Friday, December 19, 2025

திருகருப்பறியலூர் : குற்றம் பொறுத்த நாதர் சிவாலயம்.

திருகருப்பறியலூர் : குற்றம் பொறுத்த நாதர் சிவாலயம்
"சுற்றமொடு பற்றவைதுயக்கற அறுத்துக்
குற்றமில் குணங்களொடுகூடும்அடி யார்கள்
மற்றவரை வானவர்தம்வானுலக மேற்றக்
கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே"

என சம்பந்தபெருமானால் பாடபட்ட தலம் இது, தேவாரம் பாடபட்ட 27ம் தலம்

காவேரி கரையில் கும்பகோணம் மணல்மேடு அருகே அமைந்துள்ள ஆலயம் திருகருப்பறியலூர், தென்னக சிவாலயங்களில் மிக பெரும் வரலாற்றை கொண்டதும் நீண்ட பக்தர் வரிசை கொண்டதுமான ஆலயம் இது, மிக பிரசித்தியானது

ஒரு காலத்தில் முல்லை மலர்கள் நிறைந்த தலம் இது, அங்கே சுயம்புவாக சிவன் எழுந்தருளினார் ரிஷிகளும் தேவர்களும் அப்போதே வணங்கிய இந்த லிங்கம்  சிவனின் பெரும் கருணையான நிகழ்வுக்கு பின் "குற்றம் பொறுக்கும் நாதர் தலம்" என்றாயிற்று
இந்திரனுக்கு ஆணவம் அதிகம் அவன் ஒருமுறை சிவனை காண சென்றபோது பூதம் அவனை மறித்து அனுமதி இல்லை என்றது, அவன் அதை மீறி செல்ல முயன்றபோது பெரும் சண்டை மூண்டது , தோற்றுகொண்டிருந்த இந்திரன் தன் பலமான வஜ்ராயுதத்தை எடுத்து பூதம் மேல் வீசினான் அது முறிந்துபோனது , இந்திரன் அதுகண்டு திகைக்கும் போது பூத உருவை கலைத்து ஈசன் தன்னை வெளிகாட்டினார், இந்திரன் அவரை பணிந்தான்

அறியாமல் அவன் செய்த பாவத்தை சிவன் மன்னித்து இந்த தலத்தில் வழிபட சொன்னார், அப்படியே இந்திரன் இங்கு வழிபட்டான் அவன் குற்றங்களை பொறுத்ததால் சிவன் "குற்றம் பொறுக்கும் நாதர்" என்றானார்

ஆம் இங்கு அறிந்தும் அறியாமலும் செய்யபடும் பாவங்களெல்லாம் மன்னிக்கபடும், குற்றமெல்லாம் மன்னிக்கபடும், இது இந்திரனோடு மட்டும் நின்றுவிடவில்லை வரிசை இன்னும் நீண்டது

சூரியன் சிவனை அவமானபடுத்தி தட்சன் செய்த யாகத்தில் பங்கேற்றான் அதனால் அவன் ஒளி குன்றிபோயிற்று, அவன் தன் குற்றம் தீர இந்த தலத்தில் வந்து வணங்கி நலம் பெற்றான்

இதனால் இத்தலம் "அருக்கன் வழிபட்ட ஆதித்தபுரி" என்றுமாயிற்று, சூரியன் உருவாக்கிய தீர்த்தமே சூரிய தீர்த்தம் என்றுமாயிற்று

ராவணின் மகன் இந்திரஜித்தன் இந்திரனையே வென்ற பராக்கிரமசாலி, புலஸ்தியர் மகரிஷி வம்சாவழியான அவன் தன் தேரில் வானில் சஞ்சரிக்கும் போது அவன் ரதம் இந்த தலம் மேல் செல்லும்போது செயல்பட மறுத்து ஸ்தம்பித்தது, அதனால் குழம்பியவன் இங்கு வந்து இந்த சிவனை வணங்கியபோது அது மீண்டும் செயல்பட்டது

