Tuesday, November 4, 2025

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்...

*கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்...
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். 

வரலாறு :-

சங்க காலத்தில் கொல்லிமலையானது சதுரகிரி என்றும், தர்மதேவதை கொல்லி மலையாக இருப்பதால் ’அறமலை’ என்றும் அழைக்கப்பட்டது.

அம்பலவாண கவிராயர் இத்தலத்து இறைவன் மீது அறப்பளீஸ்வரர் சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார்.

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தமது தேவாரப் பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

இத்தலத்து சிவபெருமான் சுயம்பு மூர்த்தி. இறைவன் அறப்பளீஸ்வரர், அன்னையின் பெயர் அறம்வளர்நாயகி என்பதாகும். அறை என்றால் மலை, பள்ளி என்றால் தங்கியிருப்பவர் என்று பொருள். மலையின்மீது ஆலயம் அமைந்துள்ளதால் அறைப்பள்ளீஸ்வரர் என்று இறைவன் அழைக்கப்பட்டார்.

ஆனால் காலப்போக்கில் இப்பெயர் மருவி அரப்பளீஸ்வரர் என்று தற்போது மக்களால் அழைக்கப்படுகிறார்.

வழிபட்ட மன்னர்கள் :-

தஞ்சை பெருவுடையார் கோயில் கட்டிய ராஜராஜ சோழனின் பெரிய பாட்டியும், சிவஞான கண்டராதித்த சோழ தேவரின் மனைவியுமான செம்பியன் மாதேவி, விஜயநகர அரசர் வேங்கடபதி, சோழ மன்னர்கள் பராகேசரிவர்மன், குலோத்துங்க சோழன், பராந்தக சோழன்.

மீன் :-

இத்தலத்தல தீர்த்தத்தில் உள்ள மீன்களைப் பக்தர்கள் ஒருமுறை சமைக்க, அவை உயிர்பெற்று நதியில் குதித்ததால் அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர் என்று இங்குள்ள சிவபெருமான் வழங்கப்படுகிறார்.

ஆகாய கங்கை  :-

கோவிலின் அருகில் ஆகாய கங்கை அருவி உள்ளது.கோரக்க சித்தர், காலாங்கிநாத சித்தர் ஆகியோர் தங்கியிருந்த குகைகள் அருவிக்கு சற்று தூரம் தள்ளி அமைந்துள்ளன.

ஓரி :-

ஓரி மன்னர் அரசாண்ட பகுதியாதலால் கோவிலிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள செம்மேடு பகுதியில் அம்மன்னனுக்கு சிலை உள்ளது. ஆடிப்பெருக்கன்று விழா எடுக்கப்படும். மலைவாழ் மக்கள் நிகழ்ச்சிகளும் நடைபெறும்..

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்...

*கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்... நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமா...