Wednesday, November 19, 2025

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள்:

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள்:
திருக்கூடலூர் என்ற திவ்ய தேசம் திருவையாறிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள வைணவத் திருத்தலம். இது ஆடுதுறைப் பெருமாள் கோயில் மற்றும் சங்கம ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆடுதுறைப் பெருமாள் கோயில் (திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் திருக்கோயில்)
ஊர்: திருக்கூடலூர்
மாவட்டம்: தஞ்சாவூர்
மூலவர்: வையம் காத்த பெருமாள் (ஜகத்ரட்சக பெருமாள்)
உற்சவர்: வையம் காத்த பெருமாள்
தாயார்: பத்மாசினி தாயார் (புஷ்பவல்லி தாயார்)
உற்சவர் தாயார்: புஷ்பவல்லி தாயார்
தீர்த்தம்: சக்ர தீர்த்தம்

திருமால் வராஹ அவதாரமெடுத்துப் பூமிக்குள் புகுந்தது இந்த இடம் தான் என்று புராணங்கள் பேசுகின்றன. இதனைத் திருமங்கைஆழ்வாரின் பாசுரத்தில் நாம் காணலாம். வராஹம் பூமியை இங்கே உள்புகுந்து ஸ்ரீமுஷ்ணத்தில் வெளியே எழுந்து ஸ்ரீதேவி தாயாரோடு அங்கு காட்சி அளிக்கிறார்.

கூற்றேரு ருவிற் குறளாய் நிலநீ

ரேற்றா னெந்தை பெருமானூர் போல்

சேற்றேர் உழவர் கோதை போதூண்

கோற்றேன் முரலுங் கூடலூரே.

அம்பரீஷ வரதர்

அம்பரீஷன் என்ற மன்னர், திருமால் மீது தீவிர பக்தி கொண்டு, தன் படைகள் மீது கவனம் செலுத்தாமல் இருந்தார். எதிரிகளிடம் தன் நாட்டை இழந்த நிலையிலும், திருமாலின் திருநாமத்தையே உச்சரித்து, அவருக்காக விரதங்கள் மேற்கொண்டு வந்தார். 

ஒருசமயம் ஏகாதசி விரத நாளில், மன்னரை சந்திக்க துர்வாச முனிவர் வந்தபோது, மன்னர் அவரை கவனிக்கவில்லை. கடும் கோபத்துக்கு ஆளான முனிவர், மன்னரை சபித்தார். வருந்திய மன்னர், தன்னைக் காக்குமாறு திருமாலிடம் வேண்டினார்.

 தன் பக்தனை காப்பதற்காக, முனிவர் மீது சக்ராயுதத்தை ஏவினார் திருமால். தனது தவறை உணர்ந்த முனிவர், திருமாலிடம் மன்னிப்பு கோரினார். திருமால் முனிவரை மன்னித்தருளினார். 

அம்பரீஷன் திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, பெருமாளுக்கு கோயில் கட்டி வழிபட்டார். இதன் காரணமாக, பெருமாளுக்கு ‘அம்பரீஷ வரதர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு பெருமாளின் சக்கரமே பாதுகாப்பு என்பதற்கு ஏற்ப, பெருமாள் தன் கையில், கிளம்புவதற்கு தயார் நிலையில் இருக்கும் பிரயோகச் சக்கரத்தை வைத்துள்ளார்.

கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் வையம் காத்த பெருமாள் (உய்யவந்தார்) கையில் செங்கோல் ஏந்தி அருள்பாலிக்கிறார். தாயார் பத்மாசினி (புஷ்பவல்லி) தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். வரதராஜப் பெருமாள், ஆண்டாள், ஆழ்வார்களுக்கு தனி சந்நிதிகள் உள்ளன. 

கோயில் மண்டபத் தூண்களில் ராணி மங்கம்மா, அவரது அமைச்சர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கருவறைக்கு பின்புறத்தில் உள்ள பலா மரத்தில் சங்கு வடிவம் தோன்றியுள்ளது. பெருமாளின் சக்கரம் துர்வாச முனிவரை துரத்திச் சென்றபோது, இங்கு பிரதானமாக சங்கு இருந்துள்ளதை உணர்த்தும்விதமாக, தல விருட்சத்தில் சங்கு வடிவம் உள்ளது.

 பெருமாளுக்கு கற்கண்டு, வெண்ணெய் படைத்து வணங்கினால் செல்வம் பெருகும், குடும்ப வாழ்க்கை சீர்படும் என்பது நம்பிக்கை.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...