இந்த சக்திவாய்ந்த லிங்கத்தை பெயர்த்தெடுக்க விரும்பிய இந்திரஜித்தன் அதனை பெயர்த்தேடுக்க போராடி மயங்கி வீழ்ந்தான், விஷயம் அறிந்த ராவணன் ஓடிவந்து தன் மகனுக்காய் மன்னிப்பு கேட்டு அவனை மீட்டு கொண்டான் அவன் குற்றமும் பொறுத்து சிவன் அருள் வழங்கிய தலம் இது

இந்திரன் தனக்கு ஆபத்து வரும்போதெல்லாம் இங்கு ஓடிவருவான், ஒருமுறை அப்படி அவன் ராவணனால் விரட்டபட்டபோது இங்கு சரணடைந்தான், அவன் இருக்குமிடத்திற்குள் செல்லமுடியா சூரப‌த்மன் அதாவது சிவாலயத்தில் அடைக்கலமான இந்திரனை பிரிக்க நினைத்து வறட்சி வரும்படி வான் மழை மேகத்தை எல்லாம் தடுத்தான்

அப்போது விநாயகபெருமான் மேற்கே அகத்திய முனி கமண்டலத்தை தட்டிவிட்டு அது காவேரியாய் பெருக செய்து இந்த பகுதியினை செழிக்க செய்தார், காவேரி உருவாக காரணம் இந்த தலம்

இன்னும் இன்னும் அதிசயங்கள் நீளும், சப்த ரிஷிகளான ஆங்கிரஸ் உட்பட ஏழு முனிவர்களும் இன்னும் பல மகா முனிகளும் சேர்ந்து  72 பேர் இங்கு வணங்கி முக்தி பெற்றனர் மீண்டும் பிறவா நிலை அடைந்தனர்

மீண்டும் ஒருவனை கருப்பையில் பிறக்க வைக்கும் கர்மத்தை எல்லாம் நீக்கி அவன் கர்ப்பத்துக்கு வராமல் காப்பதால் , பிறப்பை பறிப்பதால் திருபறியலூர் என்றாயிற்று

அதனாலே இத்தலத்தை "துணையும் சுற்றமும் பற்றும் அறுத்து வானலுகம் அளிப்பான்" என பாடுகின்றார் சம்பந்த பெருமான்

இங்கு வழிபட்ட மிக முக்கிய பக்திமான் ஆஞ்சநேயர், ராம்பிரான் ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபூஜை செய்யும் அவசியத்தில் இருந்தார், அதனால் அனுமனிடம் இரு நாழிகைக்குள் ஒரு லிங்கம் வேண்டுமென்று கோரினார், அனுமன் காசிக்கு சென்று லிங்கத்தை எடுத்துவருமுன் நாழிகை கடந்து கொண்டிருந்தது, இதனால் ராமன் மண்ணால் ஒரு லிங்கம் செய்து பூஜித்தார் அதுதான் ராமேஸ்வர லிங்கம்

தாமதமாக வந்த அனுமன் வருந்தினான் ஆனாலும் ராமபிரான் செய்த லிங்கத்தை கையோடு எடுத்து செல்லும்படி அதனை எடுக்கபார்த்தான் அது அசையவில்லை, முடிந்தவரை போராடியவன் கடைசியில் காலால் அதனை கட்டி இழுத்தான், அது அப்போதும் அசையவில்லை அவரசத்தில் அனுமன் செய்தது சிவனுக்காக அபச்சாரமுமாகிவிட்டது

அனுமனுக்கு அது பெரிய குற்றமாய் அமைந்தது, அந்த பாவம் தீர அவன் சிவனிடம் வேண்டினான் சிவன் அவனை இந்த தலத்துக்கு வர செய்து பாவம் போக்கினார், அவன் பாவம் போக்கியதால் இது "கர்(ன்)ம நாசபுரம்" என்றுமானது

அனுமன் தன் சாபம் நீங்கிய நிலையில் சற்று தொலைவில் ஒரு லிங்கம் ஸ்தாபித்து வணங்கினான் அது "திருகுரக்கா" என்றாயிற்று

அகத்திய முனிவரும் அருள்மிகு தட்சிணாமூர்த்தியும் இங்கு  சேர்ந்து வணங்கினார்கள்

இப்படி பிரத்தியான தலத்தை முதலில் கட்டியது சோழமன்னர்கள் அல்ல சிந்துநதிகரை அரசனான சுசரிதன்

அவனுக்கு குழந்தைவரமிலை அவன் தன் மனைவி சுசிலையோடு எல்லா தலங்களும் வணங்கியபடியே இப்பக்கம் வந்தான், இந்த தலம் அவன் வேண்டுதலை நிறைவேற்றியது அவனின் கர்மவினை எல்லாம் கழிந்து அவன் நல்ல ஆண்மகவினை பெற்றான், ஏழை பெரும் செல்வம் பெற்றதை போல் மகிழ்ந்தவன் இந்த கோவிலை கட்டி குடிகளும் வரசெய்தான்

அதிலிருந்து இந்த ஆலயம் அடையாளமாய் இந்த யுகத்தில் தொடங்கபெற்று இப்போது பெரும் வல்லமையாய் அருள்பாலித்து கொண்டிருக்கின்றது

ஆம், இந்த ஆலயம் பிள்ளைவரம் தரும், கருவுக்கு தடையாக இருக்கும் எல்லாமும் அகற்றியும் தரும். இங்கு வழிபட்ட வசிஷ்டர் தன்னை நாடி வந்த பலருக்கு குழந்தைவரம் அருளினார் என்பது மிக முக்கிய குறிப்ப

இதற்கு கொடிகோவில் என்றும் பெயர் உண்டு, முல்லை கொடி சூழ்ந்த லிங்கம் இருந்ததால் கொடிகோவில் என்றுமாயிற்று
 
சூரியன் வழிபட்டதால் தலைஞாயிறு என்றும், ஆதித்யபுரி என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
 
மூன்று நிலை ராஜகோபுரம் கொண்ட இந்த ஆலயத்தில் மூலவர் “குற்றம் பொறுத்த நாதர்” சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கியும் அம்பாள்  கோல்வளை நாயதி தெற்கு நோக்கியும் தரிசனம் தருகின்றார்கள்

உள்ளே சுற்றுப் பிரகாரத்தில் சித்தி விநாயகர், லிங்கோத்பவர், துர்க்கை. பிரம்மா ஆகியோர் நிறைந்தருள்கின்றனர். நான்கு பிரகாரங்களை உடையது

சீர்காழி போலவே இங்கும் முதல் தளத்தில் தோணியப்பர் மற்றும் உமையம்மை சன்னதி உண்டு , இங்கே சிவன் "கர்ப்ப  ஞானேஸ்வரர்" என்றும்; அன்னை ‘கர்ப்ப ஞான பரமேஸ்வரி’ என்றும் பெயருடையோராகி அருள் பாலிக்கின்றனர்.  

டைமகுடம், சிற்றாடை, கழுத்தணிகள், மகர குண்டலங்கள் செவிப்பூக்கள், தோள், கை வளைகள் அணிந்துள்ள தோணியப்பரின் பின்கைகளில் மானும் மழுவும். வல முன் கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன் கை கடகத்தில் உள்ளது. இறைவன், இறைவியின் கீழிறக்கிய பாதம் இருத்தத் தாமரைத் தளங்கள் காட்டப்பட்டுள்ளன.

இறைவனின் இடப்புறமுள்ள இறைவி கரண்டமகுடம், பட்டாடை அணிந்து, வலக்கையை கடகத்திலும் இடக்கையை இருக்கையின்மீதும் இருத்திக் காட்சிதருகிறார்.

