபத்து ஏற்படுத்திய அரசனுக்கு கோஹத்தி தோஷம் உண்டாகவே, மன்னன் சுவாமிக்கு ஆயிரம் குடங்கள் வெண்ணை சமர்ப்பித்து முறையிட்டு, பிரார்த்தனை செய்து, கோஹத்தி சாபம் நீங்கப்பெற்றான் என்பது வரலாறு.
கருட விமானம் :
இந்த கோவிலில் கருட விமானம் உள்ளது மற்றொரு சிறப்பாகும். 107 திவ்ய தேசங்களிலும் சுவாமியின் எதிரே உள்ள கருடாழ்வார், இந்த தலத்தில் மட்டும் சுவாமிக்கு விமானம் கொடுத்து சுவாமிக்கு பக்கத்திலேயே அருள் பாலிக்கிறார்.
மேலும் சுவாமிக்கு வலது புறத்தில் பிரகலாதன் இத்தலத்தில் மட்டுமே உள்ளார். உக்கிரமாக காட்சியளித்த சுவாமியிடம் பிரகலாதன், சாந்த சொரூ பியாக, கண்ணன் உருவில் காட்சிதர வேண்டுகோள் வைத்ததை தொடர்ந்து, இத்தலத்தில் பிரகலாதனை அருகில் வைத்துக்கொண்டு சுவாமி கண்ணனாக சாந்த சொரூபியாக காட்சி அளிக்கிறார். மேலும் இத்தலம் மார்க்கண்டேயன் தவம் செய்த தலமாகும்.
தல தீர்த்தம்
இக்கோவிலின் முன்பு தரிஷ புஷ்கரணி உள்ளது. தரிஷம் என்றால் அமா வாசை. அமாவாசை யன்று உருவானதால் இது தரிஷ் புஷ்கரணி எனப்படுகிறது. மேலும் கஜேந்திர புஷ்கரணி என்ற தீர்த்தமும் உள்ளது.
#கம்பர் சிலை:
கவி சக்கரவர்த்தி கம்பர் தேரழுந்தூரில் தான் பிறந்தார். இதனால் இக்கோவிலில் கம்பருக்கு புடைப்பு சிற்பம் உள்ளது. இந்த சிலை சேதமானதால் 1972-ல் அமைக்கப்பட்ட புதிய சிலையும் அதன் அருகிலேயே உள்ளது. இக்கோவிலின் எதிரில் சிவாலயமான வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளதும் சிறப்பம் சமாகும்.
அகத்திய முனிவருக்கு சைவ கோவிலில் தான் சிலைகள் இருக்கும். ஆனால் இக்கோவிலில் அகத்தி யருக்கு சிலை இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் எதிரே தனிக்கோவிலில் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
தேவாதி ராஜப் பெருமாள் இங்கு நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கின்றார். பெருமாளுக்கு இடது புறம் கருடாழ்வாரும். வலதுபுறம் பிரகலாதனும் இருக்கிறார்கள். காவிரித் தாய் பெருமாளை மண்டியிட்டு சேவித்துக் கொண்டிருக்கிறாள். கம்பரின் அவதார தலம் இது. கம்பர், நரசிம்ம அவதாரம் பற்றி இங்குதான் பாடினார். கம்பருக்கும், அவர் மனையாளுக்கும், கோவிலுக்குள் சிலை எழுப்பியிருக்கிறார்கள். திருமங்கையாழ்வாராலும், மணவாள மாமுனிகளாலும் மங்களா சாஸனம் செய்யப் பெற்ற திவ்ய தேசம் இது.
கோயில் அமைப்பு:
வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் வலப்புறம் கம்பர் சன்னதியில் கம்பரும் அவருடைய மனைவியும் உள்ளனர். அடுத்து ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. அருகே பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்துள்ள கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது திருச்சுற்றில் வலது புறத்தில் தேசிகர் மடப்பள்ளி, ஆழ்வார் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. இடது புறம் ஆண்டாள் சன்னதி உள்ளது. சற்று உயர்ந்த தளத்தில் மூலவர் தேவாதிராஜன் நின்ற நிலையில் கிழக்கு நோக்கி உள்ளார். இடது புறம் கருடாழ்வாரும், வலப்புறம் பிரக்லாதாழ்வாரும் உள்ளனர். இடது கையில் ஊன்றிய கதை உள்ளது. இடது புறம் காவிரித்தாய் மண்டியிட்ட நிலையில் உள்ளார். கோயிலின் எதிரே குளம் உள்ளது. பெரிய திருமொழி ஏழாம் பத்து ஐந்தாம் திருமொழி கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது.
மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட திருத்தலம். மூலஸ்தானத்தில் பெருமாளுடன் பிரகலாதனும் கருடணும் உள்ளனர்.
இங்கு யோக நரசிம்மர், வாசுவேதர், விஷ்வக்சேனர், தேசிகர், ராமபிரான், ஆஞ்சநேயர், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.இங்குத் தருமதேவதை, உபரிசரவசு, கருடன், காவிரி, அகத்தியர் ஆகியோர் பெருமாளை வழிபட்டுப் பேறு பெற்றவர்கள். இங்குப் பெருமாள் ருக்குமணி, சத்திய பாமாவுடனும் பசுங்கன்றுடனும் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீ கிருஷ்ணனாகத் காட்சி தருகிறார். கண்ணபிரானால் மேய்க்கப்பட்டிருந்த பசுக்களை ஒருசமயம் நான்முகன் கவர்ந்து சென்றான். அதை அறிந்த கண்ணபிரான் மாயையால் வேறு பசுக்களைப் படைத்தார். பிரமன் தன் தவற்றை உணர்ந்து வேண்டப் பெருமாள் ஆமருவியப்பன் என்னும் திருப்பெயரோடு இத்தலத்தில் எழுந்தருளினார்.
அரசனின் ஆணவத்தை அடக்கிய கிருஷ்ணர்:
ஒருதடவை இப்பகுதி அரசன் 999 குடத்தில் வெண்ணை வைத்து ஒரு குடத்தை காலியாக வைத்து கிருஷ்ணரை ஏமாற்றினான். அவனுக்கு பாடம் புகட்ட நினைத்த கிருஷ்ணர், ஒரு குடத்தில் வெண்ணையும் 999 குடங்கள் காலியாகவும் செய்து, அந்த அரசனின் ஆணவத்தை அடக்கினார்.
தேரழுந்தூர் (இதுதான் சரியான பெயர், சமீப காலமாக இது தெரழுந்தூர் என்று சிதைக்கப்பட்டுள்ளது), தமிழில், தேர் தரையிறக்கப்பட்ட இடம் என்று பொருள் ( தேர் = தேர், அழுந்து = தரையிறங்குதல், ஊர் = இடம்). இந்த இடம் எப்படிப் பெயர் பெற்றது என்பது பற்றி பல ஒத்த கதைகள் உள்ளன, இவை அனைத்தும் உபரிச்சரவசு (வாசு என்று பெயரிடப்பட்டது, மேலும் உபரிச்சர என்ற முன்னொட்டு அவரது பறக்கும் தேரைக் குறிக்கிறது. சமஸ்கிருதத்தில், உபரி = மேல் / மேல், மற்றும் சர = நகர்வு)...
தேரின் நிழலில் வந்த அனைத்து உயிரினங்களும் எரிந்து போகும். விஷ்ணு மற்றும் இங்குள்ள பசுக்கள் மீது அவர் பறக்கவிருந்தபோது, இறைவன் தனது பெருவிரலை தரையில் பலமாக அழுத்தி, தேரை பூமிக்கு வரச் செய்தார்.
அவரது ராணி இறைவனை வணங்க விரும்பியபோது, உபரிசரவாசு தேரை நிறுத்த மறுத்துவிட்டார். இது விஷ்ணுவை எரிச்சலடையச் செய்தது, அவர் தேரை பூமிக்குக் கொண்டு வந்தார்.
தவம் செய்யும் முனிவர்கள் மீது அந்த தேர் பறந்து செல்லும், அது அவர்களை வருத்தப்படுத்தியது, அதனால் அகஸ்தியர் முனிவர் அதை பூமிக்குக் கொண்டு வந்தார்.
தேரழுந்தூர் சோழர்களின் தலைநகராக இருந்தது, கரிகால சோழன் தனது காலத்தில் (கி.பி. 1 ஆம் நூற்றாண்டு) மூலக் கோயிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது . கட்டமைப்பு கட்டுமானத்தைப் பொறுத்தவரை, இது 11 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்ட ஒரு இடைக்கால சோழ கோயில் . இந்தக் கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் விக்ரம சோழன் (11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி ) காலத்திலும் , 14 ஆம் நூற்றாண்டில் பிற்கால சோழ மன்னர்களாலும் விரிவுபடுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
*திருமங்கையாழ்வார்:
தேரழுந்தூர் கோவிலுக்குப் போகிறவர்கள், கோவிலின் வெளிப் பிராகாரத்தில் 'திருமங்கை மன்னன் மண்டபத்தில் திருமங்கையாழ்வாரின் சந்நதியைக் கண்டு வியப்பார்கள். ஆமாம், கோவிலுக்குள்ளேயே ஆரோகணித்திருக்க வேண்டிய இவர், ஏன் வெளியே வந்தார்?
ஒவ்வொரு தலமாகச் சென்று பெருமாளைத் தரிசித்து மங்களாசாசனம் செய்துவந்த ஆழ்வார், இந்தக் கோவிலுக்கு வந்தபோது தயங்கினார். இது பெருமாள் கோவில்தானா என்று அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது. மூலவர் பெயர் தேவாதிராஜன் என்று கேள்விப்பட்ட அவர், அது தேவர்களுக்கெல்லாம் ராஜனான இந்திரனோ என்று யோசித்தார்.