அப்படியே, மேல் செங்குத்தான மரப்படிகளில் ஏறிச் சென்று இரண்டாவது தளத்தில் ‘சட்டை நாதரை’ தரிசிக்கலாம். சீர்காழி சட்டை நாதர் திருக்கோயில் போலவே    மலைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளதால் இது  மேலைக்காழி என்றும் பெயராயிற்று

இங்கு எங்கும் காணமுடியா அம்சம் இங்கு சண்டிகேசுவரர் மனைவியாகிய யாமினியுடன் வீற்றிருப்பது

இந்த தலம் சாதாரண தலம் அல்ல, வசிஷ்டர் தசரதனிடம் சொல்வதாக சொல்லும் பாடல் ஒன்றில் இத்தலத்தின் மகத்துவம் மறைமுகமாக உண்டு

"தயரதன் தங்குலகுரு வசிட்டங் கொண்டாடி 
யுருச் செய் செய்குற்றமே பொறுத்தானை
 தொழுதெவார் தமக்கு யெண்ணற்ற மாலவன
ம்பலந் தொழுதெழு புண்ணியங் கூடுமன்றோ."

அந்த பரம்பொருள் செய்தபாவம் ,செய்யபோகும் குற்றம் என எல்லாம் அறிந்து காப்பவன் அவனிடம் சரணடைதல் உன் குறையினை தீர்க்கும் என பொருள்படும் பாடலிது

குழந்தை இல்லா காரணத்தில் ஒன்று நம்மை அறியாமல் செய்யும் பாவம் அல்லது பூர்வ ஜென்ம பாவம், அதனை போக்கினால் குழந்தை வரம் அமையும், இந்த தலம் அதை தரும்

சூசகமாக ராமனுக்கும் இத்தலத்துக்கும் உள்ள தொடர்பை இப்பாடல் சொல்லும், அனுமன் இங்கு வந்த காரணமும் அதுவாகவே இருக்க முடியும்

கோல மகரிஷி இந்த தலத்தை பாடுகின்றார்

"அட்டநவ சித்தர் கொண்டாடிடும் தலம்
யீண்டு தொழுதக்கால் அன்னை கரு தங்கலிலை சத்தியமே."

அதாவது 72 சித்தர்கள் வழிபட்ட ஆலயம் இது அதனால் அவர்கள் பிறப்பற்ற நிலை அடைந்தார்கள் என முன் சொன்ன ஞானவரலாற்றை  பாடுகின்றார்

இதனை இடைக்காரர் பாடுகின்றர்

"குடமுனி உலோபமுத்திரையோடு மேலைக்
காழி யுறைவானை தொழுதவாறு தொழுதுய்ய
பிறவி பல பெற்று புண்ணியஞ் செய்துமே" 

அகத்தியரும் அவர் மனைவி லோபமுத்திரையும் பணிந்த இந்த சிவனை பணிவோர்க்கு குடும்பத்தில் எல்லா செல்வமும் கிடைக்கும் குழந்தை செல்வமும் உறுதியாகும் என்கின்றார் சித்தர்

பொதுவாக குழந்தையினைக்கு ""ஆலாள தோஷம்" காரணமாக அமையும், இங்கு வழிபட்டால் அந்த தோஷம் நீங்கும்

"கரும நாசமாக வாலாளப் பீடை
யறுபட்டே துர்சுவப் பனமுடனே
யகால காலனண்டாது வோட
சிசுச் சாக்காடகற்ற கருவாவான்
மேலைக் காழி யுறை அபராதசமேசனே."

என்பது கருவூர் சித்தரின் வாக்கு, 'ஆலாள' தோஷம் அறுபட, மற்றைய சிசு மரணம் விலக அபராதசமேசனை தொழுவீரே என்றார்.

இத்திருக்கோயில் கரும நாசனி என சித்தர் பெருமக்களால் போற்றப்படுகின்றது  தேவர்கள், இத்திருத்தலத்தை 'கர்ம நாசபுரம்' என்ற பெயரால் அழைத்தனர்.

இக்கோவில் யுகம் யுகமாக உண்டு என்றாலும் ராஜராஜ சோழன், குலோதுங்க சோழன் இன்னும் ஜடாவ்ர்ம சுந்தரபாண்டியன், விஜயநகர மன்னர் இங்கு திருபணி செய்திருக்கும் கல்வெட்டும் ஆதாரமும் நிரம்ப உண்டு

கும்பகோணம் நாகபட்டினம் செல்லும்போது இந்த கோவிலை தவறவிடாதீர்கள், உங்கள் பாவ சாபமெல்லாம் தீர்க்கும் தலமிது

ஒவ்வொரு மனிதனும் அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவம் ஏராளாம், நாம் சரி என கடக்கும் விஷயம் தர்மபடி தவறாக இருக்கலாம், நாம் சரி என செய்யும் விஷயமும் இறைவன் முன் நீதியின் முன் தவறாக இருக்கலாம், செயலால் மட்டுமல்ல சிந்தையால் சொல்லால் உருவாகும் பாவத்துக்கும் சக்தி உண்டு

நாம் இப்பிறப்பில் பெரிய பாவமேதும் செய்யாவிடினும் முற்பிறப்பின் தொடர்ச்சிபடி பல சிக்கல்களை சங்கடங்களை எதிர்கொள்ளலாம், அதற்கான மூல காரணம் தெரியாமல் தடுமாற்றத்தில் இருக்கலாம்

அறிந்தும் அறியாமலும் செய்த பாவம், சொல்லாலும் செயலாலும் சிந்தையாலும் செய்ந்த பாவமெல்லாம் உங்கள் வாழ்வை முடக்கி வைத்திருக்கலாம், இங்கு வழிபட்டு அந்த பாவத்தை எல்லாம் நீக்குங்கள்

இங்கு செய்யபடும் ஒவ்வொரு காரியமும் 14 மடங்கு உங்களுக்கு திரும்பவரும் என்பது வசிஷ்டர் வாக்கு, இங்கு எதனை மனபூர்வமாக செய்கின்றீர்களோ அது பன்படங்காக உங்களுக்கே திரும்பவரும் இது சத்தியம்

அப்படியே முக்தி நிலை அடையவைக்கும் மீண்டும் "கருப்பையூர்" வராமல் காக்கும், அதே நேரம் லவுகீக வாழ்வில் குழந்தை செல்வமின்றி இருப்போர்க்கு இவ்வாலயம் நிச்சயம் குழந்தை பேற்றை தரும், உங்களின் அறிந்த அறியாத வினைகளை அகற்றி தரும்

அந்த ஆலயத்துக்கு சென்று முல்லை மலர் மாலையிட்டு, நெய் விள்க்கேற்றி அந்த நாதனை வணங்குங்கள், அந்நேரம் நீங்கள் அறியாமல் செய்த பாவமும் குற்றமும் மறைந்துபோகும் உங்கள் வாழ்வே புதிதாக உருமாறி பெருவாழ்வாக ஒரு குறையின்றி அமையும் இது சத்தியம்

"சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில்
  வைத்துகந்து திறம்பா வண்ணங்
கைம்மாவின் உரிவைபோர்த் துமைவெருவக்
  கண்டானைக் கருப்ப றியலூர்க்
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட
  மயிலாடுங் கொகுடிக் கோயில்
எம்மானை மனத்தினால் நினைந்தபோ
  தவர்நமக் கினிய வாறே. "
பிரம்ம ரிஷியார்

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

பராய்த்துறைநாதரை வணங்க குழந்தைகளுக்கு பேச்சு வரும்

அருள்மிகு பராய்த்துறைநாதர் கோயில்,   திருப்பராய்த்துறை,  PIN - 639115   திருச்சி மாவட்டம்.                         *இறைவன்: பராய...