திருமால் தலங்கள் தவிர பிறிதொன்றில் ஆர்வம் கொள்ளாதிருந்த திருமங்கையாழ்வார், ஒரு முடிவுக்கு வந்து, அந்தத் தலத்தை விட்டுப் புறப்பட்டார். நாலடி தூரம் கூட நடந்திருக்க மாட்டார், பளிச்சென்று, அடுத்த அடி எடுத்து வைக்க முடியாதபடி உடலில் பலவீனம் ஏற்பட்டது. அதுவரை உற்சாகமாக, ஆரோக்கியமாக இருந்த தனக்கு திடீரென்று என்ன வந்தது? மெல்லத் திரும்பிக் கோவிலைப் பார்த்தவர் அப்படியே பரவசமானார். உள்ளிருந்து பெருமாள் அவரைப் பார்த்து, ‘‘இங்கிருப்பது உன்னைக் கவர்ந்தவனான நான்தான். மயங்காதே, உள்ளே வா,’’ என்று அழைப்பது போலிருந்தது. அதேகணம் அவருடைய சோர்வு முற்றிலும் நீங்கியது.
உடனே உள்ளே ஓடோடிச் சென்று பரந்தாமனைக் கண்களால் ஆரத் தழுவினார். பாதம் பணிந்து நெக்குருகினார். இந்தத் தலத்தை விடுத்து வேறொரு தலம் செல்ல நினைத்த தன் கால்களுக்கு அருள் விலங்கிட்டுத் தடுத்த இந்த இறைவன், தன் தந்தையாரான வசுதேவரின் கால்களில் கம்சன் பூட்டிய விலங்கை அறுத்தெறிந்த கிருஷ்ணனாக அல்லாது வேறு யாராக இருக்க முடியும் என்ற தெளிவுக்கு வந்தார்.
உடனே மடை திறந்த வெள்ளம்போல பாசுரங்கள் பொங்கிப் பெருகின. ஆமாம், மொத்தம் 45 பாசுரங்களால் இந்த தேவாதிராஜனை மங்களாசாசனம் செய்தார் திருமங்கையாழ்வார். அவற்றில், செங்கமலவல்லித் தாயாரையும் இணைத்துப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அப்படித் தான் ஆட்கொண்ட ஆழ்வாருக்கு இன்றைக்கும்கூட முக்கியத்துவம் தந்து சிறப்பிக்கிறார் பெருமாள். ஆமாம், ஒவ்வொரு நாளும் காலை, மாலை இரு வேளைகளிலும் தனக்கு அமுது நிவேதிக்கப்பட்ட பிறகு, அந்த அமுதினை கோவிலின் அனைத்து மரியாதைகளுடன் ஆழ்வாருக்கும் சமர்ப்பிக்குமாறு பணிக்கிறார்.
இது மட்டுமல்ல, தேவாதிராஜன், உற்சவர் ஆமருவியப்பனாக திருவீதிப் புறப்பாடு போகிறார் என்றால், அவர், முதலில் நிற்பது திருமங்கையாழ்வார் சந்நதி முன்பாகத்தான். குடை, சாமரம், தீவட்டி, மங்கள வாத்தியங்கள் என்று எல்லா மரியாதைகளுடன், ஆழ்வாருக்கே முதலில் சடாரி ஆசி அருளி திவ்யமாய் தரிசனம் தருவார். அதற்குப் பிறகே திருவீதி உலா ஆரம்பிக்கும். சம்பிரதாயப்படி கோவிலிலிருந்து சுவாமி புறப்பாடு தொடங்கும்போதே அடியவர்கள் பிரபந்தங்கள் பாடுவார்கள். ஆனால் இந்தக் கோவிலில் மட்டும் ஆமருவியப்பன் ஆழ்வாருக்குத் தன் முதல் தரிசனம் தந்த பிறகு, இவர் சந்நதியிலிருந்துதான் பாட ஆரம்பிப்பார்கள்.
இது மட்டுமல்ல, இங்கே திருமங்கையாழ்வாருக்கு, திருக்கார்த்திகைப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். வைபவத்தின் பத்தாம் நாளன்று, ஆமருவியப்பன் தன் கருவறையிலிருந்து உற்சவராகப் புறப்பட்டு இந்த ஆழ்வார் சந்நதிக்கு வந்து தங்குவார். இங்கேயே மண்டகப்படி கண்டு, ஆழ்வாருக்கு ஆசி வழங்குகிறார்!
*பிரார்த்தனை:
இத்தலத்து தேவாதி ராஜபெருமாளை வணங்கினால், காணாமல் போனவர்கள் வீடு திரும்பவும், தொலைந்து போன பொருட்கள் மீண்டும் கிடைக்கவும், மேல் அதிகாரிகளின் அராஜகத்தில் இருந்து விடுபடவும், திருமணத்தடை நீங்கவும் வழி பிறக்கின்றது.
மயிலாடுதுறையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம், தேரழுந்தூர்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment